Monday, July 14, 2025
Home Blog Page 4225

பாரா ஒலிம்பிக் போட்டி! வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்!

0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய தினம் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.

பிரிட்டன் வீரருடன் நடைபெற்ற கடுமையான போட்டிக்குப் பின்னர் 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன்குமார் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற 18 வயதேயான பிரவீன்குமார் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

பிரிட்டன் வீரர் ஜோனதன் உடன் மிகக் கடுமையான போட்டி நிலவியது. இதில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் பிரவீன்குமார் இழந்திருக்கிறார். பாராலிம்பிக் போட்டியில் 2.10 மீட்டர் உயரம் தாண்டி பிரிட்டன் வீரர் ஜோனாதன் தங்க பதக்கம் வென்றிருக்கிறார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாராலிம்பிக் தொடரின் 2 தங்கம் 6 வெள்ளி 3 வெண்கலம் என்று பதினொரு பதக்கங்களை இந்தியா கைப்பற்றியிருக்கிறது.

நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

0

தமிழக சட்டசபையில் நேற்று சுகாதாரத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் நடந்தது அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளை தாக்கல் செய்து இருக்கிறார்.

அந்தக் குறிப்பில் மத்திய அரசின் ஆதரவுடன் துணை சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை எல்லோருக்கும் நல்வாழ்வு மையங்கள் ஆக மாற்றி கூடுதல் சேவைகளை வழங்க வழிவகை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார்.

நோய்த்தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக நாடு முழுவதும் இருக்கின்ற பல திறமையான சிறப்பு பொது சுகாதார வல்லுனர்கள் கொண்ட ஒரு சிறப்பு வழிகாட்டு குழு உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்த வழிகாட்டு குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொரு வாரமும் கூடி மாநிலத்தின் தற்போதைய நோய்த்தொற்றை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

மாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஒரு சிறப்பு உயர்மட்டக்குழு மூன்றாவது அலையில் நோய் தொற்று உண்டாகும். குழந்தைகளின் சிகிச்சைக்காக ஒரு செயல் திட்டத்தை தயாரித்து இருக்கிறது. மாநில மையம் மற்ற நாடுகளில் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்ற மூன்றாவது அலையின் தாக்கம் தொடர்பாக மிக விரிவாக ஆராய்ச்சி செய்து நோய் தொற்று வராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆப்கனின் விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சியா? அமெரிக்க தூதர் சொல்லும் குற்றச்சாட்டு!

0

ஆப்கனின் விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சியா? அமெரிக்க தூதர் சொல்லும் குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தானின் விமானப்படைத் தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்துவதாகவும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி குற்றம்சாட்டி உள்ளார். ஐ.நா சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் தான் நிக்கி ஹாலி என்பவர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண். அமெரிக்காவில் கேபினட் மந்திரி அந்தஸ்தை பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற சிறப்பைப் பெற்றவர். தலை சிறந்த நிர்வாகியும் கூட ஆவார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தற்போது கைப்பற்றியதை அடுத்து, இவர் அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் டெலிவிஷனுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது பேசிய அவர் ஜோ பைடனின் நிர்வாகம் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தனது முக்கிய நட்பு நாடுகளை அணுகி அவர்களது ஆதரவைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். முதலில் செய்ய வேண்டியது நமது கூட்டாளிகளுடன் அது தைவானாக இருந்தாலும், உக்ரைனாக  இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும், ஜப்பானாக இருந்தாலும் அவர்களுடைய முதுகெலும்பாக இருப்போம் என மன உறுதி அளிக்க வேண்டும்.

நமக்கு இவர்களின் தேவையும் உள்ளது. இரண்டாவது உலகமெங்கும் நாம் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை மேற்கொள்ளும் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த தார்மீக வெற்றியால் போராளிகள் மிகப்பெரிய அளவில் தங்களுக்கு கூட்டாக ஆள் சேர்ப்பார்கள். அதை நாம் கண் கூடாக பார்க்க முடியும். நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம் என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

நமது இணையதள பாதுகாப்பு பத்திரமாக இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்தும் நம் நாட்டு தளங்களில் ஊடுருவி வருகிறார்கள். நாம் மீண்டும் போராட தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. சீனாவை பார்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிதன் காரணமாக இந்த தருணத்தில் சீனாவை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய  அவசியமும் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள விமானப்படைத் தளத்தை சீனா கைப்பற்ற தொடர்ந்து முயற்சி செய்கிறது. இந்த விமானப்படை தளம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. சீனா ஆப்கானிஸ்தானின் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானை பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெறவும் முயற்சிக்கிறது.

நமக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே ஜோ பைடன் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயம் இதுதான். நமது கூட்டாளிகளை வலுப்படுத்துவதாக அவர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். நமது ராணுவத்தை நவீனப்படுத்தவும் சைபர் குற்றங்கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்கிறோம், என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசு! போராட்டத்தில் குதித்த பெண்கள்!

0

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைய இருக்கின்ற புதிய அரசு குறித்து அறிவிப்பை தாலிபான்கள் என்று வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்ற 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தாலிபான் அரசு போல இது இருக்காது எனவும், ஒரு சில மாற்றங்கள் இருக்கும் எனவும், அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசின் கீழ் பணியாற்ற உரிமை கோரி நேற்றையதினம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஹெராத் பகுதியில் போராட்டத்தில் இறங்கினார்கள்.

கடந்த 20 ஆண்டு காலமாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதை அடுத்து புதிய அரசை அமைக்கும் முயற்சியில் தாலிபான்களை ஈடுபட்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் உச்சபட்ச தலைவராக ஹெய்பத்துல்லாஹ் அகும்ஜதா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் எப்போதும்போல வேலைக்கு செல்லலாம் எனவும் அதே சமயத்தில் புதிய அரசில் பெண்களுக்கு இடம் இருக்காது எனவும், முக்கிய பதவிகளில் அமர்த்த மாட்டார்கள் எனவும், தாலிபான்களின் மூத்த தலைவர் முகமது அப்பாஸ் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து புதிய அரசின் கீழ் பணியாற்றுவதற்கு உரிமை வேண்டும் என்று தெரிவித்து நேற்றைய தினம் 50க்கும் அதிகமான பெண்கள் ஹெராத் பகுதியில் போராட்டத்தில் இறங்கினார்கள்.

இஸ்லாமியத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசு இயங்கும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. ஈரான் நாட்டில் இருப்பது போல ஆப்கானிஸ்தானிலும் அரசு அமைய இருப்பதாக தாலிபான்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது நாட்டின் உச்சபட்ச தலைவர் நியமிக்கப்பட்டு அவர் அரசியல் மற்றும் மத ரீதியான விவகாரங்களுக்கு தலைவராக செயல்படுவார். அவருக்கு கீழ் அதிபர் அல்லது பிரதமர் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், உட்சபட்ச தலைவர் பதவி தாலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஹெபத்துல்லாஹ் அகுன் ஜாதாவுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டில் ஹெல்மெட் மாகாணத்தில் ராணுவத்தின் மீது தாலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்கள் தற்கொலை படை தாக்குதலை முன்னின்று நடத்தியது. அகுன் ஜதாவின் மகன் அப்துர் ரகுமான் இருபத்தி மூன்று வயது உடைய அவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தார். அவருடன் சேர்ந்து மேலும் 6 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் இந்த சம்பவம் தான் தாலிபான்கள் இடையே அவருடைய செல்வாக்கை அதிகரித்திருக்கிறது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசனை ஈடுபட்டபோது அகுன் ஜதா பங்கேற்றாலும் நபர் குறித்த காட்சிகளும், புகைப்படங்களும், வெளியிடப்படவில்லை. தாலிபான்கள் அமைப்பின் நிறுவனர் முல்லா ஓமர் போன்ற இவரும் யாராலும் அறியப்படாதவர் இவருடைய ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் தாலிபான்கள் வெளியிட்டிருக்கிறார்கள். தாலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவர் முல்லா வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமைய இருக்கின்ற புதிய அரசு எல்லோருக்குமான அரசாக இருக்கும் என்று தாலிபான்கள் கூறியிருந்தார்கள். ஆட்சி அமைப்பதில் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இன்றைய தினம் மதிய தொழுகைக்குப் பின்னர் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை அவர்கள் வெளியிடலாம் எனவும், தகவல் கிடைத்திருக்கிறது போர்கள் காரணமாக விழுந்து இருக்கின்ற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதத்தில் புதிய அரசு அமையுமா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 192 ஆட்டம் இழந்தது. ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து இருக்கிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கின்றன. ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது இந்த நிலையில், 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் முக்கிய வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை ரோகித் சர்மா 11 ரன்கள் மற்றும் லோகேஷ் ராகுல் 17 ரன்கள், புஜாரா 4 ரன்கள் என்று அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின்னர் அணியின் கேப்டன் விராட் கோலி, ரவீந்தர் ஜடேஜா உள்ளிட்ட இருவரும் மிக நிதானமாக விளையாடி ரன் சேர்க்க தொடங்கினார்கள்.

ஜடேஜா 10 ரன்னில் ஆட்டமிழக்க கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து இருந்த நிலையில், ராபின்சன் ஓவரில் தன்னுடைய ஆட்டத்தை இழந்தார். அதன் பிறகு வந்த வீரர்களும் அணியின் ஸ்கோரை உயர்த்த இயலாமல் தடுமாறித்தான் போனார் ரஹானே 14 ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்னிலும், பெவிலியன் திரும்பினார்கள்.

இப்படியான நெருக்கடியான சூழ்நிலையிலும் மிக நேர்த்தியாகவும் அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாகூர் 37 பந்துகளில் அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார். இருந்தாலும் அவர் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக வோக்சிடம் தன்னுடைய விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இதன் பிறகு பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும், உமேஷ் யாதவ் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 3 விக்கெட்டுகள் வோக்ஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் மிக விரைவில் வெளியேறினார்கள். இதனைத் தொடர்ந்து டேவிட் மிலானுடன் கேப்டன் ஜோ ரூட் இணைந்த இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜோ ரூட் 21 ரன்கள் எடுத்த சமயத்தில் உமேஷ் யாதவிடம் ஸ்டம்ப்வுட் ஆனார்.

கடைசியில் முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்ட நேர இறுதியில் மலான் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்திய அணியின் சார்பாக தூம் 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் எடுத்திருக்கிறார்கள்.

நீட் தேர்வு ரத்து? தமிழக சட்டசபையில் வருகிறது புதிய சட்டம்!

0

தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் நேற்றைய தினம் சுகாதாரத் துறை மீதான மானிய கோரிக்கை நடந்தது. அந்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த ஒரு கொள்கை குறிப்பில் தமிழக அரசு மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்விற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மருத்துவ படிப்பிற்கான இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு பெற்றுத் தருவதில் இருக்கின்ற சிரமங்களை கருத்தில் வைத்து முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து இருக்கின்றார்.

இந்த குழு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை அடிப்படையாக வைத்திருக்கின்ற மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை சமூக பொருளாதார மற்றும் கூட்டாட்சி முறையை மிக மோசமாக பாதிப்பு அடைய செய்கிறதா? கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் அதோடு வேறு பிரிவு மாணவர்களை பாதிப்படைய செய்கிறதா என்பதையும் அப்படி பாதிப்படைய செய்தால் அதனை களைய எடுக்கப்பட வேண்டிய உரிய முன்னெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு செய்தது தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்கியது இந்த குழு.

இந்தக் குழுவின் பரிந்துரையை ஆராய தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட ஒரு உயர்மட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழக மாநிலச் சட்டம் 3/2007 போன்று ஒரு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முயற்சி செய்யலாம் என்று இந்த குழு பரிந்துரை செய்து இருக்கிறது.

உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்!

0

உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்!

சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் ஆரம்பித்தது. அங்கிருந்து தான் முதன் முதலில் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸ் ஆனது உருமாறி பரவிக் கொண்டே இருக்கிறது. அதற்கு மருந்து இல்லை என்பது போல, அது தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களையும் விடாமல் துரத்துகிறது. மேலும் இது பல வகைகளில் மனிதர்களை அச்சுறுத்தும் வைரஸ் ஆக உள்ளது. முதலில் கொரோனா ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என பல வகைகளில் அதன் உருவங்களை உருமாற்றி மனிதர்களிடையே பரவி வருகின்றது.

அதைப்போலவே தற்போது அதன் உருமாறிய ஒரு வடிவமாக பி.1.621 பரவி வருகிறது. இதை மு என்றும் அழைக்கின்றனர். இது கடந்த ஜனவரி மாதம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. அதன்பின் ஆங்காங்கே இந்த வைரஸ் காணப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் தென் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சில குறிப்பிட்ட இடங்களில் அதிக அளவில் காணப்பட்டது.

இந்த வைரஸ் தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, ஹாங்காங்கில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த வைரசை உன்னிப்பாக கவனித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு நிறுவனம் கூறியுள்ளது. இது உலகளாவிய பாதிப்பை கொண்டிருந்தாலும் தற்போது வரை இதன் பரவல் 0.1 ஒன்று என்ற சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதேநேரத்தில் கொலம்பியாவில் 39 சதவிகிதமும், ஈக்வடாரில் 13 சதவிகிதமும் உள்ளது. மேலும் இது  தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த  உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்புப் பட்டியலில் இது முக்கிய இடம் பெற்றுள்ளது. இதுவரை முப்பத்தி ஒன்பது நாடுகளில் இந்த வைரஸ் காணப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் சாத்தியங்கள் ஆன பண்புகளை கொண்டுள்ளதாகவும், தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டதாகவும், இருக்கிறது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. இந்த வைரஸ் உலக சுகாதார அமைப்பினால் கண்காணிக்கப்படும் ஐந்தாவது உருமாறிய வைரசும் ஆகும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த உருமாறிய வைரஸானது தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டதாக இருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனால் இதை உறுதி செய்ய இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை புரட்டி போட்ட இடா புயல்! இதுவரை 42 பேர் பலி!

0

அமெரிக்காவை புரட்டி போட்ட இடா புயல்! இதுவரை 42 பேர் பலி!

அமெரிக்காவின் பல மாகாணங்களில் இடா சூறாவளி புரட்டிப் போட்டு விட்டது. தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. வடக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட இதுவரை 42 பேர் வரை பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியானாவில் சூறாவளி காரணமாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. மிஸ்ஸிசிப்பியில் சூறாவளி ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெளிவாக உணர முடிகின்றது. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது மிக சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைகளில் கன மழை கொட்டும் காட்சியும் அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரயில் சேவை வந்துபோகும் காணொளியையும் உள்ளூர் மக்கள் சிலர் பகிர்ந்துள்ளனர். நியூயார்க் நகரின் ப்ரூள்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்க பகுதிகளிலும், வெளியிடங்களிலும் மக்கள் சிக்கி அவதியுறுகின்றனர்.

அவர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் நிறுவனங்கள் மிக கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது நியூயார்க் நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. அது அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது என்றும், கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படு பயங்கர நிலையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரமும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இனி இரண்டு PF கணக்கு! புதிய அப்டேட்! தெரிஞ்சிகோங்க!

CBDT ஆனது, இப்பொழுது புதிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில் வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்கள் ஒரு நிதியாண்டில் ரூ 2.5 லட்சத்தை தாண்டினால், நடப்பு நிதியாண்டில் இருந்து இரண்டு தனி கணக்குகளை பராமரிக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

சிபிடிடியின் இந்த புதிய அறிவிப்பு, பட்ஜெட் 2021-22 ஒரு புதிய ஏற்பாட்டிற்கு இடமளித்த பிறகு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருடாந்திர பிஎஃப் பங்களிப்புகளுக்கு வட்டி அளிக்கிறது என கூறப்படுகிறது.

 

எனவே, இரண்டு தனி கணக்குகள் – வரிக்குட்பட்ட கணக்கு மற்றும் வரி அல்லாத கணக்கு – இடத்தில், அத்தகைய முதலீடுகளுக்கான வட்டி கணக்கிட வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித் துறைக்கு எளிதாக இருக்கும் என கூறுகிறது. சிபிடிடியின் சமீபத்திய அறிவிப்பு வரவு செலவுத் திட்டம் 2021-22 இல் வட்டி மீதான வரிவிதிப்பு அறிவிப்புக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 

புதிய விதி 2021-22 நிதியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு தெரிவிக்கிறது. மேலும் உங்கள் EPFO ​​கணக்கில் உள்ள 2.5 லட்சத்திற்கு மேல் உள்ள பணத்திற்கு வட்டி விதிக்கப்படும்.

 

மேலும், முதலாளிகளின் தரப்பிலிருந்து எந்த ஒரு பங்களிப்பைப் பெறாத EPFO ​​கணக்குகளுக்கு, PF முதலீடுகளுக்கான வட்டி வரம்பு ரூ .5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

2.5 லட்சத்திற்கும் மேல் உள்ள பிஎஃப் பணத்திற்கு இரண்டாவது கணக்கைத் துவக்க சந்தாதாரர்கள் கூடுதலாக எதையும் செய்ய வேண்டாம். இரண்டாவது கணக்கு தானாகவே திறக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

 

மேலும், ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் எடுக்கப்பட்ட தொகையைக் கழித்தபின், வரிக்குட்பட்ட கணக்கில் முதலீடுகளுக்கான வட்டி மீதான வரி கணக்கிடப்படும்.

 

 

 

4 ஆண்டுகளில் 8 ஆண்களை மணந்த பெண்! பரிசோதனையில் HIV!

0

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 8 ஆண்களை 30 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருமணத்தை காரணம் காட்டி மக்களிடம் கொள்ளையடிக்கும் பெண் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

அந்த பெண் கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டு பேரை திருமணம் செய்ததாகவும், திருமணமான ஒரு வாரத்திற்குள் அவர்களின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் தப்பி விடுவதாக ஒப்புக்கொண்டதாக பாட்டியாலா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு Hiv எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்குப் பிறகு பாதிக்கப்பட்ட எட்டு பேரையும் தொடர்பு கொண்ட காவல்துறை அவர்களையும் எச்ஐவி எய்ட்ஸ் பரிசோதனை செய்யச் சொல்லியுள்ளது.

 

 

குற்றம் சாட்டப்பட்ட பெண் திருமணத்திற்குப் பிறகு 10-15 நாட்களுக்கு மேலும் வழக்கம் போல தன் பணியை செய்து கொண்டிருப்பாராம். பின்னர் அவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்வேன் என அச்சுறுத்துவாராம். மாமியார் அவளுடைய எச்சரிக்கைகளுக்கு அடிபணியவில்லை எனில், அவள் அந்த குடும்பத்தை மயக்கி, தனது கும்பலுடன் அந்த வீட்டிலுள்ள நகை மற்றும் பொருட்களை கூட்டாளிகளுடன் திருடுவார்களாம்.

 

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அதிக அளவு பணம் பறித்த பிறகு, அவள் நகரத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்று சென்றுவிடுவார் என சொல்ல படுகிறது. 30 வயதில் ஒரு பெண் விவாகரத்து செய்யப்பட்ட அல்லது நடுத்தர வயது ஆண்களை மயக்கி அவர்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியுள்ளார். ,

 

மேலும் விசாரணையில், 30 வயது அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்பதை போலீஸ் குழு கண்டறிந்தது. நான்கு வருடங்களுக்கு முன்பு தனது கணவர் தன்னை கைவிட்ட பிறகு திருமணத்தின் பேரில் மக்களை கொள்ளையடிக்கும் மோசடியை அவர் தொடங்கி உள்ளார்.