Saturday, July 26, 2025
Home Blog Page 49

கூட்டணி சிக்கலை பொதுவெளியில் போட்டுடைத்த நயினார்! பாயிண்டை பிடித்த திருமாவளவன் 

முன்னதாக அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உருவாகியிருந்தாலும், இரு கட்சிகளும் மனமுழுதாக ஒருமித்த நிலைமைக்கு வரவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதை அவர் குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்று உள்ளன.

மறுபுறம், பாஜகவுடன் அதிமுக இணைந்திருப்பதாகவும், கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாகவும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஏற்கனவே விமர்சனம் செய்திருந்த நிலையில் அதை தொடர்ந்து மறுத்திருந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச்சில் திடீரென டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததைக் கொண்டே அதிமுக – பாஜக கூட்டணி April 11 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டணிக்கு தேமுதிக, பாமக போன்ற கட்சிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக போன்ற கட்சிகளுக்கும் பாஜகவின் கூட்டணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த கூட்டணியை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் “மிரட்டலால் உருவான கூட்டணி” என்று விமர்சித்துள்ளன. ஆனால், “திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” என்ற குறைந்தபட்ச ஒப்பந்தத்தின்படி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என அதற்கு எடப்பாடி விளக்கம் அளித்தார்.

இந்த சூழ்நிலையில், திருச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக எதிரணி வலுவாக உள்ளதாகவே நயினார் நாகேந்திரனும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில், திமுகவை எதிர்கொள்ள முரண்பாடுகளை மறந்து விருப்பமுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு குழுவாக சேர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளதிலிருந்து, எதிர்க்கட்சிகளுக்குள் ஒருமித்தம் இல்லாதது தெளிவாகிறது” என்றார்.

மேலும், “அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்ததாகச் சொன்னாலும், அதற்குள் உண்மையான பிணைப்பு ஏற்படவில்லை. அமித்ஷா மற்றும் எடப்பாடி சந்திப்புக்குப் பிறகும், இரு கட்சிகள் ஒரே மனதுடன் செயல்படவில்லை. அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறியதும், அதனை மறுத்த எடப்பாடியின் பின்விளக்கமும் இதற்கு சாட்சி” என அவர் சுட்டிக்காட்டினார்.

இதே நேரத்தில், “தமிழ் என்பது திராவிட மொழிகளின் மூலமொழி” எனும் கருத்தைப் பற்றி எழுந்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “தேவநேய பாவானர் போன்ற மொழியியல் நிபுணர்கள் தமிழ் மொழியின் பாரம்பரியம் குறித்து தெளிவாகக் கூறியுள்ளனர். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தமிழின் வழியாகவே உருவானவை என்பதே வரலாற்று உண்மை” என்றார்.

500 ரூபாய் நோட்டுக்கு வரப்போகும் தடை.. முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Chandrababu Naidu: ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஜனசேனா பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் துவங்கி சுமார் 43 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதனால் மூன்று நாள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த மாநாடு தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே கட்சி தெலுங்கு தேசம்.

தற்போது மத்திய அரசு எடுக்கக் கூடிய பல்வேறு முடிவுகளில் நம்முடைய மாநிலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அனைத்து துறைகளிலும் நாட்டுக்கே முன்னுதாரணமாக ஆந்திரா விளங்கி வரும் நிலையில் மேம்பாடு, சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியாக இவற்றை தாரக மந்திரமாக கொண்டு நாம் செயல்படுகிறோம். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும்படி கடந்த காலத்தில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது.

புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் கிடையாது. நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றது. எங்கு பார்த்தாலும் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்கின்றனர். அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு அவசியம் ஏற்படுவதில்லை அதனால் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் இது அரசியலுக்கு நிச்சயம் பயனளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். மேலும் கருப்பு பணத்தை ஊக்குவிப்பதை நாங்கள் எப்பொழுதும் ஆதரிக்கவில்லை எனவும் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்.. நீதிமன்றம் அளித்த பரபர தீர்ப்பு!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம் ராஜலட்சுமி தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் ஜூன் இரண்டாம் தேதி அறிவிக்கப்படும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அந்த குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ள நிலையில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி இருக்கின்றார். இந்த வழக்கில் ஐந்து மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தண்டனை விவரம் குறித்து ஞானசேகரன் நீதிபதியிடம், தனக்கு வயதான தாய் இருப்பதாகவும், தன்னுடைய தொழிலுக்கு நஷ்டம் ஏற்படும் அதனால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அரசு தரப்பில் ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி வழக்கு விசாரிக்கப்பட்டது உயர்நீதிமன்றம் இது தொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தனர் . ஞானசேகரனுக்கு தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஜனவரி 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் பிப்ரவரி 24ஆம் தேதி சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை போலீசார் சுமத்தியுள்ளார் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து ஞானசேகரன் கோரிக்கை வைத்து வந்தார். இந்நிலையில் குற்றவாளி மீது 35 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் பல வழக்குகளில் தண்டனையும் சில வழக்குகளில் விடுதலையும் பெற்றுள்ள ஞானசேகரனுக்கு 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும்  குறிப்பிடத்தக்கது. 

விவசாயிகள் பேங்க் அக்கவுண்ட்டை உடனே செக் பண்ணுங்க!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழ்நாட்டில் மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றது. அதில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என செயல்பட்டு வரும் நிலையில் 24 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை, 16 தனியார் என 30 சர்க்கரை ஆலைகள் அரவை பணி மேற்கொண்டன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2024-25 காலகட்டத்தில் 18.81 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்து 8 சதவீத சர்க்கரை கட்டுமானத்தில் 1.58 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்தது.

அரவை மேற்கொண்ட சுமார் 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் தாங்கள் கொள்முதல் செய்து அரவை செய்த 10.30 லட்சம் மெட்ரிக் டன் கரும்பிற்கு 329.34 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அந்த பணத்தை தங்கள் ஆலையின் சொந்த நிதியிலிருந்து கரும்பு விவசாயிகளுக்கு கரும்புத் தொகையை வழங்கி உள்ளனர். மேலும் கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு 5920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழிவகை கடனாக 97.77 கோடி ரூபாய் தர அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணமும் நிலுவை இல்லாமல் முழுமையாக வழங்கி உள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் இந்த செயலுக்கு விவசாயிகள் ஒன்று சேர்ந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளராக கவிஞர் சல்மா தேர்வு – யார் இந்த கவிஞர் சல்மா?

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19 அன்று நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடவுள்ளார்கள்.

தற்போது பதவியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா (திமுக) மற்றும் வைகோ (மதிமுக) ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 2 முதல் தொடங்கி முடிவுகள் ஜூன் 19 அன்று அறிவிக்கப்படும்.

கவிஞர் சல்மா – ஒரு பார்வை:

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் கவிஞர் சல்மா. இவரது இயற்பெயர் ரொக்கையா மாலிக். சிறுவயதில் பள்ளிக்கல்வியை தொடர முடியாமல் விட்டுவிட்டு திருமணமான இவர், எழுத்து வழியாக தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். இவரது கணவர் திமுக பின்புலத்தை கொண்டவர் என்பதால், சல்மாவும் அரசியல் சாசனத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

இலக்கியத்திலும் அரசியலிலும்:

சல்மாவின் கவிதைகள், குறிப்பாக “இரண்டாம் ஜாமங்களின் கதை”, “ஒரு மாலையும் இன்னொரு மாலையும்”, மற்றும் “பச்சை தேவதை” போன்ற நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2018-ல், திமுக சார்பில் தந்தை பெரியார் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அதற்குபின், பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவராக பணியாற்றிய சல்மா, 2006 சட்டமன்றத் தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெறவில்லை.

தற்போது:

பின்னர், தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவியாக நியமிக்கப்பட்ட இவர், தொடர்ந்து திமுக மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளராகவும் செயல்பட்டார். தற்போது, திமுக செய்தி தொடர்பு பிரிவில் இணைச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், அவர் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பு என்பதாலும் மிக முக்கியமானதாகும்.

விஜய் VS வைஷ்ணவி: திமுக போடும் பக்கா ஸ்கெட்ச்.. தவெக தலைவரை மண்ணை கவ்வ வைக்க மாஸ்டர் பிளான்!!

TVK: நடிகர் விஜய் சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் அவர் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் 2026 தேர்தலுக்காக முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றார். தொண்டர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் போட்டியிடப் போகும் தொகுதி தொடர்பாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில் திமுகவில் அண்மையில் இணைந்த வைஷ்ணவி விஜய் போட்டியிடக் கூடிய தொகுதியில் களமிறங்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழக கட்சியின் கூட்டம் ஒன்றில் விஜய் போட்டியிடப் போகும் தொகுதி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டால் சாதகமாக அமையும் என்ற சர்வே எடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தர்மபுரியில் போட்டியிடுவது பற்றியும் ஆலோசனை செய்துள்ளார் என கூறப்படுகின்றது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்த வைஷ்ணவி, அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

பெண்களுக்கு மதிப்பு இல்லை, கட்சிக்காக பணியாற்றவர்களுக்கு மதிப்பு இல்லை, நீண்ட காலம் கட்சிக்காக வேலை செய்தவர்களுக்கு மதிப்பு கிடையாது உள்ளிட்ட புகார்களை அவர் வைத்த நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் வைஷ்ணவி அதே தொகுதியில் களமிறக்குமா திமுக என்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நகை அடமானம் வைக்க போறீங்களா.. கட்டாயம் ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க!! இவர்களுக்கெல்லாம் தான் பெரிய லாபம்!!

இந்தியாவில் தங்க நகை இல்லாத குடும்பங்களே கிடையாது. பெண்கள் அதிகளவு தங்க நகையை விரும்புவதால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து தான் செல்கின்றது. ஆனாலும் தங்க நகை பிரியர்கள் தங்க நகை வாங்குவதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்க நகையை அவசர பண தேவைக்கு பயன்படுத்துகின்றனர். வங்கிகளில் அடமானமாக வைத்தால் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும் என்பதால் பலரும் இதை சொத்தாக பார்க்கின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்க நகை கடன் வழங்குவது தொடர்பாக புதிய 9 விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. பொதுமக்கள் துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். அனைத்து கடன் வழங்கும் நபர்களுக்கும் கடன் மதிப்பு விகிதம் 75% என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.100 மதிப்புள்ள தங்க நகைகளை அடமானம் வைத்தால் அதிகபட்சம் 75 ரூபாய் மட்டுமே கடனாக பெற முடியும். தற்போது வரை நகையின் மதிப்பீட்டில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்த விதி நடைமுறைக்கு வந்தால் கடன் தொகை கணிசமாக குறையும் என கூறப்படுகின்றது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்படும் நிலையில் இது போன்ற வரம்பு நிர்ணயப்பதை கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. தங்க நகைக்கு பெற்ற தொகையின் வட்டியையும் சந்தை நிலவரப்படி திருப்பி செலுத்தக்கூடிய தொகையின் வட்டியும் பார்த்தால் கடனாளிகள் அதிகமாக பணம் செலுத்த வேண்டியது இருப்பதினால் நகையை மீட்காமல் விட்டு விடுகின்றனர் அதனால் நகை ஏலத்தில் விடப்படுகின்றது.

புதிய விதிகளின் அடிப்படையில் கடன் வாங்கும் நபர்கள் அடமானம் வைக்கக்கூடிய நகைக்கு தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை வழங்க வேண்டும். கடன் கொடுப்பவர்கள் தாங்கள் பெறும் நகைகளின் தூய்மை எடை மற்றும் மதிப்பு குறித்து சான்றிதழ் வழங்க வேண்டும். புதிய விதிமுறைகளின் அடிப்படையில் தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே தங்க நகை கடனுக்கு பிணயமாக தகுதியுடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில் வெள்ளி நகைகளுக்கு கடன் வழங்கப்படுவதில்லை. புதிய விதிமுறையின் படி வெள்ளியின் நகைகள் மற்றும் குறிப்பிட்ட வெள்ளி நாணயங்களுக்கு எதிராக கடன் வழங்குவதை அனுமதிப்பதாக உள்ளது. மேலும் அடகு வைக்கும் தங்க நகைகளின் மொத்த எடை ஒரு கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது அவசியம். இது போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ள நிலையில் இன்னும் இறுதி செய்யப்படவில்லை துறை சார்ந்த நிபுணர்கள், பொதுமக்கள் வழங்கும் கருத்துக்களின் அடிப்படையில் மாற்றம் செய்யலாம் எனவும் கூறப்படுகின்றது.

தவெக மற்றும் தேமுதிக வுக்கு ஸ்கெட்ச் போட்ட நயினார்!! திமுக – வை ஒழிக்க கட்டாயம் இதை செய்ய வேண்டும்!!

BJP: கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் மக்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கின்றதோ அதன்படி அனைவரும் செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளது.

துணை முதல்வரின் நண்பர்களான ஆகாஷ் மற்றும் ரித்திஷ் ஆகியோரை விசாரித்தால் உண்மை வெளியே வரும் என அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் ஏன் பயந்து வெளிநாட்டிற்கு அவர்கள் செல்ல வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். மோடிக்கும் அமலாக்கதுறைக்கும் பயப்பட மாட்டோமென துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ள நிலையில், 2011 சட்டப்பேரவை தேர்தலின் பொழுது அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தான் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்தார்களா? 

யார் கட்சி மாறினாலும் அமலாக்கத் துறையின் சோதனை தொடரும் எனவும் தெரிவித்தார். எங்களிடம் 4 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் தலைமை என்ன சொல்கிறதோ அதே முடிவு. அதிமுகவோடு கூட்டணியில் இருக்கிறோம், அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு கூறினால் ஆதரவு தருவோம் எனவும் தெரிவித்தார். தற்போது உள்ள திமுக ஆட்சியால் மக்களுக்கு அதிக அளவு சிரமங்கள் இருக்கின்றது. சொத்துவரி, மின்கட்டணம் உயர்த்தப்படுவதால் தொழிற்சாலைகள் நடத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மக்களுக்கு விரோதமான திமுக ஆட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும். தமிழக முதல்வர் டெல்லியில் பிரதமரை தனியாக சந்தித்து பேசி இருக்கிறார். நிதி தொடர்பாக தான் முதல்வர் பேசினாரா என்பதை அவர் விளக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி சேர்க்கப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது ஜாதி பெயர் வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. வெளியாகப்போகும் ஊரடங்கு அறிவிப்பு!!

நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. அதில் விமானம், ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்தனர். கொரோனா பரவுவதை தடுப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பப்பட்டது.

தற்போது மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றது. கொரோனா வேகமெடுத்து வரும் நிலையில் ஹரியானா, டெல்லி, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், தெலுங்கானா, புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கோவா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்க காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .

இந்தியாவில் மே 19ஆம் தேதி 257 ஆக இருந்த கொரோனா தொற்று மே 26 அன்று 1,011 பேருக்கு கொரோனா தொற்று நான்கு மடங்காக அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது பரவி வரக்கூடிய தொற்று LF.7,NB.1.8 என கூறப்படுகின்றது . புதிய வகை கொரோனா வைரஸ் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொது சுகாதாரத்துறை சார்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூட கூடிய கண்காட்சி, திருவிழாக்கள் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்காக வழங்கக்கூடிய உணவுகளை சுகாதாரத்துறை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இருக்கும் கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து காணப்படும் பட்சத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வாய்ப்புள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொருட்காட்சி இடங்கள், கலாச்சார நிகழ்வுகள், மதசார்பு நிகழ்வுகள் அதிகரித்து காணப்படும் நிலையில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிக்கான பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. சுகாதாரத்துறை கூறும் கட்டுப்பாடுகளை பின்பற்றினால் மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் போர்: போர் குறித்து முழு விவரம் குறித்த தகவல்!!

இண்டர்-சர்வீஸஸ் அமைப்புகள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு) சட்டம், 2023 யின் உருவாக்கப்பட்ட விதிகள் மே 27 முதல் அமலுக்கு வந்துள்ளன, இது இந்திய ஆயுதப்படைகளுக்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாடு வழங்கும் முக்கியமான நடவடிக்கையாகும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரிக்கின்ற சூழலில், “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சட்ட விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது:

இந்த முக்கியமான நடவடிக்கை, மூன்று துறைப்படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, Inter-Services Organisations (ISOs) அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.”

இந்த சட்டம் 2023 ஆம் ஆண்டின் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு, அகஸ்ட் 15, 2023 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றது. இது மே 10, 2024 முதல் நடைமுறையில் வந்தது.

ஆபரேஷன் சிந்தூர் பின்புலத்தில் தளபதி மதிப்பீடு:

பாதுகாப்புத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னர் இந்திய இராணுவத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியான பாதுகாப்புத் தளங்களில் போர் தயார்நிலையை மதிப்பீடு செய்தார்.

பெரும் பங்கு வகித்த இந்த இரு கட்டளை தளங்களுக்கும் தனித்தனியாகச் சென்ற அவர், கடுமையான சூழ்நிலைகளிலும் அழுத்தமான ஒத்துழைப்பு மற்றும் பணிகளை நேரத்தில் நிறைவேற்றியதற்காக வீரர்களைப் பாராட்டினார்.

அவர் கூறியது:

ஆபரேஷன் சிந்தூரின் போது உயிரைத் தியாகம் செய்த வீரர்களை அவர் நினைவுகூர்ந்தார்; அனைத்து ரேங்குகளினரின் வீரத்தையும், உறுதியையும், துல்லியத்தையும், ஒழுங்கையும் பாராட்டினார்.”

ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் உள்ள வடக்கு மற்றும் மேற்குப் பகுதி சேனைகளின் சிறப்பான செயல்திறன் குறித்து அவர் பாராட்டினார். மேற்கொண்டு மே 7ம் தேதி காலை, பஹல்கம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து 9 பயங்கரவாத கூடங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் பதிலடி முயற்சிகள் உறுதியுடன் தடுக்கப்பட்டன. மே 10ம் தேதி, இருதரப்பு இராணுவ நடவடிக்கைகள் நிறைவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

உதம்பூரில், வடக்கு இராணுவம் மேற்கொண்ட பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழித்த நடவடிக்கைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு, சாட்டிலைட் கண்காணிப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தளபதிக்கு விளக்கம் வழங்கப்பட்டது. இந்த செயல் முறைகள், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதங்களுக்கு எதிரான இந்தியாவின் கடும் உள்நோக்கத்தை மற்றும் மூன்று படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் தேவையை வெளிப்படுத்துகின்றன. இந்தச் சட்ட விதிகள், இந்திய இராணுவத் துறையின் எதிர்காலம் இன்னும் வலுவாக உருவாகும் திசையில் முக்கியமான படியாகக் கருதப்படுகின்றன.