Thursday, July 10, 2025
Home Blog Page 26

ஜூலையில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் தான் விடுமுறை; மாணவர்கள் ஷாக்!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் பக்ரீத் பண்டிகை உட்பட எட்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தது. தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை 45 நாட்களுக்கும் மேலாக விடப்பட்டது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பள்ளி திறப்பு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மழை பெய்ததால் திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதியே பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே எந்தெந்த மாதங்களில் பொது விடுமுறை வரப் போகும் என்பதை மாணவர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

ஜூன் மாதத்தில் பொது விடுமுறை என பக்ரீத் பண்டிகை மட்டுமே வந்த நிலையில் அதுவும் சனிக்கிழமை வந்ததால் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜூலை 6ஆம் தேதி மொஹரம் பண்டிகை மட்டுமே வர உள்ளது.

அதுவும் ஞாயிற்றுக்கிழமை நாள் வருவதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் தள்ளி உள்ளது. சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் எட்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுகின்றது. ஜூன் மாதத்தைப் போலவே ஜூலை மாதத்திலும் போதிய விடுமுறை கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் கவலையடைந்துள்ளனர். 

பெண் குழந்தைகள் இருக்காங்களா; வீடு தேடி வரும் பணம் உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. மேலும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தில் பதிவு செய்து முதிர்வுத்தொகை பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பணத்தைப் பெற முடியும். பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் வகையிலும், பாலின பாகுபாட்டை தடுக்கும் வகையிலும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கின்றன.ர் இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாட்டை பின்பற்ற ஊக்குவிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் 25 ஆயிரம் ரூபாய் நிலையான வாய்ப்புத் தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்யப்படுகின்றது. பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் பொழுது வைப்புத்தொகை மற்றும் வட்டியுடன் முதிர்வு தொகை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆக கிடைக்கும்.

மேலும் அந்த பெண் குழந்தை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிபதனையாக அவர்கள் கூறியிருப்பதாவது குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் 1,20,000 மேல் இருக்கக் கூடாது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளுக்குள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பது அவசியம். மேலும் பெண் குழந்தைகள் 2011 ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்திருப்பது அவசியம் விண்ணப்பதாரர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், கரு தடை அறுவை சிகிச்சை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கு வட்டாட்சியர் உறுதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது; அமலுக்கு வரும் புதிய நடைமுறை!

அரசு வேலை பெறுவதற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர். காலி பணியிடங்கள் 10 ஆக இருந்தால் கூட லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடிய ஊழியர்கள் சரியான முறையில் அலுவலகம் முன்பு வருகின்றார்களா என்பதை உறுதி செய்ய புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒடிசா அரசு அலுவலகங்களில் சரியான நேரத்திற்கு ஊழியர் வருவதை உறுதி செய்ய தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவு தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. பயோமெட்ரிக் வசதி இல்லாத அலுவலகங்களில் உடனடியாக அதனை நிறுவ வேண்டும் எனவும் ஒடிசா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை நியமிக்கப்பட்ட அதிகாரி பயோமெட்ரிக் வருகை பதிவின் மூலம் அரசு ஊழியர்களின் வருகை பதிவை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் வரும் பொழுதும், அலுவலகத்தில் இருந்து வெளியேறும் பொழுதும் பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய வேண்டும்.

அலுவலகம் விட்டு வெளியேறும் நேரத்தை ஊழியர்கள் பதிவு செய்ய தவறினால் அன்றைய தினம் விடுப்பாக கருதப்படும். மேலும் சுழற்சி முறையில் வேலை செய்யும் அலுவலகங்களில் தலைமை அதிகாரி ஊழியர்கள் வேலைக்கு வரும் நேரத்தை நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு 30 நிமிடம் தாமதமாக வரும் பட்சத்தில் மூன்று நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப்படுகின்றது. ஒரு மாதத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தாமதமாக வந்தால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை லீவ் எடுக்கப்படும். மேலும் அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்யும் ஊழியர்கள், மாலை நேர பணி செய்பவர்கள், உரிய அதிகாரியின் அனுமதி பெற்று தாமதமாக வரும் ஊழியர்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

மேலும் அரசு வேலை காரணமாக வெளியூர் அல்லது அலுவலகத்திற்கு வெளியே சென்றாலோ இவர்களுக்கு அபராதம் கிடையாது. இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரைவில் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இனி ஜாலியா ஸ்கூல் போகலாம்; புதிய வசதியை அறிமுகம் செய்த அரசு!

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, புத்தகம், காலை உணவு திட்டம், கல்வி உதவித்தொகை , இடைநிற்றலை குறைப்பதற்காக ஊக்கத்தொகை, நான் முதல்வன் திட்டம், மற்றும் மடி கணினி, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிக்கு ஏற்ப உயர்த்தும் வகையில் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் உள்ளிட்டவை தற்போது பயன்பாட்டில் உள்ளது. அரசு பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்காக மூன்று புதிய பள்ளி பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கல்வியை அடுத்த கட்டத்திற்கு தரம் உயர்த்த சென்னை மாநகராட்சி கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இலவச பேருந்து சேவை ஜூன் ஒன்றாம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சேவையால் மாணவர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இலவச பேருந்து சேவை தற்போது முதல் கட்டமாக கொண்டு வரப்பட்ட உள்ள நிலையில் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் பேருந்து சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

2026 யில் பாஜக ஆட்சி தான்.. அதிக தொகுதிகளில் நாங்கள் தான் போட்டியிடுவோம்- அண்ணாமலை பரபர பேட்டி!!

ADMK BJP: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தற்போது வரை அவர்களின் ஒப்பந்தம் குறித்து தெளிவு இல்லாத போல தான் உள்ளது. எடப்பாடி தரப்பினர் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி தான் வைத்துள்ளோம் ஆனால் அவர்களுடன் கூட்டணி ஆட்சி நடத்த மாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி முதல் தமிழக பாஜக மாநில தலைவர் வரை அதிமுக பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும் என்கின்றனர். இதனின் கஉச்சகட்டமாக தற்போது தமிழகத்திற்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகை புரிந்த போது இது ரீதியாக பேசியிருந்தார்.

அச்சமயம் அதிமுக தொண்டர் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் குழப்பம் எழ ஆரம்பித்தது. இதனை தவிர்க்கும் வகையில் மீண்டும் எடப்பாடி அதிமுக ஆட்சி தான் என்று பாஜக கூறியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேசி வருகிறார். ஆனால் இந்நிலையில் மீண்டும் பாஜக அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் தற்போது வரை செய்து காட்டுகிறது. இதுவே திமுக வந்து நான்காண்டுகள் ஆகிறது.

குறைந்தபட்சம் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியவில்லை. அவர்கள் சொன்ன சிலிண்டருக்கு ரூ 100 மானியம் எனத் தொடங்கி பெட்ரோல் டீசல் வரை எதுவும் குறைக்கப்படவில்லை. ஆனால் மோடி சொன்னதை தாண்டி செய்து வருகிறார். அதாவது பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக கூறவில்லை, மாறாக குறைத்துள்ளார். அண்ணாமலை மோடிக்கு அதிமுக விடும் அதிக தொகுதி வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதியதாக ஒரு தகவல் பரவியது.

அதற்கு இல்லை என்று பதில் அளித்துள்ளார். அதேபோல 2026 யில் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன் அது பாஜக ஆட்சி தான் எனக்கு கூறியுள்ளார். தேர்தல் வரும் சமயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் இருவரும் இணைந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாஜகவில் இருக்கும் நான் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தான் என்னுடைய கட்சி வளர்க்க தான் எனது எண்ணம் இருக்குமே தவிர இதர கட்சிகளை வளர்ப்பதில் இல்லை என்று சூசகமாக சொல்லி முடித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; லேட் பண்ணாம விண்ணப்பியுங்கள்!

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டு அறிக்கையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய பள்ளி மற்றும் ஐஐடி, டிப்ளமோ கல்லூரி விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கி பயில்வதற்கு ஆர்வம் உள்ள மாணவர்களிடமிருந்து இணைய வழியாக கடந்த பத்தாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது.

அதனால் ஆர்வம் உள்ள மாணவர்கள் https://nallosai.tn.gov.in என்ற இணையதளத்தின் முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விடுதிகளில் தங்கி பயில்வதற்கு மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மாணவர்கள் மத்திய மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை காலை 10 மணி முதல் மாலையை 6 மணி வரை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!

தமிழக அரசு சார்பாக பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு பயிற்சியும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கிய அடித்தளமாக உள்ள நிலையில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வர பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.

மேலும் உயர் பதவிக்கான தேர்வான குடிமைப்பணி தேர்வுக்கு தமிழக அரசு பயிற்சி வழங்கி வருவது மட்டுமின்றி ஊக்கத்தொகையும் வழங்குகின்றது. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் சென்னையில் உள்ள அகில குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய இந்திய தேர்வாணையத்தால் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மாதிரி ஆளுமை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றது.

இப்பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு, கணினி மையமாகப்பட்ட நூலகம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதனால் பயிற்சி பெறுபவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் நிலையில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற குடிமை பணி முதல் நிலை தேர்வில் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வில் எழுதிய தேர்வர்களில் 98 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

இவர்களில் 26 பெண் ஆர்வலர்களும் இரண்டு மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 3 மாதங்களுக்குப் பிறகு முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட இருக்கின்றது. அதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் குடிமை பணி முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

அவர்களுக்கு பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கு ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் ரூபாய் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; நெல் கொள்முதல் விலை இனி இதுதான்!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 2026 தேர்தலுக்கும் தனது கட்சியை தயார் படுத்தி வரும் நிலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் ஜூன் 12-ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்பொழுது விவசாயிகளுக்கு இனி ஒரு குவிண்டலாவுக்கு 2500 என நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சாதாரண நெல் கோவிந்தலாவுக்கு 2500 ரூபாயும், சன்னராக நெல் குவிண்டலாக்கு 2545 ரூபாய் வழங்கப்படும்n இதன் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்ட நிலையில் மக்களை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது இது குறித்து பேசப்பட்டது. நான்கு ஆண்டுகளில் 7,660 கோடி மதிப்பிலான திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜக அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் என்ன நிலை என்பது தெரியும்.

பத்து ஆண்டுகளாக கட்ட அது என்ன ஆராய்ச்சி நிலையமா சரியாக நிதி ஒதுக்கி இருந்தால் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்திருக்கலாம். தற்போது மதுரையை சுற்றி அனைத்து பணிகளையும் நாங்கள் முடித்துக் கொடுத்திருக்கிறோம். மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க நீங்கள் உதவ வேண்டும்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் தமிழகத்திற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்டர்வியூ இல்லாம உடனே வேலை..டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு சார்பாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாடு மின் துறையில் 418 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அக்கவுண்ட் ஆபிஸர் மற்றும் அசிஸ்டன்ட் இன்ஜினியர் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளதால் நேர்முகத் தேர்வு இல்லாமல் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கு ஒரு சிலர் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இன்டர்வியூ இல்லாத டெக்னிக்கல் பதவிகளுக்கான காலி பணி இடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டது. அதில் உதவி பொறியாளர், உதவி பொறியாளர் இளநிலை, மின் ஆய்வாளர், உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 21ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 615 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த நேர்முகத் தேர்வு இல்லாத தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வுகளுடன் தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள 416 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடக்கப்பட்டுள்ளது. மேலும் அசிஸ்டன்ட் இன்ஜினியருக்கு 391 காலி பணியிடங்களும் அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர் 25 பணியிடங்கள் என மொத்தம் 416 பணியிடங்கள் உள்ளது. தமிழக ரப்பர் கழகத்தில் ஒரு உதவி ப்ரோக்ராமர் மற்றும் தமிழ்நாடு மேக்னசைடு நிறுவனத்தில் ஒரு அக்கவுண்டன்ட் என மொத்தம் இரண்டு பணியிடங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதனால் 615 பணியிடங்கள் மற்றும் தற்போது சேர்க்கப்பட்டுள்ள 418 பணியிடங்கள் என மொத்தம் 1033 பணியிடங்கள் தொழில்நுட்ப தேர்வில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

மேலும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க அசிஸ்டன்ட் இன்ஜினியர் பணியிடத்திற்கு துறை சார்ந்த பிரிவில் பட்டம் பெற்று இருப்பது அவசியம். அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அக்கவுண்டைன் பணிக்கு பிகாம் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

CA தேர்வில் இடைநிலை தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் வயது உச்சவரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் ராணுவத்தினர் என்றால் 55 வயது வரை விண்ணப்பிக்க முடியும். இதற்கு விண்ணப்பிக்க வரும் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் பத்தாம் தேதி வரை எழுத்து தேர்வு நடத்தப்படும். தமிழ் தகுதி தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவு கொண்ட எழுத்து தேர்வு நடைபெறும் நிலையில் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் படை எதிர்ப்பு பேச்சு!!இந்தியாவின் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது!!

சமீபத்திய மாதங்களில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான தனது நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகிறார். அவரது சொல்லாட்சி, நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களின் மன உறுதியைக் குறைப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே பிரிவினையையும் அவநம்பிக்கையையும் வளர்க்கிறது.

பாதுகாப்புப் படைகளின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குதல் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் நேர்மை மற்றும் நோக்கங்களை ராகுல் காந்தி பல சந்தர்ப்பங்களில் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க அயராது உழைக்கும் அமைப்புகளை ஆதரிப்பதற்குப் பதிலாக, அவரது அறிக்கைகள் அவர்களின் செயல்களை அரசியலாக்குவதாகத் தெரிகிறது. தேசிய பாதுகாப்பு மிக முக்கியமான நேரத்தில் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் இந்தப் போக்கு வருகிறது.

கடந்த மாதம் பாகிஸ்தானுடனான இராணுவ மோதல்களின் போது, ​​அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிபணிந்ததாக காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியபோது அவர் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். போபாலில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசிய காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு பிரதமர் சரணடைந்ததாகக் குற்றம் சாட்டினார், “நரேந்திர ஜி ‘நரேந்திர, சரணடையுங்கள்’ என்று டிரம்பைப் பின்தொடர்ந்து ‘ஆம், ஐயா’ என்று கூறினார்” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சி சமூக ஊடக தளமான X இல் இந்தக் கருத்தை மேலும் விரிவுபடுத்தியது, அங்கு அது இரண்டு பேனல் கார்ட்டூனை வெளியிட்டது: ஒரு பேனல் டிரம்ப் ஒரு தொலைபேசியில் “நரேந்திர, சரணடையுங்கள்” என்று கத்துவதையும், இரண்டாவது பேனல் மோடி “ஆம், ஐயா” என்று பதிலளிப்பதையும் சித்தரித்தது.முக்கியமான தருணங்களில் நமது ராணுவத்தின் நேர்மையை ராகுல் காந்தி கேள்வி கேட்பது இது முதல் முறை அல்ல.

பாலகோட் விமானப்படைத் தாக்குதல்கள் மற்றும் உரிக்குப் பிறகு நடந்த சர்ஜிக்கல் தாக்குதல்களுக்குப் பிறகு, அவர் நமது ஆயுதப் படைகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் “வீடியோ ஆதாரம்” கோரினார். கொடிய கல்வான் மோதலின் போது, ​​நமது வீரர்களின் தியாகத்தை கௌரவிப்பதற்குப் பதிலாக, அவர் துயரத்தை அரசியலாக்கவும், அரசாங்கம் நிலைமையைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனங்களை எழுப்பவும் தேர்வு செய்தார்.

மேலும், இந்திய உயிரிழப்புகள் குறித்து காங்கிரஸ் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினாலும், பாகிஸ்தானின் பாரிய இழப்புகளை வசதியாக புறக்கணிக்கிறது. இந்த பின்னடைவுகள் பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பை முடக்கியுள்ளன – நடுநிலை பார்வையாளர்களால் கூட ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. இருப்பினும், ராகுல் காந்தி இந்த மூலோபாய ஆதாயங்களை அங்கீகரிக்க மறுக்கிறார், இது காங்கிரஸ் நாடகத்தில் தேசிய நலனை விட அரசியல் புள்ளி மதிப்பெண்ணை முறியடித்துவிட்டதா என்ற கேள்விகளை எழுப்புகிறது.

உலகளாவிய ஒப்பீடுகள் வேறுபாட்டை எடுத்துக்காட்டுகின்றன போரை எதிர்கொள்ளும் நாடுகளில், அரசியல் கட்சிகள் தங்கள் ஆயுதப் படைகளுக்குப் பின்னால் ஒன்றுபடுகின்றன. ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் ஆகியவை ஆழமான பிளவுகள் இருந்தபோதிலும் அரசியல் ஒருமித்த கருத்தைக் கண்டன. இந்தியாவும் அதே ஒற்றுமையைப் பெறத் தகுதியானது. துரதிர்ஷ்டவசமாக, ஒற்றுமை மிகவும் தேவைப்படும் நேரத்தில் ராகுல் காந்தியும் காங்கிரசும் நாட்டின் உணர்வை உடைக்கத் தேர்வு செய்கிறார்கள்.தேசபக்தி என்பது சந்தேகம் அல்ல, ஆதரவைக் குறிக்கிறது.

உலகளவில் மரியாதைக்குரிய இராணுவத்தைக் கொண்ட இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தியாகும். நமது எல்லைகளைப் பாதுகாக்க நமது வீரர்கள் பெரும் ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். உயிரிழப்புகள் எதுவும் இருக்காது என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு மாறானது; வெற்றிக்கான “ஆதாரம்” கோருவது அவர்களின் தியாகங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ராகுல் காந்தியின் கதை, மன உறுதியைக் கெடுத்து, எதிரிகளைத் தைரியப்படுத்துகிறது.

இந்தியாவின் பலம் பிரிவினையில் அல்ல, ஒற்றுமையில்தான் உள்ளது. கூட்டுத் தீர்மானம் தேவைப்படும் தருணங்களில், நமது தலைமை – கட்சிகளுக்கு அப்பால் – தேசத்தின் உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும். மோடி தலைமையிலான அரசாங்கம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் தொடர்ந்து தெளிவையும் வலிமையையும் காட்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு எழுந்து அதே முதிர்ச்சியுடனும் தேசிய பெருமையுடனும் செயல்பட வேண்டிய நேரம் இது.