Friday, July 25, 2025
Home Blog Page 4591

தடுப்பூசி செலுத்திக்கொண்ட சினிமா பிரபலம்!

0

நடிகை ரித்விகா கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டு இருக்கிறார்.

நாடு முழுவதும் நோய் தொற்று தாக்கம் மிக தீவிரமாக இருப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் ௧௮ வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், திரைத்துறை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், தடுப்பூசி போட்டு கொள்வதுடன் மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்கள். தற்சமயம் நடிகை ரித்விகா தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், நான் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் நீங்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்திருக்கிறார்.

இவர் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். பிக்பாஸில் பங்கேற்று கொண்டு டைட்டில் வின்னரான பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசுக்கு வழங்கிய முக்கிய ஆலோசனை!

0

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழவிச்சாமி வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் அதிமுகவைப் பொறுத்தவரையில் மக்களின் நலனே முக்கியமானது. 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் 14 நல வாரியங்களை விசாரணை 35 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டது போல அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரண உதவியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசு வழங்கியது போலவே ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், எல்லோருக்கும் சமூக கூடங்கள் அமைத்து அதன் மூலம் உணவுகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தால் தான் நோய்த்தொற்று இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசு போர்க்கால அடிப்படையில் ஆன நடவடிக்கைகள் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு எடுத்தால் மட்டும் தான் இந்த தொற்றை கட்டுப்படுத்த இயலும் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக அரசு அதிரடி முடிவு! அரசியல் கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி!

0

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. கடைசி கட்டத்தில் அந்தப் போராட்டம் வன்முறையாக மாறி கலவரம் உண்டானது. இந்த கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் இந்த விவகாரம் தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார். அதோடு இளைஞர்களின் எதிர்கால படிப்பினை உறுதி செய்யும் வகையில், அதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசியல் கட்சித்தலைவர்கள் மீது தொடுக்கபட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சிபிஐ விசாரணைக்கு மாற்ற பட்ட வழக்குகளை தவிர்த்து 38 வழக்குகளை தமிழக அரசு திரும்பபெற்றிருக்கிறது.

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை படி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்று உத்தரவிட்டிருக்கிறார். இதன் வழியாக நல்லகண்ணு, தினகரன், வைகோ, கீழ்ப்பாக்கத்தில் பெண் மருத்துவர் சிபிஎஸ் அனிதா ராதாகிருஷ்ணன் அழகு முத்து பாண்டியன், ராஜா உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கெல்லாம் தூக்கா? அதிர்ச்சியில் பெற்றோர்!

0

இதற்கெல்லாம் தூக்கா? அதிர்ச்சியில் பெற்றோர்!

மக்களுக்கு எதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் ஏதோ ஒன்றை செய்து கொண்டு இருக்கின்றனர்.சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் பெரிய முடிவை மிக சுலபமாக எடுத்து விடுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு தாலுகாவில் கீலப்பூடி காலனியை சேர்ந்த பெரியப்பன் (55).இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.முருகைய்யன் (30) மற்றும் வேலு (25). இருவருக்கும் திருமணமான நிலையில் வேலுவுக்கு அதே பகுதியை சேர்ந்த ரோஜா(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.இவருக்கு ரோஹித் (7) என்ற ஏழு வயது மகனும், இலக்கியா(5) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ரோஜாவிற்க்கும், வேலுவிற்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறினால், ரோஜா கோபித்துக்கொண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.இதனால் மனவேதனை அடைந்த வேலு, தன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை சமாதானம் செய்து அழைத்து வரலாம் என அங்கு சென்றுள்ளார்.

ஆனால், மனைவியோ வர மறுத்து விட்டதால் வேலு மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.எனவே நேற்று முன்தினம் கிராமத்தின் நடுவே உள்ள காட்டுக்கு சென்று ஒரு கருவேல மரத்தில் தூக்கில் தொங்கினார்.இந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பொதட்டூர் பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் வேலுவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பயமா இருக்கு அம்மா!! கதறிய குழந்தைகள்! குட்டையில் கிடந்த 3 சடலம்!

0

பெண்ணொருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 2 குழந்தைகளை குட்டையில் போட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரம் அடுத்த சி. ராமாபுரம் என்ற பகுதியில் உள்ள ஒரு குட்டையில் அடையாளம் தெரியாத ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 குழந்தை மற்றும் அந்த பெண்ணின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அங்குள்ள பொதுமக்களிடம் விசாரணையை தொடங்கிய போலீசார், அந்தப் பெண் யார் என்றே தெரியவில்லை என்ற பதில் தான் வந்துள்ளது. இதனையடுத்து மேலும் விசாரித்த போலீசார் அங்கு ஒரு இரு சக்கர வாகனம் ஒன்று நின்றுள்ளது.

 

அந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்த பெண் பெனுமூர் அடுத்த குட்டியானம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமாரின் மனைவி நீரஜா என்றும் மற்றும் அவரது குழந்தைகள் என்பது தெரியவந்தது. கிஷோர்குமார், நீரஜா ஆகிய தம்பதிகள் 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சந்துரு என்ற மகனும், சைத்திரா என்ற மகளும் உள்ளனர்.

 

5 ஆண்டுகளுக்கு முன்னர் நீரஜாவின் பெற்றோர் இறந்து போய் உள்ளனர். இதனால் தந்தையின் சொத்தை பிரித்து வாங்கி வருமாறு கிஷோர் குமாரும், அவரது உறவினர்களும் தொந்தரவு செய்து உள்ளனர். இதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

 

இதனால் மனமுடைந்த நீரஜா, குழந்தைகளை குட்டையில் போட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும், இது தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

0

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதிகார மட்டத்தில் மாற்றங்கள் நிகழ்வது சகஜம் தான் என்பது அரசியலில் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள், ஊழலுக்கு துணை போனவர்கள் இதற்கு முந்தைய அரசாங்கத்தால் நெருக்கடிக்கு உள்ளானவர்கள், நெருக்கமானவர்கள் என்று எல்லோரையும் மாற்றி புதிய அரசு உத்தரவிடுவது வழக்கம்தான். புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பசை இருக்கின்ற துறைகளும், பசை இருக்கின்ற துறைகளில் இருந்தவர்கள் உப்புச்சப்பற்ற துறைகளில் அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

இதற்கு தமிழகத்தில் அமர்ந்திருக்கின்ற திமுக ஆட்சியும் விதிவிலக்கு கிடையாது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய நான்கு தனி செயலாளர்கள் நியமனம் செய்வதிலேயே அனைவரது பாராட்டையும் பெற்றார். அந்த நான்கு பேருமே மிகவும் திறமையான அதிலும் நேர்மையான அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல அதிகார மட்டத்தில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார் ஸ்டாலின். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிக நெருக்கமாக இருந்த நான்கு தனி செயலாளர்கள் உப்புச்சப்பற்ற துறைக்கு மாற்றப்பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் நேற்று 21fஅதிகாரிகளை மாற்றி உத்தரவிடப்பட்டு இருந்தது இன்று எட்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார். நோய்த்தொற்று தான் பீலா ராஜேஷ் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது என்று தெரிவிக்கலாம். அவர் நாள்தோறும் நோய்த்தொற்று நிலவரம் தொடர்பாக தெரிவிக்கும் அவரை காண பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அந்தப் பெண்கள் கூட்டம் அவர் தெரிவிக்கும் கருத்துக்களை தெரிந்துகொள்வதற்காக அலைமோதவில்லை அவர் என்ன புடவை கட்டி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே அந்த கூட்டம் கூடியது என்று சொல்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தொடர்ச்சியாக நோய்த்தொற்று நிலவரம் குறித்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த பீலா ராஜேஷ் திடீரென ஓரம் கட்டப்பட்டார் அதற்கு காரணமும் தெரியவில்லை. அவருக்கு பதிலாக தற்போது சுகாதாரத் துறைச் செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். பீலா ராஜேஷ் வணிகவரித் துறை செயலாளராகநியமனம் செய்யப்பட்டார். ஆனால் தற்போது தமிழக அரசு அவரை கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையராக நியமனம் செய்து உத்தரவிட்டு இருக்கிறது.

கரையை கடந்தது யாஸ் புயல்! பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்காசி, மதுரை, நீலகிரி, போன்ற மாவட்டங்களிலும் வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறது. திண்டுக்கல், தேனி, போன்ற மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தேனி திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, நீலகிரி, போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், போன்ற இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நாளை தினம் நீலகிரி, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், போன்ற இடங்களில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் எனவும், வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. வருகிற 28-ஆம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், வரும் 30-ஆம் தேதி தேனி, நீலகிரி, திண்டுக்கல், போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

வட தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று ஒருசில சமயங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரு அளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் இருக்குமெனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் மதியம் 12 20 மணிக்கு அதிதீவிர புயலாக யாஸ் புயல் ஒடிசா அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்ற காரணத்தால், தென்மேற்கு அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நானும் பள்ளியில் அந்த பிரச்சனையை சந்தித்தேன்!!!!!96 பட குட்டி ஜானு “கௌரி” சொன்ன பகீர் தகவல்!!

PSBB பள்ளி மாதிரி தான் எங்க பள்ளியும் இருந்தது. இந்த மாதிரியான பிரச்சினைகளை நானும் எதிர் கொண்டேன். என 96 படத்தில் நடித்த கௌரி கிஷன் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக ராஜகோபாலனை விசாரித்த போலீசார், அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அந்த பள்ளியில் நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

PSBB பள்ளியைப் போலவே பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு இது போன்ற பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுகின்றன என வலைதளங்களில் பரவி வருகிறது.

 

தங்கள் குழந்தைகள் இதுபோன்ற பாலியல் பிரச்சனைகளை தரும் ஆசிரியர்களைப் பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்தாலும் பெற்றோர்கள் பெரிய பள்ளியில் படிக்கும் வாய்ப்பு பறிபோய் விடுமோ என அஞ்சி சொல்லாமல் இருக்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 

இந்த நிலையில் 96 படத்தில் நடித்த குட்டி ஜானு அதாவது கௌரி கிஷன் PSBB பள்ளியை போன்று தான் எங்கள் பள்ளியும்., இந்தப் பிரச்சனையை நானும் எதிர் கொண்டு உள்ளேன். என்னுடன் படித்த சக மாணவிகளும் இந்த பிரச்சனையை சந்தித்து உள்ளார்கள் என, இன்ஸ்டாகிராமில் போஸ்டர் ஒன்றை போட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.

 

96 , மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்த கௌரி கிஷன் அடையாரில் உள்ள இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் தான் படித்தேன் , அந்த பள்ளியிலும் இதே போன்ற பாலியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்தேன், மாணவர்களை துன்புறுத்தியதாக ஏகப்பட்ட பிரச்சினை கொடுக்கப்பட்டதாகவும் மனம் திறந்துள்ளார்.

 

மேலும் தன்னுடன் படித்த மற்றும் அந்த பள்ளியில் படித்த மற்ற மாணவ மாணவிகளிடம் இதுதொடர்பாக விசாரணை செய்த பின்பே இந்த பதிவை செய்ததாகவும், தற்போது படிக்கும் மாணவிகள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்தால் பயப்படாமல் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

 

 

 

 

 

காவிரி டெல்டா தூய்மைப்படுத்தும் பணிக்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்த தமிழக அரசு!

0

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், போன்ற டெல்டா மாவட்ட பகுதியில் இருக்கின்ற காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கு தமிழக அரசு சார்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு நியமனம் செய்யப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் அவர்கள் கண்காணிப்பு அதிகாரியாகவும், திருவாரூர் மாவட்டத்திற்கு கோபால் கண்காணிப்பு அதிகாரியாகவும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அபூர்வா கண்காணிப்பு அதிகாரியாகவும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிர்லேஷ்குமார் கண்காணிப்பு அதிகாரியாகவும், நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஒன்றினைந்து காவிரி டெல்டா பகுதிகளில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வபோது தூர்வாரும் பணிகள் குறித்த அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மறைந்தார் பிரபலம்! சோகத்தில் மூழ்கிய தமிழ் திரை உலகம்!

0

இயக்குனரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பெப்ஸி மோகன் காந்திராமன் காலமாகி இருக்கிறார் அவருக்கு வயது 89 என்று தெரிவிக்கப்படுகிறது.

மோகன் காந்தி ராமனுக்கு சில நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைவு ஏற்பட்டு அதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் இருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் மரணம் அடைந்திருக்கிறார்.

மறைந்த மோகன் காந்திராமன் பழம்பெரும் இயக்குனர் பா நீலகண்டன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தமிழில் செல்வியின் செல்வன் வாக்குறுதி, ஆனந்தபைரவி, காலத்தை வென்றவன், போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். மலையாளத்தில் விமோஜன சமரசம், சொர்ண விக்ரகம் போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். 1994 ஆம் ஆண்டு கில்லாடி மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் பாண்டியராஜனின் தந்தையாக நடித்திருக்கிறார். கருணாநிதி ,எம்ஜிஆர் ,ஜெயலலிதா உள்ளிட்டோரின் திரைப்படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.