Tuesday, July 8, 2025
Home Blog Page 21

இன்பநிதி-யை புதிய பதவியில் அமர வைத்து அழகு பார்க்கும் முதல்வர் குடும்பம்..திமுக தொண்டர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகின்றார். இந்நிலையில் சினிமாவில் இருந்த தனது மகனை அரசியலுக்கு கொண்டு வந்தார். உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலின் பொழுது பரப்புரை செய்தார். அப்போது அவருக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

முதலில் இவருக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் திமுகவின் இளைஞர் அணி தலைவராகவும் பதவி வகித்தார் அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவர் ஸ்டாலின் உடன் சேர்ந்து திமுக ஆட்சியை நடத்தி வருகின்றார் இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேரனும் துணை முதலமைச்சரின் மகனும் ஆன இன்பநிதிக்கு கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இவர் தினமும் காலை 11 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 5.3௦ மணி வரை பணிபுரிய இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிதி நிர்வாக தொடர்பான கட்டப்படைப்பை படித்து வந்த நிலையில் படிப்பை முடித்தவுடன் ஜூன் மூன்றாம் தேதி திமுக தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்திற்கு இன்பநிதியை அவருடைய தாய் கிருத்திகா அழைத்து வந்தார்.

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரி மகன் கார்த்திகேயன் அந்த நிறுவனத்தின் தலைமை நீதி அதிகாரியாக இருக்கும் நிலையில் அவரது அறையில் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் மகன் இன்பநிதியை அமர வைத்து அவருக்கு கிருத்திகா வாழ்த்து கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி நிர்வாக பணிகள் குறித்து அங்கு பணியாற்றும் முக்கிய நிர்வாகிகளுடன்  தினந்தோறும் இன்பநிதி ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

பிஎப் பணம் வாங்கிட்டீங்களா..அப்போ பென்சன் தொகை பெற முடியாது?

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பானது இபிஎப்ஓ என்ற திட்டத்தின் மூலமாக அவசர காலங்களில் பணம் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி  வழங்குகின்றது.. பிஎஃப் தொகையை எடுத்துக் கொண்டால் அது பென்சன் தொகையை பாதிக்குமா என பலரும் சந்தேகத்தில் உள்ள நிலையில் இபிஎப்ஓ என்ற பென்ஷன் திட்டம் அதில் தான் சேர்ந்து செயல்படும் என்பதை அறியவில்லை.

பென்சன் தொகை நேரடியாக வங்கி கணக்கில் வராது, அதனால் நம்முடைய பிஎஃப் தொகை எடுத்துக் கொண்டால் அது எதிர்காலத்தில் நம்முடைய பென்சன் தொகையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. பென்ஷன்  தொகை தொடர்ந்து நமது கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் சில நிபந்தனைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் அதை திரும்ப பெறவும், புதிய நிறுவனத்திற்கு மாற்ற முடியும்.

இபிஎப் திட்டத்தில் பணியாளரும் அவர் பணியாற்றும் நிறுவனமும் பணம் செலுத்தி வரும் நிலையில் நிறுவன பங்களிப்பில் ஒரு பகுதி இ பி எஸ் எனப்படும் பென்ஷன் திட்டத்திற்கு செல்கின்றது. இபிஎப் தொகை வட்டியுடன் சேர்ந்து வரும் தொகையாக உள்ள நிலையில் அதனை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும்.

மேலும் இபிஎப் தொகை நம் ஓய்வு காலத்தில் பென்ஷன் கிடைக்க வழிவகை செய்கின்றது. அதற்கு வட்டி கிடைக்காது இபிஎப்ஒ திட்டத்தில் பென்ஷன் பெற விரும்பினால் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்பது அவசியம்.

58 ஆண்டுகள் நிரம்பியவர் என்றால் முழுமையாக பென்ஷன் பெற முடியும். அதுபோலவே பத்து ஆண்டுகள் பிஎஃப் தொகையை முழுமையாக எடுத்து விட்டால் பென்சன் தொகை தானாகவே சேராது.

இந்நிலையில் பார்ம் 10சி என்பதை கொண்டு இபிஎப்  தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த படிவத்தை இபிஎப்ஓ இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். இதற்கு ஆதார்  மற்றும் கேஒய்சி அப்டேட் செய்திருப்பது அவசியம். குறிப்பாக பிஎஃப் தொகையை எடுத்தாலும் இபிஎப் திட்டத்தில் நீங்கள் பென்ஷன் பெரும் உரிமையை இழக்க முடியாது 58 வயதிற்கு பிறகு form 10 D மூலமாக பென்சன் பெற விண்ணப்பிக்கலாம்.

கொரோனா பரவல் எதிரொலி.. ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு? தமிழக அரசு அளித்த விளக்கம்!

கொரோனா பரவல் தாக்கம் உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உயிர் இழப்புகளின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டிய நிலையில் பலரும் பாதிப்படைந்தனர். அதனால் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்தது. நோய் தாக்கம் அதிகரித்ததால் மீண்டும் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கையை கையெடுத்தனர்.

மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்த நிலையில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி கொண்டுவரப்பட்டு படிப்படியாக கொரோனா பரவல் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. ஆனால் தமிழக சுகாதாரத் துறை சார்பாக கூறுகையில் கொரோனா பரவல் வந்தாலும் வீரியமற்ற கொரோனா என்பதால் பயப்பட வேண்டாம் எனவும் முககவசம் அணிவது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தமிழக முழுவதும் ஊரடங்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் என இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தவே இந்த செய்தி பரப்பப்பட்டு வருவதாகவும் நெடிஷன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்பகம் அளித்த விளக்கத்தில் இணையத்தில் வைரலாக கூடிய போட்டோ கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட செய்தியை தற்போது வெளியிடுவது போல பரப்பி வருவதாககொரோனா பரவல் எதிரொலி.. ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு? தமிழக அரசு அளித்த விளக்கம்!வும் தெரிவித்துள்ளனர்.

லோன் வாங்கித்தருவதாக சொல்லி மக்களை ஏமாற்றிய திமுகவினர்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிக இளைஞர்கள் மற்றும் பெண்கள் தாங்கள் தவெக கட்சியில் இருந்து விலகுவதாகவும், தவெகவில் தங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காததால் தவெவில் இருந்து விலகி திமுக கட்சியில் தங்களை இணைத்துக்கொள்வதாகவும், தவெக கட்சி துண்டு மற்றும் கொடியை தூக்கி எரிவதை போலவும், தவேக உறுப்பினர் அடையாள அட்டையை கிழித்தெறிவதை போலவும் வீடியோ வெளியாகி வைரலானது.

இவர்கள் அனைவரும் தவெகவில் இருந்து வெளியேறி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டதை போல வீடியோ வெளியானது. இந்த வீடியோ உண்மை என நினைத்து நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் பரவ செய்தனர். இந்நிலையில் இந்த விடீயோவின் உண்மை முகம் தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது திருவொற்றியூரில் லோன் வாங்க சென்ற மக்களை உங்களுக்கு லோன் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி திமுகவினர் அழைத்து சென்று இந்த மாதிரி வீடியோ எடுக்கணும், அதுக்கு இந்த மாதிரி எல்லாம் பண்ணுங்க என்று வற்புறுத்தியுள்ளனர்.

அங்கே சென்ற மக்களும் வேறு வழியே இல்லாமல் இந்த செயலை செய்துள்ளனர். அங்கு சென்ற மக்களே இன்று இந்த விடீயோவின் உண்மை நிலை குறித்து பேட்டி கொடுத்துள்ளனர்.

எங்களுக்கு வேற வலி தெரியல, அதே மாறி அந்த இடத்தை விட்டு எங்களால் நகரக்கூட முடியல, சுத்தியும் திமுக கட்சிக்காரங்க நின்னாங்க, அதனால வேறு வழியே இல்லாம அந்த வீடியோவில் அவங்க சொன்ன படி நடித்து முடித்தோம் என்று பேட்டி கொடுத்துள்ளனர்.

பாஜக தவெக கூட்டணி அமையுமா? கொள்கை பரப்பு செயலாளரே சொல்லிட்டாரு! 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை கடந்த வருடம் தொடங்கினார். இதுவரை 1 கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் கட்சியில் சேர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த TVK கட்சியின் அரசியல் எதிரி திமுக எனவும், கொள்கை எதிரி பாஜக எனவும் முதல் கட்சியின் மேடையிலேயே விஜய் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இதுவரை விஜய் கட்சியை சேர்ந்த யாரும் நேரடியாக அதிமுக கட்சியை விமர்சனம் செய்யவில்லை. நேரடியாக திமுக கட்சியையும், அவ்வப்போது மறைமுகமாக பாஜக கட்சியையும் விஜய் விமர்சனம் செய்து வருகிறார். அண்மையில் முன்னாள் IRS அதிகாரி TVK கட்சியில் இணைந்து கொள்கை பரப்பு செயலாளராக பதவியேற்றார்.

இவர் அண்மையில் சமூக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் எங்களின் கொள்கை எதிரி பாஜக எனவும், மதப்பிரிவினையை ஏற்படுத்தும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும், பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க TVK எப்போதும் உதவாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நடிகர் விஜய்யோ நம்முடன் கூட்டணிக்கு வர விருப்பப்படும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார். அதிமுக பாஜகவுடன் கூட்டணியை தளர்த்திவிட்டு வந்தால் தான் TVK ADMK கூட்டணி ஏற்படும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

பயணிகளின் கவனத்திற்கு..தெற்கு ரயில்வே சார்பாக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

பணி மற்றும் படிப்பிற்காக வெளியூரை சேர்ந்தவர்கள் சென்னையில் தங்கி வருகின்றனர். பண்டிகை காலம் கோடை விடுமுறை தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வது வழக்கம்.

அவ்வாறு செல்லும் பொழுது பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மேலும் ரயில்வே துறையின் சார்பாகவும் கூடுதல் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த ரயில்கள் இயக்கப்படுவதற்கு முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகும் நிலையில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு செய்து கொண்டு தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர். டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடத்திலேயே முடிவடைவதால் பலரும் கடைசி நிமிடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க வார இறுதி நாட்களிலும் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது, இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிவிப்பில் ஜூன் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

அதன் பிறகு ஜூன் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நெல்லையில் இரவு 9:40 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8 மணி அளவில் எழும்பூர் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெரிவித்துள்ளனர். அதனால் பயணிகள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு பயணிக்கலாம்.

கமலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!! குண்டர்கள் வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது!!

கமலஹாசன் நடிப்பில் Thug Life திரைப்படம் 5 ஜூன் 2025 அன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னர் கமலஹாசன் கர்நாடகாவில் படம் தொடர்பான ப்ரோமோஷன் செய்ய சென்றிருந்தார். அப்போது தமிழில் இருந்து தோன்றிய மொழி தான் தெலுங்கு என்று பேட்டி கொடுத்தார். இது கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. Thug Life படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம், கமலஹாசன் இந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

ஆனால் கமல் எந்த மன்னிப்பும் கேட்கவில்லை. தப்பு பண்ணுனா தான் மன்னிப்பு கேட்கணும், என்னால் இந்த விசயத்திற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று சொல்லிவிட்டார். கர்நாடகா உயர்நீதி மன்றம் கூட மன்னிப்பு தானே கேட்க சொல்கிறார்கள், தன்னுடைய கருத்தை பின் வாங்கிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு கர்நாடகாவில் படத்தை கமலஹாசன் வெளியிட வேண்டியது தானே என்று கமல் தொடர்ந்திருந்த வழக்கில் கருத்து தெரிவித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு படம் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது உயர்நீதி மன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதி மன்றம் எப்படி அப்படி கூறலாம். இந்த நாட்டில் குண்டர்கள் வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது என்று கமலஹாசனுக்கு ஆதரவாக கருத்துக்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்தே எனக்கு ஒரு ஆள் கிடையாது! உங்க அண்ணன் என்ன பெரிய கொம்பனா? மீண்டும் விஜய்யை சீண்டிய வேல்முருகன்!

திமுக இப்போ ஒரு யுக்தியை அரசியல் களத்தில் எடுத்துள்ளது. அதாவது திமுக கட்சியை சேர்ந்தவர்கள் நேரடியாக விஜய்யை விமர்சனம் செய்தால் விஜய் பெரிய ஆள் ஆகிடுவார். அதனால் தங்களின் கூட்டணி கட்சி தலைவர்களை வைத்து விஜய்யை விமர்சனம் செய்கிறார்கள். ஏற்கனவே திருமா மற்றும் வேல்முருகன் விஜய் பற்றி தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

அண்மையில் விஜய்யை பற்றியும், விஜய்யிடம் விருது வாங்கும் பெண் குழந்தைகள் பற்றியும் மிகவும் அருவருக்கத்தக்க விதமாக வேல்முருகன் பேசி இருந்தார். தற்போது மீண்டும் விஜய் பற்றி சர்ச்சையாக பேசியுள்ளார் வேல்முருகன்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். அதாவது பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து வந்து தமிழக வாழ்வுரிமை கட்சியை வேல்முருகன் ஆரம்பித்தார். என்ன எப்போ பாத்தாலும் எங்க அண்ணா, எங்க நொண்ணான்னு சொல்லிகிட்டே இருக்கீங்க. இந்த நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையே நான் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும்போது இளைய தலைமுறையை சிகரெட் பிடிக்க வைத்து அடிமையாக்குகிறார் என்று கேள்வி கேட்டவன் நான். உங்க அண்ணன் விஜய் என்ன ரஜினியை விட பெரிய கொம்பனா என்று பேசியுள்ளார். இந்த பேச்சு அரசியல் களத்தில் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

அஜித்துக்காக இதை விஜய் தினமும் செய்தார்.. இது தான் அவர்களின் உறவு – சோபனா ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவின் தல மற்றும் தளபதியாக வளம் வருபவர்கள் அஜித், விஜய். இவங்க ரெண்டு பேரின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் இவர்களின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். அதேபோல ஒரே நாட்களில் வெளியாகும் இவர்களின் படங்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றிநடை போடும்.

சினிமாவை தாண்டி விஜய் மற்றும் அஜித்துக்கு நடுவில் மிகப்பெரிய நட்பு ஆரம்பம் முதலே இருந்து வந்தது. இதை அவர்களே பல மேடைகளிலும், பேட்டிகளிலும் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் விஜய் மற்றும் அஜித்தின் நட்பு பற்றி விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார்.

விஜய் சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து தனது தந்தை சந்திரசேகரின் படங்களில் நடித்து வந்தார். ராஜாவின் பார்வையிலே படத்தில் தான் விஜய் சந்திரசேகரை தாண்டி வேறொரு இயக்குனரின் படத்தில் நடித்தார். அந்த படத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். அந்த ராஜாவின் பார்வையிலே படப்பிடிப்பின்போது விஜய் தினமும் அஜித்திற்கும் சேர்த்து தனது வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வருவாராம். அந்த அளவுக்கு அஜித் மீது மிகுந்த நட்புடன் அன்பில் இருந்தார் விஜய் என பேட்டி கொடுத்துள்ளார் சோபா.

யுபிஐ பயனர்களே இத கவனிச்சீங்களா; இனி 10 நிமிடத்தில் முடிஞ்சுரும்!

பண பரிமாற்றம் அனைத்துமே தற்போது டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி வரும் நிலையில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்து வருகின்றது. சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை எங்கு பார்த்தாலும் பண பரிமாற்றம் செய்ய யுபிஐ வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனை சேவை புதிய நேரம் வரவுகளுக்கு ஏற்ப தங்கள் அமைப்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நேரம் வரம்புகளின் மூலம் பண பரிவர்த்தனைகள் தோல்வியடையும் அல்லது தாமதமாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.

பயனர்கள் விரைவாக பணம் செலுத்துவது அல்லது பெறுவது உறுதி செய்யவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. போன் பே, கூகுள் பே, பேடிஎம், போன்ற யுபிஐ பயன்படுத்தும் பயனாளர்களின் வசதிக்காக புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி எங்கு வேண்டுமானாலும் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முழு செயல்முறையும் 15 வினாடிகளில் நிறைவடையும்.

முன்பு 90 வினாடிகள் காத்திருக்கும் சூழல் இருந்த நிலையில் தற்போது 45 முதல் 60 வினாடிகளுக்குள்ளேயே இதனை சரிபார்த்துக் கொள்ளலாம். நெட்வொர்க் கோளாறு போன்ற காரணங்களால் யுபிஐ சிஸ்டத்தை அடையாத பரிவர்த்தனைகள் தானாகவே தோல்வி அடைந்ததாக குறிக்கப்படும். இது நேரத்தை சேமிக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ கட்டண அனுபவம் இனி வேகமாக இருக்க. இந்த புதிய நேரம் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.