Monday, July 14, 2025
Home Blog Page 4218

நடிகர் விஜய்க்கு கதை சொன்ன இயக்குனர் வெற்றிமாறன்! இதுவும் நாவல் கதையா?

0

நடிகர் விஜய்க்கு கதை சொன்ன இயக்குனர் வெற்றிமாறன்! இதுவும் நாவல் கதையா?

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.மேலும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன்,நடிகை பூஜா ஹெக்டே,யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்தத் திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் சமீபத்தில் நடிகர் விஜய்க்கு ஒரு கதை சொல்லியுள்ளதாக தெரிகிறது.மேலும் இந்த கதையை கேட்டுவிட்டு நடிகர் விஜய் இன்னும் அவருக்கு எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என்றே தெரிகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் நாவல்களைத் தழுவி படங்களை எடுத்து வருகிறார்.அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.விசாரணை திரைப்படமும் லாக்அப் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.தற்போது நடிகர் விஜய் அவர்களிடம் கூறிய கதையும் நாவலைத் தழுவிதான் கூறியிருப்பதாக தெரிகிறது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் விஜய்க்கு கதை சொல்லிவிட்டு அவர் பதிலுக்கு காத்திருப்பதாக கூறியிருந்தார்.

கொட்டா நீலிமா எழுதிய Shoes of the Dead என்ற புத்தகத்தின் கதையை விஜய்யிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.விவசாயிகள் தற்கொலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வலுவான அரசியல் பற்றிய படமாக இது உருவாக இருக்கிறது.சமீபத்தில் நீலிமா அவர்கள் வெற்றிமாறன் என்னுடைய புத்தகத்தை படமாக எடுப்பது மகிழ்ச்சி என ட்வீட் செய்தார்.இதனால் உறுதி செய்யப்பட்ட அந்த படத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடிகர் விஜய் இணைந்து நடிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

கொடநாட்டில் பறந்ததாக கூறப்பட்ட ட்ரோன் கேமரா! போலீசாருக்கு கிடைத்த திடீர் தகவல்!

0

கொடநாட்டில் பறந்ததாக கூறப்பட்ட ட்ரோன் கேமரா! போலீசாருக்கு கிடைத்த திடீர் தகவல்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில், காவலாளி கோயம்புத்தூரில் கொலை செய்யப் பட்டதோடு, அந்த பங்களாவில் இருந்த பல பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சயான், மனோஜ் என  10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் முன்னாள் முதல்வர் இறந்த பிறகு நடந்தேறியது.

இந்த வழக்கு விசாரணை பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வழக்கில் திடீர் திருப்பமாக கோர்ட்டு அனுமதி பெற்று சயானை, போலீசார் விசாரணை நடத்தி, ரகசிய வாக்குமூலமும் பெற்றனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில், பல முக்கிய புள்ளிகள் மாட்டுவார்கள் எனவும் கணிக்கப் படுகிறது. மேலும் ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது எனவும், பல மனுக்கள் தரப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது. அதன் காரணமாக அந்த வழக்கை விரைந்து முடிக்கவும், அங்குல அங்குலமாக விசாரிக்கவும் விசாரணைப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

அதில் இந்த வழக்கில் முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்தும் தகவல் கூறியதாக தெரிகிறது. மேலும் விபத்தில் இறந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் அண்ணன் தனபால் மற்றும் இந்த சம்பவம் நடந்த நாளில் கோத்தகிரி மற்றும் கடலூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஊட்டி கோர்ட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டின் மேல் ஆளில்லா ட்ரோன் விமானம் பறந்ததாக எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மூன்று நாட்களாக பறந்துக் கொண்டு இருந்ததாகவும் அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

0

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மாதம் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். பல குழப்பங்கள் இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துவார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க அதிமுக சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்துவதற்கு பதிலாக, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தவும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். வாக்குப்பதிவு நடக்கும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் தான் அடிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

இந்த உள்ளாட்சி தேர்தல் நடப்பதே மாவட்டங்கள் தனித்தனித்யாக பிரித்ததன் காரணமாகதான். அங்கு தேர்தல் நடக்காததன் காரணமாக தற்போது இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்திய அளவில் மாஸ்டர் திரைப்படம் செய்த சாதனை! எவ்வளவு வசூல் தெரியுமா?

0

இந்திய அளவில் மாஸ்டர் திரைப்படம் செய்த சாதனை! எவ்வளவு வசூல் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியானது.கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்கங்கள் திறக்கப்பட்டபின் வெளியான பெரிய அளவிலான திரைப்படம் இதுவே.இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்தார்.தளபதி விஜய் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி,மாளவிகா மோகனன்,சாந்தனு பாக்யராஜ்,மகேந்திரன்,ஆண்ட்ரியா,அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.இந்தத் திரைப்படம் ஆக்சன் திரைப்படமாக வெளிவந்தது.லோகேஷ் கனகராஜ் இயக்கும் மூன்றாம் திரைப்படம் இதுவாகும்.

இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன.நடிகர் விஜய் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படம் வெளியானது.பிகில் திரைப்படம் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.மாஸ்டர் திரைப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தியது.

இந்த திரைப்படம் தற்போது இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.அது என்னவென்றால் இந்த படத்தின் வசூல்தான் இந்த ஆண்டிலேயே அதிகம் வசூலான பட வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.மாஸ்டர் திரைப்படம் 154 கோடி வசூல் செய்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.வேறு எந்த படமும் இந்த சாதனையை படைக்கவில்லை.இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மீண்டும் நடிகர் விஜயின் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது இந்த படத்தின் தயாரிப்பாளரை மகிழ்ச்சியுறச் செய்திருக்கிறது.மேலும் மாஸ்டர் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீடு! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

0

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீடு! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

OBC க்கு 27% இடஒதுக்கீடு மற்றும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் EWS 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போதைய கல்வி ஆண்டு 2021-22 முதல் 2021-22 ஆம் ஆண்டிற்கான இந்த மருத்துவ முன்பதிவு கொள்கைக்கு தடை கோரிய மனுவில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.ஜூலை 29 அன்று அரசாங்கம் OBC மற்றும் EWS மருத்துவ இடஒதுக்கீட்டை அறிவித்தது.ஒவ்வொரு வருடமும் 5500 மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறியது.

MBBSஇல் 1500 OBC மாணவர்கள் முதுகலை பட்டதாரிகளில் 2500 OBC மாணவர்கள் MBBS இல் 550 EWS மாணவர்கள் மற்றும் சுமார் 1000 EWS முதுகலை மாணவர்கள்.அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) திட்டம் 1986ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் எந்த மாநிலத்திலிருந்தும் மாணவர்களுக்கு வேறு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நல்ல மருத்துவக் கல்லூரியில் படிக்க ஆசைப்படுவதற்கு தகுதியற்ற வாய்ப்புகளை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிடைக்கும் மொத்த UG இடங்களின் 15% மற்றும் மொத்த PG இடங்களின் 50% உள்ளன.ஆரம்பத்தில் 2007 வரை AIQ திட்டத்தில் எந்த இடஒதுக்கீடும் இல்லை.2007இல் உச்ச நீதிமன்றம் SCகளுக்கு 15% மற்றும் ST களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை AIQ திட்டத்தில் அறிமுகப்படுத்தியது.

மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் 2007இல் நடைமுறைக்கு வந்தபோது ஓபிசிக்களுக்கு ஒரே மாதிரியான 27% இடஒதுக்கீட்டை வழங்கியது.இது அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்தப்பட்டது.சப்தர்ஜங் மருத்துவமனை,லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி,அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்றவை.

இருப்பினும் இது மாநில மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் AIQ இடங்களுக்கு நீட்டிக்கப்படவில்லை.AIQ திட்டத்தில் OBC களுக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் EWS க்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், நாடு முழுவதும் உள்ள OBC மற்றும் EWS மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் போட்டியிட AIQ திட்டத்தில் இந்த இட ஒதுக்கீட்டைப் பெற முடியும்.

இந்த இடஒதுக்கீட்டை சரிசெய்ய கடந்த சில ஆண்டுகளில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியிருந்தது.நாட்டில் எம்பிபிஎஸ் இடங்கள் 2014 இல் 54,348 ல் இருந்து 56 சதவிகிதம் அதிகரித்து 2020 ல் 84,649 ஆகவும்,பிஜி இடங்கள் 2014 ல் 30,191 ல் இருந்து 80 சதவிகிதம் அதிகரித்து 54,275 ஆகவும் இருந்தது.இந்த காலகட்டத்தில் 179 புதிய மருத்துவக் கல்லூரிகளும் நாட்டில் நிறுவப்பட்டன.இப்போது நாட்டில் 558 (289 அரசு மற்றும் 269 தனியார்) மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

நிபா வைரஸ் பரவியது இப்படிதான்! சிறுவன் சாப்பிட்ட பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு!

0

நிபா வைரஸ் பரவியது இப்படிதான்! சிறுவன் சாப்பிட்ட பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு!

கேரளாவில் தற்போது நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவன் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவனது சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு 150 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் வரை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேருக்கும் அந்த அறிகுறிகள் இருப்பதனால் அவர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

அந்த சிறுவனின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்றின் காரணமாக ஒரு சிறுவன் உயிரிழந்ததை அடுத்து சிறுவனின் குடும்பத்தார் அனைவருக்கும் தனிமை என அரசு கண்டிப்புடன் சொல்லி உள்ளது.  இதனிடையே வவ்வால் மற்றும் பன்றி மூலம் மட்டுமே நிபா வைரஸ் பரவி வந்த நிலையில், சிறுவனின் வீட்டில் ஆடுகள் வளர்க்கப்படுவதால் அவற்றிற்கும் இது குறித்து பரிசோதனைகள் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஆடுகளை மேய்க்க சிறுவன் காட்டு பகுதிகளுக்கு சென்று இருப்பதாலும், அங்கு வௌவால்கள் இருப்பதன் காரணமாக அதன் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி சிறுவனின் வீட்டை ஆய்வு செய்த மத்திய குழு அங்கிருந்த ரம்பூட்டான் மரத்தை பார்த்துள்ளனர். ரம்புட்டான் பழங்களை சிறுவன் சாப்பிட்ட தகவல் அறிந்ததும், அதனையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய எடுத்துச் சென்றுள்ளனர்.

கேரளாவில் நிபா வைரஸ் தொற்றின் காரணமாக சிறுவன் உயிரிழந்ததால், மத்திய மருத்துவ நிபுணர் குழு திருவனந்தபுரத்துக்கு விரைந்துள்ளது. வைரஸ் பரவுவது குறித்து கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 74 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் உடல்  12 அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் தான் உள்ளது. இந்நிலையில், ஜிகா மற்றும் நிபா வைரஸின் பாதிப்புகளால் மக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளனர்.

மகளாக திரைப்படத்தில் நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க விஜய் சேதுபதி மறுப்பு! அதிர்ச்சியில் நடிகை!

0

மகளாக திரைப்படத்தில் நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க விஜய் சேதுபதி மறுப்பு! அதிர்ச்சியில் நடிகை!

நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் தனக்குப் பிடித்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர்.நிஜ வாழ்க்கையிலும் அவர் தனக்குப் பிடித்ததையே செய்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.மேலும் இவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.இவரின் நடிப்பானது இயல்பாகவும் ரசிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

ஆரம்பக் கட்டத்தில் இவர் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.பின்னர் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.பின்னர் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்தார்.இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன.பின்னர் இவர் விக்ரம் வேதா திரைப்படத்தில் வில்லனாக நடித்தார்.இந்த படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

அதன்பின்னர் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்தார்.இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியிருப்பார்.இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் கமலுடன் இணைந்து நடிக்கிறார்.இந்த படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

இவர் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் நடித்த உப்பெனா என்ற தெலுங்கு படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்திருப்பார்.இவருக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி என்ற அறிமுக நடிகை நடித்திருப்பார்.தற்போது தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஆனால் நடிகர் விஜய் சேதுபதி நடிகை கீர்த்தி செட்டிக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக தன்னால் நடிக்க முடியாது என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.இதனால் நடிகை கீர்த்தி ஷெட்டி அதிர்ச்சியடைந்துள்ளார்.தெலுங்குத் திரையுலகம் இவரது முடிவால் ஆச்சரியத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் கடைகளில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்! அரசு அதிரடி முடிவு!

0

தமிழ்நாட்டில் கடைகளில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்! அரசு அதிரடி முடிவு!

தமிழ்நாட்டில் அனைத்துக் கடைகளிலும் நிறுவனங்களிலும் இனிமேல் அனைத்து ஊழியர்களுக்கும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது கட்டாயமாகிறது.இந்த சட்டதிருத்தம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.இந்த முடிவை தமிழக அரசு தற்போது எடுத்துள்ளது.தமிழகத்தின் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன் இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நின்றுகொண்டே பணிபுரிவதால் அவர்களது உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகிறது.இதனால் அவர்கள் பணியை சரிவர செய்ய முடியவில்லை என்றும் வேலை நேரம் முழுவதும் நின்றுகொண்டே வேலை செய்வதென்பது இயலாத ஒன்றாக பணியாளர்களுக்கு இருக்கிறது எனவும் அவர் கூறினார்.வேலையாட்களின் இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு பணியாளர்கள் அனைவருக்கும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும் வகையில் அவர்களுக்கு இருக்கைகளை அமைத்துத் தருவது அவசியம் என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டமானது 04.09.2019 அன்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் முக்கிய கோரிக்கையானது முன்வைக்கப்பட்டது.இந்த கோரிக்கையில் பணியாளர்கள் அனைவருக்கும் இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட குழு உறுப்பினர்கள் ஒருமனதாக இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் முடிவு செய்தனர்.

இதனால் தமிழ்நாடு அரசானது 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.இந்த சட்டதிருத்தமானது பணியாளர்கள் அனைவருக்கும் இருக்கை தர வேண்டும் என்று வலியுறுத்தும்.மேலும் இது கடைகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஆப்கனில் திருப்பம் : சரணடைந்த தேசிய கிளர்ச்சிப் படை!

0

ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படை வசமிருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர்.பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு படையினர் போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கன் தலைநகர் காபூல் உள்ளிட்ட 33 மாகாணங்களை கைப்பற்றி 20 நாடுகள் கடந்துவிட்ட நிலையில், அவர்களால் பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அங்குள்ள தாலிபான் எதிர்ப்பு படையினர் பெரும் சவாலாக இருந்தனர்.மறைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் தளபதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலேஹ் ஆகியோரின் தலைமையிலான தேசிய கிளர்ச்சிப் படை தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தினர்.

தாலிபான்கள் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் நடத்தி வந்த தாக்குதலில் எதிர் படையின் செய்தித் தொடர்பாளரும் பிரபல பத்திரிகையாளருமான ஃபஹீம் தஷ்டியை கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மற்ற முக்கிய தலைவர்களான குல் ஹைதர் கான், மமுனீப் அமிரி, வதூத், அஹமது ஷா மசூத்தின் உறவினர் உட்பட பலர் பலியாகிவிட்டனர். உக்கிரமாக நடந்து வரும் சண்டையினால் இரு தரப்பிலும் அதிகளவில் உயிர் சேதம் ஏற்பட்ட வந்த நிலையில், அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குமாறு, இஸ்லாமிய அறிஞர்கள் இரு தரப்பிற்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை ஏற்று சண்டை நிறுத்தத்திற்கு தயார் என தாலிபான் எதிர்ப்பு படை தலைவர் அகமது மசூத் தமது அமைப்பின் முகநூல் பக்கத்தில் அறிவித்தார்.தாலிபான்கள் பஞ்ச்ஷிர், அந்தராப் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டு வரும் ராணுவ தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தால் சண்டையை நிறுத்தத் தயாராக இருப்பதாக மசூத் அதில் தெரிவித்து இருந்தார்.

மேலும் தங்கள் பகுதியை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும், தாலிபான்கள் அத்துமீற கூடாது. கூடுதல் அதிகாரத்துடன் எங்கள் பகுதியில் சிறப்பு ஆட்சி அதிகாரத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தேசிய கிளர்ச்சி படை தாலிபான்களுக்கு கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இதனை ஏற்றுக் கொண்ட தாலிபான்கள், பஞ்ச்ஷீர் தலைநகரில் தலிபான் அமைப்பின் கொடியும் ஏற்றினர். அத்துடன் , பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களும் தலிபான்கள் வசமானது. .

ரம்யா பாண்டியனின் ஈர உடை வீடியோ! இணையத்தில் வைரல்!

0

ரம்யா பாண்டியனின் ஈர உடை வீடியோ! இணையத்தில் வைரல்!

நடிகை ரம்யாபண்டியன் தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் ரம்யா பாண்டியன் காட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது.பட வாய்ப்புகளையும் தாண்டி போட்டோ ஷூட் செய்ய ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன.வாரத்திற்கு குறைந்தது இரண்டு போட்டோ ஷூட்டாவது கிடைத்துவிடுகிறது.

இதன் மூலம் நல்ல பில் போட்டு நன்றாக சம்பாதித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.போகிற போக்கை பார்த்தால் நமக்கு இதுவே போகும் என அவர் முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யா தயாரிக்கும் ஒரு படத்தில் வாணி போஜனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.இன்னொரு படத்திலும் ஒப்பந்தமானதாக தகவல் வந்தாலும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லும் முன்னரே ஆண்தேவதை,ஜோக்கர் போன்ற சில படங்களில் நாயகியாக நடித்தார்.இருந்தாலும் இவரது முதிர்ச்சியான முகத்தோற்றம் இவருக்கு பட வாய்ப்புகளை வாங்கித் தரவில்லை.இதனால் சோகத்தில் இருந்த வரை விஜய் டிவி கூட்டிச்சென்று நல்ல வாய்ப்பைக் காட்டி உள்ளது.ரம்யா பாண்டியன் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் ஹிட் ஆனது.

அதனைத் தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் என்ற படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.அவர் அந்தப் படத்தையும் தற்போது முடித்து கொடுத்துவிட்டார்.இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ரீல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் ஈர ஆடையுடன் அவர் இருக்கிறார்.இந்த வீடியோவானது  ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

https://www.instagram.com/p/CTcGW_bBw7o/