Thursday, July 17, 2025
Home Blog Page 4569

CBSC,ICSE 12 வகுப்பு தேர்வுகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியது!

0

குஜராத் மாநிலத்தில் சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிச்சயமற்ற நிலைகள் தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக் களைக் கருத்தில் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோலின்படி சரியான நேரத்தில் தொகுக்க சிபிஎஸ்சி நடவடிக்கை எடுக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவித்தை அடுத்து, சில மாநிலங்கள் செவ்வாய்க்கிழமை அன்று அந்தந்த மாநில வாரியாக தேர்வுகளை மறுபரிசீலனை செய்வதாக கூறப்பட்டது. மற்ற மாநிலங்கள் கலந்து பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் அரியானா மற்றும் குஜராத் மாநிலம் பன்னிரண்டாம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவித்தது. பிற மாநிலங்களில் முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளது.
செவ்வாயன்று CBSC தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் இந்த ஆண்டிற்கான ISC தேர்வை ரத்து செய்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன என்று சிபிஎஸ்இ அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதிப்பீட்டில் திருப்தி அடையாத மாணவர்கள் மறு தேர்வு எழுதலாம் என்றும், தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் பிற அமைச்சர்களுடன் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளின் தற்போது நிலைமை பற்றி விவாதித்து, தேர்வில் சாத்தியமான அனைத்து விருப்பங்களையும் மறு ஆய்வு செய்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் குறித்த இந்த முடிவு மாணவர்களின் நலனுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும் இந்த கொரோனா கல்வியின் நாட்காட்டியை மிகவும் பாதித்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தத் தேர்வுகளை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா அலைகள் தொடர்ந்து வரும்! – டாக்டர் காங் எச்சரிக்கை!

0

கொரோனாவின் அலைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி டாக்டர் காங் கொரோனாவுக்கு பொருத்தமான வழிமுறைகள் மற்றும் தடுப்பூசிகளையும் புதிய நோய் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பட்டியலிடுகிறார்.

கடந்த வாரத்தில் இருந்து கொரோனாவில் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் மே 31 ஆம் தேதியிலிருந்து 124 புதியதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என பதிவாகியுள்ளது. இப்பொழுது அது 2.9 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளுக்கும், மூன்று பேர் புது வகையான நோய் தொற்று உள்ளது.

மூன்றாவது அலையில் பல மருத்துவர்கள் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படலாம் என்று கூறி வருகின்றனர்.

கொரோனா வின் இந்த இறக்கமற்ற இரண்டாவது அலை முந்தைய நிலையை விட, தற்போது உள்ள மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் ஆக்சிஜன் படுக்கை வென்டிலேட்டர் கள் உயிர் காக்கும் மருந்துகள் சுகாதார பணியாளர்கள் என கடுமையான எதார்த்தம் ஆகியவற்றுடன் அழிவை ஏற்படுத்தி வருகிறது.

அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும், என டாக்டர் கூறுகிறார்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி டாக்டர் பேசுகையில், டாக்டர் காங், கொரோனாவை அழிக்க தடுப்பூசி ஒரு சிறந்த கருவியாக செயல்படுகிறது. மேலும் நோய் பரவாமல் இருக்கவும், புதிய தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கவும் தடுப்பூசி ஒரு சிறந்த கருவி என கூறுகிறார்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் 60 டோ 70 சதவிகிதம் நோய் எதிர்ப்பு சக்தியை செயல்திறனை உருவாக்குகிறது. எடுக்கப்பட்ட ஆராய்ச்சிகளின் படி 6 முதல் 9 மாதங்கள் வரை இந்த இயற்கை எதிர்ப்பு சக்தி இருக்கும் எனக் கூறுகிறார்.

டெல்லி ஏற்கனவே நான்கு கொரோனா அலைகளை எதிர்கொண்டது. இரண்டாவது அலை தொற்று நோயாகவும் ஆபத்தானதாகவும் இருக்காது என்று முந்தைய கதைகள் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் இப்போது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு வாய்ப்புகளையும் எடுக்காமல் மூன்றாவது மற்றும் நான்காவது அலையை நாம் எதிர் கொள்ளா விட்டாலும் நம் கடந்த கால அனுபவத்தின் படி நாம் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் டாக்டர் காங்.

குறிப்பாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் பொழுது எப்படி குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதைப் பற்றி புரிய வைக்க வேண்டும்.

பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஏனெனில் அடுத்த அலை குழந்தைகளை தாக்கும் என்பதால் குழந்தைகளை பாதுகாப்பதற்காக சிறந்த வழி தடுப்பூசி மட்டுமே. குழந்தைகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்கனவே மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

குழந்தை மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அலைகளில் வென்டிலேட்டர்கள் பற்றாக்குறையை நாம் எதிர் கொண்டதால் அரசு மருத்துவமனைகளில் அதிகமான மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களை பணி அமர்த்தும் பணியை திட்டமிட்டுள்ளோம். குழந்தைகளுக்கான சிறப்பு படுக்கைகளை திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார்

தடுப்பூசி செய்துக்கொண்ட நடிகை! வெளியிட்ட பரபரப்பு புகைப்படம்!

0

தமிழ்நாடு முழுவதும் மிக தீவிரமாக பரவி இருக்கின்ற நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசியை எல்லோரும் செலுத்திக் கொள்ள வேண்டுமென்று பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர்.பிரபலங்களும் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

பலர் தங்களுக்கான தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த விதத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நோய்தொற்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டு இருக்கிறார் இதுதொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகம்!

0

பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜி ராமச்சந்திரன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 73 தமிழ் சினிமா தொடர்ச்சியாக பல இழப்புகளை சந்தித்திருக்கிறது இந்த நோய்த்தொற்று காரணமாக இவ்வாறு அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் காரணமாக, பொது மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

தற்சமயம் நடிகரும் தயாரிப்பாளருமான ஜி ராமகிருஷ்ணன் இயற்கை எழுதி இருக்கின்றார். இவர் நாட்டுப்புறப் பாடலை பாடியவர் எட்டுப்பட்டி ராசா, வீரத்தாலாட்டு, ராஜாதிராஜா, மனுநீதி, போன்ற திரைப்படங்களை தயார் செய்து இருக்கிறார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் அவருடைய மனைவி தயாரிப்பாளர் ஆர் பி பூரணி மாரடைப்பு காரணமாக, மரணமடைந்தார். தற்சமயம் தயாரிப்பாளர் ராமச்சந்திரன் இயற்கை எய்தி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சோகத்தை உண்டாக்கி இருக்கிறது. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சிறு குழந்தை கூறிய வீடியோ புகாருக்கு உடனே தீர்வு! அசத்திய பிரதமர்!

0

சிறு குழந்தை கூறிய வீடியோ புகாருக்கு உடனே தீர்வு! அசத்திய பிரதமர்!

கொரோனாவின் இரண்டாம் அலை அனைவரையும் வீட்டில் முடங்க வைத்துள்ளது.இது கடந்த ஒரு வருட காலமாகவே தொடர்ந்து வருகிறது.

இந்த சூழ்நிலை அனைத்து வயதினருக்கும் அன்றாட வாழ்க்கை முறையில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் பாடங்களும், பணிகளும் செய்யப்பட்டு வருவது குறிப்பிட தகுந்தது.

இது கல்வி முறையில் முகுந்த மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.கோரோனாவினால் நேரடி கல்வியை தொடர முடியாத சூழ்நிலையில் ஆன்லைன் கல்வி வரப்பிரசாதமாகவே மாறி விட்டது.

மேலும் உலகெங்கும், பட்டி தொட்டியெங்கும் இணைய வழி கல்வி மிகவும் பிரபல மடைந்து விட்டது.இந்த கல்வி முறை பெற்றோருக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்திதான் விடுகிறது.

இந்நிலையில், காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்வதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலைகள் தருவதாகவும் வீடியோ மூலம் பிரதமருக்கு புகார் ஒன்றை கொடுத்து உள்ளாள்.

45 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை அவுரங்கசீப் என்கிற பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து அது வைரல் ஆனது.

ஓவ்வொரு நாளும் தான் மேற்கொள்ளும் மனஅழுத்தம் குறித்து தனக்கே உரிய குழந்தை தனத்தில், மழலை கொஞ்சும் மொழியில் கைகளை அசைத்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, அதன் பின்னர் கம்ப்யூட்டர் வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும் மோடி ஐயா ? என பொரிந்து தள்ளுகிறாள்.

அதன் பின்னர் சில நொடிகள் மவுனத்துக்கு பின் என்ன செய்ய முடியும்? வணக்கம் மோடி ஐயா. விடைபெறுகிறேன் என கூறி சிறுமி தனது பேச்சை முடிக்கிறாள்.

இந்த வீடியோ இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை வாங்கிக் குவித்துள்ளது. 1,300க்கும் அதிகமானோர் இந்த பதிவை ரீடுவிட் ம் செய்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் 6 வயது சிறுமி புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தொடக்கக்கல்விக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரமும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரத்துக்கு மிகாமலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்டிசன்களுக்கு வேண்டுகோள் வைத்த துல்கர் சல்மான்!

0

மலையாள திரைத்துறையில் முன்னனி கதாநாயகனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான் இதை தவிர்த்து அவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில், திரைப்படங்களில் பிஸியாக இருந்துவரும் துல்கர்சல்மான் தன்னுடைய பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள் இருக்கிறது என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பது என்னவென்றால் நான் இந்த கவுன்சிலில் இல்லை இந்த கணக்குகள் என்னுடையது கிடையாது. தயவு செய்து என்னை சமூக ஊடகங்களில் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம் குளிர்ச்சியாக இல்லை என்று பதிவு செய்திருக்கிறார்.

ஹீரோவாக மாறிய தமிழக போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ!

ஹீரோவாக மாறிய தமிழக போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ!

கொரோனா தொற்றின் இந்த 2-ம் அலையில் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.மக்கள் நலன் கருதி அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கியுள்ளனர்.அதனைத்தொடர்ந்து  சிலர் அரசாங்கத்தின் விதிகளை மீறி வெளியே செல்கின்றனர்.அவர்களை தடுக்கும் விதத்தில் போலீசார் பல முறைகளில் விழிப்புணர்வு செய்தும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அதனைத்தொடர்ந்து கேரளா மற்றும் தமிழகத்தில் மக்களை எச்சரிக்கும் விதத்தில் குக்கூ குக்கூ என்ற சினிமா பாடலுக்கு  நடனம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி அந்த விழிப்புணர்வு நடன வீடியோவானது பொதுமக்களிடையே பெருமளவு வரவேற்ப்பை பெற்றது.அதனைத்தொடர்ந்து தற்போது நமது தமிழக போலீசார் கேரளா நபர் ஒருவருக்கு உதவி செய்து மாஸ் காட்டியுள்ளார்.கூடலூர் கேரளா எல்லையான கீழ்நாடு பக்கத்தில் இரண்டாவது வளைவில் மினி லாரி ஒன்று கட்டுப்பாட்டை மீறி கவிழ்ந்து விழுந்தது.

இந்த லாரி கவிழ்ந்ததில் அந்த ஓட்டுனர் சுயநினைவின்றி சாலையில் விழுந்து கிடந்தார்.தற்பொழுது ஊரடங்கு அமல்படுத்தி இருப்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை.அந்த பகுதியில் அதிகப்படியாக சரக்கு வாகனங்கள் மட்டுமே செல்கிறது.அங்கு மயங்கி விழுந்த ஓட்டுனரை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நீலகிரி மாவட்டம் கியூ பிரிவு போலீசார் சத்தியமூர்த்தி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் மறக்காயி ஆகியோர் அந்த ஓட்டுனருக்கு முதலுதவி செய்தனர்.

இவர்கள் முதலுதவி அளித்த ஓரிரு நிமிடங்களிலேயே அந்த ஓட்டுனர் கண் முளித்தார்.இவர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி அந்த போலீசார் முதலுதவி செய்யும் வீடியோவானது பலரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.மயங்கி விழுந்த ஓட்டுனர் பாலக்காடு மாவட்டம் பொலியாம்பாறை பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி!

0

மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி!

கொரோனாவின் இரண்டாம் அலையினால் தமிழகம் மட்டும் இன்றி அனைத்து மாநிலங்களும், மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.தொற்றின் காரணமாக அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும், மத்திய, மாநில அரசுகள் வலியுருத்தி வருகின்றன.

தற்போது முழு ஊரடங்கின் மூலம் தமிழகத்தில் சிறிதளவு குறைந்துள்ளது.எனினும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் தொற்றுக்கு சிகிச்சை பெறலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார்.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில், தொற்றின் காரணாமாக ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அதிநவீன வசதிகளோடு பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி முதல் மதுரை பேரையூர் மள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற மூதாட்டி கொரோனா தொற்றால்  நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்..

இந்நிலையில் இன்று காலை அவர் படுக்கைக்கு அருகே இருந்த மின்விசிறி திடீரென பழுதாகி படுக்கையில் அமர்ந்திருந்த பாண்டியம்மாள் தலையில் விழுந்தது.இதில் படுகாயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட முகங்கள்! சமூக வலைத்தளத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

0

நடிகை மாளவிகா மோகனன் கொரோனா முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்.

மாளவிகா மோகனன் இந்தியில் யுத்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்சமயம் திரைப்பட குழுவினருடன் மாளவிகா தன்னுடைய முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார். மும்பை பாந்த்ராவில் இருக்கின்ற நோய் தடுப்பு மையத்தில் நேற்று மதியம் 12 30 மணியளவில் அவர் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்தி இருக்கிறார். அவருடன் நடிகர்கள் பார்கான் மற்றும் ரித்தேஷ் சித்வானி மற்றும் சித்தார்த் சதுர்வேதி உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், தடுப்பு ஊசி போட்டு கொன்ற மகன்கள் என்று அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மாளவிகா மோகனன் தமிழ் மொழியில் கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் மீதான வழக்கு! வெளியான பரபரப்பு ஆடியோ! மனைவியின் ஆதங்கம்!

0

முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் மீதான வழக்கு! வெளியான பரபரப்பு ஆடியோ! மனைவியின் ஆதங்கம்!

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள, இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்துள்ளோம் எனவும், கடந்த 5 வருடங்களாக நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தோம்.

3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்துள்ளார். நடிகை சாந்தினி யார் என்றே எனக்கு தெரியாது என்றும் கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அடுத்தகட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த வழக்கு விசாரணை அடையாறு துணை கமிஷனர் விக்ரமனின் நேரடி மேற்பார்வையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி டாக்டர் வசந்தி, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியது:

எனது கணவர் டாக்டர் மணிகண்டன் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். மிகவும் கவுரவமான, அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவர் அமைச்சராக பதவி வகித்தபோது பலரும் அவரை சந்தித்து, அருகில் நின்று படம் எடுத்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு படத்தை நெருக்கமாக இருப்பது போல சித்தரித்து, அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தற்போது வெளியிட்டு, மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் நடிகை சாந்தினி பொய் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் விசாரணையில் உண்மைகள் வெளிவரும் என நம்புகிறேன். மேலும் அந்த புகாரில் கூறி உள்ள கார் எண் தவறானது. அந்த காரை ராமநாதபுரத்தில் நான் பயன்படுத்தி வருகிறேன்.

சில நபர்கள் இது தொடர்பாக எனது கணவரை தொடர்பு கொண்டு இது போல புகார் அளிக்க போகிறோம். கோடிக்கணக்கில் பணம் தந்தால் இத்தோடு விட்டு விடுகிறோம் என மிரட்டினர். அதற்கு அடிபணியாததால் இந்த பொய்யான புகாரை அளித்துள்ளனர்.

இதனால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவமானத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளனர். பொய் புகார் அளித்த நடிகை சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது

இந்த வழக்கில் சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறோம். சைபர் கிரைம் போலீசாரும் அவர் கொடுத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சரிபார்த்து வருகிறார்கள்.

அவர் 3 முறை கருக்கலைப்பு செய்ததாக சொல்கிறார். அவர் கருக்கலைப்பு செய்தது மணிகண்டனின் நண்பர் ஆஸ்பத்திரி என்று தெரிவித்துள்ளார். அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் ஒருவருடன் சாந்தினி உரையாடிய ஆடியோ ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்தும் விசாரணை நடக்கிறது.

இது மோசடி மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் ஆதாரங்கள்தான் வழக்கில் பேசும். சாந்தினி கருக்கலைப்பு செய்த ஆஸ்பத்திரி விசாரணை வளையத்தில் உள்ளது. மேலும் மணிகண்டனின் கார் டிரைவர், அவர் அமைச்சராக இருந்தபோது அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. இதுபோன்ற விசாரணை அதிரடியாக நடக்கிறது. இந்த விசாரணை முடிவடைந்ததும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் டாக்டர்  மற்றும் அமைச்சர் மணிகண்டனின் நண்பரிடம் நடிகை சாந்தினி பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.