Monday, July 14, 2025
Home Blog Page 4221

அரசியல் அறிவில்லாத அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள்? கடுமையாக சாடிய ஆர் எஸ் பாரதி!

0

திமுக ஆட்சியைக் கலைப்பதாக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவிப்பது அவருடைய அரசியல் அறிவிண்மையை காட்டுவதாக இருக்கிறது என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உரையாற்றும்போது கொடநாடு வழக்கு குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடையும் ஆத்திரம் அவர் குற்றம் செய்தது போல தெரிகிறது. இதனை மக்களும் உணர்ந்து இருக்கிறார்கள். வழக்கு முடியும் சமயத்தில் மறுபடியும் விசாரணை ஆரம்பிக்கலாம் என்று சட்டத்தில் இடம் இருக்கிறது. அது கூட தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற ஒரு வழக்கு ஏற்கனவே இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.

நாற்பது வருடங்களுக்கு பின்னர் சட்டசபை மிக ஆரோக்கியமான மன்றமாக நடந்து வருகின்றது. சட்டசபை தற்போதுதான் சபையாக செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் புதுவிதமான அரசியலை நான் காண்கிறேன். ஜனநாயக படி சட்டசபை நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலையை வைக்கக்கூடாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து திமுக ஆட்சி கலைக்கப்படும் என்று தெரிவிக்கிறார் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என கூறியிருக்கிறார் ஆர் எஸ் பாரதி.

ஒரு மாநில ஆட்சியை யாராலும் கலைத்துவிட இயலாது என்று சட்டம் இருக்கின்ற சூழ்நிலையில், பாஜகவின் தலைவர் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்திருப்பது அவர் அரசியலில் ஒரு அரைவேக்காடு என்பதை காட்டுவதாக சொல்லியிருக்கிறார் ஆர் எஸ் பாரதி. இவருக்கு எப்படி ஐபிஎஸ் வேலை கொடுத்தார்கள் என்ற சந்தேகமும் எழுவதாக சொல்லியிருக்கிறார்.

பாஜக தலைமை எவ்வளவு அரசியல் அறிவு இல்லாதது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.. சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு சர்ச்சைக்குரிய வீடியோ உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக விநாயகர் சிலை குறித்த கருத்தை வெளியிட்டு வருகிறார்க.ள் திசைதிருப்புவதற்காக தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படுத்தி விடவே இதைக் கையில் எடுத்து இருக்கிறார்கள் என அவர் கூறியிருக்கிறார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்! ஹெல்த்கேர் துறையில் அதிரடியாக இறங்கிய அம்பானி!

0

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமத்தில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தன்னுடைய வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் பெரிதுபடுத்தி இருக்கும் நிலையில் இன்றைய தினம் மிகப்பெரிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனத்தில் ஒன்றுதான் ஜீனோம் டெஸ்டிங் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் பங்குகளை கைப்பற்றி தன்னுடைய ரிலையன்ஸ் குடைக்குள் சேர்த்து இருக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆரம்பித்து ரீடைல் ஹெல்த் கேர் டிஜிட்டல் மருத்துவம் என்று பல துறையில் தொடர்ச்சியாக வர்த்தகத்தை விரிவு செய்து வருவது எல்லோருக்கும் தெரியும் இந்த நிலையில் தற்சமயம் முகேஷ் அம்பானி ஹெல்த்கேர் பிரிவில் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார்.

ஆகவே ரிலையன்ஸ் டிஜிட்டல் செல் திட்டங்களின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பஸ்னஸ் பிரின்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக சுவனம் டெஸ்டிங் நிறுவனமான கிரான்ட் லைஃப் சயன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மிகப்பெரிய பகுதி பங்குகளை கைப்பற்றி இருக்கிறது என்று பங்குச்சந்தையில் சமர்ப்பித்து இருக்கின்ற அறிக்கையில் சொல்லியிருக்கிறது.

ரிலையன்ஸ் குழுமம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்திருக்கிறார் அறிக்கையில் ரிலையன்ஸ் பிராஜக்ட் பிசினஸ் வென்சர்ஸ் லிமிடெட் மூலமாக ஸ்டாண்டர்ட் சயின்ஸ் நிறுவனத்தின் 2.25 கோடி பங்குகளை பத்து ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 393 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது என சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் சுமார் 80.3 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் கைப்பற்றி இருக்கின்ற சூழ்நிலையில், பங்கு கைப்பற்றிய பின்னர் ரிலையன்ஸ் நிர்வாகம் 2023 மார்ச் மாதத்திற்குள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக சுமார் 160 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது.

கடந்த 2000 அக்டோபர் 6ஆம் தேதி முதல் இயங்கி வரும் ஸ்டாண்ட் லைஃப் சயன்ஸ் இந்தியாவில் ஜூனம் டெஸ்டிங் பிரிவில் முன்னோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்திடம் பயோ இன்பர்மேட்டிக்ஸ் மென்பொருள் மற்றும் மருத்துவமனை முதல் பார்மா நிறுவனங்கள் வரையில் அனைத்து மருத்துவ பிரிவினருக்கு மான கிளினிக்கல் ரிசர்ச் சேவைகளை அளித்து வருகின்றது.

2021 ஆம் நிதியாண்டு முடிவில் சாந்த் லைஃப் சயின்ஸ் நிறுவனம் எண்பத்தி எட்டு புள்ளி 70 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்று 8.45 ஒரு ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று இருக்கிறது. இதற்கு முந்தைய வருடத்தில் சுமார் 25.04 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உலக தரம் வாய்ந்த ஹெல்த்கேர் ஈகோ சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் எனவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மேம்பட்ட ஹெல்த்கேர் சேவையை வழங்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல் பிரிவின் ஹெல்த்கேர் பிரிவு இயங்கி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஹெல்த்கேர் கனவை நனவாக்குவதற்கு ஸ்டாண்ட் லைஃப் சயின்ஸ் நிறுவனம் கைப்பற்றல் மிகப்பெரிய உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனம் நோய் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடித்து இருக்கிறது. இந்த மருந்தை சோதனை செய்ய கோரிக்கை விடுத்த நிலையில், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் முதற்கட்ட சோதனை க்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது..

தங்கத்தின் விலை உயர்வும்! அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டமும்!

0

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் இருந்த காரணத்தால், தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கை மிக பெரிய அளவில் அதிகரித்து இருந்தது இதற்கு ஏற்றது போல மத்திய அரசின் பி எஸ் ஐ கட்டுப்பாடு மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த தங்க நகை வர்த்தகத்தையும் மாற்றும் அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. இதனால் தங்க நகை வாங்குவோரும் நகைக்கடை வைத்திருப்பவரும் வியப்பில் இருக்கிறார்கள்.

அவர்களுடைய இந்த வியப்பிற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நேற்று மாலை க்கு பின்னர் மிகப்பெரிய அளவில் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது இதனால் அடுத்த சில தினங்களுக்கு நகைக்கடையில் கூட்டம் இருப்பதே கடினம் என்று சொல்லப்படுகிறது.

தற்சமயம் சர்வதேச சந்தை மற்றும் உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் மூலமாக தங்கம் விலை மீண்டும் தன்னுடைய அதிகப்படியான அளவான 56 ஆயிரம் ரூபாய் அளவீட்டை அடையுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அப்படி அதிகமானால் பங்குச்சந்தை மீதான முதலிடம் பாதிப்படையும் என்று சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் காலை ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1812. ஐம்பத்து எட்டு டாலர் முதல் 1815 புள்ளி முப்பத்தி ஒரு டாலர் வரையில் வர்த்தகம் நடந்து இருக்கிறது ஆனால் மதிய வர்த்தகத்திற்கு மேலே ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத விலையில் 1835 டாலர் என்ற ஒரு மாத உயர்வை பதிவு செய்திருக்கிறது.

தங்கத்தின் விலையில், உண்டாகி இருக்கும் இந்த திடீர் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள் தான் என்று சொல்லப்படுகிறது. வாரங்களில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அமெரிக்கச் சந்தை தடுமாற்றத்தை சந்தித்தது. இருந்தாலும் தற்சமயம் மொத்த வேலைவாய்ப்பு தரவுகள் தொடர்பாக இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது நேற்று வெளியான அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் குறைந்தபட்சம் 720 வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில், வெறும் 235 வேலை வாய்ப்புகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது அமெரிக்க சந்தையை புரட்டிப் போட்டிருக்கிறது.

ஒருவரும் வேலைவாய்ப்பு இல்லாத எண்ணிக்கை அதிகரிப்பு மறுபுறம் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலாத நிலை என்று அமெரிக்க வேலைவாய்ப்புச் சந்தை கிரிட்லாக் ஆக இருப்பதாக விமர்சனம் செய்யப்படுகின்றது. இதன்மூலமாக பெடரல் ரிசர்வ் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது

திண்டுக்கல்: 2 பேருடன் காதல்! சமூக வலைதளங்களில் பரவிய பெண்ணின் அந்தரங்க புகைப்படம்!

0

திண்டுக்கல்: இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் இரண்டு ஆண்களையும் அந்த பெண் காதலித்ததாக கூறப்படுகிறது.

 

சிறுமியின் புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் அந்த இரண்டு இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 

வழக்கு விவரங்களின்படி, நிலக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவளும் சதீஷ் (20) என்ற மாணவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் சதிஷ்க்கு அந்தரங்க புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார். கொரோனா ஊரடங்கின் பொழுது, ​​அந்த பெண் அருண் என்ற இளைஞருடன் சமூக ஊடகங்கள் மூலம் பேச ஆரம்பித்துள்ளார். அந்த பெண் அந்த அருண் என்ற இளைஞரை விரும்ப ஆரம்பித்துள்ளார்., அந்த இளைஞனுக்கும் தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

 

இதற்கிடையில், அருண் மற்றும் சதீஷ் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, அந்த பெண் இரண்டு பேருடன் பொழுது போக்குவதை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த பிரச்சினை மூவருக்கும் இடையே வாக்குவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. பின்னர், இரண்டு இளைஞர்களும் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை ஆன்லைனில் சமூக வலைதளங்களில் பரப்பியதாக சொல்லப்படுகிறது.

 

தனது அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அறிந்த கல்லூரி மாணவி, நிலக்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அருண், சதீஷ் இரண்டு பேரையும் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நெல்சன் என்ற மற்றுமொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார் .

இனி பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்! ஹை கோர்ட் சொன்ன அதிரடி!

0

இனி பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்! ஹை கோர்ட் சொன்ன அதிரடி!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். இவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இரு நாட்களுக்கு முன் 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன்.

அப்போது வழிமறித்த சேர்தலா போலீசார் விசாரணை என்ற பெயரில் மிகவும் அவமரியாதையாக என்னிடம் பேசினார்கள் என்றும், குறிப்பாக எனது மகளின் முன் எடா வா, போ என மரியாதைக் குறைவாகவும், இழிவாகவும் பேசினார்கள். பொதுமக்களை கௌரவமாக நடத்த போலீசாருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் போலீசார் பொதுமக்களை பல்வேறு இடங்களில் மிகவும் மோசமாக நடத்துவதாக புகார்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் பொதுமக்களை போலீசார் தரக்குறைவான வகையில் நடத்தக் கூடாது. அதுவும் போலீசாரின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. மேலும் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும், பொதுமக்களை அநாகரிகமாக நடத்துவதை, வளர்ந்த நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே கேரளா முழுவதும் போலீசார் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை வா, போ என்று ஒருமையில் அழைத்துப் பேச கூடாது. அதேபோல் எடி அதாவது தமிழில் வாடி, போடி வாடா, போடா என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்றும், கோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும்  இது தொடர்பாக கேரள போலீஸ் டிஜிபி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்து உடனடியாக கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சீனா பக்கம் சாயும் தாலிபான்கள்! அமெரிக்காவின் ஒப்பந்தம் அம்பேலா?

0

ஆப்கானிஸ்தானில் சற்றேறக்குறைய சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஒன்றிணைந்து சண்டையிட பாகிஸ்தான் தன்னுடைய ராணுவ வீரர்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சூழ்நிலையில், தாலிபான் பயங்கரவாதிகள் உடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததை உறுதிப் படுத்த உறுதிப்படுத்துவதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்ற தாலிபான்கள் சீனா தங்களுடைய மிக முக்கிய கூட்டாளி என்று தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் சீனா எங்களுடைய முக்கிய கூட்டாளியாக ஆப்கானிஸ்தானை பொருளாதாரரீதியாக பலப்படுத்துவதற்கு சீனாவை நாங்கள் நம்பியிருக்கின்றோம் சீனா எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலித்து வருகிறது. பொருளாதாரத்தை வெளிப்படுத்துவதற்கு நீதியை அளிக்க தயாராக உள்ளது என கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் இருக்கின்றன சீனாவின் உதவி காரணமாக, அவற்றை மீண்டும் நாங்கள் செயல்பட வைக்கலாம், நவீனமயமாக்கலாம், அத்துடன் சீனாவின் மூலமாக உலகில் இருக்கின்ற சந்தைகளுக்கு எங்கள் தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம், சீனா ஆப்பிரிக்கா ,ஆசியா மற்றும் ஐரோப்பா உடன் பயிற்சி செய்யும் சீனாவின் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என அவர் கூறியிருக்கிறார்.

விரதம் இருந்ததால் பள்ளி குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர்!

0

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஜன்மாஷ்டமி பண்டிகையில் விரதம் இருந்ததற்காக 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆசிரியர் சரண் மார்க்கம், மாணவர்களை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்து கடவுளுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளையும் கூறியுள்ளார். அதனால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மார்கம் கிரோலா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூந்தாப்பராவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் பட்டிருந்தார்.அவர் மீதான புகாரின் மீது முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கொண்டகான் கலெக்டர் புஷ்பேந்திர குமார் மீனா கூறினார்.

 

கிராம பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் கிராமவாசிகள் செவ்வாயன்று பள்ளியில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவர்களை ஜன்மாஷ்டமியில் விரதம் இருந்ததால் தாக்கியதாகவும், கிருஷ்ண பகவான் மீது ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும் ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.

 

கிராம மக்கள் தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர் என , மாவட்ட ஆட்சியர் மீனா கூறியுள்ளார்.

 

அதில் திங்கள் கிழமை ஜன்மாஷ்டமி கொண்டாடப்பட்டது, அடுத்த நாள் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும், அவர்களில் எத்தனை பேர் விரதம் இருந்தார்கள் மற்றும் திருவிழாவின் போது சடங்குகள் செய்தீர்கள் என மாணவர்களிடம் அவர் கேட்டுள்ளார்.

 

மாணவர்கள் யார் விரதம் இருந்தார்களோ அவர்கள் கைகளை உயர்த்த அவர்களை மட்டும் தனியாக அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாக புகார் மற்றும் அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

அதைத் தொடர்ந்து, விசாரணை நடத்த ஒரு அரசு அதிகாரி அனுப்பப்பட்டு, அறிக்கையின் அடிப்படையில், ஆசிரியர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவும் கூறினார்.

 

இது தொடர்பான அறிக்கை காவல்துறையினருக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று ஆட்சியர் கூறினார்.

 

இடைநீக்க உத்தரவில், ‘மத உணர்வுகளை புண்படுத்துவது மற்றும் சமூகத்தில் வெறுப்பை பரப்புவது கடுமையான தவறான நடத்தை என்ற பிரிவின் கீழ் வருகிறது. இந்த பிரிவின் கீழ் இந்த குற்றம் சட்டீஸ்கர் சிவில் சர்வீசஸ் (நடத்தை) விதிகள் 1965 க்கு எதிரானது.

 

அதேபோல அந்த உள்ளூர்வாசிகள் மார்க்கம் ஆசிரியரை தாக்கியதாக மற்றொரு குற்றமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கை மற்றும் ஆசிரியர் மீது உள்ளூர் கிராம மக்கள் அளித்த புகாரை நாங்கள் பெற்றுள்ளோம்.

தவிர, பழங்குடி சமூகங்களின் சங்கமான சர்வ ஆதிவாசி சமாஜிடமிருந்து எதிர் புகார் ஆசிரியரை தாக்கியதாக கூறி எதிர்ப்பு புகாரும் பெறப்பட்டு உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

 

 

 

 

 

 

ஒரு எம்.எல்.ஏ ரயிலில் செய்த முகம் சுளிக்கும் செயல்! உள்ளாடையுடன் அலைந்த அவலம்!

0

ஒரு எம்.எல்.ஏ ரயிலில் செய்த முகம் சுளிக்கும் செயல்! உள்ளாடையுடன் அலைந்த அவலம்!

பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எம்.எல்.ஏ கோபால் மண்டல் என்பவரும் பயணம் செய்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் இந்த எம்.எல்.ஏ. இவர் ரயில் பயணத்தின்போது உள்ளாடையுடன் திரிந்ததாக புகார் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ரயிலில் வந்த பயணிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் இவ்வாறு நடந்துள்ளது.

அந்த எம்.எல்.ஏ.வின் செயலுக்கு மற்ற பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. அதன் பின்னர் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் தலையிட்டு பிரச்னைக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள ரயில்வே போலீஸ் நிலையத்தில் பிரகலாத் பாஸ்வான் என்பவர் எம்.எல்.ஏ. குறித்து ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில் எம்.எல்.ஏ வெள்ளை பனியன் மற்றும் உள்ளாடையுடன் சுற்றும் போது குடிபோதையில் இருந்ததாகவும், மேலும் அவர் என் தங்க மோதிரத்தையும், செயினையும் பறித்து என்னிடம் ஒரு வாறு நடந்துகொண்டார் எனவும் கூறியுள்ளார். இது பற்றி அந்த எம்.எல்.ஏ விடம் விசாரணை மேற்கொண்டு உள்ளது என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

மேலும் அந்த உள்ளாடையுடன் திரிந்த எம்.எல்.ஏ, இது பற்றி தெரிவிக்கும் போது தனக்கு வயிற்றுப்போக்கு இருந்ததன் காரணமாகவே உள்ளாடையுடன் இருந்ததாகவும், ரயிலில் ஏறிய உடனேயே எனக்கு இந்த வயிற்றுப் போக்கு ஏற்பட்டது என்றும், நான் பொய் கூறவில்லை.  அதனால்தான் நான் அப்படி இருந்தேன் எனவும் கூறியுள்ளார். அவர் உள்ளாடையுடன், அதுவும்  சட்டப்பேரவை உறுப்பினரின் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருவதும் குறிப்பிடத் தக்கது.

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்த லஞ்ச ஒழிப்புத் துறை! அதிரடி சோதனை!

0

சென்னையிலிருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் எஸ் பி வேலுமணி தனக்கு வைத்திருக்கின்ற வங்கியில் அவருடைய லாக்கரை திறந்து சோதனை செய்து இருக்கிறார்கள் அதை ஒரு வங்கி அதிகாரிகளிடமும் கடைசியாக இந்த லாக்கர் எப்போது திறக்கப்பட்டது போன்ற விவரங்களையும் விசாரணை செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் அமைச்சர் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருத்தவரையில் அதிமுக மிகப்பெரிய செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் வேலுமணி தான் என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை திமுக அந்த பகுதியில் தலை தூக்கவே முடியவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எப்படியாவது கோயம்புத்தூரை தன் வசம் கொண்டு வந்துவிடவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டார். ஆனாலும் அவருடைய முயற்சி பலனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது இதில் பல ஆவணங்கள் சிக்கியதாக ஆளுங்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வாங்கி லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை செய்கிறார்கள். அரசு ஒப்பந்த பணிகள் வாங்கித் தருவதாக தெரிவித்து 1.20 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எஸ் பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவரை பின்தொடர்ந்த காவல்துறையினர் அவருக்கு சொந்தமான 50 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை செய்தது இந்த சோதனையில் 13 லட்சம் ரூபாய் முக்கிய ஆவணங்கள் மற்றும் சாதி ஒன்றையும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவருடைய வங்கிக் கணக்குகளும் முழுவதுமாக முடக்கப்பட்டு விட்டது.

இந்த சூழ்நிலையில் ,சென்னையிலிருந்து வந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் எஸ் பி வேலுமணி கணக்கு வைத்திருக்கும் வங்கியில் அவருடைய லாக்கரை திறந்து சோதனை செய்திருக்கிறார்கள். அதோடு வங்கி அதிகாரிகளிடம் கடைசியாக இந்த பெட்டகம் எப்பொழுது திறக்கப்பட்டது போன்ற விவரங்களையும் விசாரித்துக் கேட்டுப் பெற்றனர்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று சென்றதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. அதே சமயம் அவருடைய பெட்டகத்தில் இருந்து ஏதேனும் ஆவணங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறதா என்ற விவரங்களை இதுவரையில் அதிகாரிகள் யாரும் வெளியிடவில்லை.

பாலிய நன்பரை வீடு தேடி சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

0

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டிபி கஜேந்திரன் அவர்கள் வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாதன், போன்ற பல திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுகவின் தலைமை நிலையச் செயலாளரும் நடிகர் சங்க பிரமுகருமான பூச்சி எஸ் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக டிபி கஜேந்திரன் இடம் தொடர்பு கொண்டு விசாரணை செய்த போது நானும் முதலமைச்சர் ஸ்டாலினும் கல்லூரியில் ஒன்றாக படித்து கொண்டு இருந்தோம். ஒரே வகுப்புத் தோழர் என்னுடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால், என்னை வந்து சந்தித்திருக்கிறார் மற்றபடி வேறு எந்த விஷயமும் இல்லை என கூறியிருக்கிறார் கஜேந்திரன்.

ஆனாலும் ஸ்டாலின் வீடுவரை வந்து நலம் விசாரித்தது தொடர்பாக அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் கவிதை ஒன்றை வெளியிட்டு அதில் தெரிவித்திருக்கின்றார் அந்த கவிதை வருமாறு,

முத்துவேலர் பேரனே முத்தமிழ் அறிஞரின் மைந்தனே கழகத்தின் தளபதியே தமிழகத்தின் முதல் உடனே உன் நல்லாட்சியில் வாழும் நான் ஒரு சிறு குடிமகன் தூரத்தில் இருந்து உன் முகம் பார்த்து துன்பத்தை துரத்தும் சிறியவன் படங்களை இயக்கினாலும் என்னை தேடி வந்த கிருஷ்ணனைப் போல என் வீடு தேடி வந்தாள் நான் வீடு பேறு அடைந்த நலம் விசாரித்து நானிலம் போற்றும் நின்றாய். நீங்கள் தான் நான் பெற்ற செல்வம் நட்புக்கு இலக்கணம் வகுத்த வாழும் நாளெல்லாம் உன்னை நினைத்தே இருப்பேன் உன்னை மறக்க நேரிடும் என்றால் மரிப்பேன் அன்புடன் டிபி கஜேந்திரன் முதலமைச்சருடன் வந்து முழு அன்பை தந்த பொய்யாமொழி புதல்வருக்கும், கழகத்தின் செயல்வீரர் பூச்சி முருகன் அவர்களுக்கும், நன்றிகள் கோடி என குறிப்பிட்டிருக்கிறார்.