Monday, July 21, 2025
Home Blog Page 4581

பிரபல நடிகர் மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு!

0

சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் இராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் சென்னையில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. இதற்காக பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் விஷால் தொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

காயத்ரி ரகுராம். அந்த பதிவில் சென்னை பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் என்னை மிகுந்த பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த பள்ளியை மூட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் இதுவரை பள்ளி நிர்வாகம் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

 

இவ்வாறான குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை வலியுறுத்துகிறேன் என தெரிவித்திருக்கிறார். அத்துடன் அவருடைய இந்த பதிவானது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த நிலையில், நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான காயத்ரி ரகுராம் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது நீங்களும் உங்கள் நண்பர்களும் எத்தனை பெண்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து இருப்பீர்கள். உங்களைப் போன்றவர்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

பி எஸ் பி பி பள்ளி விவகாரம்! டென்ஷனான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த அதிரடி கருத்து!

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் அனேக திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார் இவர் இயக்குனராகவும் உருவெடுத்தவர்.

ஆனாலும் இத்துணை பன்முகத் தன்மையை கொண்டவராக இருந்தாலும் கூட அவருக்கு இந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிதான் பிரபலத்தை கொடுத்தது. இவருடைய விவாதங்கள் மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு விருந்தாகவே அமைந்துவிட்டது. கடந்த ஆண்டு ஊரடங்கின்போது நடிகை வனிதாவின் திருமணத்தில் தலையிட்டு பலவாறாக கிண்டலுக்கு ஆளானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அதன் பிறகு கூட லட்சுமி ராமகிருஷ்ணன் அவ்வப்போது ஏதாவது ஒரு முக்கிய விஷயங்களில் குரல் கொடுத்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் தமிழ்நாட்டை முறுக்கிய பி எஸ் பி பி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புகாரை அடுத்து தொடர்ச்சியாக அனேக பிரச்சனைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய சமுதாயத்தை சார்ந்தவராக இருந்தாலும் கூட பெண்கள் விவகாரம் என்று வந்துவிட்டால் எல்லை மீறி சென்றால் அவர்களது உறுப்பை அறுக்க வேண்டும். இது எனக்கும் நடந்திருக்கிறது என்னுடைய சகோதரிகளுக்கும் நடந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அடடே அவரா இவர்? அசந்துபோன ரசிகர்கள்!

0

ஆதித்ய வர்மா திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பனிதா சந்து இவர் ஹிந்தியில் அக்டோபர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக உருவாகி திரையுலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார்.

இவர் கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான ஆதித்ய வருமா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் என்று சொல்லப்படுகிறது அதோடு இவர் சிறு வயதிலிருந்தே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்திருக்கிறார்.

 

https://www.instagram.com/p/CMZ5XAmlVF6/?utm_source=ig_embed&ig_rid=2fef7ef3-f967-40da-9715-5b9c2cd9065f

அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு காதல் திரைப்படம் தமிழ் மொழியில் ஆதித்ய வர்மா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இதன் மூலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டானது. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் பிசியாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், அவர் தற்போது தன்னுடைய தாயுடன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அடையாளமே தெரியாத அளவிற்கு குழந்தையாக அவர் இருக்கிறாராம்.

ஓ என் வி விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

0

வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்ற ஓ.என்.வி இலக்கிய விருதிற்கு நடிகை பார்வதி மற்றும் சின்மயி உள்ளிட்டோரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து விருதுகள் குழுவின் பரிந்துரைகளின் படி இந்த வருடத்திற்கு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ என் வி இலக்கிய விருது தொடர்பாக மறு பரிசீலனை செய்வதற்கு முடிவு செய்து இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓ என் வி விருதை திருப்பி கொடுப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். விருதுக்கான பரிசுத் தொகை 3 லட்சத்தை கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுப்பதாகவும், காழ்புணர்ச்சி உடைய ஒரு சிலரின் குறுக்கீடு காரணமாக, விருது மறுபரிசீலனை என்று அழைக்கப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் ரகசியங்களை உடைத்த மனைவி!

0

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பல ரகசியங்களை வெளிபடுத்தியிருக்கிறார் அவருடைய மனைவி ஷப்ருன் நிஸார்.

இசையுலகில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களை இன்றும் கட்டி போட்டிருக்கிறார் இளையராஜா இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இளையராஜாவின் இசை வாரிசாக யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை உலகில் அறியப்பட்ட தற்சமயம் பல முன்னணி கதாநாயகர்களில் திரைப்படங்கள் இவரின் இசையில் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பது மிகவும் சிறப்பாக இருப்பதாக சொல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஷப்ருன் நிஸார் என்பவரை யுவன் சங்கர் ராஜா திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இஸ்லாமிய மதத்திற்கு மாறி இருக்கிறார் இந்த தம்பதிக்கு ஸியா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழ்நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் வாழ்வில் பல ரகசியங்களை உடைத்து இருக்கின்றார் அவருடைய மனைவி ஸப்ருன் நிஸார்.

இதுதொடர்பாக காணொளி ஒன்று வெளியாகி இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். அந்த காணொளியில் 12 கேள்விகளுக்கு யுவன் சங்கர் ராஜாவின் மனைவி பதிலளித்திருக்கிறார். எனக்கு இசை தொடர்பாக பல விஷயங்கள் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை எனக்கு இசை பற்றி எதுவுமே தெரியாது கடைசியாக கேள்விக்கு பதில் தெரிவித்த அவர் யுவனை தானே நீங்க ட்ரக்ன்னு சொல்றீங்க, ஆம் வீட்டிலேயே 70 கிலோ ட்ரக் வைத்திருக்கேன்.எங்கு சென்றாலும் என்னுடைய நியூட்ரிஷன் எல்லாவற்றையும் கூட்டிக் கொண்டு செல்வேன் என்று பல ரகசியங்களை தெரிவித்திருக்கிறார்.

ஷிவானி நாராயணன் கொடுத்த போஸ்! சூடான இணையதளம்!

0

மாடல் அழகியாக இருந்து விஜய் தொலைக்காட்சியில் பகல்நிலவு தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். பல தொடர்களில் நடித்து வரும் இவர் தற்சமயம் இரட்டை ரோஜா நெடுந்தொடரில் நடிப்பதில் மிகவும் பிஸியாக உள்ளார்.

சிவானி நாராயணன் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக அவர் தன்னுடைய நடன பாடல் மற்றும் புகைப்படம் போன்றவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீடு ரசிகர்களை கவர்ந்தார்.

 

https://www.instagram.com/p/CPaqu14Bi-3/?utm_source=ig_embed&ig_rid=68e15d31-5a3c-496c-a579-c91fd84cd25a

இந்த நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த சமயத்தில் அவருடைய உடைகள் தொடர்பாக ஆரி விவாதம் செய்த சமயத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி, ஒரு சில நாட்களாக எந்தவிதமான புகைப்படங்களையும் வெளியிடாமல் இருந்து வந்திருக்கிறார்.

ஆகவே அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் சிவானி இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்சமயம் அவர் ஒரு குட்டி உடையை அணிந்து மிகவும் செக்ஸியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.

Breaking: இடமாற்றம் செய்யப்பட்ட “12 ஐபிஎஸ்” அதிகாரிகள்!

0

இன்று தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் பல அதிகாரிகள் தற்போது உள்ள கொரோனா காலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

 

எந்த அதிகாரிகள் இந்த பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்கள் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு வருமாறு.

 

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது,

 

1. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டு உள்ளார்.

2. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

3.காவல்துறை கணினிமயமாக்கல் எஸ்.பியாக இருந்த வருண்குமார், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. காவல்துறை ஏடிஜிபியாக(செயலாக்கம்) இருந்து வந்த ஏ.கே. விஸ்வநாதன், காவலர் வீட்டுவசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. தீயணைப்புத்துறை டிஜிபியாக கரண் சிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

6. சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

7. சமூக நீதி மற்றும் மனித உரிமையின் கூடுதல் டிஜிபியாக ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக அமல்ராஜ் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

9. சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி-யாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

10. காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபி-யாக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

விஜய் தொலைக்காட்சி முக்கிய தொடர்களுக்கு தடை? குழப்பத்தில் நிறுவனம்

0

சின்னத்திரை ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் தான். அதிலும் விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு என்று ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.

கடந்த காலங்களில் சன் டிவியை பொருத்தவரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தது. ஆனால் தற்சமயம் அந்த ரசிகர் பட்டாளம் அனைத்தும் அப்படியே விஜய் தொலைக்காட்சிக்கு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்ற வருடத்தில் முழு ஊரடங்கு பிறப்பித்தது படப்பிடிப்புகள் நிறுத்தம் காரணமாக, தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் ஒளிபரப்பாகும் பழைய எபிசோடுகளை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வந்தது. இதன்மூலம் அந்த தொலைக்காட்சியின் டிஆர்பி பாதுகாத்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இந்த வருடமும் ஊரடங்கு போடப்பட்டதன் காரணமாக, படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் தொடர்களை ஒளிபரப்ப முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், மவுனராகம் போன்ற பழைய தொடர்கள் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர்.

அத்துடன் விஜய் தொலைக்காட்சிக்கு முக்கிய தொடர்களாக இருந்து வரும் ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா ஆகிய இரு தொடர்களும் தற்சமயம் முடிவுக்கு வர இருக்கிறது. இதன் காரணமாக, டிஆர்பியை ஏற்றுவதற்கு அடுத்ததாக என்ன செய்யலாம் என்று விஜய் தொலைக்காட்சியின் தலைமை குழப்பத்தில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கவர்ச்சியில் கலக்கும் ஸ்ருதிஹாசன்!

0

தமிழ் சினிமாவில் பூஜை, புலி வேதாளம், சிங்கம் 3, 3, ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சுருதிகாசன். அத்துடன் மட்டுமல்லாமல் அவர் ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.

 

https://www.instagram.com/p/CPGoOVYBhDQ/?utm_source=ig_embed&ig_rid=1e23f25b-ce71-43f3-9bb7-93ce6a14e17b

இதனையடுத்து சுருதிகாசன் தற்சமயம் தந்தை கமல்ஹாசனும் ஒன்றிணைந்து சபாஷ் நாயுடு என்ற திரைப்படத்திலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

அவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கின்ற கவர்ச்சி புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு படத்தில் ஹீரோவாக கால்பதிக்கும் “விஜய் சேதுபதி”

0

சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி.

 

இந்த ஆண்டில் வெளியான மாஸ்டர் தெலுங்கு டப்பிங், மற்றும் உப்பென்னா போன்ற படங்களில் வில்லனாக நடித்து தெலுங்கு மக்களின் மனதில் மாபெரும் இடத்தை பிடித்து விட்டார். தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.

 

இந்நிலையில் விஜய் சேதுபதியை ஹீரோவாக்கி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாம். பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் எடுக்க உள்ளார்களாம்.

 

இந்த படத்திற்கான கதையையும் விஜய் சேதுபதியிடம் சொல்லி அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. படம் குறைந்த பட்ஜெட் என்பதால் அவருக்கு சம்பளம் எதுவும் இல்லையாம்.

 

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு சம்பளத்துக்கு பதிலாக, படத்தின் லாபத்தில் பங்கை கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.