Monday, July 14, 2025
Home Blog Page 4228

கடைசிவரையில் ஓபிஎஸ்-க்கு உறுதுணையாக இருந்த விஜயலட்சுமி! வெளியான நெகிழ்ச்சி தகவல்கள்!

0

ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி ஓபிஎஸ் சென்னையில் இருந்தால் அவரும் சென்னையில் இருப்பார் ஓபிஎஸ் தேனியில் இருந்தால் அவரும் தேனிக்கு சென்று விடுவார். இவ்வளவு ஏன் ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றால் கூட அவருடன் விஜயலட்சுமி கண்டிப்பாக செல்வார் என்று சொல்லப்படுகிறது. வெளிநாட்டு பயணங்களின் போது கூட ஓபிஎஸ் அவர்களின் நிழலாக இருந்து வந்தவர் அவருடைய மனைவி விஜயலட்சுமி என்று சொல்கிறார்கள். அதே போல ஓபிஎஸ் அவர்கள் எங்கு சென்றாலும் அவருடன் மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது..

பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்தவுடன் சசிகலா ஒரு நிமிடம் அதிர்ந்து போனதாக சொல்கிறார்கள். 66 வயதாகும் விஜயலட்சுமி சுமார் 45 வருடங்களாக பன்னீர் செல்வத்துடன் வாழ்ந்து வந்தவர். இவருடைய சொந்த ஊர் உத்தமபாளையம் என்று சொல்லப்படுகிறது அங்கேயே விஜயலட்சுமியின் தந்தை மிகப்பெரிய மில் வைத்திருந்தார். எனவும், சொல்கிறார்கள்.

அத்துடன் உத்தமபாளையத்தில் மிகப்பெரிய அளவில் விவசாயமும் செய்து வந்தவர் விஜயலட்சுமியின் தந்தை தமிழக நிதி அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தந்தை பி டி ஆர் பழனிவேல் ராஜன் காலம் முதலே அவர்களுக்கு சொந்தமான இடங்களில் விஜயலட்சுமியின் தந்தை அழகு பாண்டி தான் விவசாயம் செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் இப்பொழுதும் கூட பழனிவேல் தியாகராஜன் குடும்பத்துடன் இணைந்துதான் விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார் அழகு பாண்டி என்று தெரிகிறது.

அந்த அளவிற்கு வசதியான மனிதராக இருந்தாலும் கூட தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பால்பண்ணை வைத்திருந்த பன்னீர் செல்வத்திற்கு தன்னுடைய மகள் விஜயலட்சுமியை மணம் முடித்து கொடுத்திருந்தார் அழகு பாண்டி.. திருமணம் செய்து கொண்டது முதலே பன்னீர்செல்வம் மற்றும் விஜயலட்சுமி உள்ளிட்டோருக்கு இடையிலான பந்தம் மிகவும் நெருக்கமாகி இருக்கிறது. விஜயலட்சுமி கணவர் பன்னீர்செல்வம் சட்டசபை உறுப்பினர், அமைச்சர்,முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்று மிகப்பெரிய பதவிகளில் இருந்தாலும் கூட விஜயலட்சுமி சாதாரண பெண்ணாகவே வலம் வந்து இருக்கின்றார்.

அதிலும் பன்னீர்செல்வம் எங்கு சென்றாலும் அவருடன் நிழலாக இருந்து வந்தவர் விஜயலட்சுமி என்று சொல்கிறார்கள். அதேபோல பன்னீர்செல்வம் எங்கே சென்றாலும் அவருடன் தன்னுடைய மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் .அதேநேரம் கட்சிக் கூட்டம், போராட்டம், பேச்சுவார்த்தை என்று வரும் சமயங்களில் மட்டும் விஜயலட்சுமி தன்னுடைய கணவரை பிரிந்து இருப்பார் என தெரிவிக்கிறார்கள்.

அந்த சமயத்திலும் கூட சரியான நேரத்திற்கு பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் அழைத்து சாப்பிட்டு விட்டீர்களா? என்று கேட்காமல் இருக்க மாட்டார் விஜயலட்சுமி என்று தெரிவிக்கிறார்கள். அதேபோல பன்னீர் செல்வமும் மனைவி எங்கே இருந்தாலும் சரியான நேரத்திற்கு தொலைபேசியில் அழைத்து அவரை சாப்பிட சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார் என்கிறார்கள்.

இரண்டு மகன்கள் ஒரு மகள் என்று இருக்கின்ற நிலையில், மூன்று பிள்ளைகள் மீதும் விஜயலட்சுமிக்கு அதீத பாசம் என கூறுகிறார்கள். இளையமகன் ஜெயபிரதீப் என்றால் விஜயலட்சுமி அவர்களுக்கு செல்லம் சற்று அதிகமாம். இளைய மகனான ஜெயபிரதீப்பை சட்டசபை உறுப்பினர் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் வைத்து பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக கடைசி வரையில் அவருடைய ஆசை நிறைவேறவே இல்லை தாய் மீதான அளவுக்கு மீறிய பாசம் காரணமாக, தன்னுடைய இனிஷியல் கூட தாய் விஜயலட்சுமியின் பெயரை சேர்த்துக் கொண்டவர் ஜெயபிரதீப் என்று சொல்கிறார்கள். அதேபோல அரசியல் ரீதியாகவும் பல நேரங்களில் ஓபிஎஸ் அவர்களுக்கு விஜயலட்சுமி உதவி புரிந்ததாக தெரிவிக்கிறார்கள். கடந்த 2001ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த சமயத்தில் போயஸ் கார்டனுக்கு விஜயலட்சுமியும் சென்று வந்துகொண்டிருந்தார் என தகவல் கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் சசிகலாவுடன் ஏற்பட்ட பழக்கம் தான் தற்சமயம் வரையில் விஜயலட்சுமிக்கு நீடித்து இருக்கிறது. இதன் காரணமாக, தான் விஜயலட்சுமி மறைவு செய்தியைக் கேட்டவுடன் கண்ணீரும் அழுகையுமாக சசிகலா மருத்துவமனைக்கு விரைந்து வந்ததாக கூறுகிறார்கள்.

அவர் மருத்துவமனைக்கு காரில் வந்து இறங்கியதில் இருந்து பன்னீர் செல்வத்துடன் சந்திக்கும் வரையில் சசிகலா கண்களில் ஆனந்த கண்ணீர் நிற்கவில்லை அதேபோல பன்னீர் செல்வத்துடன் உரையாற்றும் போது கூட சசிகலா கண்ணீர் விட்டு அழத் தொடங்கிவிட்டார். அந்த அளவிற்கு விஜயலட்சுமி உடன் நெருக்கமான ஒரு உறவை சசிகலா ஏற்படுத்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கிறார்கள். பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தத்தை ஆரம்பித்த சமயத்தில் விஜயலட்சுமியின் மூலமாக சசிகலா தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி இருந்ததாகவும், அதன் பிறகு தினகரனை ரகசியமாக சென்று பன்னீர்செல்வம் சந்தித்ததன் பின்னணியிலும் விஜயலட்சுமி இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இந்த அளவிற்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அரசியல் அரங்கிலும் விஜயலட்சுமி பன்னீர்செல்வத்துக்கு ஒரு மிகப்பெரிய உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதை கவனிக்கும்போது அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான தம்பதிகளாக பன்னீர்செல்வம் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கடைசிவரையில் இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

பிரபல மாடல் மற்றும் நடிகர் மாரடைப்பால் மரணம்! பிக்பாஸ் டைடில் வின்னர்!

0

பிரபல மாடல் மற்றும் நடிகர் மாரடைப்பால் மரணம்! பிக்பாஸ் டைடில் வின்னர்!

பிரபல நடிகராக நமக்கு திரையில் தோன்றும் சின்னச் திரையில் தோன்றிய நடிகர் சித்தார்த் சுக்லாவை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. மேலும் அவர் பிக்பாஸ் பதிமூன்றாம் சீசனில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற போட்டியாளர். இவர் ஒரு மிகச்சிறந்த மாடலும் ஆவார். 2005 ம் உலகின் சிறந்த மாடல் என்று ஒரு விருது கூட வாங்கி உள்ளார். அவருக்கு தற்போது 40 வயது ஆகிறது. இவர் மிகவும் பிசியான ஒரு நபராவார். இவ்வளவு சிறு வயதில் அவர் இறந்தது சக நடிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

இவர் சின்னத்திரை நடிகராக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெருத்த வரவேற்பு இருந்தது. 2008 ம் ஆண்டிலிருந்து இவர் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல தொடர்கள் வெற்றியடைந்தது.  பலிகா வத்து, தில் சே தில் தக் என்ற இரண்டும் மிக வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா என்ற ஒரு திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். அவரது சின்னத்திரை தொடர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அதனால் தமிழகத்தில் கூட அது மொழிபெயர்ப்புத் சேனல்களில் இடம்பெற்றன. பலிகா வத்து  என்ற தொடர் தமிழில் மண் வாசனை என்ற பெயரில் வெளியானதும் குறிப்பிடத் தக்கது. அதனால் தமிழகத்தில் கூட இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் ஆல்பம், வெப்சீரிஸ் மற்றும் சின்னத்திரை தொடர்கள் என மிக பிஸியாக இருக்கும் ஒரு நடிகர். இவருக்கு இப்படி நேர்ந்ததை யாராலும் நம்பவே முடியவில்லை. இன்று மாலை அவரது இறுதி சடங்குகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இதை அவரது ரசிகர்களாலும், நண்பர்களாலும்  தாங்கவே முடியவில்லை. அவரின் இந்த இழப்பை.

இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதும், அதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செற்ற போது அவர் இறந்துவிட்டார் என தெரிவித்து உள்ளனர். அவருக்கு தாயும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி நல்லதா? கெட்டதா ஒரு அலசல்!

0

தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்கவேண்டும் ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அவற்றில் நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்க சாவடிகளில் புறநகர்ப் பகுதிகளில் 9 சுங்கச்சாவடிகளும் இருக்கின்றன. சென்னை நகரப் பகுதிக்குள் இருக்கின்ற சென்னை சமுத்திரம் நிமிண்டி, வானகரம். பரனூர் மற்றும் சூரப்பட்டு உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகளை கடப்பதற்கு நீண்ட நேரம் பிடிக்கிறது அதனை அகற்றுவதற்கு முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார் என கூறியிருக்கிறார் அமைச்சர்.

இது குறித்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார். சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பாக உரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம் என கூறியிருக்கிறார் அமைச்சர் எ.வ. வேலு.

மாநிலத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் அந்தந்த பகுதிகளில் சுங்க சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்வது மற்றும் போக்குவரத்து அதற்கான கட்டணத்தை வசூலிப்பது போன்ற பணிகளில் இந்த சுங்க சாவடி ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அப்படி வசூலிக்கப்படும் பணம் அந்த சாலை பராமரிப்பு மற்றும் பூஞ்செடிகள் வைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கிறார்கள்.

ஆனாலும் இப்படி சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் மொத்த தொகையும் அந்த சாலைக்கு செலவிடப்படுவதில்லை. அந்த சாலை பராமரிப்பு பணிகளுக்கு செயல்படுத்தப்படும் தொகையை தவிர்த்து மற்ற தொகை அப்படியே மத்திய அரசின் கருவூலங்களுக்கு சென்றுவிடும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்

அதேநேரம் இப்படி சுங்கச்சாவடிகள் ஆங்காங்கே இருப்பதால் நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளும் மற்றும் கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் தொழில்களும் நிறுத்தப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்

ட்விட்டர் மூலம் இனி பணம் சம்பாதிக்கலாம்! புதிய திட்டத்தை அறிவித்தது அந்த நிறுவனம்!

0

ட்விட்டர் மூலம் இனி பணம் சம்பாதிக்கலாம்! புதிய திட்டத்தை அறிவித்தது அந்த நிறுவனம்!

சமூக வலைத்தளமான ட்விட்டர் செப்டம்பர் 1 அன்று அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான சூப்பர் ஃபாலோஸ்ஐ அறிமுகப்படுத்தியது.இது படைப்பாளர்களுக்கு சந்தாக்களை விற்க அனுமதிக்கிறது.ட்விட்டரின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள குறிக்கோள் கிளிக் செய்யக்கூடிய நட்சத்திரங்களுக்கு விருப்பமான தளமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஏராளமான விளம்பரங்கள் அல்லது விளம்பரங்களுடன் மேடையை ஒழுங்கீனம் செய்யாத வழிகளில் தங்கள் சொந்த வருவாயை உருவாக்குவதே ஆகும்.

ட்விட்டர் தயாரிப்பு மேலாளர் எஸ்தர் க்ராஃபோர்ட் ஒரு வலைப்பதிவு இடுகையில் இந்த அம்சத்தின் மூலம் மக்கள் பணம் சம்பாதிக்கும் போது தங்கள் அதிக ஈடுபாடு கொண்ட பயனர்களுடன் இயல்பாக தொடர்பு கொள்ள ட்விட்டரில் பிரத்யேக அளவிலான உரையாடலை உருவாக்க முடியும் என்று கூறினார்.சூப்பர் ஃபாலோஸை உருவாக்குவது பொது உரையாடல்களை இயக்க ஒரு தனித்துவமான ஆளுமை என்று அவர் கூறினார்.

ஆர்வலர்கள்,ஊடகவியலாளர்கள்,இசைக்கலைஞர்கள்,எழுத்தாளர்கள்,விளையாட்டாளர்கள்,ஜோதிட ஆர்வலர்கள்,அழகு நிபுணர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்கள் ஆகியோரின் பட்டியலை க்ராஃபோர்ட் மேலும் குறிப்பிட்டார்.இந்த குறிப்பிட்ட சூப்பர் ஃபாலோ அம்சம் அதிகாரப்பூர்வமாக யுஎஸ் மற்றும் கனடாவில் உள்ள ஒரு சிறிய படைப்பாளர்களுடன் தொடங்கப்பட்டது.

அதே நேரத்தில் பங்கேற்கும் படைப்பாளர்களைப் பின்தொடரும் விருப்பம் அடுத்த வாரங்களில் ஆப்பிள் மொபைல் சாதனங்களில் ட்விட்டரைப் பயன்படுத்தும் நபர்களுக்கு உலகளவில் கிடைக்கும்.சூப்பர் ஃபாலோஸ் காத்திருப்பு பட்டியலுக்கு தகுதி பெற ஒரு பயனர் குறைந்தது 10,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்க வேண்டும்.மேலும் 18 வயதாக இருக்க வேண்டும் மற்றும் கடந்த 30 நாட்களில் 25 முறை ட்வீட் செய்திருக்க வேண்டும்.

க்ராஃபோர்டின் கூற்றுப்படி இந்த அம்சம் இறுதியில் கூகுள் ஆதரவு ஆண்ட்ராய்டு மென்பொருளால் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கும் ட்விட்டர்.காம் வலைத்தளத்திற்கும் கொண்டு வரப்படும்.ஒரு படைப்பாளி $ 50,000ஐ கொண்டு வரும் வரை ட்விட்டர் 3 சதவீத சந்தாக்களுக்கு மிகாமல் பரிவர்த்தனை கட்டணத்தை எடுக்கும்.இதற்குப் பிறகு ட்விட்டரின் பங்கு 20 சதவீதமாக அதிகரிக்கிறது என்று ட்விட்டரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய சூப்பர் ஃபாலோ அம்சம் ஃப்ளீட் அம்சத்திற்கு ஒரு மாதத்திற்குள் வருகிறது.இது 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்து போன ஸ்னாப்சாட் பதிவுகள் போல இருந்தது.

சிறுமிகளை கேலி செய்த இளைஞர்கள்! தாக்கப்பட்ட வனவிலங்கு பாதுகாவலர்!

0

சிறுமிகளை கேலி செய்த இளைஞர்கள்! தாக்கப்பட்ட வனவிலங்கு பாதுகாவலர்!

கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் தரிகெரே தாலுகா சந்தவேரி கிராமத்தில் வனவிலங்கு சரணாலய பாதுகாவலர் கிருஷ் ,தனியார் நிறுவன தொண்டு ஊழியரும் மற்றும் அவரது மகள்களும் ஒரு ஜிப்பின் வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது சந்தவேரி கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தபோது, அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து இருந்த இளைஞர்கள் அந்த சிறுமிகளை கிண்டலும், கேலியும் செய்துள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட வனவிலங்கு அதிகாரி இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று அவர்களிடம் கூறியுள்ளார். மேலும் இது ஒரு தவறான செயல் என்று கூறி அவர்களை கண்டித்து விட்டு, அங்கிருந்து அவர் வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் மேலும் அவர்களது நண்பர்கள் பலரை அழைத்து கொண்டு இருசக்கர மோட்டார் வாகனம் மூலம் அவர்களைத் பின்தொடர்ந்து வந்தனர்.

அதன்பின் கொசப்பேட்டை எனும் இடத்தில் காரை வழிமறித்த அவர்கள், அறிவுரை கூறிய வன பாதுகாப்பு அலுவலர் கிரிஷ் மற்றும் அவரது உறவினர்களை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அவர் சிக்மகளூர் புறநகர் காவல் நிலையத்தில் இந்த இளைஞர்களை பற்றி புகார் ஒன்று தெரிவித்துள்ளார். எனவே போலீசார் புகாரை எடுத்துக்கொண்டு அந்த இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அறிவுரை கூறியதன் காரணமாக வனவிலங்கு  ஆர்வலரை தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது மாறி சம்பவங்கள் தான் அடுத்த நிலைக்கு சென்று பாலியல் வன்முறை குற்றங்களாக அவதாரமெடுக்கின்றன. இளைஞர்கள் மாறினால்தான் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! அலகாபாத் நீதிமன்றம் கருத்து!

0

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! அலகாபாத் நீதிமன்றம் கருத்து!

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் பசு பாதுகாப்பு இந்துக்களின் அடிப்படை உரிமையாக கருதப்பட வேண்டும்.ஏனென்றால் நாட்டின் கலாச்சாரம் மற்றும் அதன் நம்பிக்கை பாதிக்கப்படும்போது நாடு பலவீனமடைகிறது என்பதை நாங்கள் அறிவோம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் புதன்கிழமை ஒரு மனிதனுக்கு ஜாமீன் வழங்க மறுத்தது.

நீதிபதி சேகர் குமார் யாதவின் ஒற்றை நீதிபதி பெஞ்ச் கூறியது,அடிப்படை உரிமை என்பது மாட்டிறைச்சி உண்பவர்களின் தனிச்சிறப்பு மட்டுமல்ல.மாறாக பசுவை வழிபடுவோர் மற்றும் பொருளாதார ரீதியாக பசுக்களை நம்பியிருப்பவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும் உரிமை உண்டு.

வாழும் உரிமை கொல்லும் உரிமைக்கு மேலானது மற்றும் மாட்டிறைச்சி உண்ணும் உரிமையை ஒருபோதும் அடிப்படை உரிமையாக கருத முடியாது.குற்றம் சாட்டப்பட்டவர் பசுவைத் திருடிய பிறகு அதைக் கொன்று தலை துண்டித்து அதன் இறைச்சியை சேமித்து வைத்திருப்பதை நீதிபதி குறிப்பிட்டார்.

இது அந்த நபரின் முதல் குற்றம் அல்ல.நீதிமன்றம் விண்ணப்பதாரர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர் மீண்டும் அதே குற்றத்தைச் செய்வார்.வகுப்புவாத நல்லிணக்கத்தைக் கெடுப்பார்.பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றவும் பசுக்களுக்கு தீங்கு விளைவிப்பதைப் பற்றி பேசுபவர்களுக்கு எதிராகவும் பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்பவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இது இந்தியா பசுக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியது.முஸ்லீம்கள் தங்கள் ஆட்சியில் பசுவை இந்தியாவின் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக கருதினர்.உதாரணமாக ஐந்து முஸ்லீம் ஆட்சியாளர்களால் பசு வதை தடை செய்யப்பட்டது.பாபர்,ஹுமாயூன் மற்றும் அக்பர் ஆகியோர் தங்கள் மத விழாக்களில் மாடுகளை பலியிடுவதை தடை செய்தனர்.

மைசூர் நவாப்,ஹைதர் அலி பசு வதையை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றினார்.மாடுகள் சரியாக பராமரிக்கப்படாத மாடு மேய்ப்பதையும் இனி உற்பத்தி செய்யாத மாடுகளை கைவிடும் உரிமையாளர்களையும் நீதிபதி யாதவ் விமர்சித்தார்.பசுவை பாதுகாத்து நேர்மையான இதயத்துடன் பராமரிக்க வேண்டும்.

மேலும் அரசாங்கம் அவர்களின் வழக்கை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.பசுக்களின் நலன் இருக்கும் போது மட்டுமே இந்த நாட்டின் நலன் இருக்கும் என்று நீதிபதி யாதவ் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை!

0

அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை!

தமிழக அரசின் பட்ஜெட்டில் தற்போது ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அது பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி, முன்பு மூன்று லட்சத்தில் இருந்தது. தற்போது அதை 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு பட்ஜெட்டில்  அறிவித்துள்ளது. அதன்படி இனி குடும்ப பாதுகாப்பு நிதியை ஐந்து லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஒரு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.

இதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்களுக்கு பிடித்தம் ரூபாய் 60 லிருந்து ருபாய் 110 ஆக உயரும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த பிடித்தம் ஒவ்வொரு ஊழியருக்கும் முன்பு மாதத்தில் 60 ரூபாய் பிடிப்பதாக இருந்தது. தற்போது அதை அதிகரித்து அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு தற்போது பல்வேறு திட்டங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

0

இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றியைக் கொடுத்தது.பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2014ம் ஆண்டு மெட்ராஸ் திரைப்படம் வெளியானது.இந்த படத்தில் நடிகராக கார்த்தி நடித்திருந்தார்.வடசென்னையை மையமாக வைத்து கதைக்களம் அமைந்திருக்கும்.இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்தது.

இதனையடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி என்கிற திரைப்படத்தை எடுத்தார்.2016ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது.இந்த படமும் நல்ல வெற்றியைக் கொடுத்தது.மலேசியத் தமிழர்கள் குறித்தான கதை என்பதால் இந்த படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனையடுத்து அவர் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து காலா திரைப்படத்தை இயக்கினார்.

காலா திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியானது.இந்த திரைப்படம் மும்பை தாராவி மக்களின் வாழ்க்கையைப் பேசியது.இந்தப் படமும் நல்ல வெற்றியைக் கொடுத்தது.மேலும் இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் ஓடிடி வலைத்தளத்தில் வெளியானது.இந்தத் திரைப்படமும் வெற்றி பெற்றது.பா.ரஞ்சித் இயக்கிய ஐந்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருப்பார்.அனைத்துப் படங்களிலும் பாடல்கள் ஹிட் அடித்தன.

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படமான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.மேலும் அவர் வேறு இசையமைப்பாளர்களை நாடி வந்தார்.தற்போது அவர் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களைப் பற்றி அவர்களிடமே கேளுங்கள்! விரக்தியில் பதிலளித்த டிடிவி தினகரன்!

0

ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தேவையில்லாதது, அந்த பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடத்துவது தான் பெருந்தன்மையான செயலாக இருக்கும் இதை திமுகவிடம் எதிர்பார்க்க இயலாது. சசிகலா தொண்டர்களை நிச்சயமாக சந்திப்பார் அவர் வருகை தரும்போது அவருடைய திட்டம் தொடர்பாக அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.

பெருந்தன்மையான அரசு என்பதற்கான அடையாளத்தை திமுகவிடம் நாம் எந்த காலத்திலும் எதிர்பார்க்க இயலாது என டிடிவி தினகரன் விமர்சனம் செய்திருக்கிறார். திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் எம் ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க டிடிவி தினகரன் வருகை தந்தார்.

இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கும் அவர் பேட்டி அளித்தார் அப்படி பேட்டி அளிக்கும் போது சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு இதுதான் என்னுடைய நிலை எனவும், இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ரகசியம் பரம ரகசியம் எனவும், பதில் அளித்தது தொடர்பாக டிடிவி தினகரன் இடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் தந்த டிடிவி தினகரன் அவர் என்ன அர்த்தத்தில் தெரிவித்தார் என்று எனக்கு தெரியவில்லை. என்ன அர்த்தத்தில் தெரிவித்தார் என்பதை அவரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். திருந்தி வந்தால் பரதனாக ஏற்றுக்கொள்வோம் என்று நான் முன்பே கூறினேன் அதற்கும், இதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என கூறினார் டிடிவி தினகரன். ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பது தேவையில்லாத செயல், இதனை தொடர்ந்து நடத்துவது தான் பெருந்தன்மையான செயலாக இருக்கும்.

ஆனாலும் அந்த பெருந்தன்மையான செயலை திமுகவிடம் நாம் எதிர்பார்க்க இயலாது சசிகலா தொண்டர்களை நிச்சயமாக சந்திப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அவருடைய திட்டம் தொடர்பாக அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று விரக்தியுடன் பதில் தெரிவித்தார் இதன் காரணமாக? டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்டோருக்கு இடையே மோதல் போக்கு தொடர்கிறது என்பதே தெரிய வந்திருக்கிறது.

விஜயகாந்துடன் பிரேமலதா துபாய்க்கு செல்லாததன் உண்மையான காரணம் வெளியானது! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

0

விஜயகாந்தின் சிகிச்சைக்காக துபாய் செல்வதற்கு பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை வழங்குவதற்கு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி சிகிச்சை பெறுவதற்காக துபாய் சென்றார். சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்தை அவருடைய உதவியாளர்கள் வீல்சேரில் வைத்து மிக வேகமாக தள்ளிக்கொண்டே போகும் ஒரு காணொளி வைரல் ஆனது. அவருடன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் மட்டுமே சென்றார். மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவருடன் செல்லவில்லை, இது குறித்து பல யூகங்கள் எழுந்தன இந்த சூழ்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் துபாய் சொல்லாமல் இருந்ததற்கு அவருடைய பாஸ்போர்ட் தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் மீது திருநெல்வேலி காவல்துறையினர் கடந்த 2017ஆம் வருடம் தொடர்ந்த குற்ற வழக்கு மறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து பாஸ்போர்ட் அதிகாரி அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு திரும்ப பெற்றுக்கொண்டார். இதனை எதிர்த்து பிரேமலதா சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த சமயத்தில் பிரேமலதா சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நெல்லை காவல்துறையினர் தொடரப்பட்ட குற்ற வழக்கு குறித்து நீதிமன்றத்திலிருந்து எந்தவிதமான சம்மனும் அனுப்பப்படவில்லை. இந்த வழக்கு குறித்த எந்த தகவலையும் நாங்கள் மறக்கவில்லை, மனுதாரர் தன்னுடைய கணவர் விஜயகாந்தின் சிகிச்சையின் போது உடனிருந்து உதவி புரிய வேண்டி இருப்பதால் அவருடைய பாஸ்போர்ட்டை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்று வாதிட்டு இருக்கிறார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார் இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.