Monday, July 7, 2025
Home Blog Page 16

ராமராஜனின் சாதனைகள் ஏராளம்! கலர் கலரா சட்டை போட்டா உங்களுக்கு காமெடியா தெரியுதா?

பொதுவாக சாலையில் யாராவது பளிச்சென்று ரோஸ், சிவப்பு கலர் வண்ணங்களில் சட்டை போட்டுக்கொண்டு நடந்தால் டேய் அங்க பாருடா ராமராஜன் போறாரு என எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அந்த அளவுக்கு ராமராஜன் தமிழ்நாட்டில் பிரபலம். இவர் அணியும் உடையை வைத்து தான் எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அந்த கிண்டல்களை எல்லாம் தாண்டி அவர் எத்தனை சாதனைகளை படைத்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

கரகாட்டக்காரன் படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடியது. கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து 40 படங்களில் நடிக்க கமிட் ஆனார். தனது சினிமா வாழ்வில் சோலோ ஹீரோவாக 43 படங்களில் நடித்துள்ளார். 3 வருடங்களுக்கு ஹீரோவாக நடிக்க housefull புக்கான நடிகரும் இவர் தான்.

அரசியலில் MP யாக மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராமராஜன். கமலை விட அதிகமாக கௌதமியுடன் ஜோடி போட்டு நடித்தவர் ராமராஜன் (6 படங்கள்). சினிமாவில் வாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் இவருடைய உடையை அயர்ன் செய்ய ராமராஜனின் மேலாளர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அயர்ன் செய்யும் கடைக்கு எடுத்து சென்றுள்ளார்.

அப்போது அந்த அயர்ன் பண்ணும் நபர் என்ன இப்படி ஜொலிக்குது, இது என்ன ராமராஜன் சட்டையா என்று கேட்டுள்ளார். உண்மையிலேயே இது ராமராஜன் சட்டை தான் என்று அவரின் மேலாளர் சொல்லிவிட்டு சட்டையை வாங்கி வந்துள்ளார். அந்த அளவுக்கு ராமராஜன் சட்டை ரொம்ப பேமஸ்.

முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறாரா? வெளியான பரபரப்பு தகவல் 

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாலும் முன்னணி மற்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. நடிகர் ரஜிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

ரஜினிகாந்திற்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம். கோவிலுக்கு செல்வது, புனித பயணம் மேற்கொள்வது, ஹிமாலயா சென்று யோகிகள், தீர்கதரிசிகளை சந்தித்து அவர்களின் ஆசியை பெறுவது என ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதுரையில் உள்ள பாண்டி முனி கோவிலுக்கு அருகில் முருகன் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் ஆன்மீகத்தில் அதீத நாட்டம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த தகவலில் துளி கூட உண்மை இல்லை என்று ரஜினிகாந்த் அவர்களின் PRO ரியாஸ் கே. அஹமத் தெரிவித்துள்ளார். தலைவர் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் மும்மரமாக பணியாற்றி வருகிறார் என்றும் செய்தி வெளியிட்டுள்ளார் ரியாஸ்.

இப்படி பண்ணுவாருன்னு நெனச்சு கூட பாக்கல! எங்களை நம்ப வச்சு ஏமாத்திட்டாரு! முதல்வர் ஸ்டாலினை அட்டாக் செய்த அன்புமணி 

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு வேறு மாதிரி பேசுவது இயல்பு தான். அதனை நாம் நேரடியாக பல முறை பார்த்திருப்போம். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

ஆரம்பம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

அந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும் உங்கள் கோரிக்கையை நிச்சயம் இந்த திமுக அரசு நிறைவேற்றும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்து 4 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் வன்னியர்களின் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின் வன்னியர்களையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் நம்ப வைத்து ஏமாற்றி கழுத்தறுத்துவிட்டார் என அவர் பேட்டி கொடுத்துள்ளார்.

2 தொகுதி கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி வச்சுப்பீங்களா? திருமாவை கலாய்த்து தள்ளிய நயினார் நாகேந்திரன்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்று அதில் நான்கில் வெற்றி பெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திமுகவுடன் தொடர்ந்து இந்த முறையும் கூட்டணியில் நீடிப்போம் என்றும், எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் தொடர்ந்து பேசி வருகிறார். பாமக, பாஜக கட்சிகள் கூட்டணியில் இருக்கும் எந்த அணியோடும் ஒருபோது நாங்கள் சேரமாட்டோம் என திருமா அறிவித்துள்ளார்.

அண்மையில் VCK கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த பேட்டி ஒன்றில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை திமுகவிடம் பெற்றோம். இந்த முறை 50 தொகுதிகளில் நின்று வெற்றி பெற ஆசைப்படுகிறோம், அதுகுறித்து திமுகவிடம் பேசுவோம் என்று தெரிவித்தார் வன்னி அரசு.

VCK கட்சியினரின் இந்த தொகுதி பங்கீடு குறித்து அண்மையில் VCK பற்றி கலாய்த்து தள்ளியுள்ளார் நயினார் நாகேந்திரன். கூட்டணி தான் முக்கியம், வெற்றி தான் முக்கியம், திமுக தான் முக்கியம் என திருமா சொல்கிறார், ஒரு வேலை திமுக வெறும் 2 சீட்டு மட்டும் ஒதுக்கினால் திமுகவினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியை தொடருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

என் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியாது! குழந்தைகள் குறித்து ஓப்பனாக பேசிய நமீதா!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவரை பார்ப்பதற்காகவே இவர் நடிக்கும் படங்கள் மொக்கையாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்தவர்கள் ஏராளம். பின்னர் ஒரு பிரபல தொழிலதிபரை நமீதா திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார்.

தற்போது பாஜகவில் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் இவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போது தனது இரட்டை குழந்தைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவருடைய குழந்தைகளுக்கு அவர் இதுவரை ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்க வில்லையாம். தனது குழந்தைகளிடம் எப்போதும் ஆங்கிலத்தில் பேசமாட்டாராம். தமிழ், தெலுங்கு, குஜராத்தி தான் நமிதாவின் குழந்தைகளுக்கு தெரியுமாம். இந்த மொழிகள் தான் அவர்களின் தாய் மொழி. ஆங்கிலத்தை டிவியில் பார்த்தோ அல்லது வேறு எங்காவது அவர்கள் கற்றுக்கொள்ளட்டும். என் பிள்ளைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் பற்றி எல்லாம் தெரியாது. ஜெய் ஹனுமான் தான் அவர்களுக்கு தெரியும் என்று பெருமையாக சொல்வேன் என பேட்டி கொடுத்துள்ளார் நமீதா.

திட்டத்தை தொடங்கி வைத்த மூன்றே நாட்களில் இயந்திரம் பழுதான அவலம்! எல்லாம் நம்ம ஊருலதான்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஸ்மார்ட் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதாவது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்த அம்மா குடிநீர் திட்டத்தின் upgrade வெர்சன் தான் இந்த ஸ்மார்ட் குடிநீர் திட்டம்.

திட்டத்தை முதல்வர் துவங்கி வைக்கும் நேரத்திலேயே அந்த பைப்பில் இருந்து தண்ணீர் சரியாக வரவில்லை. பின்னர் எல்லாரும் சேர்ந்து போராடி தண்ணீர் வரவைத்து முதல்வரிடம் குடிக்க கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கி 3 நாட்களே ஆகியுள்ள நிலையில் அந்த குழாய் மீண்டும் பழுதடைந்துவிட்டது. இயந்திரத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற மக்களின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் யாரும் தண்ணீர் பிடிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ஸ்மார்ட் குடிநீர் திட்டம் தொடங்கி இன்னும் மூணு நாள் கூட ஆகல, அதுக்குள்ளயும் மெஷின் ரிப்பேர் ஆகிருச்சு, என்னதான் இந்த அரசாங்க அதிகாரிங்க பண்ணுறாங்களோ தெரியல என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் புலம்பி வருகின்றனர்.

ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமம் இத்தனை கோடியா? ரஜினியவே தூக்கி அடிச்சுட்டாரே!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கடைசியாக நடிக்கப்போகும்படம் ஜனநாயகன். இந்த படத்திற்கு பிறகு விஜய் இனி சினிமாவில் நடிக்கமாட்டார். முழு நேர அரசியல்வாதியாக மாறிவிடுவார். இதனால் ஜனநாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

விஜய் ஜனநாயகன் படத்திற்காக சுமார் 250 முதல் 300 கோடி வரை சம்பளம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்குகிறார். பொதுவாகவே வினோத் படத்தில் மக்கள் நலன்சார்ந்த அரசியல் கருத்துக்கள் இடம்பெறும். விஜய்யின் கடைசி படம் என்பதாலும், இந்த படத்திற்கு பிறகு விஜய் அரசியலுக்கு செல்வதால் படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் நிறைய இருக்கும் என சொல்லப்படுகிறது.

ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தின் வெளிநாட்டு உரிமம் 72 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தளபதி விஜய் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகும் ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமம் 80 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியையே விஜய் மிஞ்சிவிட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மூத்த குடிமக்களுக்கு வெளியான குட் நியூஸ்; இனி இலவசமாக பயணிக்கலாம்!

தமிழக அரசு சார்பாக மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மூத்த குடிமக்கள் தினந்தோறும் பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவர்களுக்கு இலவச பஸ் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றது.

அந்த வகையில் தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக சென்னை சேர்ந்த மூத்த குடிமக்களுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருகின்றனர். இந்நிலையில் ஜூலை மாதம் முதல் வரும் டிசம்பர் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் மாதத்திற்கு பத்து டோக்கன்கள் வீதம் ஆறு மாதத்திற்கான கட்டணம் இல்லாமல் பஸ் பயண டோக்கன்கள் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7:30 வரை தினம் தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த டோக்கன்கள் பெசன்ட் நகர், அடையார், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, சென்ட்ரல் ரயில் நிலையம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், வடபழனி, கேகே நகர், ஆதம்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர், எஸ்டேட் அண்ணாநகர், ஆவடி,

அயனாவரம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, பாடியநல்லூர், மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, செங்குன்றம், திருவொற்றியூர், கிளாம்பாக்கம், குன்றத்தூர், ஆகிய 40 பணிமனை பஸ் நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றது.

இருப்பிட சான்றாக ரேஷன் அட்டை, வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு இரண்டு புகைப்படங்களை கொடுத்து டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.

அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகள் இதில் பயன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் இனி காத்திருக்க வேண்டாம்; அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்!

தமிழகத்தில் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. ரேஷன் அட்டையின் மூலம் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். மேலும் ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும் பொழுது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் இரண்டு முறைகள் ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்து பொருட்களை பெற்று வந்தனர்.

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு அட்டைதாரர்கள் அதிக நேரம் காத்திருப்பதை கருத்தில் கொண்டு அதனை சுலபமாகும் வகையில் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதில் ரேஷன் அட்டைகள் மற்றும் முன்னுரிமை ரேஷன் அட்டைகள் அந்தியோதயா அன்னை யோஜனா ஆகிய ரேஷன் அட்டைகளுக்கு இனி பொருட்களை வழங்க ஒருமுறை மட்டுமே கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் பொருட்கள் குறைந்த நேரத்தில் மக்களுக்கு விநியோகிக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படாது. ரேஷன் அட்டை பயனாளிகள் ஒருமுறை கைரேகை பதிவு செய்தால் மத்திய அரசு மற்றும் மாநில அரசு திட்டப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

பான் கார்டு பெற கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவை மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பான் கார்டு என்பது நிரந்தர கணக்கு எண், வருமானவரித்துறையால் வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் 10 இலக்க எண் தற்போதைய நடைமுறையில் விண்ணப்பதாரரின் பெயர், பிறப்புச் சான்றிதழ், ஏதேனும் அடையாளச் சான்றிதழ் இருந்தாலே பான் கார்டு விண்ணப்பிக்க முடியும்.

வரியைப்பு தடுக்கும் வகையில் தற்போது புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். அந்த நடைமுறையின் அடிப்படையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பான் கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வரி தாக்கலின் வெளிப்படை தன்மையை கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதி என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைக் கொண்டு பான் கார்டு பெறலாம். ஆனால் இனி வருமானவரித்துறையின் போர்டலின் வழியாக ஆதார் சரி பார்ப்பின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

2025 டிசம்பர் 31ம் தேதிகுள் ஆதார் அட்டை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும்.. பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்கவில்லை என்றால் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அவர்களுடைய பான் அட்டை செயல்படாது.

பலமுறை இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு பெற விரும்புவர்கள் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, இந்திய கடவுச்சீட்டு போன்றவையை வைத்து விண்ணப்பிக்கலாம் ஆனால் தற்போது ஆதார் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது