Monday, July 7, 2025
Home Blog Page 15

புதிய ரேஷன் கார்டு நகல்; தமிழக அரசு சொன்ன அப்டேட்!

இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக இருக்கின்றது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டு இருந்தால் தான் நாம் ஒரு இடத்தில் வசிக்கிறோம் என்பதை உறுதியாக கூற முடியும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே பெற முடியும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது மகளிர் உரிமைக்காக திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் தான் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்டதும் அவர்களுக்கு நகல் வழங்கும் திட்டம் முன்னதாகவே தமிழகத்தில் அமலில் இருக்கும் நிலையில் இதுவரை 10 லட்சம் நகல் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. புதிய நகல் கார்டு வேண்டும் என விரும்புவோர் www.tnpds.gov.in என்ஜாய் இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் நகல் அட்டைகள் தபாலுக்கு பணம் செலுத்தினால் வீட்டுக்கே தபாலில் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டையின் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பொற்கால் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தற்போது கண் கருவிழி பதிவு மற்றும் கைரேகை பதிவின் மூலம் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றது.

முன்பிருந்தது போல மாநிலம் மற்றும் மத்திய அரசு வழங்கும் பொருட்களுக்கு இரண்டு முறைகள் கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒருமுறை கைரேகை பதிவு செய்தால் போதும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு மாற்றங்கள் ரேஷன் அட்டையில் செய்யப்பட்டு வரும் நிலையில் புதிய ரேஷன் அட்டை நகல் பெற விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்

திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா! தாக்குதலுக்கு பயன்படுத்திய அதிபயங்கர ஆயுதங்கள்  

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் புதிய ஆயுத தாண்டவத்தின் ஆரம்பமாக, 22 ஜூன் 2025 அன்று அமெரிக்கா நேரடியாக ஈரான் மீது குண்டு மழையை துவக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் மூன்று முக்கிய அணு ஆய்வுக்கூடங்கள் — நடான்ஸ், ஃபோர்டோ, இச்பஹான் — மீது வெடி குண்டுகள் விழுந்து அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அந்த வகையில் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதி பயங்கரமான ஆயுதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்கர்‑பஸ்டர் குண்டு – GBU‑57 MOP

  • பயன்பாடு: உலகளாவிய ரீதியில் மட்டுமே அமெரிக்கா பயன்படுத்தும் GBU‑57 Massive Ordnance Penetrator (MOP) — “பங்கர்‑பஸ்டர்” குண்டு.

  • அளவுகள்: சுமார் 13,600 கிலோ (30,000 பவுண்டு), நீளம் 20.5 அடி, மிகப் பெரிய “non-nuclear” குண்டாகும்.

  • திறன்: தரையில் விழுந்தவுடன் 200 அடி வரை சென்று அதி‑ஆழமாக வெடிக்கும்; செங்குத்தாகக் கணிசமான பாதாள அமைப்புகளை உடைப்பதற்கு வடிவமைக்கப்பட்டது .

  • ஏவப்படுதல்: B‑2 Spirit ஸ்டீல்த் விமானங்கள் பயன்படுத்திய போட்டுரியும், முன்னர் சோதனை மட்டுமே… இப்பொழுது நடைமுறை தாக்குதலில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகள்

அமெரிக்கா இன்னொரு நடவடிக்கையாக 30 Tomahawk க்ரூஸ் ஏவுகணைகள் – கடல்மூழ்கி கப்பல்களில் இருந்து நீர்மூழ்கிய நிலையில் ஏவப்பட்டு, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களின் யுரேனியம் செறிவூட்டும் மையங்களை அழித்தது .

  • பயன்முறை: கடலின் மேல் அல்லது கீழிருந்து பறந்து இலக்கை அடையும் வகையில்; உள்கட்டமைப்புகளைத் துல்லியமாக குண்டு செய்வது.

  • சிறப்புகள்: வெடிமருந்து 450 கிலோ, விலை சுமார் 2 மில்லியன் USD .

  • GPS கருவியின் துணையுடன் செயல்படுவதால் இதன் மூலமாக துல்லியமான தாக்குதலை நடத்த முடியும்.

தாக்குதலின் பின்னணி மற்றும் விளைவுகள்

  • தண்டனை வகை: அமெரிக்க அதிபர் “இரு வார காலத்தில் பேச்சுவார்த்தை அல்லது தாக்குதல்” என்ற எச்சரிக்கையை முன்னரே கூறி இருந்தார் .

  • மத்திய கிழக்கு பரபரப்பு: இஸ்ரேல் – ஈரான் மத்தியில் 9 நாட்கள் தொடர்ந்த தாக்குதல் தொடர்ச்சிக் கொண்டது; இந்நிலையில் போரில் 10 வது நாளான இன்று அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: பக்தியா அரசியலா? – பாஜக மதுரையை தேர்வு செய்ததன் பின்னணி

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு, பாஜக அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகிறதா? என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மதுரையை தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?

திமுக கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து, 2026 தேர்தலையும் நன்கு எதிர்கொள்வதற்காக திமுக மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது. இதே பாதையில் பாஜகவும் நகர்ந்து, மதுரையையே முருக பக்தர்கள் மாநாட்டுக்கான இடமாக தேர்ந்தெடுத்துள்ளது.

வாக்கு வங்கி அரசியலா?

2021 தேர்தலில் மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் இரண்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அனுபவத்தை கொண்டு, தற்போது பாஜக தென்மாவட்டங்களில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகளை பெற்று வலுவடைய முயற்சி செய்கிறது என்று கூறப்படுகிறது.

“இது பக்திப் மாநாடா , வாக்கு வங்கிக்கான மாநாடா?”

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதற்க்கு பதிலளித்து, “முருக பக்தர்கள் மாநாடு அரசியலோடு சம்பந்தம் இல்லாதது. இது பக்தி சார்ந்த நிகழ்ச்சி மட்டும் தான்” என விளக்கம் அளித்தாலும், அரசியல் விமர்சகர்கள் இந்து முன்னணி நடத்தும் இந்த மாநாட்டில் பாஜகவின் முழுமையான ஈடுபாடு இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

திருப்பரங்குன்றத்தை விட நிழல் கூட்டமா?

எதிர்க்கட்சி தரப்பில் இருந்து, “மதுரையில் நடக்கும் இந்த மாநாடு உண்மையான முருக பக்தர்களின் மாநாடு அல்ல. திருப்பரங்குன்றத்தில் நடந்ததே உண்மை மாநாடு” என கூறப்படுகிறது. இதில் பாஜக, அதிமுக, தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என அனைவரும் சந்திக்காத படி, பாஜக தனியாக பக்தி மூலமாக வாக்கு சேகரிக்க முயலுகிறது என கூறப்படுகிறது.

முருக பக்தர்களின் பெயரில் நடத்தப்படும் இந்த மாநாடு, உண்மையான பக்திக்கா அல்லது அரசியல் நாடகமா என்பதை விரைவில் மக்கள் தீர்மானிக்க போகிறார்கள். ஆனாலும், பாஜக தென்மாவட்டங்களில் வேரூன்றுவதற்காக முருகனின் பெயரை பயன்படுத்துகிறது என்ற விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

“2026-ல் பாஜக சூரசம்ஹாரம்… முருகன் தண்டிப்பார்!” – செல்வப்பெருந்தகை காட்டம்!

மதுரையில் பாஜக சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இம்மாநாடு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அவரவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் முருக பக்தர் மாநாடு நடத்தும் பாஜகவின் நோக்கம் என்ன?

இந்தக் கேள்வியைக் கேட்டு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவுக்கு நேரடியான சவால்களை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை முருகன் சூரசம்ஹாரம் செய்வார்” என்று காட்டமாக பேசினார்.

முருக பக்தர்கள் மாநாடு பாஜக அரசியல் நாடகமா?

“மதுரையில் முருகன் மாநாடு நடத்துவதற்கான அரசியல் நோக்கம் என்ன?” என்று கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை, “பாஜக, மதத்தை அரசியலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அயோத்தியில் ராமர் மாநாடு, இப்போது மதுரையில் முருகர் மாநாடு… இது ஒரு வகையான மத வேறுபாடு தூண்டும் முயற்சியாகவே தெரிகிறது” என்றார்.

“பாஜகவின் முகம் முருகனிடம் தெரியாது!”

பாஜக தலைவர் எல். முருகனை நேரடியாக குறிவைத்த அவர் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது எனவும், அவர் கூறுவது போலெல்லாம் நடக்காது என்றும் கூறினார். மேலும் , “முருகனை வம்புக்கு இழுக்கிறார்கள். பாஜகவும் அதிமுகவும் பகல் கனவு காண்கின்றன. தமிழ் கடவுள் முருகன், தமிழ்நாட்டையும் மக்களையும் வஞ்சிக்கும் பாஜகவை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்” என்று கூறினார்.

மூச்சை விடவைக்கும் செல்வபேருந்தகை உரை:

  • இந்தியா கூட்டணி இரும்பு போல உறுதியானது. அதைப் பற்றி பாஜக பேச கூட தகுதி இல்லை.”

  • மணிப்பூரில் பெண்கள் அவலமாக இருக்க, பாஜகவினர் பேசவே இல்லை. ஆனால் முருகனை முன்னிலைப்படுத்தி மாநாடுகள் நடத்துகிறார்கள்.”

  • பாஜக மக்களை ஏமாற்றலாம்; முருகனை முடியாது!

  • பாஜகவின் மூன்றுமொழிக் கொள்கையை தமிழக மக்கள் ஒட்டவே மாட்டார்கள்.

“2026-ல் பாஜகவின் முடிவை முருகனே தீர்மானிப்பார்”

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆங்கிலம் பேசுவதை விமர்சித்த அவர்,“பாஜக தமிழ்மொழிக்கு செய்ய வேண்டியது ஒன்றும் செய்யவில்லை. தமிழில் அர்ச்சனை செய்ய கூடாது என நீதிமன்றம் செல்லும் இவர்கள் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கவே இல்லை,” என்றும் கூறினார்.

இது போன்று தமிழ் மீது அக்கறையின்றி செயல்படும் பாஜக, 2026-ல் தேர்தலில் மக்களிடமிருந்தும், முருகனிடமிருந்தும் தண்டனைப் பெறப்போகிறது என்றார் செல்வப்பெருந்தகை.

திமுக கூட்டணியில் விரிசல்… அதிமுக-பாஜக கூட்டணிக்கு தாவும் மதிமுக?

தற்போதைய அரசியல் சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறக்கூடிய சூழ்நிலையில் இருப்பது போன்று அரசியல் காட்சிகள் நகர்ந்து வருகின்றன. கூட்டணியில் அங்கீகாரம் மற்றும் பிரதான இடமளிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மதிமுக அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இடமில்லை?

தற்போதைய விவகாரங்களுக்கேற்ப, மதிமுக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் “கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும்” என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில், மாநிலங்களவையில் வைகோவுக்கு மறுவாய்ப்பு வழங்காதது என்பது முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

திமுக, வைகோவுக்கு பதிலாக மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கியது, மதிமுகவின் உட்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வைகோ தலைமையிலான மதிமுக வருங்காலத்தில் தங்கள் நிலையை தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் தொகுதிகளை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த தேர்தல் அனுபவமும் தீர்மானத்தில் தாக்கம்

  • 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், மதிமுகவுக்கு திமுக வெறும் 4 தொகுதிகள் மட்டுமே முதலில் ஒதுக்கியது.

  • பின்னர் “உதயசூரியன்” சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டதற்காலத்தில் 6 இடங்கள் வழங்கப்பட்டது.

  • 2016ஆம் ஆண்டு, மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் துரை வைகோ தனிச் சின்னத்தில் வெற்றி பெற்றதும், திமுக-மதிமுக உறவில் விரிசல் உண்டாக்கியது.

பாஜக–அதிமுக கூட்டணிக்கு மதிமுக தாவுமா?

திமுகவின் தொடர் புறக்கணிப்பால் விரக்தியில் உள்ள மதிமுகவுக்கு, அதிமுக–பாஜக தரப்பிலிருந்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் மதிமுகவுக்கு 8 முதல் 10 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதிமுக, பாஜக இரண்டும் மதிமுகவை உள்ளிழுக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

வரலாறும் வாய்ப்பும்?

2006ல் நடந்தது போன்ற அரசியல் திருப்பங்கள் மீண்டும் நிகழலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆண்டில், திமுகவுடன் பேச்சுவார்த்தையில் இருந்த வைகோ, அதே நாளில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு சேர்ந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அப்போதும் திமுக அதிர்ச்சியடைந்தது. இதேபோன்று ஒரு ‘சர்ப்ரைஸ்’ திரும்பவும் நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லை என கூறப்படுகின்றது.

செல்வமகள் சேமிப்பு திட்டம்; அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!

மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேமிப்பு திட்டங்கள் என்பது ஒருவரது நிதியை பாதுகாத்து வைத்துக் கொள்வதற்காகவும், எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பதற்கு உருவாக்கப்பட்ட திட்டமாக உள்ளது.

இந்நிலையில் இவை வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்பை பெற்று வருவதால் அனைவரும் அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு தொடங்கி சேமிக்க தொடங்கி வருகின்றனர்.

இந்திய அஞ்சல் துறையின் மூலம் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றது. இவை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கின்றது. இதில் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரங்கள், அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்கள் அடங்குகின்றது.

மேலும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமானது செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடையே கிடைத்துள்ளது. பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் நலனுக்காக சேமிக்கப்படும் திட்டமாக அமைந்துள்ளது.

பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. பெண் குழந்தைகளுக்கு 21 வயதில் 50 லட்சம் கிடைக்கக்கூடிய திட்டமாக இது அமைந்துள்ளது.

அண்மையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தபால் துறையின் சார்பாக மாவட்ட தோறும் அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டது. அதற்காக சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்தனர்.

மேலும் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென் மண்டல தபால் துறையில் மட்டும் ஜனவரி மாதம் வரை ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டவர் செல்வமகள் திட்டத்தில் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் ஜூன் 30-ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதினால் ஜூன் 26 ஆம் தேதிக்குள் குறைகளை அனுப்பலாம்.

தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம் பெருபவர்களின் முகவரி, விரைவு தபால், பதிவு தபால் ஆகியவற்றிற்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

முருக பக்தர்கள் மாநாடு! வண்டி வண்டியாக வந்து குவியும் மக்கள் கூட்டம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனர். இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகள் மாதிரி கோயில்கள் தத்துரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில்களில் முருகனின் ஆறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன, அதனால் தினந்தோறும் காலை மற்றும் மாலை இரண்டு நேரமும் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மதுரையில் ஒரே இடத்தில் ஆறுபடை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதால் அதனை தரிசனம் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் வருகை தருகின்றனர்.

சாய்பாபா பக்தர்கள், ஆன்மீகவாதிகள் என பல்வேறு பக்தி குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் காணப்படுகின்றனர். ஆறுபடை வீடுகளுக்கு முன் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.

இந்த கலை நிகழ்ச்சியில் சிறுவர் மற்றும் சிறுமிகள் முருகன் வேடம் அணிந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகின்றது. இந்த முன்னணி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பக்தர்கள் கூட்டத்தையும், வாகனங்களையும் ஒழுங்கு படுத்துவதுடன் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் தண்ணீர் உள்ளிட்டவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆறுபடை வீடுக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை மாதிரி வீட்டில் தரிசனம் செய்து மன நிம்மதி அடைகின்றனர் எனவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். முருக பக்தர்கள் மாநாடு நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

அதனால் முருகனின் ஆறுபடை வீடுகளின் பின்பகுதியில் எட்டு லட்சம் சதுர அடிக்கு மேடை மற்றும் இருக்காய் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் உத்தர பிரதேச மாநில முதல்வர் மற்றும் ஆந்திரா துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசமும், திருப்புகழ், முருகன் பாடல்களை பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவை இல்லை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் ஏராளமான பக்தர்கள் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தருவார்கள் எனவும் கூறப்படுகின்றது

ராமராஜனின் சாதனைகள் ஏராளம்! கலர் கலரா சட்டை போட்டா உங்களுக்கு காமெடியா தெரியுதா?

பொதுவாக சாலையில் யாராவது பளிச்சென்று ரோஸ், சிவப்பு கலர் வண்ணங்களில் சட்டை போட்டுக்கொண்டு நடந்தால் டேய் அங்க பாருடா ராமராஜன் போறாரு என எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அந்த அளவுக்கு ராமராஜன் தமிழ்நாட்டில் பிரபலம். இவர் அணியும் உடையை வைத்து தான் எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அந்த கிண்டல்களை எல்லாம் தாண்டி அவர் எத்தனை சாதனைகளை படைத்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

கரகாட்டக்காரன் படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடியது. கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து 40 படங்களில் நடிக்க கமிட் ஆனார். தனது சினிமா வாழ்வில் சோலோ ஹீரோவாக 43 படங்களில் நடித்துள்ளார். 3 வருடங்களுக்கு ஹீரோவாக நடிக்க housefull புக்கான நடிகரும் இவர் தான்.

அரசியலில் MP யாக மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராமராஜன். கமலை விட அதிகமாக கௌதமியுடன் ஜோடி போட்டு நடித்தவர் ராமராஜன் (6 படங்கள்). சினிமாவில் வாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் இவருடைய உடையை அயர்ன் செய்ய ராமராஜனின் மேலாளர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அயர்ன் செய்யும் கடைக்கு எடுத்து சென்றுள்ளார்.

அப்போது அந்த அயர்ன் பண்ணும் நபர் என்ன இப்படி ஜொலிக்குது, இது என்ன ராமராஜன் சட்டையா என்று கேட்டுள்ளார். உண்மையிலேயே இது ராமராஜன் சட்டை தான் என்று அவரின் மேலாளர் சொல்லிவிட்டு சட்டையை வாங்கி வந்துள்ளார். அந்த அளவுக்கு ராமராஜன் சட்டை ரொம்ப பேமஸ்.

முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறாரா? வெளியான பரபரப்பு தகவல் 

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாலும் முன்னணி மற்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. நடிகர் ரஜிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

ரஜினிகாந்திற்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம். கோவிலுக்கு செல்வது, புனித பயணம் மேற்கொள்வது, ஹிமாலயா சென்று யோகிகள், தீர்கதரிசிகளை சந்தித்து அவர்களின் ஆசியை பெறுவது என ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதுரையில் உள்ள பாண்டி முனி கோவிலுக்கு அருகில் முருகன் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் ஆன்மீகத்தில் அதீத நாட்டம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த தகவலில் துளி கூட உண்மை இல்லை என்று ரஜினிகாந்த் அவர்களின் PRO ரியாஸ் கே. அஹமத் தெரிவித்துள்ளார். தலைவர் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் மும்மரமாக பணியாற்றி வருகிறார் என்றும் செய்தி வெளியிட்டுள்ளார் ரியாஸ்.

இப்படி பண்ணுவாருன்னு நெனச்சு கூட பாக்கல! எங்களை நம்ப வச்சு ஏமாத்திட்டாரு! முதல்வர் ஸ்டாலினை அட்டாக் செய்த அன்புமணி 

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு வேறு மாதிரி பேசுவது இயல்பு தான். அதனை நாம் நேரடியாக பல முறை பார்த்திருப்போம். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

ஆரம்பம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

அந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும் உங்கள் கோரிக்கையை நிச்சயம் இந்த திமுக அரசு நிறைவேற்றும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்து 4 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் வன்னியர்களின் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின் வன்னியர்களையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் நம்ப வைத்து ஏமாற்றி கழுத்தறுத்துவிட்டார் என அவர் பேட்டி கொடுத்துள்ளார்.