Tuesday, July 8, 2025
Home Blog Page 17

திருமணம் ஆகாத பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; உரிமை தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் திருமணம் ஆகாமல் 50 வயதை கடந்த ஏழை எளிய பெண்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்க இருக்கின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் 50 வயதை கடந்த திருமணமாகாத பெண்கள் மாதம்தோறும் 400 ரூபாய் உதவித்தொகை பெற முடியும். அந்த தொகை தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பலரும் அறியாத நிலையில் குடும்பத்திலோ அல்லது அக்கம் பக்கத்திலோ திருமணமாகாமல் 50 வயதை கடந்த பெண்கள் இருந்தால் இந்த திட்டத்தை பற்றி உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தற்போது செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது.

திருமணமாகாத பெண்கள் ஓய்வூதிய உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். அந்த பெண்ணுக்கு திருமணமாகாமல் இருப்பது அவசியம். மேலும் அந்தப் பெண்ணின் வயது 50 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

அந்த பெண் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிபவராக இருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலமாக உதவித்தொகை பெற சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பதாரர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் போன்ற தமிழக அரசின் மற்ற எந்த ஒரு ஓய்வூதிய திட்டத்திற்கும் விண்ணப்பித்திருக்கக் கூடாது. மேலும் அரசு ஊழியர் ஆகவோ, வருமான வரி செலுத்துபவராகவும் இருக்கக் கூடாது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம் ,பாஸ்போர்ட், பான் கார்டு ,திருமணமாகாதவர் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்..

நகராட்சி அல்லது பஞ்சாயத்து அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பெற்ற பிறகு அதிகாரிகள் விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் சரிபார்த்து விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஆன்லைனில் பதிவேற்றுவார்கள். விண்ணப்பித்து 30 முதல் 45 நாட்களுக்குப் பிறகு ஒப்புதல் அளிக்கப்படும்..

மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால். பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மகளிர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி 20 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் 10 முதல் 15 லட்சம் பேர் சேர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஜூலை முதல் வாரத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க மீண்டும் முகாம்கள் நடத்தப்படும், இதற்கான நிதி ஒதுக்கீடு பெற்ற உடன் விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியானது..

ஆனால் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் சிலருக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது என தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி வார்டு உறுப்பினர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும். ஆனால் மற்ற அதிகார பதவிகளான கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள், எம்பிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நகராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மேயர்களின் மனைவிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட மாட்டாது.

மேலும் அரசு மற்றும் கார்ப்பரேஷன் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், 3000 ரூபாய் பென்ஷன் போன்ற குறைந்த பென்ஷன் பெற்றாலும் இந்த உரிமை தொகை வழங்கப்பட மாட்டாது.

குடும்ப தலைவி அல்லாத பெண்களுக்கும் இந்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகளிர் சுய உதவி குழுவில் இருக்கீங்களா; பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் உடனே அப்ளை பண்ணுங்க!

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் பெண்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. பெண்கள் எதிர்பாராத அளவிற்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மற்றும் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும் நிலையில் கடன்கள் பயிற்சிகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றனர்.

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக சிறுசேமிப்பு மற்றும் கடன் வசதிகள் மூலம் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கவோ வருமானம் பெற உதவுகின்றன. கிராமப்புறங்களில் வறுமையில் இருக்கக்கூடிய பெண்களுக்கு சிறு கடன்கள் மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை சுய உதவிக் குழுக்கள் உருவாகி தருகின்றது.

வறுமையை குறைக்க உதவும் நிலையில் பெண்களுக்கு பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் தொழில் முனைவு மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை வளர்க்கவும் உதவுகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளால் மகளிர் சுய உதவி குழுக்கள் அதற்கு பல்வேறு சலுகை மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பாக திருவள்ளுவர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2,014 பெண்களுக்கு 131 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் உதவிகள் கடந்து சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் கடன்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் வங்கி கடன்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகின்றது.

கடன்களை பெற்று அதனை முறையாக செலுத்தும் சுய உதவி குழுக்கள் இதற்கு தகுதி பெற்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் மகளிர் சுய உதவி குழுவிற்கு மத்திய அரசு 1261 கோடி ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் மகளிருக்கு ட்ரோன் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் ட்ரோன் மற்றும் உபகரணங்களின் செலவில் 80 சதவீதம் அதிகபட்சம் 8 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். மீதமுள்ள தொகையை தேசிய வேளாண் உள் கட்டமைப்பு நிதி வசதியின் கீழ் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க அதிக அளவு ட்ரோன் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மகளிர் வருமானத்தை பெற வாய்ப்புள்ளது. மேலும் ட்ரோன் பயன்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுவிற்கு 15 நாட்கள் பைலட் பயிற்சி மற்றும் பத்து நாட்கள் வேளாண் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.

ஆதாரில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்; இனி ஸ்கேன் செய்தால் போதும்!

ஒவ்வொருவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது. ஆதாரம் இருந்தால் நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் நிலை உருவாகியுள்ளது. ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கு என எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாளமாக மாறி வருகின்றது.

ஆனால் சில சமயங்களில் ஆதார் அட்டையை கையில் எடுத்துச் செல்ல முடியாததால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை தீர்ப்பதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

வருங்காலங்களில் UIDAI  ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த இருக்கின்றது. இந்த செயலி தங்கள் போனில் இருந்தால் எந்த நேரத்திலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஆதார் மீது எளிதாக மின்னணு முறையில் சமர்ப்பிக்க முடியும்.

இனி ஆதாரை ஜெராக்ஸ் எடுத்துச் செல்லும் அவசியம் இருக்காது. இந்த செயலியில் ஆதார் தகவல் க்யூஆர் கோடு வடிவில் இருக்கும் இதை ஸ்கேன் செய்தால் தங்களுடைய ஆதார் சமர்ப்பிக்கப்படும்.

தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கு ஆதார் சமர்ப்பிக்கும் பொழுது முழுமையான விவரங்கள் தெரியும்படி வேண்டுமோ அல்லது சில தகவல்கள் மறைக்கப்பட்ட வடிவில் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த புதிய வசதி மூலம் ஆதார் தொடர்பான செயல்களுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும் நேரத்தை வீணடிப்பதும் தவிர்க்கப்படும் என என்பது குறிப்பிடத்தக்கது

மகளிருக்கு அடித்த ஜாக்பாட்; உங்களுக்காக காத்திருக்கும் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட ,சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது.

குடும்பத்தில் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளை தடுக்கவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் பணியாற்ற பணியாளர் இருந்தால் ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண் மற்றும் மூன்றாம் பாலினதவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் தொழில் முனைவோர்களாக மாற்றவும் பாதுகாப்பிற்காகவும் குழந்தைகள் திருமணம் உதவி பெண்கள் உள்ளிட்டவை விழிப்புணர்வு வழங்கிட செயல்படுத்தி வருகின்றது.

மகளிர் அதிகாரம் மையத்தில் தரவு நுழைவு பணியாளர் ஒரு பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. அதனால் பெண்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரிக்கு ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பாமக இருக்கும் கூட்டணியை திரும்பி கூட பார்க்க மாட்டேன்; விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!

விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டேன் என கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார். அன்புமணிக்கு அறிவுரை கூறும் வகையில் திருமாவளவன் பேசியது மகிழ்ச்சி அளிபதாக இருக்கும் நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை முரண்பாடு, ஆதரவு இருக்கும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்பு மணிய இடையில் மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் அடுத்த கட்டத்தின் உச்சத்தை எட்டி வருகின்றது. ராமதாஸ் ஒரு பக்கம் கடைசி மூச்சு இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று கூறிவரும் நிலையில் அன்புமணி ஒவ்வொரு மாவட்டமாக பொதுக்குழுவை கூட்டி ஆதரவை திரட்டி வருகின்றார்.

மேலும் ராமதாஸ் ஆதரவாளர்களாக இருக்கும் எம்எல்ஏக்கள் ஜிகே மணி மற்றும் அருள் இருவரையும் அன்புமணி கிண்டல் செய்து பேசியிருக்கிறார். அவர்களின் உடல்நலம் விரைவாக குணமடைய அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம் எனவும் அன்புமணி கூற அங்கிருந்து அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் சிரிக்க தொடங்கியுள்ளனர்.

பாமகவில் ஏற்படும் பிளவு காரணமாக கூட்டணி அமைப்பதில் சிக்கல் உருவாகும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் விசிக திருமாவளவன் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கின்றார்

அப்பொழுது திமுக கூட்டணிக்குள் பாமக வந்தாலும் விசிக வெளியேறும் என்பதை கூறி இருக்கின்றார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பின் பொழுது ராமதாஸ்யிடம்  கேள்வி எழுப்பப்பட்டது.

அவருடைய கருத்து கொள்கை அதில், கருத்து சொல்வதற்கு நான் யார் ஒருவருக்கும் ஒரு கருத்துக் கொள்கை முரண்பாடு ஈர்ப்பு உள்ளிட்டவை இருக்கும் அதனை நாம் கருத்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இது அவசியம் கிடையாது; நீதிபதி உத்தரவு!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வரக்கூடிய பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாகனத்திற்கான அனுமதி பாஸ் வாங்கி வர வேண்டுமென தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் வந்து உத்தரவினை எதிர்த்து இந்து முன்னணி சார்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த முன்னணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாகனத்தில் வரக்கூடியவர்கள் முறையாக வாகன அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை அண்ணா நகர் காவல் துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பிறப்பிக்க எந்தவித அதிகாரமும் கிடையாது.

அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அதனால் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதாடினார். அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி அதிக அளவில் பொதுமக்கள் கூட கூடிய மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களை முறைப்படுத்துவதற்காக அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறைதான்.

அதனால் இந்த உத்தரவுகளை தலைமை காவலருக்கு மேல் உள்ள அதிகாரிகள் வழங்கலாம் என சட்டம் இருக்கிறது என தெரிவித்தார். இந்த உத்தரவு என்பது மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு இல்லை வாகனங்களையும் முறைப்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் நிற்கும் இடங்களில் காவல்துறை போலீஸ் சோதனை மையம் அமைக்க வேண்டும், மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம், ஓட்டுனரின் ஆதார் அட்டை, வாகன பதிவு சான்று உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறையினரிடம் வழங்க வேண்டும். இதனை பதிவு செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டனர்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் பாஸ் பெற்றிருப்பது அவசியம் என பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சின்னத்தம்பி செஞ்ச சாதனையை எந்த படத்தாலும் முறியடிக்க முடியாது! நடிகர் பிரபு ஒரு பார்வை!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனின் மகனாக அறிமுகமாகி பின்னர் படிப்படியாக தன்னுடைய நடிப்பு திறமையால் உயர்ந்து தற்போது குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் நடிகர் பிரபு. இவரை ஒரு போலீஸ் ஆபிசர் ஆக்குவது தான் தந்தை சிவாஜியின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால் பிரபுவின் சித்தப்பா சண்முகம் இவரை சினிமாவில் நடிக்க வைக்க ஆசைப்பட்டு சங்கிலி என்ற படத்தில் சிவாஜியுடன் நடிக்க வைத்தார்.

இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தம் 230 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். 140 படங்களுக்கு மேல் ஹீரோவாகவும், மீதமுள்ள படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார் பிரபு. அதேபோல எல்லா முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்த ஒரே நடிகர் பிரபு தானாம். 1988 ஆண்டுகளில் பிரபு நடிப்பில் மொத்தம் 14 படங்கள் வெளியானது.

அந்த 14 படங்களில் 13 படங்கள் வெற்றி பெற்றது. ஒரே வருடத்தில் 13 வெற்றிப்படங்களை கொடுத்த ஒரே நடிகர் பிரபு தான். அதேபோல 1991 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு முழுவதும் வெளியான சின்னத்தம்பி படம் 46 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. ஒரு நடிகரின் படம் 46 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது பிரபுக்கு தானாம். அதேபோல பிரபு கதாநாயகனாக நடிக்கும் படங்கள் பொதுவாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல வசூல் செய்யுமாம். தமிழ் சினிமாவில் 40 இயக்குனர்களை அறிமுகப்படுத்தியதும் பிரபு தான்.

நீ எல்லாம் கிராமத்து கதை பண்ணத்தான் லாயக்கு! சிட்டி சம்மந்தமான படத்தை எடுக்க நீ சரிப்பட்டு வரமாட்ட! சிகப்பு ரோஜாக்கள் குறித்து மனம் திறந்த பாரதி ராஜா!

இயக்குனர் இமயம் பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அதுவும் அவரது ரெண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் ஒரு வருடத்திற்கு மேலே சென்னை தேவி தியேட்டரில் ஓடி இருக்கிறது.

அந்த காலகட்டத்தில் இவர் கிராமத்து பின்னணி கொண்டவர், இவரால் வெறும் கிராமத்து பின்னணி கொண்ட படங்கள் எடுத்து தான் வெற்றி பெற முடியும். சிட்டி பின்னணி கொண்ட படங்களை எடுக்க சரிப்பட்டு வரமாட்டார் என்று இவர் காதுப்படவே நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். அப்போது இவர் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் கதையை எழுதிவிட்டு என்னாலும் சிட்டி பின்னணி கொண்ட படத்தை எடுக்க முடியும் என்று தன்னை நிரூபிக்க அந்த காலத்தில் இருந்த இரண்டு முன்னணி நடிகர்களிடம் சிகப்பு ரோஜாக்கள் கதையை சொல்லி இருக்கிறார்.

இவர் மேல் நம்பிக்கை இல்லாமல் அவர்கள் சிகப்பு ரோஜாக்கள் படத்தினை நிராகரித்து விட்டனர். பின்னர் கமலிடம் சொன்னவுடன் கமல் ஒப்புக்கொண்டுள்ளார். T Nagar யில் மிகப்பெரிய பங்களாவை கமலின் பரிந்துரையில் வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இடம்பெற்றிருக்கும் கருப்பு நிற பூனை மூன்றே நாட்களில் காணாமல் போயுள்ளது. இவர்கள் எங்கு தேடியும் அந்த பூனை கிடைக்கவில்லை.

இதனால் அந்த பூனையின் உரிமையாளர் படக்குழுவினர் மீது வழக்கு போட்டுள்ளார். பின்னர் அவரிடம் சமாதானம் பேசி வழக்கை வாபஸ் வாங்க வைத்துள்ளனர். வெறும் 20 நாட்களில் அந்த பங்களாவில் சிகப்பு ரோஜாக்கள் படத்தை எடுத்து முடித்துள்ளார் பாரதி ராஜா. படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சிகப்பு ரோஜாக்கள் படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அந்த காலத்தில் தேவி தியேட்டரில் இருந்து அண்ணா சாலை வரைக்கும் நிற்குமாம். தன்னாலும் நகரப்பின்னணி கொண்ட படங்களை எடுத்து வெற்றி பெற வைக்க முடியும் என்று பாரதி ராஜா நிரூபித்தது தான் இந்த சிகப்பு ரோஜாக்கள். அந்த காலத்திலேயே கமலஹாசன் புதுப்புதுக் கதை மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்திருக்கிறார் பாருங்கள்.

2026 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு கட்டாய ABS மற்றும் இரட்டை ஹெல்மெட் – புதிய உத்தரவு!

இந்தியாவில் வாகனப் பாதை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது. 2026 ஜனவரி 1 முதல், புதிய இருசக்கர வாகனங்களில் (ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்) கட்டாயமாக ABS (Anti-lock Braking System) பொருத்தப்பட வேண்டும் என்றும், வாங்கும் ஒவ்வொரு வாகனத்துக்கும் 2 BIS சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலை?

தற்போது, 125ccக்கு மேற்பட்ட வாகனங்களுக்கே மட்டுமே ABS கட்டாயம். இதனால், சுமார் 40% வாகனங்களில் இத்தகைய பாதுகாப்பு வசதி இல்லாத நிலை உள்ளது. ABS மூலம் திடீரென பிரேக் அடித்தாலும் சக்கரங்கள் பூட்டு ஏற்படாமல், வாகனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இதனால் விபத்து ஏற்படும் சாத்தியம் 35%–45% வரை குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரட்டை ஹெல்மெட் கட்டாயம்!

இப்போது ஒரு ஹெல்மெட் மட்டும் வழங்குவது வழக்கம். ஆனால், 2026 முதல் வாகன உரிமையாளருக்கும் பின்னாடி பயணிப்பவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்ய, 2 ஹெல்மெட்டுகள் (BIS சான்றளிக்கப்பட்டவை) கொடுக்க வேண்டிய கட்டாயம் விதிக்கப்படுகிறது.

கடுமையான முடிவுக்கு காரணம்?

இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் 44% இருசக்கர வாகன பயணிகளே உயிரிழப்பதற்கான காரணமாக உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணியாததாலும், வாகன கட்டுப்பாட்டின்மை காரணமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகள், இந்திய சாலைகளை பாதுகாப்பானவையாக மாற்ற அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த புதிய விதிமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடைமுறைப்படுத்தப்பட்டால், இது மில்லியன் கணக்கான இருசக்கர பயணிகளுக்கான உயிர்காக்கும் பாதுகாப்பாக அமையும்.