Tuesday, July 8, 2025
Home Blog Page 18

தலைவர் பதவியால் மன நிம்மதி போய்விட்டது; ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அன்புமணி!

பாமகவில் அண்மைக்காலமாகவே ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகின்றது. அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில் பாமக தலைவர் பதவி ஏற்றத்தில் இருந்து மன நிம்மதி போய்விட்டதாக தெரிவித்தார். தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில் அதனை பாமக நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் நடந்த சில சம்பவங்களை அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.

இருவரும் ஒருவர் மேல் ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதனால் பாமக நிர்வாகியால் மிகவும் குழப்பத்தில் இருக்கின்றனர் இந்நிலையில் அன்புமணி  மனநிம்மதி போய்விட்டதாக கூறியது மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் பாமக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி பல்வேறு கருத்துகளை முன் வைத்தார். மேலும் தமிழ்நாட்டிற்கு ஒரு விடிவு கொண்டு வர வேண்டும் அதற்காக தான் ஜூலை 25ஆம் தேதி ராமதாஸ் பிறந்தநாள் அன்று நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நடக்கும் கொடுங்கோள் ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்றி தமிழகத்திற்கு நல்லாட்சியை நாம் அமைக்க வேண்டும். மக்களே ஒன்று கூடுங்கள் என்ற நோக்கத்தில் தான் நடைபயணம் செல்வதாகவும் தெரிவித்தார்.

100 நாள் நடைபயணம் மேற்கொண்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பாமக தலைவர் பதவியில் இருக்கும் அன்புமணியை நீக்கி தானே தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால் தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது என அன்புமணி கூறினார் தானே கட்சித் தலைமை பதவியில் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

இருவரும் இதுபோல எதிரும் புதிருமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அன்புமணி பேசியிருந்தார்.

தந்தையிடம் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை என்று கூறியிருந்தார் அதே சமயத்தில் ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முருகன் எங்களுக்கு டார்கெட் இல்ல; முருகனை வைத்து அரசியல் பண்ணறவங்க தான் எதிரி..நடிகர் அமீர் பேட்டி!

மதுரையில் வரும் 21ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பாக பாஜக சங்க பரிவார் அமைப்புகள் இணைந்து முருக பக்தர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மனித சங்கலை பேரணி நடைபெற்றது.

அதில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையின் மதநல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த மனித சங்கலி போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். இந்த மனித சங்கிலியின் நோக்கம் முருகன் எங்களுக்கு எதிரானவர் அல்ல முருகன் பெயரை வைத்து அரசியல் செய்பவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என்பதுதான்.

நீதிமன்றம் தான் வழிகாட்டுதல் கொடுத்தாலும் அப்புறம் எதற்கு நீங்கள் இந்த மனித சங்கலியை நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பலாம் நீதிமன்றம் எத்தனை முறை வழிகாட்டுதல் அளித்தாலும் அந்த அமைப்புகளின் மாநாட்டின் உண்மையான நோக்கம் மக்களுக்கு புரிய வைப்பதற்காக இந்த மனித சங்கிலி போராட்டத்தை நாங்கள் நடத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.

முருகன் பெயரை வைத்து கலவரம் செய்ய துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். திருமாவளவன் பேசுகையில் இந்த மனித சங்கிலி போராட்டம் முருக பக்தர்களுக்கு எதிரானது கிடையாது. முருக பக்தர்கள் சனாதனத்திற்கும் சதி அரசியலுக்கு வழி விடக்கூடாது என்று சுட்டிக் காட்டுவதற்காக இங்கு குவிந்திருப்பதாக தெரிவித்தார்.

மதுரை மண்ணில் மத நல்லிணக்கம் உள்ள நிலையில் திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் சகோதரத்துவத்தோடு ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் யாரும் இஸ்லாமியர்களை பகைத்துக் கொள்ளவில்லை.

இஸ்லாமியர்கள் இந்துக்களை பகையாக கருதவில்லை அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் திருப்பரங்குன்றத்திலேயே பகைமை இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். அதனை வைத்து அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர் என பேசினார்

ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்; பயணிகளே இத உடனே பண்ணுங்க!

ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் தற்போது ரயில் பயணத்தையே அதிக அளவு விரும்புகின்றனர். ரயில் பயணத்தின் பொழுது டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொண்டு பயணித்தால் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கலாம்.

ஆனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நொடியிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்வதால் கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்புவர்கள் தட்கல் டிக்கெட்டை நாடி செல்கின்றனர். இதன் மூலம் விண்ணப்பித்து தங்களது பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் ரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய விதிகளை ஐ ஆர் சி டி சி அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஐ ஆர் சி டி சி வலைதளம் அல்லது செயலி மூலம் தக்கல் டிக்கெடுகளை முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது ஓடிபி அடிபடையிலான சரிபார்ப்பு அவசியமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஐஆர்சிடிசி கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டு, கேஒய்சி சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தட்கல் டிக்கெட் புக்கிங்கில் ஏற்படும் மோசடிகளை தடுக்கவே இந்த நடைமுறைகள் அமல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஐ ஆர் சி டி சி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் உள் நுழைந்து சுயவிவர பகுதிக்கு சென்று சரிபார்ப்பை முடிக்கவும், தட்கல் முன் பதிவின்போது ஓடிபி எளிதாக பெற காலதாமதம் ஆகலாம்..

ஐ ஆர் சி டி சி வலைதளம் அல்லது மொபைல் செயலியை பார்வையிட்டு தங்களுடைய கணக்கில் உள்நுழைய வேண்டும். அதன் பிறகு my account பகுதிக்குச் சென்று authenticate user என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும் அதன் பிறகு ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடியை உள்ளீடு செய்ய வேண்டும். verify details என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி வந்தடையும் பெறப்பட்ட ஒடிபியை உள்ளிட்டு ஒப்புதல் பெட்டியை கிளிக் செய்து சமிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு தங்களது ஐ ஆர் சி டி சி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படும்.

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; அரசு வழங்கும் 100 சதவீதம் பெறலாம்..உடனே விண்ணபியுங்கள்!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வருகின்றது. அதில் இலவசமாக மாடு வழங்குதல், ஆடு வழங்குதல், நாட்டுக்கோழி போன்ற திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பதற்காக சிறிய அளவிலான பண்ணைகளையும் அமைத்து தருகிறது.

மேலும் அதற்கு மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கோழி கொட்டகை மானியத்துடன் அமைத்து தரப்படுகின்றது. அரசு கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனை செய்து வருகின்றனர்.

விவசாயம் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கோழி கொட்டகை அமைத்து கொடுக்கப்படும், இந்த திட்டம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

இந்த கோழிப்பண்ணை அமைப்பதற்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரையும் மானியம் வழங்கப்படும். இதில் 50 சதவீதம் மானியம் பண்ணை அமைப்பதற்கும், 50% மானியம் கட்டிடம் கட்டுவதற்கும் வழங்கப்படுகின்றது.

மேலும் தங்களுடைய கிராமத்துக்கு அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்குச் சென்று கோழிக்கோட்டையை இலவசமாக பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் டிஆர்டிஓ டிபார்ட்மெண்டுக்கு நேரில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

50 கோழிகள் இருப்பது அவசியம். கோழி கொட்டகை அமைக்க விண்ணப்பிக்க ஆறு மாதத்தில் இருந்து 50 கோழிகளை தொடர்ந்து வளர்த்திருக்க வேண்டும். கோழி கொட்டகை அமைக்க தங்களிடம் சொந்த இடம் இருப்பது அவசியம். தாங்கள் விண்ணப்பிக்கக்கூடிய கிராமத்திலேயே தொடர்ந்து வசிபவராக இருக்க வேண்டும்.. கோழி கொட்டகை விண்ணப்பிக்க ஆதார் அட்டை நகல், பண்ணை அமைக்க இருக்கும் இடத்தின் சிட்டா அடங்கல் நகல், பேங்க் பாஸ்புக் போன்ற ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

தவறி கூட உங்க போனில் இந்த பட்டனை கிளிக் பண்ணிடாதீங்க; மோசடி கும்பல் வலைக்கும் வலை!

ஆண்ட்ராய்டு போன் அனைவரும் பயன்படுத்தி வரும் நிலையில் ஹேக்கர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த அம்சத்தை பயன்படுத்தி கவனக்குறைவாக பயனர்களை ஏமாற்றி வருகின்றனர்.

வழக்கமாக ஒரு உண்மையான பிராண்டாவது விளம்பரம் மின்னஞ்சலில் உள்ள அன்சா சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்யும்பொழுது அந்த அஞ்சல் பட்டியலில் இருந்த செய்திகளை பெறுவது நிறுத்தப்படும். இது போன்ற ஒரு செய்தி தோன்றும், பெரும்பாலும் அது ஒரு புதிய வகை பக்கத்திற்கோ அல்லது பாப்பப் தளத்திற்கோ தங்களை அழைத்துச் செல்லும்.

இந்த செயல்முறையின் மூலம் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அவர்களின் பட்டியில் இருந்து பாதுகாப்பாக நீக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஹேக்கர்கள் இந்த செயல்பாட்டை போலவே செயல்படும் மின்னஞ்சல்கலை அனுப்பி வருகின்றனர்

அன்சஸ்கிரைப் இணைப்புகளை தாங்கள் கிளிக் செய்யும்பொழுது அஞ்சல் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு பதிலாக நீங்கள் அறியாமலேயே உங்கள் கணினியில் மால்வேர் அல்லது வைரஸ்களை புகுத்த அனுமதி வழங்கப்படுகின்றனர்.

இந்த பிரச்சனையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு சில விதிகளை பின்பற்ற வேண்டும். அடையாளம்  தெரியாத அனுப்பியவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள பட்டனை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.

மின்னஞ்சலின் தலைப்பில் அர்ஜெண்ட் அல்லது இறுதி அறிவிப்பு என இருந்தால் அந்த மின்னஞ்சல்களை திறக்க கூடாது.. மேலும் அன் சப்ஸ்கிரைப் மின்னஞ்சல் விவரங்கள் அடுத்ததாக மேல் பகுதியில் இருந்தால் அதனை கிளிக் செய்யக்கூடாது.

எந்த ஒரு இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன் மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை முழுமையாக படித்து அதன் பிறகு அதனை பயன்படுத்த வேண்டும். மின்னஞ்சல் மோசடிகள் ஒரு பெரும் அச்சுறுத்தல் அதனால் உங்கள் இன்பாக்ஸில் வரும் மின்னஞ்சல்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

தனுஷ் கொடுத்த பில்ட்டப் ஒர்கவுட் ஆகுமா? முன்பதிவுக்கே படம் ரொம்ப முக்குதாம்!

தனுஷ் கொடுத்த பில்ட்டப் ஒர்கவுட் ஆகுமா? முன்பதிவுக்கே படம் ரொம்ப முக்குதாம்!

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் தயாரித்து இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் படம் மாபெரும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தனுஷ் தற்போது நடித்து முடித்த குபேரா படம் 20 ஜூன் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டில் தனுஷ் ரொம்பவே பேசிவிட்டார். அவர் மனதில் பட்டதை பேசி இருக்கிறார் என்று சிலர் சொன்னாலும் எல்லோராலும் அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் இவர் ஏன் இப்படி பேசுறாரு, அப்படி இவருக்கு என்னதான் ஆச்சு, யார பத்தி பேசுறாரு என்று அந்த நிகழ்வை பார்த்த யாருக்குமே எதுவுமே புரியவில்லை.

இந்த பேச்சு பட ப்ரோமோஷனுக்காக கூட இருக்கலாம். தனுஷ் ஒரு படத்துக்காக இப்படி பேசி இருக்காரு, அந்த படத்துல அப்படி என்ன தான் இருக்கும்ன்னு எல்லாரும் பாக்க வருவாங்க என்று கூட நினைத்து அவர் பேசி இருக்கலாம். இந்த குபேரா படத்துக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் படம் 3 மணி நேரம் 15 நிமிடம் காட்சிகளை கொண்டுள்ளது.

படம் இவ்வளவு லென்த்தா இருந்தா படம் பாக்குறவங்களுக்கு சலிப்பு வந்துரும் என்று 2 மணி நேரம் 50 நிமிடங்களாக படத்தின் நீளத்தை குறைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர், அதர்வாவின் DNA, வைபவ் நடிப்பில் சென்னை சிட்டி கேங்ஸ்டர் போன்ற படங்கள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகிறது. இதுவரை குபேரா படத்தின் முன்பதிவும் ரொம்ப டல்லடிப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

வெற்றியை பிடிக்க விஜய் சேதுபதி போட்ட திட்டம்? கண்டிப்பா அப்போ படம் ஹிட்டு தான்!

வெற்றியை பிடிக்க விஜய் சேதுபதி போட்ட திட்டம்? கண்டிப்பா அப்போ படம் ஹிட்டு தான்!

கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை விஜய் சேதுபதி நடிப்பில் மாதத்திற்கு 2, 3 படங்களாவது வெளியாகிவிடும். அந்த நேரத்தில் விஜய் சேதுபதி சினிமாவில் உச்சத்தில் இருந்ததால் கிடைக்கும் கதையில் எல்லாம் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் தொடர்ந்து விஜய் சேதுபதி படங்கள் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடவில்லை.

மாறாக எல்லா படங்களும் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி கடந்த வருடம் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்தார். இந்த படம் வெறும் 20 கோடி படஜெட்டில் எடுக்கப்பட்டு 200 கோடிக்கு மேல் வசூலித்தது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மகாராஜா படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய திரையுலகமே இந்த படத்தை கொண்டாடியது. கடந்த மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ACE படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை விஜய் சேதுபதி எதிர்பார்க்கவில்லை.

எனவே தனது ஆஸ்தான வெற்றிப்பட இயக்குனரான நித்திலன் சுவாமிநாதனை அணுகி இருக்கிறார். நித்திலன் சுவாமிநாதனும் ஏற்கனவே நயன்தாராவுடன் தான் பண்ணுவதாக இருந்த படம் ட்ராப் ஆனதால் விஜய் சேதுபதியுடன் இணைய ஒப்புக்கொண்டுள்ளார். கூடிய விரைவில் விஜய் சேதுபதி மற்றும் மகாராஜா இயக்குனர் நித்திலன் ஸ்வாமிநாதன் இணையும் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

உயிர் நட்பில் ஏற்பட்ட விரிசல்? 6 மாதங்கள் பேசாமல் இருந்த விராட் கோலி

உயிர் நட்பில் ஏற்பட்ட விரிசல்? 6 மாதங்கள் பேசாமல் இருந்த விராட் கோலி

RCB அணியில் அண்ணன் தம்பியை போல பழகியவர்கள் கோலி மற்றும் AB டிவில்லியர்ஸ். ABD சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். குறைந்த பந்துகளில் சதம், அரைசதம் என பல சாதனைகள் படைத்தவர்தான் ABD.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் லோக்கல் கிரிக்கெட் விளையாடும்போது கண்ணில் பந்து பட்டு பார்வை கோளாறால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய இன்டர்நேஷனல் கிரிக்கெட் வாழ்க்கையில் இனி கிரிக்கெட் விளையாடப்போவதில்லை என்று அறிவித்தார்.

RCB அணிக்காக 2011யில் இருந்து 2021 வரை தொடர்ந்து 10 வருடங்கள் விளையாடினார். அதனால் கோஹ்லியுடன் இவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அண்மையில் 18 வருடங்களுக்கு பிறகு RCB ஐபில் கோப்பையை வென்றபோது கூட ABD அந்த போட்டியை மைதானத்தில் வந்து கண்டுகளித்தார். போட்டியில் RCB வென்றபிறகு இவரும் RCB ஜெர்ஸி அணிந்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்தார்.

அண்மையில் இவர் கோஹ்லியுடன் ஏற்பட்ட சிறு மனவருத்தம் பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது கோஹ்லி அனுஷ்கா ஜோடிக்கு இரண்டாவது குழந்தைக்கு தயாராகிய பிறகு எங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது, அனுஷ்கா pregnentட்டாக இருக்கிறார் என்று கோஹ்லி தன்னுடைய நெருங்கிய நண்பர் ABDயிடம் தெரிவித்துள்ளார்.

நட்பாக கோஹ்லி சொன்ன இந்த விஷயத்தை ABD ஒரு நேரலையில் பேசியதால் கோஹ்லிக்கும், ABDக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாம். இதனால் விராட் ABDயிடம் 6 மாதகாலம் பேசாமல் இருந்துள்ளார். அதற்கு பிறகு தான் மீண்டும் ABDயிடம் கோஹ்லி பேசியதாக அண்மையில் பேட்டி கொடுத்துள்ளார் ABD.

முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பிளான்; விளாசிய அமைச்சர் சேகர் பாபு!

இந்து முன்னணி சார்பாக மதுரையில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பிருக்கின்றது. இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏடி இளங்கோவன் இது குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் வரும் ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீமான் தமிழில் இந்த குடமுழக்கை நடத்த வேண்டும் என கூற தமிழிலும் ஓதப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் முருகனை வைத்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றது. இந்நிலையில் பவன் கல்யாண் யோகி ஆதித்யநாத் இந்து முன்னணி சார்பில் 22 ஆம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் ஆந்திராவில் இருக்கும் பவன் கல்யாணுக்கும் உத்தர பிரதேசத்தில் இருக்கும் யோகி ஆதித்யநாத் தமிழ்நாட்டிற்கு என்ன சம்பந்தம்.

எந்த காலத்திற்கும் இல்லாத அளவில் 117 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு இந்த ஆட்சியில் நடத்தி இருக்கின்றோம். இந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. நாங்கள் கடவுளை வைத்து அரசியல் செய்யவில்லை.

ஆனால் பாஜக முருகன் மாநாடு என கடவுளை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். இந்த மாநாடு தேவையற்ற மாநாடு முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பார்க்கிறார்களா.

முதல்வர் ஸ்டாலின் பக்தியில் தான் தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு பாஜக மாநில தலைவர் நாயனார் ஏன் ஆந்திராவில் இருப்பவர்களுக்கு உத்திர பிரதேசத்தில் இருப்பவர்களுக்கும் முருகனை வழிபடக் கூடாதா பவன் கல்யாண் முருக பக்தர்கள் பலமுறை அவர் முருகனின் ஆறுபடை வீட்டிற்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவர் முருக மாநாட்டிற்கு வருவதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என பேசி இருக்கிறார்.

பாஜக வசம் செல்லும் மதிமுக; கூட்டணி கலையுமா..குழப்பத்தில் தவிக்கும் திமுக!

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என பேசப்படும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி திமுகவுக்கு ஸ்டார் ட்ரீட்மெண்டை கொடுக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் பாஜகவோ தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை என்றால் அவர்தான் இதுகுறித்து அறிவிக்க வேண்டும்.

ஆனால் மாறாக கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் அறிவிக்கின்றனர் இதிலிருந்து அதிமுக எத்தனை பலவீனம் ஆகிவிட்டது என திமுகவினர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என பாஜக கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் அமைதியாக இருப்பது அதிமுக ஆபத்தை விளைவிக்கும் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

அதிமுக பாஜக கூட்டணியில் நிச்சயம் விரிசல் ஏற்படும் என திமுக கூறிவரும் நிலையில் திமுக கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி என்று சொல்லும் நிலையில் அந்த கூட்டை கலைக்க பாஜக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் முருகன்  திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இந்த கட்சி விடுதலை சிறுத்தைகளாக இருக்குமா என பலரும் சந்தேகத்தை தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன் தெளிவாக இருக்கும் நிலையில் பாஜக பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் ஒருபோதும் இருக்காது என தெரிவித்துள்ளார் இதனால் யார் எனl முருகனிடம் கேட்டபோது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்சியானது வாஜ்பாய் காலத்தில் எங்களுடன் கூட்டணியில் இருந்தது என குழு ஒன்றை கொடுத்துள்ளார்.

அவர் கூறுவதை பார்த்தால் மதிமுக என்பது தெரிய வருகிறது. மதிமுகவுடன்  பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மதிமுக விரும்பிய நிலையில் நான்கு தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் ஆறு தொகுதிகள் ஒதுக்கலாம் என திமுக கூறியது அதனை தொடர்ந்து ஆறு தொகுதிகளை பெற்றுக்கொண்டு சூரியன் சின்னத்தில் கட்சியினரை போட்டியிட வேண்டும் என வைகோ தெரிவித்தார்.

அதுபோல 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியது. அதிலும் திமுக சின்னத்திலேயே மதிமுக போட்டியிட்டது..

இதுபோன்ற செயல்களை கவனித்த பாஜக எப்படியாவது மதிமுகவை தங்கள் வலைக்குள் கொண்டுவர வேண்டுமென தூண்டில் போட்டு காத்துக் கொண்டிருக்கிறது.

மதிமுகவுக்கு வரும் தேர்தலின் போது 10 இடங்களையாவது திமுக ஒதுக்குகின்றன என பேசப்படுகின்றது. இது போன்ற செய்திகள் பரவி வருவதால் திமுகவை விட்டு மதிமுக விலகிவிடுமா என்ற அச்சம் தற்போது திமுகவினர் இடையே ஏற்பட்டுள்ளது