Saturday, July 26, 2025
Home Blog Page 4548

ஒரு பிரசவத்தில் 1 அல்லது 2 என்றால் நம்பலாம் ஆனால் இத்தனையா?  உலக சாதனை படைத்த பெண்!

0

ஒரு பிரசவத்தில் 1 அல்லது 2 என்றால் நம்பலாம் ஆனால் இத்தனையா?  உலக சாதனை படைத்த பெண்!

தற்போதுள்ள சூழ்நிலையில் நாமெல்லாம் 2 குழந்தைகளை வைத்தே பார்த்துக்கொள்ள சிரமமாக உள்ள நிலையில் நினைத்து பாருங்கள் 10 குழந்தைகள். அது கடவுள் செயல் என்றாலும் பார்த்துக்கொள்ள தனி தேம்பே வேண்டும் அல்லவா? இருந்தாலும் இந்த விசயத்தில் கூட உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்து உள்ளார்.

16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என பெரியோர் சொன்னதை போல ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றுள்ளார் என நினைத்துக் கொள்வோம்.

37 வயதான கோசியமே என்ற பெண் ஒருவர், தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதன் படி, கர்ப்பத்தின் 29ம் வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் 7 ஆண் பிள்ளைகளையும் 3 பெண் பிள்ளைகளையும் தமது மனைவி பெற்றெடுத்துள்ளார் என அவரது கணவர் டேப்ஹோ தெரிவித்துள்ளார்.

இதை குறித்து பேசிய அந்த பெண்ணின் கணவர் டேப்ஹோ, “எனது மனைவி ஏழு மாதங்கள் மற்றும் ஏழு நாட்கள் கர்ப்பமாக இருந்தார். தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்னால் இப்போது அதிகம் பேச முடியாது” என அவர் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

ஏற்கனவே 6 வயதில் இரட்டையர்களுக்கு தாயாரான கோசியமே, தமக்கு ஏற்பட்டது இயற்கையான கர்ப்பம் இது எனவும், கருவுறுதல் சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வழக்கமான மருத்துவ சோதனையின் போது ஒருமுறை தாம் 6 குழந்தைகளுக்கு தாயாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள் எனவும், அதன் பின்னர் நடந்த சோதனையில் அது 8 குழந்தைகளாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

மருத்துவர்களின் பேச்சை நம்ப முடியாமல் இருந்ததாகவும் ஆனால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் தமக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றாலும், தற்போது மிகுந்த மகிழ்ச்சி என அவரது கணவன் குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் உலக சாதனை படைத்துள்ளதாக கருதப்பட்ட நிலையில் தற்போது இவர் 10 பிள்ளைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்திய தமிழக அரசு!

0

குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு விளக்கமாக வழங்கப்படும் அளவை விடவும் ஐந்து கிலோ கூடுதலாக அரிசி வழங்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த சூழ்நிலையில், அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது..

இதில் தமிழ்நாட்டில் 2.9 கோடி அரிசி அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இதில் 18புள்ளி 64 லட்சம் அந்தியோதயா அன்னயோஜனா பிரிவிற்கு மாதா மாதம் 35 கிலோ அரிசியும் 93 லட்சம் முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு தல 55 கிலோவும், மீதம் இருக்கின்ற முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை தாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகின்றது.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தேவைக்கு ஏற்றவாறு புழுங்கலரிசி, பச்சரிசி என்று வாங்கிக்கொள்ளலாம். நோய் பரவலின் இரண்டாவது அலை காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு இதற்கு முன்னரே வழங்கப்படும் உரிமை அளவுடன் ஒரு நபருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியங்கள் போன்றவற்றை விலையில்லாமல் வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசு அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல் முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் ஒன்றிணைத்து கூடுதல் அரிசி வழங்கி வருகின்றது. உதாரணமாக இரு அலகு இருக்கின்ற ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ மூன்று அலகு இருக்கின்ற குடும்பத்திற்கு 30 கிலோ அரிசியும் வழங்கப்படும் என்ற அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது உரிமையுடன் சேர்த்து இரண்டு மடங்கு அரிசி கிடைக்கும் என்று தெரிகிறது.

மே மாதம் வழங்க வேண்டிய இந்த கூடுதல் அரிசியானது அடுத்த மாதம் அதாவது ஜூலை மாதம் வழங்கப்படும் என்று மத்திய அரசின் கூடுதல் அரிசியும் சேர்த்து குடும்ப அட்டையிலிருந்து உறுப்பினர்களுக்கு ஏற்றவாறு ஜூன் மாதத்தில் மொத்தமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விவரங்கள் நியாயவிலை கடைகளில் இருக்கின்ற விளம்பரப் பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநில முதல்வர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கும் ஸ்டாலின்! என்ன நடக்க போகிறது?

0

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது இந்த நிலையில், நாளுக்கு நாள் மக்களிடையே நோய் தோற்று குறித்த பயமும் அதிகரித்து வருகின்றது. பொருளாதார நிலையை கருத்தில் வைத்து மாநிலங்கள் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் ,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது சிறு மற்றும் குறு நிறுவனங்களின் கடன்களை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னரை நாம் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அந்த கடிதத்தில் 5 கோடி ரூபாய் வரையில் நிலுவைத் தொகை கடன் வைத்திருக்கின்ற சிறு குறு நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வார கால அவகாசம் மீண்டும் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்ததால் இலவச நோய்த்தொற்று தடுப்பூசி அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். அதேபோல இந்த விவகாரத்திலும் நாம் சிறு குறு நிறுவனங்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்

ஒரு மீனின் விலை இவ்வளவு லட்சங்களா? அப்படி என்ன அபூர்வம் இதில்!

0

ஒரு மீனின் விலை இவ்வளவு லட்சங்களா? அப்படி என்ன அபூர்வம் இதில்!

மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளதல் இந்த மீனுக்கு இவ்வளவு விலையாம். மிக அரிய வகை மீனான குரோக்கர் ரக மீன் பாகிஸ்தானியர் ஒருவரின் வலையில் சிக்கி ரூ.7.8 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மீன்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக அதிகளவு பயன் பாட்டில் உள்ளது.

குரோக்கர்ரக மீன் அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்தது. இந்த மீனில் காணப்படும் ஏர் பிளாடர் என்ற பகுதி மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது அறுவை சிகிச்சை முடிந்ததும் தையல் போடப்படும் போது பயன்படும். இதை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் பக்கவிளைவுகளின்றி காயம் குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகளின் போது இதை பயன்படுத்தினால் காயம் வெகு சுலமாக ஆறுவது மட்டுமில்லாமல் பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்குமாம். இதை பயோடெக்னாஜி இன்பர்மேஷன் ஆய்வு மையம்  தகவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக குரோக்கர்ரக மீன்களில் மஞ்சள் க்ரேக்கர் ரக மீன்களில் தான் அதிகம் மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மீன் கேன்சர் வியாதி அதிகம் பரவாமல் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மீன் மிகப்பெரிய மருந்தாக இருக்கிறது. குறிப்பாக அவர்களின் வாழ்நாளையே அதிகரிக்கும் குணம் இந்த மீனிற்கு இருப்பதாகவும் டாக்டர்கள் சொல்கின்றனர். இந்த மீன் மனிதர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் தொற்றுகளை சரி செய்யவும் பயன்படுகிறது.

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்!

0

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்!

வர வர உலகில் அனைவருக்கும் எதற்கு இவ்வளவு கோபம் வருகிறது என தெரியவில்லை. குற்ற சம்பவங்கள் நடைபெற ஒரு மனிதனுக்கு ஏற்படும் குரோத எண்ணமே காரணமாக அமைகிறது. இந்த சம்பவத்தில் கூட அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட ஆத்திரமே விபரீதபாக போய் முடிந்து விட்டது.

இதற்கு தான் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கணவன் மீதிருந்த வெறுப்பு மற்றும் கோவத்தின் வெளிப்பாடே குழந்தையை கவனிக்க பொறுமையில்லாமல் தாய் குற்றவாளி ஆகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

44 வயதான எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது 26 வயது மனைவியுடன் துபாய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவத்தன்று காலையிலும் வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் அவரது கணவர் வேலைக்கு சென்று விட்டார்.ஆனால் கணவர் மீதுள்ள ஆத்திரத்தில் வீட்டில் அந்த பெண் எரிச்சல் பட்டுக்கொண்டே வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தார்.

சலவை செய்ய வாஷிங் மெஷினில் துணிகளை போட்டுக் கொண்டிருந்தபோது, டி.வி. பார்த்துக்கொண்டிருந்த குழந்தை திடீரென அழ தொடங்கியது. இதனால் குழந்தையை அழாமல் இருக்க செய்துள்ளார். ஆனால் குழந்தை தனது அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது.

இதனால் கூடுதல் எரிச்சல் அடைந்த அந்த பெண் கணவரின் மீதுள்ள ஆத்திரத்தால் கையில் கிடைத்த டி.வி. ரிமோட்டை எடுத்து குழந்தையின் மீது ஓங்கி அடித்தார். இதில் சுருண்டு விழுந்த குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டிலிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதற்கிடையே அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த கணவர், குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில், மனைவியும் வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தப்பி சென்ற குழந்தையின் தாய் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு இந்த தொற்றா? அதிர்ச்சியில் மருத்துவமனை!

0

பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு இந்த தொற்றா? அதிர்ச்சியில் மருத்துவமனை!

கொரோனா தொற்று தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் முதல் அலையில் உயிரிழந்தவர்களை விட இரண்டாவது அலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இதனால் பெரியவர்கள் அதிகம் பாதிகப்பட்ட நிலையில், தற்போது பிறந்த குழந்தை ஒன்று கொரோனா தொற்றால் பாதிகப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாதாந்திர பரிசோதனைக்கு சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவருக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவருக்கு கடந்த  29 ம்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.தாய்க்கு கொரோன தொற்று இருந்ததால் குழந்தைக்கும் பரிசோதனை செய்தனரமுதல்நாளில் நெகட்டிவ் என்று ரிப்போர்ட் வந்துள்ள நிலையில், மீண்டும் 5 நாட்கள் கழித்து எடுத்த பரிசோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அந்தக் குழந்தை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதனையடுத்து, தங்களின் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டதால் அந்த குழந்தையின் பெற்றோர் கதறி அழுகின்றனர். இந்த சம்பவம் பார்ப்பவர்களை கண் கலங்க செய்தது.

எனவே தான் அரசு தனி நபர் இடைவெளியை கடைபிடியுங்கள், முக கவசம் அணியுங்கள் என்று சொல்கிறது. நாம் அதை காற்றில் பறக்கவிட்டு செல்வதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் தானே அனுபவிக்க வேண்டும்.

அடுத்து மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப் படுவார்கள் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பெற்றோர் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை: ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் மறுத்தால் துறைரீதியான நடவடிக்கை!

0

ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களை கொரோனா தடுப்பு பணிக்காக அழைத்தால் மறுப்பு தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கொரோனா காலகட்டத்தில் அனைத்து செவிலியர்களும் மருத்துவர்களும் தங்களது பங்கினை ஆற்றி வருகின்றனர். அதேபோல் சுகாதாரத்துறை அதற்கு ஏற்றவாறு தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

கொரோனா பணிக்காக பள்ளிக் கல்வி துறையினரையும், உயர் கல்வி துறையினரையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

 

இதனால் இவர்களுக்கு கொரோனா தொகுப்பு சேகரிப்பு பணி மற்றும் பல கொரோனா கட்டுப்பாடு மையங்களில் பணிகள் போன்றவை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

பல இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஒதுக்கும் கொரோனா பணிக்காக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் மறுப்பு தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.

 

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தகவல் வந்த நிலையில் பள்ளி ஆசிரியர்களுக்கும், கல்வி அலுவலர்களுக்கும், மீண்டும் ஒரு சுற்றறிக்கை விட்டுள்ளது.

 

அந்த அறிக்கையில், மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்பு பணிக்காக அழைப்பு விடுத்தால் கல்வியாளர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் அதனை மறுப்பு தெரிவிக்க கூடாது. அப்படி மறுப்பு தெரிவித்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது.

 

மின்னல் தாக்கி 3 பேர் பலி! கோவிலுக்கு சென்ற இடத்தில் சோகம்!

0

சாத்தூர் அருகே கோவிலுக்கு சென்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராத்தை சேர்ந்த 6 பேர், வனப்பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் பலத்த பழை பெய்தது.

இதனால், 6 பேரும் கோவில் வாசலில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டனர். இதில், சோலைராஜ் என்பவரின் மனைவி சண்முகசுந்தரவள்ளி (52), கருப்பசாமி என்பவரது மனைவி தங்க மாரியம்மன் (45), சோலையப்பன் என்பவரின் மகன் கருப்பசாமி (16) ஆகியோர் மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

2 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரித்து வருகின்றனர். சாமி கும்பிட சென்ற இடத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை!

0

சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை!

பிள்ளைகளிடம் எது பேசினாலும் இனி யோசித்து பேச வேண்டும் போல. நம் பிள்ளைகள் தானே என்று நாம் எதார்த்தமாக பேசுகிறோம். ஆனால் அவர்கள் எந்த மன நிலையில் உள்ளனர் என யோசித்து பேச வேண்டும் என்பது போல் உள்ளது இந்த செய்தி.

நம் குழந்தைகளை சிறுவயது முதலே சிறிது கண்டிப்புடனே வளர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூட கூறி வருகின்றனர். பின் எதோ கோவத்தில் நாம் பேசினால் கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள்.

ஜெயராமன்-புனிதா என்ற தம்பதி பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 21 வயதான தர்ஷினி என்ற மகள் உள்ள நிலையில், இவர் பி.ஏ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

தோட்ட வேலை செய்து வரும் இந்த தம்பதி நேற்று முன்தினம், வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பிய போது, வீட்டிலிருந்த தர்ஷினி சமையல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் தர்ஷினியை, பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்து அவர், தன்னை திட்டி விட்டார்கள் என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை ஜெயராமனும், புனிதாவும் தோட்ட வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியே இருந்த தர்ஷினி சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

சற்று நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், தர்ஷினி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், தர்ஷினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் +1 வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு! வகுப்பு தொடங்கும் தேதியும் அறிவிப்பு!

0

தமிழகத்தில் +1 வகுப்பில் கூடுதலாக மாணவர்கள் விண்ணப்பித்தால் தேர்வு வைத்து அதிக மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால், +1 வகுப்பு சேர்க்கை நடத்த பல்வேறு பள்ளிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், +1 வகுப்பு சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையைவிட கூடுதலாக 10% முதல் 15% வரை சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை கேட்டு மாணவர்கள் அதிகமானோர் விண்ணப்பித்தால், பள்ளி அளவில் தொடர்புடைய பாடங்களுக்கு தேர்வு நடத்தலாம். அந்தத் தேர்வுகள் தொடர்புடைய பாடத்தில் இருந்து 50 வினாக்கள் இருக்கலாம்.  தேர்வில் அதிக மதிப்பெண் கொண்ட மாணவர்களை அந்த பாடப்பிரிவுக்கு சேர்க்கை நடத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3வது வாரத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை தொடங்க வேண்டும். அதே நேரத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு என்ற ஒன்றுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில், கூடுதலாக மாணவர்கள் விண்ணப்பித்தால் தேர்வு வைத்து அதிக மதிப்பெண் கொண்டவர்களை தேர்வு செய்வது, நுழைவுத்தேர்வாகவேக பார்க்கப்படுகிறது.