Monday, July 28, 2025
Home Blog Page 4541

42 வயதில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நடிகர்! பரபரப்பில் கோலிவுட்!

0

சிகிச்சைகள் இதுவரை திருமணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த பிரேம்ஜி அமரன் 42 வயதில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பது அவருடைய குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட செய்திருக்கிறதாம் ஒருவழியாக இப்போதாவது புத்தி வந்ததே என்று தெரிவித்து வருகிறார்கள். அவருடைய குடும்பத்தார்.

42 வயதான நடிகர் பிரேம்ஜி அமரன் இன்று வரையில் இளம் துடிப்புடன் நண்பர்களுடன் ஜாலியாக இருந்து வருகின்றார். என்று சொல்லப்படுகிறது திருமணத்தை பற்றி கேள்வி எழுப்பும் போதெல்லாம் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்து இருந்தார். அவர் சமீபத்தில் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்து விட்டதாக அவருடைய வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்திருக்கின்றன.

இதற்கு காரணமாக கற்பிக்கப்படுவது மறுமையில் அவருடைய தாயார் இறந்ததுதான் என்று தெரிவிக்கிறார்கள். பிரேம்ஜி அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது அவருடைய தாயார் தான் அவர் சமீபத்தில் இறந்தது எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியதாக தெரிகிறது. பிரேம்ஜி அவர்களின் தாயாரின் கடைசி ஆசை அவருக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது தான் என்று சொல்கிறார்கள்.

அதோடு பிரேம்ஜி அமரன் நெருங்கிய வட்டாரங்களில் பெண் தேடி வருவதாக சொல்கிறார்கள். திரைப்படங்களில் சினிமா நிகழ்ச்சிகளிலும் அந்த பெண்ணை பார்த்து இருக்கலாம் என்றும், ஆனால் எல்லாம் முடிவான உடன் அவரைப் பற்றிய தகவலை வெளியிடுவோம் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

0

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் எந்த ஒரு மதிப்பெண்ணில் குறிப்பிடாமல் இருக்கும் என்றும் தேர்ச்சி என்ற குறிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இவை உண்மையென்றால் அரசு முடிவு மிகவும் தவறானது என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் அன்புமணி இராமதாசு.

மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை என்றால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு அதன் பிறகு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியாக கொண்ட பணிகளுக்கு செல்வதிலும் மேல்நிலை வகுப்புகளில் சேர்ந்து கொள்வதிலும் சிக்கல் உண்டாகும் என்று தெரிவித்திருக்கின்றார் மருத்துவர் அன்புமணி.

நோய் தொற்று காரணமாக, தேர்வுகள் இரத்து செய்யப்பட்ட சென்ற வருடம் கூட சான்றிதழ்களில் மதிப்பெண்கள் வழங்கப் பட்ட சூழ்நிலையில், இந்த வருடம் மதிப்பெண்கள் வழங்கப்படாவிட்டால் அதுவே மாணவர்களையும் அவர்களின் கல்வித் திறனை கொச்சைப்படுத்தும் செயலாகும் என்று தெரிவித்திருக்கின்றார்.

2020 21 கல்லூரிகளிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்கு அரசு ஆணையிட வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்.

திமுகவிற்கு எதிராக ஹச். ராஜா போட்ட அதிரடி ட்வீட்!

0

பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த h ராஜா தன்னுடைய வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது மே மாதம் இரண்டாம் தேதி அன்று ஒரு மூட்டை சிமெண்ட் 380 இன்று 520 திமுக என்றாலே சிமெண்ட் காத்தல் கூட்டுக் கொள்ளை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. 30 தினங்களில் 140 ரூபாய் விலை ஏற்றம் இதுதான் விடியலா என்றும், ஊடகங்கள் எதற்காக விவாதம் செய்யவில்லை பொதுமக்களை கொள்ளையடிக்கும் ஆட்சிக்கு துதி பாடுவது தான் ஊடக தர்மமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவருடைய இந்த பதிவிற்கு பதில் அளித்த ஒரு நபர் சென்னை விட மும்பையில் சிமெண்ட் விலைகள் குறைவாகவே இருக்கிறது. சென்னை விடவும் மும்பையில் சிமெண்ட் தேவை அதிகரித்து இருந்தாலும் கூட அங்கே விலை குறைவாகவே இருக்கிறது. ஒரு மூட்டை சென்னையுடன் கணக்கிட்டுப் பார்த்தால் 130 ரூபாய் வரையில் குறைவாக இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கின்றார்.

இதற்கு பதில் தெரிவித்திருக்கின்ற h ராஜா ஏனென்றால் சென்னையிலிருந்து ஊழல் மற்றும் ஊழலுக்கான ஊழல் கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. கார்டெல் கமிஷன் என்பது திமுகவின் முக்கிய வேலை என்று தெரிவித்திருக்கின்றார். தற்போது இந்த வலைதள பதிவுகள் வைரலாகி வருகிறது.

கடலுக்கு சளி பிடித்துள்ள சம்பவம்! மனிதருக்கு ஆபத்தா?

0

மனிதர்களுக்கு சளி பிடிப்பது கேள்விபட்டிருப்போம். ஆனால் இந்த பருவ நிலை மாற்றத்தால் துருக்கியில் உள்ள ஒரு கடலுக்கு சளி பிடித்திருக்கிறது. இந்த சம்பவம் அங்குள்ள மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது.

இதற்கு முன்னர் இதே மாதிரி ஏற்பட்டது கிடையாது. இது வியப்படைய வேண்டிய ஒன்றல்ல. வேதனை அடைய வைக்கும் ஒரு விஷயம் என்ற விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

கடலும் மனிதனும் ஒன்றுதான், மனிதருக்கு உடம்பில் வெப்பநிலை மாற்றம் ஆனால் சளி ஏற்படுவது இயல்பே. இது உடம்பில் உடல் சூடு அதிகரித்து இருப்பதற்கு ஒரு அறிகுறி என்றே கருதப்படுகிறது. நமக்குத் தேவையான ஆற்றலை உடலின் வெப்பம் சீராக அளிக்கிறது. ஆனால் அது அளவுக்கு மீறினால் நஞ்சு என்கிற வகையில்தான் நமக்கு சளி பிடித்து எச்சரிக்கையை காண்பிக்கிறது. ஆனால் இதற்கும் கடலுக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்.

ஆம் சம்பந்தம் உள்ளது. நமது பூமி 71% கடற்பரப்பு களால் ஆனது. நான்கில் மூன்று பங்கு நீரை உடையது. இப்பொழுது புவி வெப்பமடைவதால் பெருங்கடலில் உள்ள நீர் சூடாகி கடலில் உள்ள பாசி போன்ற நுண் தாவரங்கள் அதிகமாக ஊட்டம் பெறுவதால் கடலுக்கு சளி ஏற்படுகிறது.

இந்த கடல் சளி பச்சை மற்றும் சாம்பல் வண்ண முடைய கோழை போன்ற கழிவுப் பொருட்களால் கடல் முழுவதும் பெருகி உடலின் மேற்புறத்தை பரப்பி விடுகிறது. அதேபோல் கடலின் அடிப் பகுதியையும் பல கிலோ மீட்டர்கள் வரை அடர்த்தியாக வளரும் திறன் கொண்டது.

இதனால் கடலில் உள்ள உயிரினங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும் என்று தெரிவிக்கிறார்கள். எப்படி மனிதர்களுக்கு சளி பிடிக்கும் பொழுது நாம் மூச்சு விட சிரமப்படுவோமோ, அப்போது ஆக்ஸிஜன் நமக்கு தேவைபடுகிறதோ அதே போல்தான் கடலுக்கும்.

கடலின் மேற்பரப்பில் சளி போன்ற கோழைப் பரவி அடியிலும் பல கிலோமீட்டர்கள் பரவி வருவதால் கடலில் உள்ள மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் ஆக்சிஜன் இன்றி செத்து மடிகின்றன.

இதனால் அங்கு வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதேபோல் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இது ஒரு அரிதான நிகழ்வு எனினும் நல்ல நிகழ்வு என்று சொல்ல முடியாது. கருங்கடலும், ஏசியன் கடலையும் இணைக்கும் மர்மரா பகுதியில் தான் இந்த தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது உலகம் அழிந்து வருவதற்கான அறிகுறி என்றே கூறலாம்.

கடலில் அதிக அளவில் கலக்கப்படும் கழிவுநீர் மற்றும் மாசுபாடுகளால் கால வெப்பநிலையும் கைகோர்த்து இந்த கடல் சளி உருவாகி உள்ளது. இது பரவினால் என்ன ஆகும் என்று தெரியவில்லை என்று மக்கள் பயத்துடன் காணப்படுகிறார்கள்.

 

திமிங்கலத்தின் வாந்தி இவ்வளவு விலையா? என்ன ஒரு அதிசயம்!

திமிங்கலத்தின் வாந்தி இவ்வளவு விலையா? என்ன ஒரு அதிசயம்!

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளதால், அதில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இவ்வாறு போதைப்பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் விசாரித்த போது, கே.ஜி.ஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோசுக்கு ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. அதாவது போதைப்பொருள் போன்ற ஒரு மர்ம பொருளை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மர்ம பொருளை விற்க முயன்ற கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, கே.ஜி.ஹள்ளி போலீசார், திறமையாக செயல்பட்டு மர்ம பொருளை விற்க முயன்றதாக 4 பேரை கைது செய்தார்கள்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் இவ்வாறு கூறினார்.

அவர்கள் மாகடி ரோடுவை சேர்ந்த சையத் நியாஜில் பாஷா (வயது 54), பேலஸ் குட்டதஹள்ளியை சேர்ந்த சலீம் பாஷா (44), நாசிர் பாஷா (34), ஜே.பி.நகரை சேர்ந்த ரபிவுல்லா ஷெரீப் (45) என்று தெரிந்தது.

இவர்களில் சையத் நியாஜில் பாஷாவிடம் இருந்து ஒரு மர்ம பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. அது குறித்து ஆய்வு செய்ய போது, திமிங்கல வாந்தி என்று தெரிந்தது. இந்த திமிங்கல வாந்தி அபூர்வமாக கிடைக்க கூடியதாகும். மருந்து பொருட்கள், வாசனை திரவியங்கள் தயாரிக்க திமிங்கல வாந்தி பெரிதும் பயன்படுகிறது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் திமிங்கல வாந்திக்கு கடும் கிராக்கி உள்ளது. ஒரு கிலோ திமிங்கல வாந்தி ரூ.1½ கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கைதான 4 பேரிடம் இருந்து 6 கிலோ 700 கிராம் எடை கொண்ட திமிங்கல வாந்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திமிங்கல வாந்தியை விற்பனை செய்வது சட்டவிரோதமாகும். கோலார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த திமிங்கல வாந்தி கிடைத்திருந்தது. அவருக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டதால் 6 கிலோ 700 கிராம் திமிங்கல வாந்தியை சுமார் ரூ.10 லட்சத்திற்கு மட்டுமே  சையத் நியாஜில் பாஷாவிடம் விற்று இருந்தார்.

அதனை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற போது 4 பேரும் சிக்கி இருந்தார்கள். கைதான 4 பேர் மீதும் கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை திறமையாக செயல்பட்டு பிடித்த போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறினார்.

பேட்டியின் போது கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உடன் இருந்தார்கள்.

உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி! கன மழை பெய்ய வாய்ப்பு!

0

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற ஒரு மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், வடமேற்கு மற்றும் அதனை உறுதி இருக்கின்ற வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து ஒடிசா அருகில் கரையை கடக்க இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியில் தாக்கத்தால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை இருந்தாலும் வெப்பச்சலனம் காரணமாக, மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக, வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உதவிபுரியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

திறக்கப்படும் டாஸ்மாக்! மகிழ்ச்சியில் குடிமகன்கள்!

0

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நோய் தொற்று பாதிப்பு பரவிவருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையின் காரணமாக, இந்த நோய் தொற்றிக் முதல் அலை இந்தியாவில் முடிவுக்கு வந்தது. என சற்று நிம்மதி அடைந்த சமயத்தில் மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது இந்த நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்சமயம் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை நோய்த்தொற்றின் முதல் அறையை விடவும் மிக மோசமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தியது. இதனை தொடர்ந்து ஜூன் மாதம் 7ஆம் தேதி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூன் மாதம் 7ஆம் தேதி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஊரடங்கு போடப்பட்டு அதன் பலனாக நோய் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக சொல்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், ஜூன் மாதம் 14 ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருக்கின்றது. இந்தநிலையில் ஊரடங்கை இன்னும் நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பு நாளையதினம் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நோய்த்தொற்று பரவல் குறைவாக இருக்கின்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் போன்றவற்றை திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்படுகிறதா? ஊரடங்கு தீவிர ஆலோசனையில் முதலமைச்சர்!

0

தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த மாதம் பத்தாம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு ஜூன் மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் சற்று குறைய தொடங்கி இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சிலர் தளர்வு உடன் கூடிய ஊரடங்கு ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கின்ற சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்குபெற்ற உயரதிகாரிகள் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைவாக இருக்கின்ற 27 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில தளர்வுகள் வழங்கி ஜூன் மாதம் 21ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு நோய்த்தொற்று பரவல் குறைவாக இருக்கின்ற மாவட்டங்களில் இருக்கின்ற மதுபானக்கடைகள் டோக்கன் அடிப்படையில் திறக்கலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை இன்று முதலமைச்சர் வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.

ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாத விசித்திரமான 10 வருட காதல் கதை!

0

ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாத விசித்திரமான 10 வருட காதல் கதை!

தற்போதைய காலத்தில் காதலர்கள் வீட்டிற்க்கு தெரியமால் எது ஏதோ செய்கிறார்கள். ஆனால் இந்த காதல் ஜோடியோ ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து இருக்கின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மான் ( வயது 34 ) இவர் வீட்டு அருகே இருந்த பெண் சாஜிதா( வயது 28)  கடந்த 10 வருடங்களுக்கு முன் சாஜிதா  மாயமாகி உள்ளார்.அப்போது அவருக்கு வயது 18.  இது குறித்து சாஜிதா பெற்றோர் 2010  ஆம் ஆண்டில் நெம்மாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது  ரஹ்மான் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் சாஜிதா குறித்து விசாரணை நடத்தினர் அப்போது சாஜிதா குறித்து தெரியவில்லை என கூறி உள்ளனர்.

இந்த நிலையில் சாஜிதாவை  ரஹ்மான்  கடந்த 10 ஆண்டுகளாக தனது சிறிய வீட்டில் மறைத்து வைத்து இருந்தது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

10 ஆண்டுகளாக  ஒரு அறையில் வைத்து பாதுகாத்து சாஜிதாவுக்கு உணவு வழங்கி உள்ளார்.சிறிய அறையில் ஒரு ஜன்னல் இருந்தது, தேவைப்படும்போது  கம்பிகளை அகற்றி வெளியே வரலாம். சஜிதா கழிப்பறையைப் பயன்படுத்த இரவில் மட்டுமே வெளியே செல்வார்; அவர் கம்பிகளை அகற்றிவிட்டு ஜன்னலுக்கு வெளியே குதித்து வீட்டிற்கு வெளியே குளியலறைக்கு செல்வார். அவர் நோய்வாய்ப்பட்டால், ரஹ்மான் மருந்துகளை கொண்டு வருவார். அறைக்குள் சிறிய டிவி ஒன்றையும் வைத்து இருந்து உள்ளார்.

ரஹ்மான், ஒரு எலக்ட்ரீசன்  தனது அறைக்கு ஒரு சிறப்பு பூட்டு அமைப்பை ஏற்பாடு செய்து இருந்தார். அவர் சில மின்சார கம்பிகளை கதவுக்கு வெளியே வைத்து, அவரது குடும்ப உறுப்பினர்களைத் தொடக்கூடாது என்று கூறி இருந்தார். அவரது குடும்பத்தினர் அவரது ரகசியம் மற்றும் விசித்திரமான நடத்தையால் அவருக்கு  மனநல பிரச்சினைகள் இருக்கலாம் என எண்ணினர்.

கொரோனா ஊரடங்கால்  ரஹ்மான் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதன் விளைவாக, அவர் வீட்டுக்கு பணம் கொடுக்க முடியவில்லை, இது 2021 மார்ச்சில் அவரை விட்டு வெளியேற வழிவகுத்தது. மார்ச் மாதத்தில், அவர்கள்  வீட்டை விட்டு வெளியேறி, பாலக்காட்டில் உள்ள விதானசேரி கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்து உள்ளனர்.

இந்த நிலையில் ​​ரஹ்மான் குடும்பத்தினர் ரஹ்மானை காணவில்லை என போலீசில்  புகார் அளித்தனர். ஆனால் ஜூன் 8 ஆம் தேதி, ரஹ்மானின் சகோதரர் அவரை நென்மாரா அருகே பார்த்து உள்ளார். உடனடியாக போலீஸ்  உதவியுடன் ரஹ்மானை சந்தித்து உள்ளார். அப்போதுதான் இந்த ஜோடியின் அதிர்ச்சி கதை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

போலீசார் இரண்டுபேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்  அவர்கள் ஒன்றாக வாழ முடிவு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து அந்த பெண் அந்த நபருடன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இது பற்றி ரஹ்மான் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் சாஜிதா  என்னிடம் வந்தார். அவரால் இனிமேல் தன் வீட்டில் தங்க முடியாது என கூறினார்.  எனக்கும் வேறு வழியில்லை, அதனால் நான் என்னுடன் வரும்படி அவரிடம் கூறினேன். யாருக்கும் தெரியாமல் என் வீட்டில் அடைக்கலம் தந்தேன். நான் கொஞ்சம் பணம் சேமித்து சாஜிதாவுடன்  வேறு எங்காவது சென்று வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பணம் கிடைக்கவில்லை.அதனால் அவரை 10 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டி இருந்தது எனவும் கூறினார்.

சாஜிதா இது பற்றி கூறுகையில், அவர் தனக்கு கிடைத்த உணவில் பாதியை எனக்குக் கொடுத்தார். அவர் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் ஒரு அறையில் தங்குவது கடினம். பகலில் நான் ஹெட்செட் பயன்படுத்தி டிவி பார்த்து அறையில் சுற்றிக்கொண்டிருந்தேன்.யாரும் இல்லாதபோது, ​​நான் சில நேரங்களில் அறையிலிருந்து வெளியே வருவேன். இரவில், நான் வெளியே சென்று வந்து கொண்டிருந்தேன், ஆனால் பகல் நேரத்தில் நடமாட மாட்டேன். தலைவலிகளைத் தவிர நான் நோய்வாய்ப்படவில்லை.இனி மறைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.

இந்த விசித்திரமான கதையைப் பற்றி பதிலளிக்கப்படாத பல கேள்விகள் இருந்தாலும், இவ்வளவு சிறிய வீட்டில்  சஜிதா இருப்பதை குடும்பம் எப்படி அறிந்திருக்கவில்லை என்பதிலிருந்து தொடங்கி, ரஹ்மானும் சாஜிதாவும் ஏன் வெளிப்படையாக வாழ இவ்வளவு நேரம் காத்திருந்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இருந்தாலும் ஒருவரை ஒருவர் பிரியாமல் கடைசி வரை ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை! தொழில் நிறுவனங்கள் மகிழ்ச்சி!

0

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. அதோடு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக, சிறு மற்றும் குறு அதோடு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய சங்கத்தின் பிரதிநிதிகள் காலாவதியாக இருக்கின்ற உரிமங்களை அரசு நீட்டித்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அவர்களுடைய இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் சென்ற மே மாதம் முதல் வருகிற செப்டம்பர் மாதம் வரையில் காலாவதியாக இருக்கின்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் துறை, அதோடு தொழிலாளர் பாதுகாப்பு துறை உரிமம், போன்ற எல்லா சட்டபூர்வமான உரிமம் உள்ளிட்டவணைகளுக்கு டிசம்பர் மாதம் வரையில் நீட்டிப்பு வழங்கி இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. அதோடு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளிடம் வாங்கிய வணிகப் உரிமங்கள் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையில் செல்லும் என்று தெரிவித்து இருக்கிறது அரசு.

இதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்டிருக்கின்றது. அந்த உத்தரவை உற்பத்தி வணிகம் சேவை நிறுவனங்கள் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கு தடையில்லா சான்று ஒப்புதல் வாங்கவும், உரிமம் போன்றவற்றை புதுப்பிக்கவும் வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்படி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் சேவை நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் காலாவதியாக இருக்கின்ற அனைத்து சட்டபூர்வமான உரிமைகள் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.