Sunday, July 27, 2025
Home Blog Page 52

ரேஷனில் இனி இப்படித்தான் பொருட்கள் கிடைக்கும்.. தூள் கிளப்பும் நடவடிக்கை!!

ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது சலுகைகள் வழங்கி வரும் நிலையில் ஒரு சில ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. சென்னையில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் கருவி கொண்டுவரப்பட்டது.

தற்போதும் முறைகேடுகள் குறையாமல் இருப்பதினால் கைரேகை பதிவு செய்யும் கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. முதல் முறையாக சென்னையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் வழங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இல்லை எனவும் பல வகையில் முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் அடிப்படையில் பி ஓ எஸ் கருவியுடன் மின்னணு தராசு இணைக்கப்பட்டு சில ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு எடை தராசானது வைபை ப்ளூடூத் வசதியுடன் பி ஓ எஸ் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஊழியர் தராசில் வைக்கக்கூடிய பொருளின் எடை கருவியில் பதிவாகும் அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலமாக நுகர்வோருக்கு வழங்கக்கூடிய பொருட்களின் அளவு தராசில் காட்டப்படும் பொருட்களின் அளவும் சரியாக இருந்தால் மட்டுமே பி ஓ எஸ் கருவி அடுத்த கட்ட செயல்முறைக்கு செல்லும்.

இந்த நடைமுறையின் மூலமாக சரியான எடைக்குப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் எடை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வைக்க முடியாது என்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை அடிப்படையில் சென்னையில் ஒரு சில கடைகளில் தற்போது இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பக்கம் 50 வயது பெண் மறு பக்கம் விலங்குகள்.. பாலியல் தொல்லை உச்சக்கட்டம்!! குமுறும் மனைவி!!

நாகை மாவட்டத்தில் பெரிய புதூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் உதய ஜோதி இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் வந்திருந்தார். அப்போது அவர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது என்னுடைய கணவர் கவாஸ்கர். இவர் சவுதி அரேபியாவிற்கு கடந்த 14ஆம் தேதி வேலைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மற்றும் ஆடு மேய்க்கும் வேலை கிடைத்துள்ளது.

மேலும் அங்குள்ள ஒரு 50 வயது பெண்ணிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என தன்னுடைய கணவரை வற்புறுத்தி அடிக்கடி கொடுமைப்படுத்தி வருகின்றனர், என் கணவரை பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என வற்புறுத்துவது மட்டுமல்லாமல் அங்குள்ள விலங்குகளுடனும் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது. 

மேலும் இது குறித்து தனது கணவர் தொலைபேசி மூலம் தன்னிடம் கூறி கதறி அழுதார். அவர் இருக்கும் இடத்தை என் கணவரால் கூற முடியவில்லை. அதனால் பலவிதமாக பாலியல் தொல்லைகளை அனுபவித்து வருகின்றார். தயவு செய்து அவரை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார் இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கூட்டணியில் அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்.. எம்பி பதவியை தட்டி செல்லும் கமல்!!

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக என பல்வேறு கட்சிகள் உள்ள நிலையில் முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமக இருந்து வந்தது அதன் பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக ஆறு மாநிலங்களவை எம்பி பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் தற்போது பாமக இல்லாத காரணத்தால் மீண்டும் அன்புமணிக்கு பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் சார்பாக மாநிலங்களவை எம்பிகளாக அன்புமணி, வைகோ, பி வில்சன், எம் சண்முகம், எம் முகமது அப்துல்லா, என் சந்திரசேகரன் ஆகிய ஆறு பேரின் பதவி காலம் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றது.

இந்நிலையில் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அன்புமணி மற்றும் என் சந்திரசேகரன் ஆகியோர் கடந்த முறை அதிமுக சார்பாக தேர்வு செய்யப்பட்டனர். மற்ற நான்கு பேரும் திமுக சார்பாக தேர்வு செய்யப்பட்டனர். ஒரு மாநிலங்களவை எம்பிக்கு 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் திமுகவுக்கு 4 மற்றும் அதிமுகவுக்கு இரண்டு எம்பி பதவிகள் கிடைக்கும்.

இந்நிலையில் திமுக சார்பாக தற்போது எம்பி யாக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மூத்த வழக்கறிஞர் சி வில்சன் ஆகியோர் மீண்டும் தேர்வாக இருக்கும் நிலையில் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் முகமது அப்துல்லா தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது, நான்காவது எம்பியாக சண்முகத்துக்கு பதில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு கமலஹாசன் தோல்வியை சந்தித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். அவர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடாத நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது மாநிலங்களவை எம்பி பதவி வழங்குவது குறித்து உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் கமலஹாசன் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. அதனால் முன்னதாக செய்யப்பட்ட உடன்பாடு அடிப்படையில் திமுகவில் ஒரு எம்பி பதவி கமலுக்கு வழங்கப்படும் என திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

அதிமுக சார்பாக இரண்டு எம்பிகளில் ஒருவர் அன்புமணி தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இல்லாததால், பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் நிலவி வருகின்றது. அன்புமணியின் எம்பி பதவிக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் இரண்டு இடங்களையும் அதிமுக சார்பாக உள்ள உறுப்பினர்களை நிரப்ப முடியும் அந்த பதவிகளை பிடிக்கப் போவது யார் என கட்சியின் மத்தியில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தென் தமிழகத்தில் இருந்து ஒருவருக்கும் வட தமிழகத்திலிருந்து ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ராஜ் சத்யன், நடிகை விந்தியா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகின்றது. மேலும் பதவி காலம் நிறைவடையும் சந்திரசேகர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதினால் ஆதிதிராவிடர் ஒருவருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் வட மாவட்டத்தைச் சேர்ந்த கட்சிக்காக கடுமையாக உழைத்து வரும் அவருக்கு கொடுக்கலாமா அல்லது பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கலாமா என பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர்களை சந்திக்க தயாராகும் தவெக தலைவர் விஜய்!! எப்போது தெரியுமா..முழு விவரம் இதோ!!!!

திரைத்துறையில் மிகவும் புகழ்பெற்ற நடிகரில் ஒருவராக இருப்பவர் விஜய். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து பரிசு வழங்கி வருகின்றார். அப்போது விஜய் பரிசு பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்.

ஆனால் தற்போது விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி முழு அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் வரும் 2026 ஆம் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி வரும் நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆண்டு மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கூறியிருந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 8 ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு 95% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மே 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியலை தயார் செய்து சட்டமன்ற தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்கள் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் புதுச்சேரியிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து விஜய் பாராட்ட இருக்கும் நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி தழகத்தின் பொதுச்செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ செல்வங்களை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்ட இருக்கின்றார்.

முதற்கட்டமாக மே 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்டு பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ராணிப்பேட்டை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை, திண்டுக்கல் ,தேனி, நாகப்பட்டினம், திருவள்ளூர், புதுக்கோட்டை, வேலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 88 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

லீவு ஓவர்… பள்ளி திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது அந்த கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்படுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழை காரணமாக தற்போது வெயில் தாக்கம் தணிந்து காணப்படுகின்றது. 2025 – 26 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதனை தற்போது பள்ளி கல்வித்துறை உறுதி செய்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான அறிவுறுத்தல்களையும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளை கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலரர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. அதனால் அறிவுரைகளைப் பின்பற்றி உரிய செயல்பாடுகள் மேற்கொண்டு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பள்ளி தூய்மை பணிகள் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, மற்றும் ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் தூய்மைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வகுப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியர் அறை மற்றும் பிற அறைகளில் இருக்கக்கூடிய தளவாடப் பொருட்கள் கதவு மற்றும் ஜன்னல்கள், உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பது அவசியம்.

மேலும் ஆய்வகத்தில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் காலாவதியாகி இருந்தால் முறையாக பதிவேட்டில் பதிவு செய்து அதனை நீக்கம் செய்ய வேண்டும். பள்ளியின் மேற்கூரையில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழை நீர் வடிந்து ஓடுவதற்கான பாதைகள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அனைத்தையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

பள்ளியில் உள்ள சமையலறை, சமையல் பாத்திரங்கள் ஆகியவை நன்கு தூய்மை செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகள் இல்லாமல் தூய்மைப்படுத்துவது அவசியம். பள்ளி வளாகத்தில் மாணவர்களின் முழுமையான பாதுகாப்பிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பொறுப்பு என்பதினால் அனைவரும் ஒன்றுபட செயல்பட வேண்டும்.

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்களுடன் கலந்து பேசி தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!! 18 வயது முடிந்தவர்களுக்கு 4 லட்சம் வரை கடன்!!

சுய உதவி குழு உறுப்பினர் மற்றும் நகர்ப்புற ஏழை ஆகியோர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுய தொழில் தொடங்க நினைத்தால் அவர்களுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகின்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது திருநெல்வேலி மாவட்டம் நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்காக சுய தொழில் தொடங்குவதற்காக வங்கி கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் நகர்ப்புற வாழ்வாதார இயக்க மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 2025-26 ஆம் ஆண்டில் தனிநபர் மற்றும் குழுக்களுக்கு வங்கி தொழிற்கடன் வழங்கப்படுகின்றது. அதனால் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்டுள்ள மாவட்ட அளவிலான தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் தனிநபர் தொழில் கடன் பெற ஒரு சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. தனிநபர் தொழில் கடன் பெறுவதற்கு 18 வயதிற்கு மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளுக்கு 4 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.

மேலும் குழு தொழில் கடன் பெற 18 வயதுக்கு மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளில் இரண்டு நபர் முதல் ஐந்து நபர்கள் வரை கொண்ட தொழில் குழுக்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த திட்டங்கள் மூலம் சுயதொழில் தொடங்குவோர் எந்தவித அச்சமும் இல்லாமல் சுய தொழிலை தொடங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நகர்ப்புற ஏழைகள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் சுய தொழிலை தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் முக்கிய பதவிக்கு செல்லும் உதயநிதி!? 2026 – தேர்தலுக்காக திமுக போடும் மாஸ்டர் பிளான்!!

DMK: தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் ஆட்சி மாற்றம் என்பது இந்த இரண்டு கட்சிக்கு இடையில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றன. யார் வெற்றி பெறுவார்கள் என மக்கள் மனதில் குழப்பமும் ஏற்படுகின்றது. இந்நிலையில் கடந்த தேர்தலின் பொழுது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சில வாக்குறுதிகளை மக்களுக்காக நிறைவேற்றியுள்ளது.

கட்சி தலைமையின் உத்தரவை அனைவரும் பின்பற்றி பணியாற்றி வருகின்றனர். திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்து வந்த நிலையில் அவருடைய மறைவிற்குப் பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் பதவி வகித்து வருகின்றார். ஆனால் இவர் முன்கூட்டியே கட்சியில் பணியாற்றி வரும் நிலையில் இளைஞர் அணி நிர்வாகி, துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.

மேலும் இவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்கள் தயாரிப்பது மற்றும் திரைப்படங்களில் நடிப்பது என பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இவருடைய பிரச்சாரம் மக்களை கவர்ந்தது அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் இவருடைய பிரச்சாரத்திற்கு பரிசாக 2019 ஆம் ஆண்டு நேரடியாக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு உதயநிதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதால் ஓராண்டுக்கு பிறகு இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஒரு சில மாதத்திலேயே துணை முதலமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த உடனே அடுத்தடுத்து பொறுப்புகள் உதயநிதிக்கு கிடைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் உதயநிதிக்கு பதவி உயர்வு வழங்க திமுக பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு பத்து மாதமே உள்ள நிலையில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்போது அவருக்கு துணை பொதுச்செயலாளராக பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் பரவி வருகின்றது. ஆனால் தற்போது திமுக துணை பொதுச்செயலாளர்களாக ஐ பெரியசாமி, ஆர் ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா ஆகியோர் இருக்கின்றனர். இதில் யாராவது ராஜினாமா செய்தால் மட்டுமே உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது.

திமுகவில் முழு நேர அரசியலில் இறங்கி கடந்த ஏழு வருடங்களுக்குள் இளைஞர் அணி செயலாளர் பதவி, அமைச்சர் பதவி மற்றும் துணை முதலமைச்சர் பதவி என அடுத்தடுத்து பதவிகள் வழங்கி வருகின்றனர்.

தற்போது பெரிய பதவி வழங்குவதற்கு திமுகவின் மூத்த தலைவர்களுக்கு விரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது. இன்னும் ஒரு வார காலகட்டத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் அந்தக் கூட்டத்தில் இதற்கான முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இந்த மாதங்களில் சென்றால் ஏழுமலையானை உடனே பார்க்கலாம்!!

Tirumala Tirupati Devasthanam: புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையின் பொழுது பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படுவதினால் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. மேலும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் முன்பதிவு டோக்கன்கள் தரிசன டிக்கெட், ட்ராவல் பேக்கேஜ், என்ற பலவிதமான வழிகள் உள்ள நிலையில் அவர்கள் வீட்டிலிருந்தே தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்கின்றன.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 18 முதல் 30 மணி நேரம் வரை தரிசன டோக்கன் பெற்றவர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழல் இருக்கின்றது. கூட்டத்தில் சிக்காமல் எப்படி தரிசனம் செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம். திருப்பதி தேவஸ்தானம் கோவிலை பராமரித்து வரும் நிலையில் பக்தர்களின் நன்மைக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. பக்தர்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருப்பதியில் சிறப்பு உற்சவங்கள் மற்றும் திருவிழா சமயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இருக்கும் கூட்டத்தை விட ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதினால் கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும். அதனால் ஜூலை மாதம் தரிசனத்திற்கு செல்பவர்கள் முன்கூட்டியே அதாவது ஏப்ரல் மாதத்தில் முன்பதிவு செய்வது அவசியம். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் சமயத்தில் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் ஆறு மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ய முடியும்.

மேலும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல் 10 நாட்கள் வரை மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பாக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும், அதனால் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் கூட தரிசனத்திற்கு சென்றால் அதிக நேரம் வரிசையில் நிற்காமல் சாமி தரிசனம் செய்ய முடியும்.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய நாட்களில் திருப்பதியில் கூட்டம் மிக குறைவாக காணப்படும் என்பதினால் ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் அந்த நாட்களில் சென்றால் சுலபமாக ஏழுமலையானை தரிசிக்கலாம். 

கெட்ட வாயுக்களை கட்டுப்படுத்தும் பூண்டு!! இப்படி செய்து சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும்!!

0

உங்கள் குடலில் அதிக கழிவுகள் தேங்கியிருந்தால் நிச்சயம் வாயுத் தொல்லை,வயிறு வீக்கம்,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.எனவே குடல் கழிவுகளை அகற்ற பூண்டில் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பற்கள் – 10
2)சின்ன வெங்காயம் – 10
3)தக்காளி – ஒன்று
4)மிளகு – கால் தேக்கரண்டி
5)புளி – ஒரு எலுமிச்சை அளவு
6)நெல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
7)கடுகு – அரை தேக்கரண்டி
8)வெந்தயம் – கால் தேக்கரண்டி
9)கறிவேப்பிலை – ஒரு கொத்து
10)கொத்தமல்லி தூள் – கால் தேக்கரண்டி
11)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளியை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள்.

அதான் பின்னர் அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு வெந்தயம்,கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரியவிடுங்கள்.

அதற்கு அடுத்து மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் நறுக்கிய பூண்டு,வெங்காயம்,தக்காளி பழத்தை அதில் போட்டு நன்றாக வதக்குங்கள்.

பிறகு கொத்தமல்லி தூள்,மஞ்சள் தூள் போட்டு வதக்குங்கள்.பிறகு ஊறவைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை பூண்டு குழம்பு கொதிக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த பூண்டு குழம்பை சூடான சாதத்துடன் போட்டு சாப்பிட்டால் வாயுத் தொல்லை முழுமையாக குணமாகும்.

தேனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால்.. வறட்டு இருமல் சட்டுனு நீங்கிவிடும்!!

0

உங்களுக்கு தீராத வறட்டு இருமல் பிரச்சனை இருந்தால் அதை நம் வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.இந்த வறட்டு இருமல் பாதிப்பில் இருந்து மீள இங்கு தரப்பட்டிருக்கும் நாட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு மிளகு – நான்கு
2)இலவங்கம் – நான்கு
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு கருப்பு மிளகு மற்றும் இலவங்கத்தை உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை கிண்ணம் ஒன்றில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி – கால் தேக்கரண்டி
2)தேன் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

வாணலி ஒன்றில் கால் தேக்கரண்டி அரிசி போட்டு வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அரிசி பொடியை கிண்ணம் ஒன்றில் போட்டு கால் தேக்கரண்டி தேன் ஊற்றி கலக்க வேண்டும்.இதை சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி இலைகள் -இரண்டு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் துளசி இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.இந்த துளசி சாறை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் வறட்டு இருமல் பிரச்சனை குணமாகும்.தினமும் காலை நேரத்தில் தேன் பருகினால் வறட்டு இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.