Wednesday, July 23, 2025
Home Blog Page 4550

திருமணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அஞ்சலி!

0

அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலமாக நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நடிகை அஞ்சலி அந்த திரைப்படத்தில் அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளியிட்டதன் மூலமாக இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு முன்பு அவர் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது

இருந்தாலும் அண்மைக்காலமாக அவருக்கு எந்தவிதமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் நான் காதலித்தது உண்மைதான். ஆனாலும் என்னுடைய காதல் கைகூடவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் அவர் தன்னுடைய காதலர் யார் என்பது தொடர்பாக எந்தவிதமான தகவலையும் வெளியிடவில்லை என்று சொல்லப்படுகிறது

இந்த சூழ்நிலையில், அஞ்சலிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், தகவல் கிடைத்தது இந்த சூழ்நிலையில், தற்சமயம் நடிகை அஞ்சலிக்கு திருமணம் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்த விவகாரத்தில் அவர் நான் திரைப்பயணத்தில் கவனம் செலுத்தி வருகின்றேன் திருமணம் தொடர்பாக தற்போது எனக்கு எந்தவிதமான யோசனையும் இல்லை. நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்து அவர் தொடர்பாக வெளியான திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைக்கு செவிலியர் செய்த கொடுமை! தஞ்சையில் நடந்த அவலம்!

பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைக்கு செவிலியர் செய்த கொடுமை! தஞ்சையில் நடந்த அவலம்!

தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் பிரியதர்ஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 25-ம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை 9 மாதத்திலேயே பிறந்ததாலும் குழந்தைக்கு வயிற்று பிரச்சனை இருந்ததாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கடந்த 25-ம் தேதி முதல் குழந்தைக்கு குளூக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் குழந்தை நலமுடன் இருப்பதாக கூறிய மருத்துவர்கள் தாயை சேயையும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று தெரிவித்தனர். வீடு திரும்புவதால் குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றுமாறு செவிலியரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் செவிலியரோ கவனக்குறைவாக கையில் இருந்த ஊசிக்கு பதில்  கட்டை விரலை கத்திரிக்கோலால் வெட்டியுள்ளார்.

குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்டது குறித்து மருத்துவமனை எந்த விளக்கமும் தரவில்லை என கணேசன் புகார் தெரிவித்துள்ளார். இந்த செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் செவிலியரின் அலட்சியத்தால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற கவன குறைவான செயலால் செவிலியர்களுக்கு கிடைக்கும் நர்பெயரே போய் விடுகிறது. நாளை கட்டு பிரித்து பார்க்கலாம் என்று மட்டுமே கூறுவதாகவும், தற்போது அந்த விரலை வைத்து ஊசி குத்தி வைத்து இருப்பதாக அந்த குழந்தையின் தந்தையும், பாட்டியும் கவலை தெரிவித்து உள்ளனர்.

200 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! அந்த காலத்தில் மக்கள் இருந்த இடமே சொர்க்கம்!

200 ஆண்டுகளுக்கு முன் நமது தமிழ் நாடு எப்படி இருந்தது என்பதை விளக்கும் விதமாக சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 

காமராஜர், சிவாஜி கணேசன், கண்ணதாசன், கலைஞர், எம்ஜி ஆர், ஆகியோரின் அரியவகை புகைப்படங்கள் உள்ளன..

 

அந்த காலத்தில் சென்னை மக்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், என்பதை விளக்கும் புகைப்படமாக இது உள்ளது. வாழும் பூமி சொர்க்கம் என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கால புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது இந்த காலத்தில் நாம் ஏன் பிறக்கவில்லை என்று நினைக்கும் அளவிற்கு பொறாமையாக உள்ளது.

 

200 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோயில், மீனாட்சி அம்மன் கோயில், பழனி, திருப்பரங்குன்றம், கோயில்கள் எப்படி உள்ளது என்று புகைப்படம் விவரிக்கிறது,

 

அந்த காலத்தில் முதன் முதல் பஸ், முதல் முதலில் வந்த ரயில், அந்த காலத்தில் விற்கப்பட்ட பெட்ரோலின் விலை, கார்களின் விலை எல்லாம் நம்மை வியக்கச் செய்கிறது. விலைவாசிகள் எவ்வளவு தூரம் அதிகமாகி உள்ளது என்பதை இந்த புகைப்படம் உணர்த்துகிறது. 200 ஆண்டுகளுக்கு முன் 20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட கார் என்று 20 இலட்சத்திற்கு விற்கப்படுகிறது.

 

200 வருடங்களுக்கு முன் வீட்டுத் திண்ணையில் தொடங்கிய பலசரக்கு கடை இன்று சூப்பர் மார்க்கெட்டுகளில் சுற்றி தொலைகிறது.

 

தீப்பெட்டி அளவிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டி இன்று சுவற்று அளவுகளில் வேறுபடுகிறது.

 

இதோ சமூகவலைதளங்களில் பரவி மாற்றத்தை உண்டாக்கிய அந்த புகைப்படம் உங்களுக்காக.

 

 

சோகத்தில் மூழ்கிய காவியா அறிவுமணி காரணம் இதுதான்!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடர் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். சகோதரர்களின் கூட்டுக்குடும்பம் மற்றும் பாசத்தை மையமாக கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியான ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த தொடரில் மீனா மற்றும் ஜீவா தம்பதியினருக்கு குழந்தை பிறந்திருக்கு என்ற சூழலில் தற்சமயம் தனம் கர்பமாக இருந்து வருகின்றார். இதற்கிடையில் முல்லை கதிர் ஆகியோர்களுக்கு இடையே சில ரொமான்ஸ் காட்சிகள் ஆரம்பமானது. அந்த சமயத்தில் தான் நடிகை சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தொடரில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா திடீரென்று இவ்வாறு ஒரு முடிவை எடுத்தது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி தற்சமயம் நடித்து வருகிறார். அவர் பாரதிகண்ணம்மா தொடரில் இதற்கு முன்னரே நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்சமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக முல்லை கதாபாத்திரம் வெட்டியாக பிரபலமடைந்து இருக்கின்றார். இவர்களுக்கு இடையில் நெருக்கமான காட்சிகள் எதுவும் ஆரம்பிக்கவில்லை. சென்றவாரம் இதுதொடர்பாக உரையாற்றிய காவியா விரைவில் நெருக்கமான காட்சிகள் இருக்கும் என தெரிவித்து இருக்கின்றார்.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் காவியா பாரதிகண்ணம்மா தொடரை தான் மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்து பாரதிகண்ணம்மா நடிகை நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை! அவரிடம் தீவிர விசாரணை!

0

செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை! அவரிடம் தீவிர விசாரணை!

தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவர் வழக்கறிஞர் தமிழன் பிரச்சன்னா திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளராக உள்ள அவர், திமுக சார்பில் பல தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பேசுவார். மு.கருணாநிதி இருந்த போதே அவர் திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர் அவ்வப்போது பல கட்டப் பஞ்சாயத்துகளிலும் சிக்கியுள்ளார். அவரின் ஆடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பா.ஜா.கா தமிழகத்தில் ஒரு தொகுதியில் வெற்றி அடைந்தால் தான் தற்கொலையே செய்வேன் என தமிழன் பிரசன்னா கூறிய நிலையில் தற்போது அவரது மனைவி இறந்ததை கேட்டு தி.மு.க கட்சியில் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழர் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது. அவர் அவரது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென்று அவரது மனைவி, கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்தும், அவர் கடிதம் ஏதேனும் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்னது மணிமேகலை அழகிப் போட்டியில் கலந்து கொண்டாரா? படம் உள்ளே!!

0

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு அழகி போட்டியில் மணிமேகலை கலந்துகொண்டதாக ரசிகர் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

விஜே மணிமேகலையை தெரியாதவர்கள் இருக்க முடியாது, சன் மியூசிக்கில் தனது பணியினை தொகுப்பாளினியாக தொடர்ந்து, மற்றும் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக கலந்து கொண்ட அவர் மக்களிடையே பிரபலம் அடைந்தார்.

 

இந்நிலையில், ஹூசைன் என்பரை காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இதைப் பற்றி எவ்வளவோ நிகழ்ச்சிகளில் அவர் கூறி வருத்தப்பட்டு உள்ளதை நாம் பார்த்திருப்போம். குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார்.

 

திருமணத்திற்கு பிறகு கூட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr. And Mrs சின்னத்திரையின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும், குக்வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2-வில் பங்கேற்ற இவர் கோமாளியாக வலம் வந்தார்.

 

இருவரும் இப்பொழுது லாக் டோன்லில் ஒரு கிராமத்தில் இருக்கிறார்கள். அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருகிரார்கள்.

 

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு நடந்த ஒரு அழகி போட்டியில் மணிமேகலை கலந்து கொண்ட புகைப்படத்தை ரசிகர் ஒருவர் பகிரவே, அதைப் பார்த்த மணிமேகலையின் கணவர் உசேன் யார் இந்த பொண்ணு இவ்ளோ மேக்கப் போட்டு இருக்கு என்று கிண்டலடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 

 

 

மௌன ராகம் கதாநாயகியின் பட்டையைக்கிளப்பும் கவர்ச்சி வீடியோ!

0

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக இருந்து வருபவர்கள் யூடியூப் வலைதள பக்கங்களுக்கு பேட்டி கொடுப்பது சாதாரணமாக தற்போது நிகழ்ந்து வருகிறது. அதில் அவர்கள் வயது வித்தியாசம் பாராமல் கேட்கும் கேள்விகள் ஒரு சில சமயங்களில் மன சங்கடம் உண்டாகும் அளவிற்கு கேட்கும் கேள்விகளுக்கு கூட இவர்களும் சளைக்காமல் பதில் தெரிவித்து விடுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் ஜில்லா மற்றும் ராட்சசன் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனா தற்சமயம் சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார் என சொல்லப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌனராகம் 2 தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அவர் அண்மையில் கொடுத்த ஒரு பேட்டியில் நடிகர் சூர்யாவை இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து பரபரப்பை உண்டாக்கினார்.

இருந்தாலும் தற்சமயம் நடிகை ரவீனாவிற்கு 17 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும் இவர் வெளியிட்டிருக்கின்ற கவர்ச்சியான புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CPzwssPHCzH/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

ஒரு மாஸ்க் இவ்வளவு விலையா? வைரலாகும் ஏ.ஆர். ரகுமான்!

ஒரு மாஸ்க் இவ்வளவு விலையா? வைரலாகும் ஏ.ஆர். ரகுமான்!

கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து, பல பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படங்களை தங்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு சில பிரபலங்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் அனைவரின் பேசும் பொருளாக மாறிய நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகனுமான ஏ.ஆர். அமீனும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை அமீன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பதை விடவும், அந்த புகைப்படத்தில் ரகுமானும் அவரது மகன் அமீனும் அணிந்திருக்கும் மாஸ்க் குறித்துதான் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் அணிந்திருக்கும் மாஸ்க் விலை எத்தனை ஆயிரம்?
மிரட்டுறீங்க தலைவரே! மாஸ்க் பயங்கரமா இருக்கு! என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பலரும் இந்த மாஸ்க் என்ன மாஸ்க் என்றும், அதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்றும், அதன் விலை எவ்வளவு என்றும் பல கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் அணிந்திருக்கும் மாஸ்க் விலை எத்தனை ஆயிரம்?
இதற்கும் ரகுமானின் ரசிகர்களே பதில் அளித்து வருகின்றனர். அது எல்.ஜி. நிறுவனத்தின் எல்ஜி ப்யூரிகேர் மாஸ்க் LG PuriCare™ Wearable Air Purifier என்றும், அதன் விலை 10ஆயிரத்துக்கு மேல் என்றும் சொல்லி வருகின்றனர். 99.99% பாக்டீரியா நீக்கம் செய்யப்படும் 99.99% முழுமையான காற்று சுத்திகரிப்பு இந்த மாஸ்க் என்கிறார்கள். இந்த மாஸ்க் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம் என்றும் கூறி இருக்கிறார்கள்.

கோரோனாவிலிருந்து தப்பிக்க வசதி படைத்தவர்கள் இந்த மாஸ்கை பயன்படுத்தலாம், வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்.

நடிகர் மகத்துக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

0

பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் மகத். மங்காத்தா ஜில்லா, சென்னை 28 2, வந்தா ராஜாவா தான் வருவேன், போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

 

இவரும் மாடலான பிராச்சி என்பவரும் நான்கு வருடமாக காதலித்து வந்தனர். போன ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்ப்பமாக உள்ளதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தார்.

 

இந்நிலையில் நேற்று காலை மகத்திற்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் அந்த பதிவினை பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். கடவுள் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். உங்களுடைய அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி. அப்பாவாக இருப்பது ஒருவித மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் பிரபலங்கள் மற்றும் அனைவரும் வாழ்த்து மழையை மகத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

 

மகத் இப்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். காதல் கண்டிஷன்ஸ் அப்ளை, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, இவன்தான் உத்தமன் போன்ற படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு கொடூரம்! காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

0

சென்னையில் இருக்கின்ற சேத்துப்பட்டு பகுதியில் வித்யாமந்திர் பள்ளி செயல்பட்டு வருகின்றது இந்த பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்தன் இவர் ஆசிரியர் என்ற பெயரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவி இது தொடர்பான விவகாரத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தவுடன் இதுகுறித்து தகவல் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மாணவியிடம் எழுத்துப்பூர்வமாக புகாரை பெற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இருக்கின்ற சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சென்னை சேஷாத்திரி பள்ளியில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் வணிகவியல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.