Tuesday, July 29, 2025
Home Blog Page 4536

போலீஸ் பணிக்கு திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்!

ஒடிஷா மாநிலத்தில் மொத்தம் 721 காலிப்பணியிடங்கள் உள்ளன. 477 சப்-இன்ஸ்பெக்டர் போஸ்டகளும் 244 கான்ஸ்டபிள் போஸ்ட்களும் உள்ளன.

ஒடிசா மாநிலத்தில் உள்ள காவல்துறை இப்பொழுது திருநங்கைகளையும் பணியமர்த்தும் பணிகளைத் தீவிரமாக செய்து வருகிறது. அதேபோல் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கு திருநங்கைகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறோம் என்று சொல்லியுள்ளது.

ஆன்லைன் மூலம் திருநங்கைகளும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி ஆன்-லைன் தளம் திறந்து ஜூலை 15ஆம் தேதி முடிவடையும் என்று குறிப்பிட்டுள்ளது.

மாநில மக்களுக்கு சேவை செய்ய கான்ஸ்டபிள் மற்றும் S.Iகளை ஒடிசா காவல்துறை பகுதியில் சேர தகுதியான பெண்கள் மற்றும் ஆண்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் முதன்முறையாக திருநங்கைகள் பிரிவை சேர்ந்தவர்களும் இந்த இரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என மாநில இயக்குனர் ஜெனரல் அபய் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுகுறித்து அபய் கூறியதாவது, S.I பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு முக்கிய போலீஸ் பதவிக்காக செய்யப்படும் என்றும் கான்ஸ்டபிள் பதவி ஒரு தொழில்நுட்ப துறை சம்பந்தமாக செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளி திருநங்கைகள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் அல்ல என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி, சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு குறைந்தபட்ச தகுதி பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கான்ஸ்டபிளுக்கு பிளஸ் டூ உடன் டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்க வேண்டும்.
கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் உடல் மற்றும் செயல்திறன் சோதனைகளும் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒடிசா காவல்துறையினரின் இந்த முடிவை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர்.

முதன்முறையாக மாநிலத்தில் அரசு வேலைகளில் திருநங்கைகளிடம் இருந்து விண்ணப்பம் கோரி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநங்கைகளின் நம்பிக்கையை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் சமூகத்தின் மீது அவர்களின் பார்வை மாற்றும் வகையில் இது அமையும் என்று மகாசங்கின் நிறுவனர் தலைவர் பிரதாப் குமார் கூறினார்.

வைரல் வீடியோ: தனது மகளின் குதிரைக்கு இணையாக ஓடும் தல தோனி!

0

கிரிக்கெட் வீரர் மற்றும் தல என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்எஸ் தோனி அவர்களின் மனைவி சாக்ஷி சிங் தோனி ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மகள் ஷீவாவின் குதிரை சம்பந்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து கொண்டார். அது பகிரப்பட்டதில் இருந்து ஏராளமான லைக்குகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இந்த வீடியோ தான். அந்த வீடியோ நிச்சயமாக உங்கள் மனதையும் வெல்லும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

சாக்ஷி சிங் தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர் எழுதிய கேப்ஷன் Stronger Faster! என எழுதியுள்ளார். மேலும் #பிளே டைம் # ஷெட் லேண்ட் போனி # ரேசிங் என்ற ஹேஷ்டேகுளையும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ ஸ்லோ மோஷனில் உள்ளது.

எம்எஸ் தோனி அவரது வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடுவது வழக்கமே. இந்த வீடியோவில் ஒரு சிறிய வெள்ளை குதிரையுடன் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ஒட்டபந்தயம் செல்வதுபோல் வீடியோ ஸ்லோ மோஷனில் அமைந்துள்ளது.

அந்த வீடியோ உங்களுக்காக!

https://www.instagram.com/p/CQBYaUqnx49/?utm_source=ig_web_copy_link

கொரோனாவின் தொடர் தாக்கத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்த நபர்! அதிர்ச்சியான குடும்பத்தினர்!

0

கொரோனாவின் தொடர் தாக்கத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்த நபர்! அதிர்ச்சியான குடும்பத்தினர்!

எப்படியெல்லாம் உயிர் போகிறது பாருங்கள். கொரோனா வந்ததை தொடர்ந்து அவர் உடலில் பல நோய்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியை பெரும் பரபரப்பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பழைய போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 67). அவருடைய மனைவி பாஞ்சாலியும், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்கள்.

ஜெயக்குமார் தற்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு, இந்திராநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியிலேயே சமையல் எண்ணெய் கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு் சிகிச்சை பெற்று வந்தார். இதில் குணமடைந்ததை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் ஜெயக்குமாருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயக்குமார் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வீட்டின் குளியல் அறைக்கு சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு்க்கொண்டார். பின்னர் அவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூக்கில் அடிக்கும் கொரோனா ஸ்பிரே! அனைவரின் கவனத்தை ஈர்த்த சீனா!

0

உலகம் முழுவதும் கொரோணா பரவி பல்வேறு தாக்குதல்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் மூலம்தான் கொரோனா வந்தது இது இயற்கை அல்ல, செயற்கையே என்று நிரூபிக்க பல்வேறு தரப்புகள் சொல்லிக் கொண்டிருந்தாலும், அதற்கான உறுதியான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் திணறி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு நாடுகள் பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை தங்களது குடிமக்களுக்கு தந்து வருகின்றன. தடுப்பு மருந்துகள் தரத்தை உயர்த்தவும் கொரோனாவை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்துடன் தான் ஆராய்ச்சிகள் மேலும் நடந்து வருகின்றன.

அமெரிக்கா கண்டுபிடித்த தடுப்பு மருந்து ஆன பைசர்-பயன்டெக் தடுப்பு மருந்து முதல் ரஷ்யா தடுப்பு மருந்து ஸ்புட்னிக் 5 வரை அனைத்தும் உருமாறி வரும் கொரோனா வைரஸை சமாளிக்க ஏதுவாக உள்ளன.

இந்நிலையில் சீனா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது மூக்கு மற்றும் வாயின் வழியே கொரோனா பரவுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சீனா நாம் மூக்கில் உள்ள நாசித்துவாரத்தில் அடிக்கும் ஸ்பிரே வடிவில் ஒரு தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது. இது ஒரு திரவ நிலை தடுப்பு மருந்து ஆகும்.

வலி நிவாரணிக்கு நாம் அடிக்கும் ஸ்பிரே போல நாசித்துவாரத்தில் இதை நாம் அனைவரும் அடித்துக் கொள்ளலாம் என்று சொல்லியுள்ளது. இந்த திரவ நிலை தடுப்பு மருந்தை நாசிகளில் அடித்துக் கொண்டு அதனை சுவாசிக்கும் பொழுது நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸ் தாக்கத்தை நுரையீரலிலிருந்து குறைகிறது என்று சொல்லியுள்ளது.

எட்டரை கோடி தடுப்பு மருந்துகள் இதுவரை சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் விற்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு ஸ்ப்ரே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த திரவநிலை தடுப்பு மருந்து சோதனை கட்டத்திலேயே உள்ளது. இது உண்மையிலேயே நல்ல பலனை தருகிறது என்றால் பொது மக்களுக்கு அளிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.

லபக்குன்னு திமிங்கம் வாய்க்குள்ள போயி குபுக்குன்னு வெளிய வந்த மனிதர்!

0

திமிங்கலத்தின் வாய்க்குள் போய் வாழ முடியுமென எத்தனையோ கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால் இந்த சம்பவம் உண்மையாகவே அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மெசச்சுசஸ்ட் கடற்கரையில்தான் இந்த அதிர்ச்சியான மற்றும் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் இணையதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

நாம் சின்னவயதில் கதை ஒன்று படித்து இருப்போம். அதில் திமிங்கிலத்தின் வாய்க்குள் போய் மீண்டும் உயிருடன் தப்பி வந்த கதையை படித்து இருப்போம். அதே கதை தான் உண்மையாக நடந்து உள்ளது.

மைக்கேல் பக்காடு என்ற ஒரு மீனவர் கடலில் உள்ள லாப்ஸ்டர் அதாவது பெரிய வகை இறால் லாப்ஸ்டர்களை பிடிப்பதற்காக கடலுக்குள் சென்று உள்ளார். 35 அடி ஆழத்திற்கு சென்று லாப்ஸ்டரை தேடிக்கொண்டிருந்த மைக்கேலை ஹம்பக் என்ற வகை கொண்ட திமிங்கலம் எதிர்பாராத விதமாக மைக்கேலை முழுங்கி உள்ளது.

சுமார் 30 வினாடி உள்ளே என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்தாராம் மைக்கேல். திமிங்கிலம் உடனே என்ன நினைத்ததோ தெரியவில்லை நீர்ப்பரப்பின் மேலே வந்து அவரை காரித்துப்பி விட்டது.

துப்பிய வேகத்தில் நீரின் மேற்பரப்பில் வந்த மைக்கேல் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு எவ்விதமான எலும்பு முறிவு அல்லது பலத்த காயங்கள் ஏற்பட வில்லை. சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்பொழுது அவர் நலமுடனும் இருக்கிறார்.

இதுகுறித்து மெசச்சுசஸ்ட் திமிங்கிலம் நிபுணர்கள் கூறியது, திமிங்கலம் எப்பொழுதுமே வாயைத் திறந்துகொண்டு நேர்வாக்கில் வரும், கூட்டம் கூட்டமாக உள்ள சிறிய மீன்களை லபக் என்று முழங்குவதற்காக அது நேர்கோட்டில் வரும் பொழுதுதான் மைக்கேல் சிக்கி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். அவர் இன்னும் உயிர் வாழ வேண்டுமென்று நினைத்ததோ என தெரியவில்லை திமிங்கலம் அவரை காரித்துப்பி விட்டது.

இதுகுறித்து மைக்கேல் கூறியதாவது, நான் திடீரென்று ஒரு பெரிய திண்ணையின் மேல் இருப்பதாக உணர்ந்தேன். அது முற்றிலும் கருப்பு பகுதி என்று எனக்கு தெரியும். நான் நகர்கிறேன் என்று என்னால் உணரமுடிந்தது. திமிங்கலம் அதன் வாயில் உள்ள தசைகளுடன் அழுத்துவதை என்னால் உணர முடிந்தது. நான் அப்பொழுது சூரிய ஒளியை கண்டேன். அந்த திமிங்கலம் தலையை பக்கவாட்டாக வீச தொடங்கியது. அடுத்த நிமிஷம் நான் தண்ணீரில் இருப்பதை அறிந்தேன் என்று மைக்கேல் பேகர்ட் கூறினார்.30 – 40 வினாடிகள் உள்ளே இருந்து இருப்பேன் என்று அவர் கூறினார்.

இச்செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை!

0

ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை!

காலம் எங்குதான் போகிறது? யாரைதான் நம்புவது? என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளியும், ஆசிரியர்களுமே தற்போது பெற்றோர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி நிற்கின்றனர்.

சென்னையில் ஒரு பள்ளியில் ஆரம்பித்த குற்றச்சாட்டு பல பள்ளிகள், விளையாட்டு ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் என அனைத்து துறையிலும், மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்ந்து வெளி வந்து கொண்டு இருக்கிறது.

கல்வியை போதிக்கும் ஆசான்களே இப்படி இருந்தால் நாளை வளரும் தலைமுறையினர் எப்படி இருப்பர்களோ என்ற அச்சம் அனைத்து பெற்றோர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. இதேபோல் வட மாநிலத்திலும் ஒரு குழந்தைக்கு அநீதி நடந்துள்ளது.

13 வயதான சிறுமி ஒருவர், ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெர்கர் தெஹ்ஸில் உள்ள மொகம்கர் பகுதியில் வசித்து வந்துள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவிக்கு சூரஜிராம் மற்றும் சாஹிராம் என்ற ஆசிரியர்கள் இருந்தனர்.

இந்நிலையில் அந்த மாணவிக்கு பரிட்சையில் அதிக மதிப்பெண் போடுவதாக கூறி, அந்த மாணவியை ஆசிரியர் சூரஜிராம் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் பதறி போன அந்த மாணவி கத்தி சத்தம் போட்டதும் அந்த ஆசிரியர் அந்த மாணவியிடம் சத்தம் போட்டால் இதே வகுப்பில் தோல்வியடைய செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்த அந்த மாணவியை அந்த ஆசிரியர் பலமுறை தொடர்ந்து  பலாத்காரம் செய்து அந்த குழந்தை கர்ப்பமாக்கியுள்ளார். பின்னர் அந்த பெண் வயிற்று வலியால் துடித்த போது அந்த சிறுமியின் பெற்றோர் அந்த மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியிடம் நடந்ததை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு அந்த ஆசிரியர் மீது போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அந்த ஆசிரியர் சூரஜிராம் மற்றும் உடந்தையாக இருந்த அவரது சக ஆசிரியர் சாஹிராம் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் ஆசிரியர்களை தேடி வருகின்றனர்.

இந்த 18 பொருட்களுக்கு GST- யை குறைத்த மத்திய அரசு!

0

கொரோனா காலகட்டத்தில் அனைத்து விலைவாசியும் ஏறியுள்ள நிலையில் கொரோனா சம்பந்தப்பட்ட 18 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனாவின் பராமரிப்புக்கு பல்வேறு மக்கள் நிவாரணங்களை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவின் பரிசோதனை உபகரணங்களின் ஜிஎஸ்டி விலையை குறைத்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

மாஸ்க், பிபிஇ கிட், பல்ஸ்ஆக்சிமீட்டர்கள், சானிடிசர்கள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளிட்ட கோவிட் 19 அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை நிதி அமைச்சர் ரத்து செய்தார்.

 

ரெம்டெசிவிர் மற்றும் ஹெப்பரின் போன்ற வைரஸின் மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பதாக தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டி 5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று நடந்த சேவை வரி அதாவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன. கொரோனா அத்தியாவசியமான பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்குமாறு பல்வேறு தரப்பு மக்கள் கேட்டு கொண்டதால், மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tocilizumab என்ற மருந்துக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கரும்பூஞ்சை தொற்றுக்கு மருந்தாகும் ஆம்போடெரிசின் மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை . கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவிருக்கான ஜிஎஸ்டி 5% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

வெண்டிலேட்டர் மற்றும் மாஸ்க் போன்றவற்றிக்கு ஜிஎஸ்டி 12% இல் இருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் பல்ஸ் ஆக்ஸிமீட்டருக்கான ஜிஎஸ்டி வரி 12%லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. சானிடைஸர்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% சதவீதம் என்று குறைக்கப்பட்டுள்ளது.

 

 

 

ஒன்றாக மது அருந்திய நிலையில் செல்போன் அழைப்பினால் ஏற்பட்ட விபரீதம்!

0

ஒன்றாக மது அருந்திய நிலையில் செல்போன் அழைப்பினால் ஏற்பட்ட விபரீதம்!

கணவன் மனைவிக்குள் என்ன ஒரு ஒற்றுமை, ஒன்றாக அமர்ந்து குடிக்கும் அளவுக்கு, ஆனால் என்ன செய்வது சந்தேகத்தினால் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் எதற்கு? பொறுமையாக பேசி தீர்த்தால் தீராத பிரச்சனை இருக்குமா? என்று யோசித்து பிறகு நல்ல முடிவாக எடுங்கள்.

விகாஸ் என்ற நபர், உத்தரபிரதேச மாநிலம் மீரட் அடுத்த பிரம்ஹாபுரி பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு டெல்லியைச் சேர்ந்த நேஹா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி பிரம்ஹாபுரியில் வசித்துவந்ததை அடுத்து, கணவன் மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, நேஹாவின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது.

எதிர்முனையில் பேசிய நபரிடம், மனைவி நேஹா கொஞ்சி கொஞ்சி பேசினார். இதனால், சந்தேகமடைந்த விகாஸ், போனில் பேசிய நபருடனான உறவு குறித்து கேள்வி எழுப்பியதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து, நேஹாவின் கழுத்தில் விகாஸ் குத்தினார். கூக்குரலிட்ட நேஹா சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அக்கம்பக்கத்தில் இருந்த சிலர், விகாஸின் தாய்க்கு தகவல் கொடுத்தனர். அவர், சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நேஹாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவலறிந்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட கணவர் விகாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சம்பவம் நடந்த போது, தம்பதியர் மது போதையில் இருந்தனர்.

மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது மனைவியை கத்தியால் குத்தினார். தற்போது அவரது மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார்’ என்றும் கூறினர்.

வெளவால்களினால் தான் கொரோனா! சீன ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!

0

வெளவால்களினால் தான் கொரோனா! சீன ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊஹான் நகரில் முதன்முதல் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று வரை உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவ தொடங்கிய போதே, சீனா தான் அந்த வைரஸை உருவாக்கியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. ஆனால் சீனா அதனை  தொடர்ந்து மறுத்து வருகிறது.

கொரோனாவின் தோற்றம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் வெளவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸ்களைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர். இதில் ஒன்று மரபணு ரீதியாக தற்போது உள்ள கோவிட் -19 வைரஸுக்கு மிக நெருக்கமானதாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தின் ஷாண்டோங் பல்கலைக்கழகத்தின் வைஃபெங் ஷி மற்றும் அவரது சகாக்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர்.

வெளவால்களில் எத்தனை கொரோனா வைரஸ்கள் உள்ளன, எத்தனை வைரஸ்களுக்கு மக்களுக்கு பரவக்கூடிய ஆற்றல் உள்ளது என்பதை அவர்களின் ஆய்வு காட்டுகிறது. ஆராய்ச்சியாளர்கள் மே,2019 மற்றும் நவம்பர்,2020 க்கு இடையில் சிறிய, காடுகளில் வசிக்கும் வௌவால்களிடமிருந்து, சிறுநீர், மலம் மற்றும் வெளவால்களின் வாயில் உள்ள சளி மாதிரிகளையும் பரிசோதித்தனர்.

வெவ்வேறு வௌவால் இனங்களில் இருந்து 24 நாவல் கொரோனா வைரஸ் மரபணுக்களை இந்த குழு ஆய்வு செய்தது. இவற்றில், ரைனோலோபஸ் புசிலஸ் (Rhinolophus pusillus) எனப்படும் வௌவால் இனத்திலிருந்து எடுக்கப்பட்ட RpYN06 என்ற வைரஸ் மாதிரி, தற்போதைய தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸுடன் மரபணு ரீதியாக மிகவும் ஒத்ததாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும், ஸ்பைக் புரதத்தில் மரபணு வேறுபாடுகள் இருந்தன என்றும், உயிரணுக்களுடன் இணைக்கும்போது வைரஸ் பயன்படுத்தும் குமிழ் போன்ற அமைப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கொரோனாவின் தோற்றம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராயும்போது, ​​பெரும்பாலும் ஒரு வௌவால் தான் ஆதாரமாகத் தெரிகிறது. அதாவது வௌவால்கள் மூலமே கொரோனா வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். வௌவால்கள் மற்றும் மனிதர்களைத் தவிர, பன்றிகள், கால்நடைகள், எலிகள், பூனைகள், நாய்கள், கோழிகள், மான் உள்ளிட்ட பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளை கொரோனா வைரஸ்கள் பாதிக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்!

0

கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்!

கடந்த ஒன்றரை வருடமாகவே நாடே கோரோனாவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு உள்ளது. அந்த வைரசிடம் இருந்து மக்களும், அரசும் என்னதான் முயற்சி செய்தாலும் வைரஸ் என்னமோ நம்மை விட்ட பாடில்லை.

தற்போது அவசர கால நடவடிக்கையாக நம்மை வைத்து தடுப்பூசி என்கிற பேரில் மருந்து தயாரிப்பாளர்கள் வளர்ந்து கொண்டு உள்ளனர். எனவே நம்மை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடும், நம்பிக்கையோடும் இருங்கள் வெல்லலாம் கோரோனாவை.

வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடம் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே மூடநம்பிக்கைகளும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோயம்புத்தூரில் கடந்த மாதம் கொரோனா தேவி  என்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.

1.5 அடி உயரம் கொண்ட இந்த சிலை காமாட்சிபுரி ஆதினம் சார்பில் அமைக்கப்பட்டது. கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொரோனா தேவி  சிலைக்கு தினசரி பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூரில் கோரோனா தேவி  சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக உத்தரபிரதேச மாநிலத்திலும் கோரோனா மாதா என்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சுல்லாப்பூர் கிராமத்தில் கொரோனா மாதா  என்ற பெயரில் சிலை ஒன்றை அக்கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைத்துள்ளனர்.

கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  அந்த கொரோனா மாதா  முகக்கவசம் அணிந்திருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா மாதா சிலைக்கு புனித நீர் தெளித்தும், மலர்களை சூடியும் கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

எப்படியோ கொரோனா குறைந்தால் சரி என்றுதான் அனைவரும் எதிர்பார்க்கிறோம். கொரோனா தேவியோ அல்லது கொரோனா மாதாவோ நோய் தொற்று குறைந்து அனைவரும் நலமுடன் இருந்தால் சரிதான்.