Sunday, July 27, 2025
Home Blog Page 4542

ஓடிவாங்க! ஓடிவாங்க! என் கையில எல்லாம் ஒட்டுது! காந்தமாக மாறிய தாத்தா பின்னணி!

0

மகாராஷ்டிராவில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு 70 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதருக்கு அவருக்கு உடல் காந்தமாக மாறி வீட்டில் உள்ள இரும்பு பொருட்கள் எல்லாம் அவர் மீது ஒட்டும் அளவிற்கு மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிராவில் உள்ள சிட்கோ அப்பகுதியில் வசித்து வரும் அரவிந்த் சோநார் என்பவர் இவருக்கு 71 வயது. இவர் கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி முதல் தவணை போட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஜூன் இரண்டாம் தேதி இரண்டாவது தவணையைப் போட்டுக் கொண்டுள்ளார்.முதல் டோஸ் தடுப்பு ஊசி அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்ட அரவிந்த், இரண்டாவது டோஸ் தனியார் மருத்துவமனையில் போட்டுக் கொண்டுள்ளார்.

 

திடீரென அவர் ஊசி போட்டுக் கொண்ட கையில் இரும்பு பொருட்கள் எல்லாம் ஒட்டுவதாக தகவல்கள் வெளியாகியது. அவரது வீட்டிலுள்ள பொருட்கள் காயின்கள் கரண்டிகள் ஸ்பூன்கள் எல்லாம் கையில் காந்தம் போல் ஒட்டி உள்ளது. இதனால் பதற்றமடைந்த அரவிந்த் சோனாரின் வீட்டார்கள் தனியார் மருத்துவமனைக்கு தகவல் சொல்லி உள்ளனர்.

 

தொடர்ந்து டாக்டர்கள் அவர் வீட்டுக்கு வந்து ஏன் எதனால் ஏற்பட்டது? என்ன காரணம் ? என்று அவரை பரிசோதித்தனர்.அரவிந்த் சோனாவின் நிலை குறித்த அதிகாரிகள் கேட்ட பொழுது டாக்டர்கள் இப்பகுதியில் உள்ள 3.5 லட்சம் பேர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இது போல் யாருக்கும் இந்த மாதிரியான ஒரு நிலை ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை, என மருத்துவர்கள் கூறினார்கள்.

 

 

இது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நாளிதழ்களுக்கு விபரத்தை சொல்லி உள்ளனர். கையில் இரும்பு பொருட்கள் ஓட்டுவது சாதாரணமான விஷயமல்ல. இதை சீக்கிரமாக கவனிக்க வேண்டும். உடம்பில் எந்த பிரச்சனை ஏற்பட்டதால் இந்த மாதிரியான காந்தம் பொருட்கள் ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது, என்று பரிசோதிக்க வேண்டும். இதற்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.

 

 

 

 

 

 

நோய்தொற்று நிவாரண நிதி! 2000 ரூபாய் இரண்டாவது தவணைக்கான டோக்கன் இன்று முதல் வினியோகம்!

0

நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் இருக்கின்ற ரேஷன் கடைகளை பார்வையிட்டு பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் வினியோகம் செய்யப்படுகிறதா என்று மாநில உளவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து இருக்கின்றார் .இதனையடுத்து ரேஷன் கடை ஊழியர்களின் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர் முதியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரத்தியேக வரிசை உண்டாக்கி தரவும் உத்தரவிட்டிருக்கிறார்.

இதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஜூன் மாதம் 11ஆம் தேதி அதாவது இன்று முதல் வரும் 14-ஆம் தேதி வரையில் நியாய விலை கடை ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் இரண்டாவது தவணை நோய்த்தொற்று நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் அமைச்சர் சக்கரபாணி.

அதோடு பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் பொருட்கள் சரியான முறையில் சென்றடைகிறதா என ஆய்வு நடத்தி வருவதாகவும், உளவுத்துறையின் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் எந்தவிதமான தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். நிவாரண தொகை முதல் தவணை வழங்கியபோது நிவாரண தொகையை பெற இயலாதவர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு முன்னரே அறிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வாகன ஓட்டிகளை கதறவிடும் பெட்ரோல் டீசல் விலை!

0

இந்தியாவை பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய் பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் இறுதி வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாறுதல் ஏதும் ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 19 காசுக்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 42 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்து இருப்பதாக தெரிகின்றது.

“யூனிபார்மை கழட்டிடுவேன்” சண்டை போட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

0

சில தினங்களுக்கு முன்பாக சென்னை காவல்துறையினரிடம் தகாத முறையில் பேசி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் பெண்ணின் முன் ஜாமின் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வழக்கறிஞரும் அந்த வழக்கறிஞரின் மகளும் காரில் ஊரடங்கிப் போனது சுற்றித் திரிந்ததால் காவல்துறையினர் மடக்கி அபராதம் விதித்த பொழுது, அந்த வழக்கறிஞரான தனுஜா ராஜா போலீசாரிடம் தகாத முறையில் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

 

இந்த சம்பவத்தை நாம் அனைவரும் வீடியோவில் பார்த்திருப்போம். அந்த வீடியோவை காவல் துறை போலீசார் ஒருவர் எடுத்துள்ளார். இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து அந்த வழக்கறிஞர் என் மீது கொலை மிரட்டல் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

 

இதனால் வழக்கறிஞரான தனுஜா ராஜா சென்னை முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் நேற்று தாக்கல் செய்தார், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் இந்த முன் ஜாமீனை தள்ளுபடி செய்தார்.

 

இது பற்றி நீதிபதி செல்வகுமார் கூறியதாவது, இந்த பெண் வழக்கறிஞர் பொது இடங்களில் போலீசாரிடம் தகாத முறையில் நடந்து கொண்டது மக்களிடம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் முன் ஜாமீன் வழங்கினால் இது ஒரு தவறான முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பலரும் இது போன்ற காரியங்களில் ஈடுபடலாம் என்று கூறி பெண் வழக்கறிஞர் தனுஷ் ராஜா மற்றும் அவரது மகளின் முன் ஜாமீனையும் தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டார்.

மக்களிடம் திருடிய போலீசார் கைது! அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

மக்களிடம் திருடிய போலீசார் கைது! அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

பொது மக்களுக்கு பிரச்சனை என்றால் போலீசிடம் போவோம். தற்போது அவர்களே குற்றவாளி எனும் பொது என்ன செய்வது. இந்த செய்தியை பார்க்கும் போது வேலியே பயிரை மேய்ந்தது போல என்பார்கள் அல்லவா அதைப்போல் உள்ளது.

பாதிகாப்புக்கு இருக்கும் இவர்களே வீடு புகுந்து திருடும் பொது திருடர்களை என்ன செய்வது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் நேற்று முன்தினம் சாராய வேட்டைக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அதையடுத்து போலீசார் அங்கிருந்த சாராய அடுப்புகளை அடித்து உடைத்தனர். மேலும் சாராய ஊறல்களையும் கீழே கொட்டி அழித்தனர்.

பின்னர் நச்சுமேடு மலைக்கிராமத்தில் உள்ள வீடுகளில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று போலீசார் சோதனையிட்டனர். அப்போது பூட்டியிருந்த சில வீடுகளின் கதவின் பூட்டு மற்றும் பூரோக்களை உடைத்து சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் 2 வீடுகளில் இருந்து ரூ.8½ லட்சம் மற்றும் 15 பவுன் நகைகளை போலீசார் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

இதனை அறிந்த மலைக்கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டு பணம், நகையை ஒப்படைக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பணமும், நகையும் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நச்சுமேடு மலைக்கிராம மக்கள் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், சாராய வேட்டைக்காக மலைப்பகுதிக்கு வந்து வீடுகளின் பூட்டு, பீரோக்களை உடைத்து நகை, பணத்தை திருடிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்பேரில் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சாராய வேட்டைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

அதன் அடிப்படையில் நச்சுமேடு மலைக்கிராமத்தில் சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் பட்டப்பகலில் பூட்டிய வீடுகளில் பீரோக்களை உடைத்து நகை, பணத்தை திருடியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் மீது 2 பிரிவுகளில் அரியூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடம் தனிஇடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாலையில் 3 போலீசாரும் கைது செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார் இளையராஜா, யுவராஜ் ஆகிய 3 பேரையும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். போலீசாரே வீடுபுகுந்து நகை, பணத்தை  திருடிய சம்பவம் வேலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் இன்று முக்கிய ஆய்வு பயணம்.

0

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சிறப்பு விமானம் திருச்சி வருகை தருகின்றார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு தர இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் கார்மூலமாக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு சென்று அங்கே கல்லணை கால்வாயில் நவீனப்படுத்தும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதை பார்வையிடும் முதலமைச்சர் இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதியில் தடையில்லாமல் செல்வதற்காக செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டு மறுபடியும் திருச்சி வருகை தருகின்றார் முதலமைச்சர். திருச்சியை அடுத்த குழுமணி அருகே உய்யக்கொண்டான் கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் வடிகால் கால்வாயின் தலைப்பு பகுதி புலிவளம் மணல் போக்கிலிருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தூரத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்துவரும் தூர்வாரும் பணிகளையும் முதலமைச்சர் பார்வையிடுகிறார் என தெரிகிறது.

அதன் பின்னர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் சிறப்பு விமானம் மூலமாக சேலத்திற்கு கிளம்புகிறார் முதலமைச்சர். இதன்காரணமாக, காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருக்கிறார்கள்.

ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மீண்டும் உருவான போஸ்டர் யுத்தம்!

0

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது. பல இடங்களில் தோல்வியை சந்தித்திருக்கிறது அந்தக் கட்சி. தென்மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வி மற்றும் டெல்டா மாவட்டங்களில் உண்டான தோல்வியும் அதோடு தலைநகர் சென்னையில் ஏற்பட்ட தோல்வியும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதிமுக ஆளுங்கட்சியாக வராவிட்டாலும் கூட பலமான எதிர்க்கட்சியாக அமர்வதற்க்கான அந்தஸ்தைப் பெற்றது. இந்தநிலையில், அடுத்தது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற விவகாரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நேரடியான மோதல் உண்டானது. அந்த சமயத்தில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு அதிக அளவில் இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப் பட்டார். ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட இருவரும் நேரடியாக சந்தித்து பேசிக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதன் பின்னரும் கூட சசிகலா உரையாடிய ஆடியோ வெளியான பின்னர் ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் சந்தித்துப் பேசும் ஒரு நிலை வந்தது.இதற்கிடையில் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் அதிமுக தலைமைக்கு எதிராக மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் சுவரொட்டி ஒன்றை வைத்திருக்கிறார்கள். அந்த சுவரொட்டியில் அதிமுக கட்சி செயல்பாடுகள் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் எந்தவிதமான அறிவுரையும் இல்லாமல் நடக்குமானால் நிச்சயமாக தலைமை கழகத்தின் முற்றுகையிடுவோம் என்று மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் அதிமுக என்ற கோட்டையின் பாதுகாவலர் ஓபிஎஸ் அவர்களே உங்கள் தலைமையில் கழகத்தை வழி நடத்துவோம் என்று அதிமுகவின் தேனி மாவட்ட மீனவர் அணி சார்பாக பேனர் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதோடு மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் இடையே சுவரொட்டி யுத்தம் நடந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த ராசிக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 11-06-2021 Today Rasi Palan 11-06-2021

0

 

இன்றைய ராசி பலன்- 11-06-2021,

நாள் : 11-06-2021,

தமிழ் மாதம்: 

 வைகாசி 28, வெள்ளிக்கிழமை

 சுப ஹோரைகள் 

காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00   

இராகு காலம்:

பகல் 10.30-12.00

எம கண்டம்: 

மதியம் 03.00-04.30,

குளிகன்: 

 காலை 07.30 -09.00,

திதி:

 பிரதமை திதி மாலை 06.31 வரை பின்பு வளர்பிறை துதியை.

நட்சத்திரம்: 

மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.30 வரை பின்பு திருவாதிரை.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக செய்யும் செயல்களில் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஒரளவு குறையும். எதிலும் நிதானம் தேவை.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே தொழில் வியாபாரத்தில் அமோகமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் பிரச்சினைகள் தீரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபசெலவுகள் ஏற்படும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட கால தாமதமாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். மனைவி வழி உறவினர்களால் நற்பலன் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும்.

க/ பெ ரணசிங்கம் படம் போல் நடந்துள்ள உண்மை சம்பவம்!

0

க/ பெ ரணசிங்க படத்தில் வரும் கதையைப் போலவே உண்மையான சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற கணவர் இறந்து, அதை அந்த நாட்டிலுள்ள கட்டுமான நிறுவனம் சொல்லாமல் மறைப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே டி ஆலங்குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ்வரன் வயது 35. இவருக்கு சவுந்தரம் என்ற மனைவி வயது 25 ஜெகதீஸ்வரன் வயது 5, யோகேஸ்வரன் வயது 3 இரண்டு மகன்களும் உள்ளனர்.

 

குடும்ப சுமை காரணமாக கடன் வாங்கி 2018 ஜூன் மாதம் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் கம்பி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜூன் 2 ஆம் தேதி கான்கிரீட் தடுப்பு சுவர் விழுந்து அவர் இறந்து உள்ளார்.

 

ராஜேஸ்வரன் இறந்ததை ராஜேஸ்வரனின் நண்பர் அவரது குடும்பத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உண்மையை சொல்லியுள்ளார். ஆனால் அந்த கட்டுமான நிறுவனம் அதை மறைத்துள்ளது.

 

இதையடுத்து இறந்த தன் கணவர் உடலையும் மீட்டு, கட்டுமான நிறுவனத்துடன் நிவாரண உதவி தொகை வாங்கித் தருமாறு தனது இரண்டு கைக் குழந்தைகளுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

 

இதுகுறித்து ராஜேஸ்வரன் மனைவி செளந்தரம் கூறியது, தனது கணவர் சவுதி சென்று மூன்று ஆண்டுகளாகிவிட்டது. ஒரு முறையாவது அவர் முகத்தை பார்க்க வேண்டும். உடலை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும் என்று கண்ணீர் மல்க அவர் கூறியது மனதை ரணமாக்கியது.

 

மேல் சட்டை இல்லாமல் கட்டு உடலை காட்டும் வருண் தவான்! சொக்கி விழும் பெண்கள்!

0

வருண் தவான் பாலிவுட் இந்திய திரைப்பட நடிகர். இவர் ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஹம்டி சர்மா கி துல்ஹனியா, மெயின் தேரா ஹீரோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வருண் தவான் சந்தேகத்திற்கிடமின்றி மிகச்சிறந்த மற்றும் அழகிய இளைஞர்களில் ஒருவர். இவர் கடின உழைப்பு மற்றும் திறமையின் மூலம் ஒரு சிறந்த நடிகராக வலம் வருகிறார்.

கடந்த ஆண்டுகளில் இவரது ரசிகர் பட்டாளம் மாபெரும் அளவில் வளர்ந்து உள்ளது என்றே கூறலாம். சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

கடந்த ஜனவரி மாதம் இவருக்கும் இவர் நெருங்கிய தோழி நட்டாஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இவரது கடினமான அர்ப்பணிப்பு வொர்க் அவுட் எல்லாமே இவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் உடலில் மேல் சட்டையில்லாமல் இவர் கொடுத்த போஸ் பெண்களை திக்குமுக்காட செய்து உள்ளது.

மேல் சட்டையில்லாமல் சிக்ஸ் பேக்குடன் மழையில் நனைந்தபடி இவர் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், மும்பையில் மழை, நான் சிறுவனாக இருக்கும் பொழுது எனக்கு மழையில் விளையாடப் பிடிக்கும், வேலை முடிந்த பிறகு மழையில் விளையாடுவது ரொம்பவே சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அவர் பதிவிட்ட புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.
https://www.instagram.com/p/CP5WQm6h2Zn/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CP5WQm6h2Zn/?utm_source=ig_web_copy_link