Monday, July 14, 2025
Home Blog Page 37

காலையிலேயே மாணவர்களை குஷி படுத்திய அரசு; 4 நாட்கள் தொடர் விடுமுறை!!

தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 45 நாட்களுக்கும் மேலாக விடுமுறை விடப்பட்ட நிலையில் ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்குச் செல்ல துவங்கி உள்ளனர். பள்ளிக்குச் சென்ற முதல் நாளே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை அறிவித்துள்ளது ஈகை பெருநாளாம் பக்ரீத் பண்டிகை ஜூன் 6ஆம் தேதி, 7 ஆம் தேதி, 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாட்கள் விடுமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தியாவில் பிறை தெரிவதன் அடிப்படையில் ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதினால் மற்ற மாநிலங்களில் பக்ரீத் பண்டிகை நாள் வேறுபடும் இதனை கருத்தில் கொண்டு மாநிலங்களில் விடுமுறை விடப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பக்ரீத் பண்டிகை ஜூன் 7ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுவதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்திருக்கின்றார்.

இதனால் தமிழ்நாட்டில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என நான் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜூன் ஒன்பதாம் தேதி வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்பட இருப்பதினால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பை தவறவிட்ட EPS.. விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!! கூட்டணியில் கலக்கப்போகும் தவேக !!

ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாமக கூட்டணி நல்ல வாக்கு சதவீதத்தை கொடுத்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. பெரும்பான்மையான இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் மக்கள் மனதில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை காட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதே தான் விரும்புகின்றனர். இதைத்தான் ராமதாஸ் அவர்களும் சமீபத்தில் தனது மகன் மீதான குற்றச்சாட்டுகள் அடுக்கிய பெட்டியில் கூட கூறியிருந்தார்.

அப்படி பாஜக பாமக அதிமுக என்ற முக்கோண கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி தவறி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் தற்போது நடைபெற போகும் ராஜசபா சீட் ஒன்றை அன்புமணிக்கு ஒதுக்கி இருந்தால் கட்டாயம் அதிமுகவுடன் கூட்டணி உறுதியா யிருக்கும். ஆனால் எடப்பாடி அவ்வாறு செய்யவில்லை. இந்த வாய்ப்பை விஜய் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என எண்ணுகிறாராம். இது ரீதியாக குறிப்பிட்ட சில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம். நாம் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்ததிலிருந்து பாமகவை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு செயல்முறையும் செய்து வருகிறோம்.

அதனை முன்னிறுத்தி எப்படியாவது பாமகவை நம் கட்சியுடன் இணைக்க பேச்சுவார்த்தை நடத்துங்கள். அத்தோடு அதிருப்தியில் இருக்கும் தேமுதிக தங்கள் பக்கம் இழுக்க முயலுங்கள் என்று கூறியுள்ளாராம். இவ்வாறு பாமக தேமுதிக என இரு கட்சிகளின் ஆதரவோடு நாம் தமிழர் சீமானும் சற்று ஆதரவை தெரிவிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேல் வாக்கு பெற்று விடலாம் என்று விஜய் கூறியுள்ளார். இதனால் எடப்பாடிக்கு பாமக தேமுதிக என்ற எந்த கூட்டணியும் இல்லாமல் பாஜகவுடன் தனித்தனி என்று இம்முறையும் தேர்தலில் பின்வாங்க போகிறார் என கூறுகின்றனர்.

துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி? வெளியான ஷாக் நியூஸ்!!

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிப்பது, நடிப்பதுமாக இருந்து வந்த நிலையில் அவர் தேர்தலின் பொழுது திமுகவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடைய பிரச்சாரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் அவர் தற்போது முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் பொழுது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது திமுகவின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக இருக்கக்கூடிய இளைஞர் அணி செயலாளராக பதவி ஏற்றார். 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

வெளி மாவட்ட பயணங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறைத்துக் கொண்ட நிலையில் அவருக்கு பதிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை செய்து வருகின்றார். இந்நிலையில் அனைத்து பொதுக் கூட்டங்களிலும், கட்சி நிகழ்வுகளிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவறாமல் கலந்து கொள்கின்றார். இந்நிலையில் மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் அமராதது பேசும் பொருளாக மாறியது.

உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவரை சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவால அதிகரித்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

சுகாதாரத்துறை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. உதயநிதிக்கு கொரோனா தொற்று என வதந்தி பரப்பப்பட்டுள்ளது. அவருக்கு காய்ச்சல் தவிர வேறு எந்த பாதிப்பும் கிடையாது. அவர் தனிமைப்படுத்தப்படவும் இல்லை. காய்ச்சல் காரணமாக மக்களை சந்திக்காமல் இருக்கின்றார் என விளக்கம் தரப்பட்டுள்ளது. 

அதிமுக உங்களை ஏமாத்திருச்சு.. திமுக பக்கம் வந்துடுங்க!! தேமுதிக வுக்கு பகிரங்க அழைப்பு!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு கட்சிக்கு முன்பை விட வலு சேர்ந்துள்ளது. அதை வைத்து சீட் வாங்கி விடலாம் என்று எண்ணத்தில் பிரேமலதா இருந்தார். குறிப்பாக தனது மகனை எம்பி ஆக்கி விட வேண்டும் என்ற எண்ணம் தீர்க்கமாக இருந்தது. இதை வைத்து அதிமுக விடும் காய் நகர்த்திய போது அதனை எடப்பாடி சிறிதும் கூட கண்டு கொள்ளவில்லை. பிரேமலதாவின் அழுத்தமானது கூட்டணி பேச்சுவார்த்தை வரை வந்து முடிந்தது. சீட் கொடுத்தால் தான் கூட்டணி என கூறினார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த ஆண்டு எம் பி சீட் வழங்குவதாக தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டதுடன் எங்களுடன் தேமுதிக கூட்டணி தொடரும் என்றும் கூறினார். ஆனால் பிரேமலதா இது ரீதியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. மாறாக அதிருப்தியில் உள்ளதாக சுற்று வட்டாரங்கள் கூறினர். இப்படி இருக்கையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேமுதிக எங்களுடன் இணைவது குறித்து இந்திய கூட்டணியின் தமிழக தலைவர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் அப்படி இவர்கள் எங்களுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம் என கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி எம்பி சீட் அடுத்த வருடம் தருவதாக தேமுதிகவிற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அப்பா மகன் சண்டைக்கு பாஜக தான் முக்கிய காரணம்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!

PMK BJP: பாமக கட்சிக்குள் அப்பா மகனிடையே உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் இந்த ரீதியாக தற்போது வரை கூட்டணி கட்சியான பாஜக வாய் திறக்காமல் உள்ளது. ஒரு பக்கம் இவர்களின் சண்டைக்கு பாஜகவும் முக்கிய காரணம் என கூறுகின்றனர். அன்புமணி ராமதாஸ் தனது ஆதாயத்திற்காக மட்டுமே பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பார்த்துள்ளாராம். இது ரீதியாக ராமதாஸ் அவர்களே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பார்.

தனது காலை பிடித்து தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். அதிமுக பாமக கூட்டணி இயற்கை சமநிலை போன்றது என தெரிவித்திருப்பார். பாஜக கூட்டணியிலிருந்து கொண்டு இவர்களின் சண்டைக்கு மிகப்பெரிய காரணம் என்று கூறுகின்றனர். அன்புமணியிடம் அனைத்து அதிகாரத்தையும் வாங்க சொல்லி அழுத்தத்தை தருவதும் பாஜக தான் எனக் கூறுகின்றனர்.

கட்சிக்குள்ளயே சில நிர்வாகிகள் அன்புமணிக்கு எதிராக திரும்பிய நிலையில் இவ்வாறான யோசனையை பாஜக கொடுத்துள்ளதாம். இதில் ராமதாஸுக்கு துளி கூட விருப்பமில்லை என்பதை அவர் அளித்த பேட்டியின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. தற்போது ராமதாஸ் தலைமை பொறுப்பில் இருக்கும் பட்சத்தில் இனிவரும் நாட்களில் கூட்டணி எந்த பக்கம் திரும்பும் என்பது தெரியவில்லை. குறிப்பாக வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணையலாம் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.

விஜய்யால் அழகிரி காலை பிடிக்கும் ஸ்டாலின்.. உன்னை விட்டால் வேறு ஆளு இல்லை!!

0

TVK DMK: அதிமுக மற்றும் திமுக கட்சிகிடையே தமிழக வெற்றிக் கழகம் புதிய காலடி எடுத்து வைத்தாலும் அதனுடைய மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உரிய வாக்கு வங்கியில் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். இதனை முன்கூட்டியே அறிந்த ஸ்டாலின் பல திட்டங்களை தீட்டி உள்ளார். அதாவது எம்ஜிஆர் அரசியலுக்குள் வரும்போது முதன் முதலில் மதுரை மாவட்டத்தில்தான் நின்றார்.

பின்பு சட்டப்பேரவைக் குழு நுழைந்து முதலமைச்சர் பதவி வகித்தார். அதேபோல தற்போது விஜயும் மதுரை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரை சமாளிக்க மதுரையை தனது வசம் வைத்திருந்த மு க அழகிரி உதவியை ஸ்டாலின் நாடியுள்ளார். அதாவது கலைஞர் இருந்த காலத்திலேயே அழகிரி கா அல்லது ஸ்டாலினுகா யாருக்கு பதவி என்று போட்டியிருந்தது. இதில் பலமுறை கலைஞருக்கும் முக அழகிரிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இதனால் அவரைக் கட்சியில் இருந்து மிகவும் செய்தார். அப்படி இருக்கையில் சமீபத்தில் முக அதிகரிக்க உடல்நிலை சரியில்லாத போது ஸ்டாலின் சந்தித்தது பேசும் பொருளாகியது. இதனின் அடுத்த கட்டமாக மதுரையில் அழகிய களம் காண வைத்து விஜயை தோற்கடித்து விடலாம் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் உள்ளார். ஆனால் இதனை முக அழகிரி கேட்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மாதாந்திர ரயில் டிக்கெட் வாங்குவது இனி சுலபம் அல்ல.. புதிய அறிவிப்பு என்னன்னு தெரியுமா!!

தமிழகத்தில் பேருந்து, ரயில் மற்றும் விமானம் போன்ற சேவைகள் உள்ள நிலையில் பொதுமக்கள் தினந்தோறும் அதிகளவு பயன்படுத்தக்கூடிய போக்குவரத்தாக இருப்பது ரயில் சேவை. அவ்வாறு தினந்தோறும் பயணிக்கும் பயணிகள் மாதாந்திர பயண சீட்டு பெறுகின்றனர்.

தமிழன் முழுவதும் ரயில்வே துறை சார்பாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது மேலும் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களும் கூடுதல் ரயில்களும் இயக்கப்படுவதினால் பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர் அதன் காரணமாக ரயில்வே துறை சார்பாக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படுகின்றது வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறுவது மாதாந்திர டிக்கெட், முன்பதிவு செய்து கொள்வது உள்ளிட்டவை அடங்கும்.

மேலும் ரயில் நிலையங்களில் சென்று மாதாந்திர பயண சீட்டுக்கான தொகையை செலுத்தினால் பயண அட்டையை பெற முடியும். ஆனால் தற்போதுள்ள சூழலில் பயணிகள் பயணச்சீட்டு மற்றும் மாதாந்திர பயண சீட்டு பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு ரயில் நிலையங்களில் செயலி மூலம் மட்டும் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெற முடியும். மாதாந்திர பயண அட்டை தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே தற்போது மாதாந்திர பயண அட்டை யுபிஐ செயலி மூலம் பணம் செலுத்தி பெற்று வருகின்றனர்.

போன் இல்லாத பயணிகள் பயண அட்டை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறையினரால் எண்ம செயலி பரிவர்த்தனைகள் மேற்கொள்ள கட்டாயப்படுத்துவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதனால் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களுக்கு பெயர் போன ஜெய்ஷ் இ-முகமது அமைப்பின் தளபதி உயிரிழப்பு!!

அப்துல் அஜீஸ் எசார் இந்தியாவுக்கு எதிராக பல நிகழ்ச்சிகளில் பேசுபவர். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் உயர் தளபதியாக இவர் உள்ளார். பாகிஸ்தானில் பஞ்சாப் மாவட்டத்தில் அப்துல்  அஜீஸ்  எசார்  மர்மான முறையில் இறந்துள்ளார். அவரது உடலானது  அதிகாலையில் அவரது உதவியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மர்மான முறையில் இறந்துள்ளது பெரும் வாரியாக பேசப்பட்டு வருகிறது.

அவரது சமூக ஊடக கணக்குகளில் அவர் எப்படி இறந்தார் ஏதாவது குண்டடி பட்டதா என்பதை குறிப்பிடவில்லை.

அதிரடியாக உயரப்போகும் பேருந்து கட்டணம்.. விளக்கமளிக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர்!!

Tamilnadu Gov: கடந்த ஒரு வாரமாக இணையதளத்தில் பேருந்து கட்டணம் உயரப்போகிறது என்று செய்தி தான் பேசப்படுகிறது. இது ரீதியாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், சமூக ஊடகமெங்கும் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப் படப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. ஆனால் அது முழுமையும் வதந்தி தான் தனியார் பேருந்து நிர்வாகம் தான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இது ரீதியாக நீதிமன்றம், மக்கள் கருத்தை கேட்டு தரவுகளை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கூறியுள்ளது.

அதை வைத்து தான் மக்கள் கருத்து கணிப்பு கூட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தான் தற்போது பேருந்து கட்டணம் உயர்வது குறித்து கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்தியுள்ளோம். தனியார் பேருந்து கட்டணம் உயர்த்துவதற்கு முன்பாக அரசு பேருந்து கட்டணத்தில் மாற்றம் உண்டாக வேண்டும். ஆனால் அரசு பேருந்து கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் வராத நிலையில் தனியார் பேருந்து நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெயின் விலையானது குறைந்த போதிலும் மத்திய அரசு டீசல் விலையை குறைத்த பாடில்லை அப்போதும் தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனை சமாளிக்க முடியாமல் தான் தற்பொழுது தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இது ரீதியாக தக்க அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யும். அதுமட்டுமின்றி சரியான அறிவுரையும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

திமுக னா ஆளுநருக்கு “பயம்”.. அதனால் தான் உடனே ஒப்புதல் அளித்துவிட்டார்- ஸ்டாலின்!!

DMK BJP: சட்டமன்ற பட்ஜெட் தாக்கலின் போது மாற்றுத்திறனாளிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நலத்திட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது. அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சி உள்ளிட்ட தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடாமல் நேரடியாகவே அவர்களை பதவியில் நியமிக்கலாம். இவ்வாறு அவர்களுக்கு முதன்மை உதவி செய்வதன் மூலம் மற்றவர்களைப் போல அவர்களையும் சம அளவில் நடத்துவது உறுதி செய்யப்படும்.

இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர் என் ரவியிடம் அனுப்பி வைத்தனர். முன்னதாகவே பல மசோதாக்கள் ஆளுநர் கிடப்பில் போடப்பட்டதை அடுத்து தமிழக அரசு நீதிமன்றம் வரை சென்ற பிறகு தான் அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் கிடைத்தது. அப்படி இருக்கையில் தற்போதும் அதேபோல் ஆளுநர் செய்ய வாய்ப்புள்ளது என பலர் கூறி வந்தனர். ஆனால் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதாக்களுக்கு உடனடியாகவே ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இது ரீதியாக செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய போது, ஆளுநர் ஒப்புதல் அளித்து விடுவார் என்பது நான் முன்கூட்டியே எதிர்பார்த்ததுதான். ஒப்புதல் அளிக்காவிட்டால் மீண்டும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என்ற பயத்தில் தான் அவர் கையெழுத்திட்டுள்ளார் என்று கூறியுள்ளார். இவ்வாறு ஆளுநர் திமுகவை கண்டு அஞ்சுகிறது என ஸ்டாலின் கூறியது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.