Wednesday, July 9, 2025
Home Blog Page 25

உரிமை மீட்பு பேரணி.. ராமதாஸுக்கு எண்டு கார்டு போட்ட அன்புமணி!!

PMK: அன்புமணி மற்றும் ராமதாஸ் என இருவருக்கும் இடையே நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் ஆனது அதிகரித்து வருகிறது குறிப்பாக தலைவர் பதவி யாருக்கு என்பதுதான் எந்தன் போட்டியே உள்ளது. அந்த வகையில் ராமதாஸ் இரு தினங்களுக்கு முன்பு வரப்போகும் சட்டமன்ற தேர்தல் வரை தலைவராக நான் தான் இருப்பேன். அதன் பின் அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி ஏற்றுக்கொள்ளட்டும் எனக் கூறினார்.

அவ்வாறு கூறிய அடுத்த நாளை சாகும் வரை நான் தான் தலைவர் அதற்காக வனவாசம் செல்லவில்லை செயல் தலைவராக செயல்பட்டு நான் சொல்வதை கேட்டால் போதும் எனக்கு உரியதோடு அன்புமணியை பார்த்தாலே பிபி எகர்கிறது என க் கூறினார். இப்படி ராமதாஸ் ஒரு பக்கம் தனது நிர்வாக தலைமையை காட்டி வரும் பட்சத்தில் அதனை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் அன்புமணி மற்றொரு பக்கம் அப்பாவுக்கு எதிராக பல வேலைகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் ராமதாஸ் பிறந்தநாளன்று திமுகவை கண்டிக்கும் வகையில் மக்கள் உரிமை மீட்பு பேரணி நடத்த உள்ளார். பாமகவிற்கு அதிக ஆதரவுள்ள விழுப்புரம் கடலூர் தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் 100 நாட்களுக்கு நடைபெறும் என்று கூறியுள்ளார். இந்தப் பேரணி அழைப்பிதழில் ஒரு இடத்தில் கூட ராமதாஸ் அவர்களின் புகைப்படம் இடம்பெறவில்லை.

மாறாக அன்புமணி புகைப்படம் மட்டுமே உள்ளது. இதனைப் பார்த்த தொண்டர்களுக்கு அதிர்ச்சி கலந்த சந்தேகம் எழுந்துள்ளது. கட்சியை முழுவதையும் அபகரிக்க அன்புமணி முயற்சிப்பது இதன் மூலமே தெரிகிறது என பேசி வருகின்றனர். இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை கக்கும் இந்த செயலால் பாமகவின் மவுஸானது மற்ற கட்சிகளை காட்டிலும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தையல் தெரிந்த பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணபியுங்கள்!!

தமிழக அரசு சார்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை என பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சுயவேலை வாய்ப்புக்கு கடன் உதவியும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பெண்கள் திறன் மற்றும் அறிவு பெறுவதினால் அதிகாரம் அடைவதன் மூலம் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய முடியும். பெண்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய முடியும் என்பதால் அவர்களுடைய பொருளாதார தரத்தை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் தொழில் கூட்டுறவு சங்கங்களில் சமுதாயத்தில் பின்தங்கிய 18 வயதிற்கும் மேல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டுமே உறுப்பினர்களாக சேர முடியும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்கள் இந்த சங்கங்களில் உறுப்பினர்கள் ஆக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் தையல் தெரிந்திருந்தால் அவர்களுடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக இருந்தால் மட்டும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் சமூக ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகின்றது. இதற்கு அருகே உள்ள இ சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

18 மாத நிலுவை தொகை; மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய 18 மாத டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகை குறித்து கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் டிஏ நிலுவை தொகை ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பெரும் தொகையை பெறுவார்களா எனவும் கேள்வி எழுந்து வருகின்றது. ஐந்து ஆண்டுகளாக இழப்பிற்கு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குமா எனவும் கேள்வி எழுப்பப்படும் நிலையில் அண்மையில் டி ஏ உயர்வு அறிவிக்கப்படலாம் எனவும் செய்தி வெளியானது.

மேலும் தேசிய குழுவின் நிரந்தரக் குழுவின் 63வது கூட்டம் டெல்லியில் உள்ள சிவில் சர்வீஸ் அதிகாரிகள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட நிலையில் அந்த கூட்டத்தில் மத்திய ஊழியர்கள் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

மேலும் அதில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத டிஏ மற்றும் டி ஆர் நிலுவைத் தொகை வழங்குவதும் கேள்விக்குறியாக இருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் அவர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் 2020 மார்ச் முதல் 2021 ஜூன் வரையிலான 18 மாதங்களுக்கான டிஏ மற்றும் டி ஆர் தொகையை தொற்று நோய்களின் காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அதனை ஊழியர்களுக்கு உடனடியாக தர வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு நிலுவை டிஏ மற்றும் டி ஆர் வழங்குவதை சாத்தியமில்லை. எட்டாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 2026 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதன் நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். 

ஆதார் அட்டையில் இந்த அப்டேட்டை உடனே பண்ணுங்க; இன்று தான் கடைசி நாள்!

இந்தியாவில் உள்ள குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகின்றது. ஆதார் மட்டும் இருந்தால் போதுமானது இந்நிலையில் ஆதாரில் உள்ள விவரங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஜூன் 14ஆம் தேதி அதாவது இன்று ஆதார் விவரங்களை உடனடியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும். நாளை அப்டேட் செய்யும் நபர்கள் அனைவரும் கட்டணம் செலுத்திய அப்டேட் செய்து கொள்ள முடியும். அதனால் இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொருவரும் ஆதார் கார்டை தனிநபரின் பெயர், வயது, பாலினம், முகவரி, கைரேகை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அனைத்தையும் திருத்தம் செய்து கொள்ளலாம்.

ஆதார் கார்டில் ஒரு சில நபர்களுக்கு ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை உடனடியாக திருத்தி கொள்வது அவசியம். அதனால் அரசு வழங்கக்கூடிய இலவச அப்டேட்டை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொருவரும் தங்களது ஆதாரில் உள்ள திருத்தங்களை உடனடியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தண்ணீருக்கு தத்தளிக்கும் பாகிஸ்தான்.. சிந்து நிதி கிடைக்க வாய்ப்பே இல்லை!! மெகா பிளானை இறக்கிய இந்தியா!!!

0

India Pakistan: பாகிஸ்தானியர்களுக்கு நீரின் ஆதாரமாக விளங்குவது இந்த சிந்து நதி தான். பகல்ஹாம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை தடுத்தது. இதனால் கொந்தளித்த பாகிஸ்தானியர் இந்தியாவில் இரத்த வெள்ளம் ஓடும் என சவால் விட்டனர். ஆனால் அவர்களின் தாக்குதல் எதுவும் இந்தியாவிற்கு பாதிப்பை தரவில்லை. இந்த போரை முடித்துக் கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தவும் ஆரம்பித்தனர். ஆனால் அதுவும் கை கொடுக்காததால் உலக நாடுகள் மத்தியில் உதவி கேட்டு வருகின்றனர்.

ஆனால் இந்தியா சிந்தூர் என்ற ஆப்ரேஷனை செய்து வெற்றியடைந்ததை அடுத்து கட்டாயம் சிந்து நதிநீரை பாகிஸ்தானுக்கு அனுப்பக்கூடாது என முடிவெடுத்துள்ளனர். அதன்படி சிந்து நதி நீர் இந்தியாவில் பஞ்சாப், இமாச்சல பிரதேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கான வேலைப்பாடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தானில் எந்த நீரும் சென்று விடக்கூடாது என்பதற்காக சிந்து நிதியை இந்தியாவின் பிரதி பிஎஸ் நதிகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மெகா கால்வாய் மூலம் நீரை இறக்கி பஞ்சாப்பிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த சிந்து நதிநீரானது கங்கை வரை கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த பணி முடிவடைய இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிடும். மற்றொருபுறம் நீர் தேக்கம் அதிகமாகி பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது என்பதற்காக ஹரியானா கால்வாயில் உள்ள சேதங்களையும் சரி செய்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் தான் உச்சகட்ட பிரச்சனையில் உள்ளது.

கொடுத்த கடனை திருப்பி கேட்டால் 5 லட்சம் அபராதம் 3 ஆண்டு சிறை.. ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!!

0

Tamilnadu Gov: தமிழக அரசு பல்வேறு மசோதாக்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. ஆனால் இதற்கு முன் கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில் நீதிமன்றம் நாடி அவை அனைத்திற்கும் ஒப்புதல் வாங்கினர். நீதிமன்ற வழக்கை அடுத்து தொடர்ந்து ஆளுநர் பல்வேறு மசோதாக்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கும் வழக்கத்தை கொண்டு வந்துள்ளார்.

அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி சட்டப்பேரவையில் கடன் ரீதியாக புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றினார். இனிவரும் நாட்களில் கடன் கொடுத்த நிறுவனம் சம்பந்தப்பட்ட நபர்களிடம் துன்புறுத்தி கடனை வசூல் செய்யக்கூடாது. மேற்கொண்டு வசூல் செய்யும் பட்சத்தில் மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என வரையறுத்துள்ளனர்.

வரம்பு மீறுபவர்களுக்கு இது இரண்டும் கூட கிடைக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் கடன் வாங்கியவர்களுக்கு சற்று பொறுமையுடன் கடனை தர சூழல் உருவாகும். குறிப்பாக கடன் பிரச்சனையால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் பட்சத்தில் குறையக்கூடும். இந்த கடன் வசூலிக்கும் மசோதாக்கு தான் தற்பொழுது ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

கடன் தரும் நிறுவனங்கள் வசூலிக்கும் முறை மாற்றி கட்டபஞ்சாயத்து செய்பவர்கள் என பலரிடம் அந்த பொறுப்பை கொடுத்து விடுகின்றனர். இதனால் 1 தவணை கட்ட முடியவில்லை என்றாலும் கடன் வாங்கிவர்களை மிகவும் அவதூறாக பேசி விடுகின்றனர். இதனால் தற்கொலைகள் அதிகரிக்க தொடங்கவே அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.

காலையிலேயே மாணவர்களை குஷிப்படுத்திய பள்ளிக்கல்வித்துறை; இந்த ஆண்டில் இத்தனை நாட்கள் விடுமுறை!

தமிழகத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, ஆகியவற்றில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான முழு ஆண்டு தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது.

கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் இரண்டாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளி கல்வித்துறையின் அறிவிப்பில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு மற்றும் பொங்கல் விடுமுறை பற்றியும் கூறப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கூட ஆகாமல் மீண்டும் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகளுக்கான தேதி வெளியானது மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பள்ளி கல்வித்துறை கூறுகையில் வாரத்தில் இரண்டு விளையாட்டு வகுப்புகள் ஒதுக்கீடு செய்வது அவசியம், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகளுடன் புதிதாக ஈஸி இங்கிலீஷ், பன் வித் மேத்ஸ் வகுப்புகள் நடத்த உள்ளனர். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மொழி ஆய்வகம், நூலகம், கல்விசார் செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகளுக்கு பாடம் வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி, உடல் நல மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், வாய்ப்பாடு நடனம், கலையரங்கம், ஆகியவற்றில் கல்வி சாரா செயல்பாடுகளில் பாட வகுப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பு கல்வி, மனநல மற்றும் வாழ்வியல் திறன், நீதி போதனை, உள்ளிட்ட பாட வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பாட வகுப்புகளில் எழுதுதல், கவனம் குவித்தல், ஸ்மார்ட் இலக்குகள், உன்னை அறிந்தால் என மாணவர்களின் நலன் சார்ந்த பாடங்கள் எடுக்கப்படும். இந்த கல்வியாண்டில் மொத்தம் 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படும். செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும். செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை. இந்த காலாண்டு விடுமுறையில் ஆயுத பூஜை, விஜயதசமி விதிமுறைகளும் அடங்குகின்றது.

டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும். அதன் பிறகு டிசம்பர் 24ஆம் தேதி யிலிருந்து ஜனவரி 5ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். அரையாண்டு தேர்வு முடிவடைந்த பிறகு ஜனவரி 14 முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தைப்பூச திருவிழா விடுமுறை. ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும்.

25ஆம் தேதி அடுத்த ஆண்டிற்கான கோடை விடுமுறை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களில் ஏதேனும் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை மற்றும் இயற்கை பேரிடரால் வழங்கப்படும் விடுமுறை உள்ளிட்டவை சரி செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாளாக அறிவிக்கப்படலாம் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

நான் செத்தால் தான் தலைவர் பதவி அன்புமணிக்கு போகும்.. கொந்தளிக்கும் ராமதாஸ்!!

PMK: பாமக கட்சிக்குள் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கிடையே நாளைக்கு நாள் மோதல் போக்கானது அதிகரித்துள்ளது. நேற்று வரை ராமதாஸ் 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடியும் வரை நான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி ஏற்றுக்கொள்ளட்டும் என கூறி வந்தார். ஆனால் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாளுக்கு நாள் அன்புமணி எனக்கு எதிராக செயல்படுவதை பார்க்கும் போது தலைவர் பதவி கொடுக்க வேண்டாம் என எண்ணுகிறேன். சாகும் வரை நானே தான் தலைவர்.

எனது குடும்பத்தைச் சார்ந்த யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள் என்று கட்சி தொடங்கியபோது கூறினேன். ஆனால் அதனை காப்பாற்ற முடியவில்லை. தற்போது அன்புமணியை பார்த்தாலே எனக்கு பிபி ஏறுகிறது. கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுத்து அதற்கு விருதும் வாங்கினார். ஆனால் ஒருபோதும் தந்தையிடம் விருது வாங்க முடியவில்லை. அவரிடத்தில் தாய் தந்தைக்கு மதிப்பு என்பதே கிடையாது. மைக்கை தூக்கி அடிப்பதும், அம்மா நோக்கி பாட்டிலை எறிவதுமாக உள்ளார்.

நான் இன்னும் நூறாண்டுகள் இருப்பேன் என அன்புமணி கூறுகிறார். அதேசமயம் மார்பிலும் முதுகிலும் ஈட்டியா குத்துகிறார். இதனால் எனக்கு தூக்கம் மாத்திரை போட்டால் கூட தூக்கம் என்பதில்லை. அன்புமணியால் அதிகப்படியான துன்பம் தான், இது பாசத்தினால் ஏற்படுவது அல்ல. பாசம் எல்லாம் எனக்கு எப்போதும் போய்விட்டது. கட்சி ரீதியாக அவருக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் செயல் தலைவராக இருந்து நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். இதை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் முடிவு எட்டப்ப்படுமாறு கூறியுள்ளார்.

நகையை அடமான வெச்சிட்டு திரும்ப வாங்கலையா.. லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் உடனே டிரை பண்ணுங்க!

நகை என்பது ஒரு சொத்தாக பார்க்கப்படும் நிலையில் பணத்தேவையின் பொழுது நகையை வங்கிகளில் அடமானம் வைத்து பண தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. நகையை அடகு வைக்கும் பொழுது அதனை சரியான காலகட்டத்தில் திருப்ப வேண்டும்.

ஆனால் மீண்டும் மீண்டும் மறு அடகு வைத்தால் வட்டியாக மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரங்களை கட்ட வேண்டிய சூழல் உள்ளது. சிலர் நகையை திருப்ப செல்லும் பொழுது நகையை வங்கிகள் ஏலமே விட்டிருக்கும். நகை அடகு வைக்கும் பொழுது வங்கி கொடுக்கும் ரசீதியை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த ரசீது இருந்தால் மட்டுமே நகையை திரும்ப பெற முடியும். நகை வைக்கும் பொழுது கொடுக்கப்படும் ரசீது தொலைந்து விட்டால் நகையை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

ஆனால் அதனை காரணம் காட்டி வங்கி நிர்வாகம் தங்களது நகையை ஏலம் விடும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து தற்போதைய சந்தை நிலவரப்படி நகையின் மதிப்பீட்டிற்கு ஏற்ற பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் நகை அடமானம் வைக்க தற்போது புதுப்புது நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. முன்பே 100 சதவீதம் நகைக்கு 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 85 சதவீதம் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலையில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் தான் விடுமுறை; மாணவர்கள் ஷாக்!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் பக்ரீத் பண்டிகை உட்பட எட்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தது. தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை 45 நாட்களுக்கும் மேலாக விடப்பட்டது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பள்ளி திறப்பு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மழை பெய்ததால் திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதியே பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே எந்தெந்த மாதங்களில் பொது விடுமுறை வரப் போகும் என்பதை மாணவர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

ஜூன் மாதத்தில் பொது விடுமுறை என பக்ரீத் பண்டிகை மட்டுமே வந்த நிலையில் அதுவும் சனிக்கிழமை வந்ததால் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜூலை 6ஆம் தேதி மொஹரம் பண்டிகை மட்டுமே வர உள்ளது.

அதுவும் ஞாயிற்றுக்கிழமை நாள் வருவதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் தள்ளி உள்ளது. சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் எட்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுகின்றது. ஜூன் மாதத்தைப் போலவே ஜூலை மாதத்திலும் போதிய விடுமுறை கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் கவலையடைந்துள்ளனர்.