Sunday, July 6, 2025
Home Blog Page 5827

நீங்கள் வாங்கிய ஆன்லைன் பொருள் தரமானதா? அப்படி சந்தேகம் என்றால் இதை படியுங்கள்!

0

நீங்கள் வாங்கிய ஆன்லைன் பொருள் தரமானதா? அப்படி சந்தேகம் என்றால் இதை படியுங்கள்!

இன்றைய உலகில் அனைவரும் பொருட்களை ஆன்லைனில் வாங்கி கொண்டு இருக்கிறோம். ஆன்லைனில் இல்லை என்ற நிலை வந்து விட்டது. அனைத்து பொருட்களும் கிடைக்கும். இன்றைய ஐடி ஊழியர்கள் மட்டும் அல்லாது அனைவரும் ஆன்லைன் பொருகளையே விரும்பி வாங்குகி்றனர். முன்னொரு காலத்தில் சந்தைக்கு சென்று பொருளின் தரத்தை ஆராய்ந்து பின்னரே பொருளை வாங்குவோம்.

ஆனால் இன்று பல ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் இருக்கும் ஒரு பொருளின் தரம் அறியாமல் வாங்குகிறோம். அப்பொருளின் தரம் உபகோகித்த பின்னரே தரம் அறிய படுகிறது. அது உண்மையானதா? போலியானதா? உண்மையெனில் மகிழ்ச்சி அடைகிறோம். போலி எனில் அதை நினைத்து வருந்துகிறோம்.

அப்படி இருக்கும் நிலையில் அதுக்கு ஏற்றார் போல் நாமும் நம்மை மாற்றி கொள்ள வேண்டும் அல்லவா? பொருளின் தரத்தை அறிய வேண்டும் அதற்கும் ஒரு சில அப்பிளிக்கேஷன் வசதி வந்து விட்டது.அதை பற்றி காண்போம்

இன்றைய காலங்களில் அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், போன்ற வலைதளங்கள் இருக்கிறது. இதன் பொருளின் தரத்தை இவ்வாறு தெரிந்து கொள்ளுவது.

அமேசானில் பொருட்களை வாங்கும்போது, நாம் பலவிதமான எண்ணங்களுக்கு ஆளாவோம். பலர் ஏமாறவும் செய்வார்கள். பலவிதமான பொருட்கள் ஒரேமாதிரி தெரியும். விலைகளும் ஒரேமாதிரி இருக்கும்.
எனவே, எந்தப் பொருள் சிறப்பான விலையையும், தகுதியும், தரமும், பயன்பாட்டையும் கொண்டிருக்கும் என்பதை மதிப்பிடுவது கடினம்.

எனவே, இந்த சிக்கலைத் தவிர்க்க, இரண்டு குறிப்பிட்ட அப்பிளிக்கேஷன் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதன் வாயிலாக, பொருளின் விலையில் தரமான பொருளை வாங்க இயலும்.

அவை, CamelCamelCamel.com என்ற தளம் பொருட்களின் சரியான விலையைக் கண்டறிய உதவுகிறது. ஒரு பொருளின் விலை விற்பனையைப் பொறுத்து மாறுபடும். எனவே, குறைந்த விலை பொருட்களை, குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு இந்த தளம் பயன்படும்.

பொருளின் தரத்தை அறிய ஒரு தளம் உள்ளது.

அவை, Fakespot என்ற தளம் ஒரு பொருளின் தர ஆய்வைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. ஒரு பொருள் தள்ளுபடி விலையில் 2999 ரூபாய் மதிப்புள்ள பொருள் வெறும் 50%,60%,70%, ஏன் 90% வரை தள்ளுபடி செய்து வெறும் 499, 399 ரூபாய் என விற்கப்படுகின்றன. இதனால் நமக்கு சந்தேகம் எழும் ஏன் இவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டது என்று எனவே குழப்பத்தில் ஆலாவோம். பொருளை எப்படி மதிப்பிடுவது என்று எனவே நீங்கள் தள்ளுபடி விலையில் ஒரு பொருளை வாங்கும்போது இந்த தளம் மிகவும் முக்கியமாக பயன்படுகிறது.

எனவே இன்றைய நவீன உலகில் ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நம்மை காக்க இந்த இரண்டு தலங்கள் நம்மை காக்கும் இதை பயன் படுத்தி பயனாளர்கள் பொருளின் விலை மற்றும் தரம் அறிய பயன் படுத்தி கொள்ளவும்.

தேங்காய் சுடும் திருவிழா மூலம் ஆடி மாதத்தை வரவேற்கும் சேலம் பகுதி மக்கள்

0

தேங்காய் சுடும் திருவிழா மூலம் ஆடி மாதத்தை வரவேற்கும் சேலம் பகுதி மக்கள்

ஆடி மாதம் துவங்கியதையடுத்து இதை வரவேற்கும் வகையில், சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழாவின் மூலம் பொதுமக்கள் கோலாகலமாக இதை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் ஆகிய காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாளை, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தேங்காய் சுடும் பண்டிகையாக கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

இதற்கு புராண கதையின் வரலாற்றை அடிப்படையாக கூறுவார்கள் அதாவது ஆடி மாதத்தில் துவங்கிய மகாபாரத போர் 18 நாட்கள் நடைபெற்று, ஆடி 18ம் தேதி முடிவுக்கு வந்தது. இதை நினைவு கூறும் வகையில், இப்பகுதி மக்கள் ஆடி 1ம் தேதியை தேங்காய் சுடும் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

அதாவது அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று, ஆடி18 அன்று முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளன்று, பாண்டவர் படையை சேர்ந்தவர்கள்,  விநாயகர் மற்றும்  அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்து தர்மம் ஜெயிக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார்களாம்.

அப்போது போர்க்களத்தில் பாத்திரம் கிடைக்குமா?! அல்லது காய்கள்தான் கிடைக்குமா?! அதனால் கிடைப்பதை வைத்து  தேங்கய்க்குள் அரிசி, வெல்லம், எள், ஏலக்காய் போன்ற பொருட்களை சேர்த்து சுட்டு படைச்சு, போரில் வென்றதால் அன்றிலிருந்து ஆடி 1 அன்று இந்த தேங்காய் சுடும் பூஜை உண்டானதாக செவி வழிச் செய்திகள் கூறப்படுகின்றன.

இதன்படி சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் வீடுகள் முன்பாக இனிப்பு பொருட்கள் அடங்கிய தேங்காயினை குச்சியில் சொருகி அதை தீயில் சுட்டு, பிள்ளையாருக்கு வைத்து பூஜை செய்த பின்னர் தங்களுடைய உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். 

தேங்காயை ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் சுட்டதற்கு பிறகு  அதை அருகில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்து வழிபட்டனர். அதன் பின்னர் அந்த தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருந்த இனிப்புடன் கலந்த தேங்காயை  உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். 
 
இவ்வாறு நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் இனிப்பு பொருட்களும் மிகவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

ஆதரவளித்த கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் சூர்யா!

0

ஆதரவளித்த கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் சூர்யா!

கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் என்று கல்விக்கொள்கை சர்ச்சையில் நடிகர் சூர்யாவிற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். இதை அடுத்து இதற்கு நடிகர் சூர்யா அவர்கள் நன்றி தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை சென்னையில் சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், 20 வருடங்களாக நான் நடித்துக்கொண்டிருப்பதால் நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன். எல்லோருடைய கோபம், அச்சம் என்னவென்றால் மீண்டும் மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம் சமமான, தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதில் செய்யப்படவில்லை என்பது.

சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
நாங்கள் 10 வருடங்களாக மாணவர்களைப் பார்த்து வருகிறோம்.

10 வருடங்களாக 30% மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 30% +2 மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்? எல்லாத் தேர்வுகளையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வரும். அதை எழுதினால் தான் எந்த டிகிரியாக இருந்தாலும் போகமுடியும்.

நீட் தேர்வு சமூகத்தின் சமநிலையை மாற்றுகிறது. தேர்வுப் பயிற்சி மையங்களின் ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி. எட்டாவதிலிருந்து தேர்வுகளை எழுத பயிற்சி மையங்கள் தேவைப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படிப் படிப்பான்? இவ்வளவு நுழைத்தேர்வுகள் இருந்தால் எங்குச் சென்று படிப்பார்கள்?

Suriya Thanks to Kamalhasan-News4 Tamil Online Tamil News Channel
Suriya Thanks to Kamalhasan-News4 Tamil Online Tamil News Channel

எல்லோரும் தயவு செய்து விழிப்புணர்வுடன் இருங்கள். கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்காகப் போராடும் சங்கங்கள் என அத்தனை பேரும் விழித்துக்கொள்ளவேண்டும் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் என்று கல்விக்கொள்கை சர்ச்சையில் நடிகர் சூர்யாவிற்கு அன்புமணி இராமதாசு, சீமானை தொடர்ந்து கமலும் ஆதரவு தெரிவித்தார்.

இதற்கு சூர்யா கூறியதாவது என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமலுக்கு நன்றி. என்னுடைய கருத்துக்கு எதிர்வினை கூறியவர்களுக் எதிர்ப்பு தெரிவித்து உங்களுடைய கட்சி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கண்டு பெருமை படுகிறேன் என்று நடிகர் சூர்யா கூறினார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தொடர் தற்கொலைகளால் சிக்கி தவிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவரின் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம்

0

தொடர் தற்கொலைகளால் சிக்கி தவிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவரின் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம்

திமுக கூட்டணி கட்சி தலைவரான பாரி வேந்தரின் எஸ்.ஆர்.எம்.பல்கலை கழகத்தில் படித்து கொண்டிருந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். பல கட்ட முயற்சிக்கு பிறகு பாரி வேந்தர் திமுக கூட்டணியில் இணைந்து தற்போது தான் எம்.பியாகியுள்ளார். இந்நிலையில் பல்கலை கழகத்தில் நடந்த தொடர் தற்கொலைகளுக்கான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது கடும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

பாரி வேந்தருக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம்.பல்கலை கழகம் காட்டாங்கொளத்தூர் அருகேயுள்ள பொத்தேரியில் இயங்கி வருகிறது. இப்பல்கலை கழகத்தில் பயிலும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மே 26ஆம் தேதி பொன்னேரியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகள் அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மே 27ஆம் தேதியே ஜார்கண்டைச் சேர்ந்த அனிஷ் சவுத்ரி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை பொது மக்கள் மத்தியில் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கல்லூரி நிர்வாகம் மீது தொடர்ந்து பொது மக்கள் சார்பாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட இந்த மாணவர்கள் படிப்பில் பின் தங்கியிருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கல்லூரி நிர்வாகம் சார்பாக விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து இச்சம்பவங்கள் குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த சூழலில் மீண்டும் ஜூலை 15 ஆம் தேதி கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்ற பி.டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவர் பல்கலை கழகத்தில் உள்ள டெக்பார்க் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு இரண்டு மாதங்களில் எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் பயிலும் மூன்று மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து மறைமலை நகர் காவல் துறையினர், பல்கலை ஆசிரியர்கள், மாணவர்களின் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சூழலில் மாணவர்களின் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மர்மமாக இருக்கும் மாணவர்களின் தொடர் தற்கொலைகளுக்கான காரணம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

வேலை! மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை! பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

0

வேலை! மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை! பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை M.SC, MBA, B.E, B.Tech முடித்த பட்டதாரிகளுக்கு மற்றும் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. 40000 முதல் 80000 சம்பளத்துடன் வேலை. இன்னும் சில நாட்களே உள்ளது. விரைந்து வின்னப்பவவுங்கள்.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 42 கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 42
பணி: Research Associates – 01
சம்பளம்: மாதம் ரூ. 40,000

பணி: Consultant A – 06
சம்பளம்: மாதம் ரூ. 60,000

பணி: Consultant B – 09
சம்பளம்: மாதம் ரூ. 80,000

பணி: Consultant A/B – 23 
பணி: Consultant B (Finance) -02 
பணி: Consultant B (Admin) -01 
சம்பளம்: மாதம் ரூ.80,000

வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்.எஸ் ஆபிஸ் முடித்து அதில் நல்ல அறிவு மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் காற்று மாசுபாடு அல்லது சுற்றுச்சூழல் பிரிவில் 3 ஆண்டுகள் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Senior Administrative Officer, Central Pollution Control Board, “Parivesh Bhawan”, East Arjun Nagar, Shahdara, Delhi – 110 032

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி:06/07/2019

விண்ணப்பிக்க கடைசி தேதி:27/07/2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cpcb.nic.in என்ற இணையத்தை தொடர்பு கொள்ளவும்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

0

இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

இன்றைய வேகமான உலகில் நாம் எதையும் கவனித்து சிந்தித்து உண்பதில்லை. இதன் விளைவாக நீரிழிவு நோய், இதய கோளாறு, பக்கவாதம், அவ்வளவு ஏன் பிறக்கும் குழந்தைகள் நோய்களுடன் பிறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம் சரிவிகித உணவுகளை உட்கொள்ளவேண்டிய நாம் அதை பின்பற்றுவதில்லை . மேலும் எந்த எந்த உணவுகளை எப்படி உண்ண வேண்டும் என அறியாமல் இருத்தல் போன்ற காரணங்கள.

அப்படி இருக்க நான் தேங்காய் பற்றி காண்போம். தேங்காயை அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)சேர்ந்து விடும் என்று நம்மிடையே வலம் வரும் பொய்யான தகவல்கள்

தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர்…
உண்மை இதோ

பச்சை தேங்காயின் பயன்கள்

தேங்காயை பச்சையாக தினமும் ஒரு வேளை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்.

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாகச் சாப்பிட்டு விட்டால் அதுதான் அமிர்தம்.சகலவிதமான நோய்களையும் குணமாக்கும்.

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்.இரத்தத்தைச் சுத்தமாக்கும்.

உடலை உரமாக்கும்.உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளைப் புதுப்பிக்கும்.

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை.நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம.அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்.

இனி முடிந்த அளவு தேங்காயைப் பச்சையாக உண்போம்…

குறிப்பு :தேங்காய் குருமா– தேங்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.

பச்சை தேங்காயின் நன்மைகள்:

தேங்காயைத் துருவி சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்கால சிற்றுண்டியாகத் தந்து பாருங்கள்…அவ்வளவு ஆரோக்கியம்…

பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆனால் இப்போது மாட்டுப்பால் ஊத்தி

மேலும் படிக்க : கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

தாய்ப்பாலுக்கு மாற்றாக, தேங்காய்ப்பால் குழந்தைகளுக்குக் கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆனால் இப்போது பாக்கெட் பால்.

மேலும் படிக்க : பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

செய்முறை: காலையில் தேங்காயைத் துருவி அதனை அரைத்துப் பாலெடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை (அ) கருப்பட்டி (அ) தேன் சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்குப் பதிலாக தந்து பாருங்கள் ஆரோக்கியத்தை. தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயைத் தவிர வேறெதிலும் இல்லை.

மேலும் படிக்க : நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, தோல்நோய் போன்றவற்றிக்கு எளிதில் கிடைக்கும் இந்த பழம் அருமருந்தாகும்!

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

வேலை! வேலை! இளைஞர்களே இந்திய பொது நிறுவனத்தில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்

0

இந்திய பொது நிறுவனம் செயில் நிறுவனத்தின் கிளையான ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் கிளையில் காலியாக உள்ள
மருத்துவ அதிகாரி,
டெக்னீசியன்,
துணை மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 361 
பணி: Specialist (E-3) – 12 
1.Radiologist- 03
2.Pathologist- 03
3.Biochemistry- 02
4.Microbiologist- 02
5.Lab Medicine – 02 

பணி: Medical Officer (E-1) – 08 
பணி: Jr. Manager (Bio-Medical) (E-1) – 03 
பணி: Nursing Sister (Trainee) – 234 
பணி: Technician-Laboratory (Trainee) – 81 
பணி: Attendant – Dressers (Trainee) -10 
பணி: Laundry Operator (Trainee) – 04 
பணி: Dresser-Burn & Plastic (Trainee) – 02 
பணி: Photographer (Trainee) – 01 
பணி: Dietician (S-3) – 02

வயதுவரம்பு: 

பணியை பொறுத்து வயது வரம்பு வேறுபடும்.
30 மற்றும் 37 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு,
நேர்முகத் தேர்வு,
உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2019

மேலும் விவரங்களுக்கு அதன் உண்மை இணையத்தை தொடர்பு கொள்ளவும்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

0

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. நடைபெற்ற உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பல தடைகளை தாண்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக ஐசிசியால் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதன்மை இடத்தை பிடித்திருந்தாலும் அரையிறுதியில் நியூஸிலாந்துடன் விளையாடி தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய நியூஸிலாந்து 239 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் அடுத்த நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது பின்பு விளையாடிய இந்தியா முதல் 3 விக்கெட்களை மளமளவென விட்டு கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தது.

பின்பு சீரான இடை வெளியில் தொடர்ந்து அடுத்தடுத்த விக்கெட்களை பறிகொடுத்தது. அடுத்து தோனி ஜடேஜா இணை விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. பின்பு ஜடேஜா அவுட் ஆகிய பின் தோனியும் 50 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதனால் எதிர்பாராத விதமாக இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதை அடுத்து தோனியின் ஆட்டம் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. இதையும் பொருட்படுத்தாமல் அவரது ரசிகர்கள் தோனியின் ஆட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு இடையில் இந்த உலக கோப்பையில் தோனி ஓய்வு பெறுவதாக பலர் கூறினார்கள். இதனால் அடுத்து யார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்பதில் குழப்பம் நிலவியது.

இதை அடுத்து பிபிசிஐ வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அதாவது இனி வரும் ஆட்டங்களில் விக்கெட் கீப்பர் தேர்வுகளில் தோனி முதன்மை இடத்தில் இருக்க மாட்டார். ரிசப் பண்ட் முதன்மை இடத்தில் இருப்பார் என தெரிவித்தார்.

மேலும் தோனி தனது ஓய்வினை அவரே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் அறிவித்தார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இந்த பழம் நீரிழிவு நோய்க்கு மருந்தா !

0

இன்றைய நவீன உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் அதிகம். இதற்கு தேவையான வைத்தியம் நமது வீட்டிலே இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

இரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிப்பதன் காரணத்தால் சக்கரை எனப்படும் நீரிழிவு நோய் உண்டாகிறது.இதில் இரண்டு வகை நீரிழிவு நோய்கள் காணப்படும்.அவை டைப் 1 மற்றும் டைப் 2 ஆகும்.

வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோய் தொடர்பான சில அடிப்படை தகவல்களை இங்கே பகிர்கிறோம்

இரண்டு விதமான நீரிழிவு நோய்கள் உள்ளன.

முதல் வகை நீரிழிவு நோய் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்.

முதல் வகை நீரிழிவு நோயை தடுக்க முடியாது மற்றும் அரிதாக வரக் கூடியது.

இரண்டாம் வகைதான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது.

பிரிட்டன் கணக்குப்படி அந்நாட்டில் நீரிழிவு நோய் இருப்பவர்களில் ஏறத்தாழ 90 சதவிகிதம் பேருக்கு இந்த இரண்டாம் வகை நீரிழிவு நோய்தான் உள்ளது.

உடல் எடை அதிகரிப்பது, மாறி வரும் உணவுப் பழக்கம், நம் வாழ்க்கை முறைதான் இந்த வகை நீரிழிவு நோய்க்கு காரணம்.

இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது.

இதில் என்ன நல்ல விஷயம் என்கிறீர்களா? இந்த வகை நீரிழிவு நோயை 80 சதவிகிதம் தடுக்க முடியும்.

நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி?

இவைகளுக்கு நமது வீடுகளில் வைத்தியம் உள்ளது.அவை,

நாவல்பழம்:
நாவல் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும்.நாவல்பழம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது.நீரிழிவு நோயாளிகள் தினமும் இதன் பழத்தை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் நல்ல கட்டுக்குள் வரும்.

இதன் விதை நல்ல மருந்தாக நீரிழிவு நோய்க்கு உதவும். இதன் விதைகளை நன்கு காயவைத்து பின்பு பொடியாக்கி வெந்நீரில் கலந்து பருகி வர நல்ல முன்னேற்றம் காணலாம்.

எனவே நாவல் பழம் உண்ட பிறகு அதன் விதையை தூக்கி வீசாமல் சேகரித்து பயன் அடையவேண்டும்.

சர்க்கரை நோய் குறைய பாட்டி வைத்தியம்,

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து,

சர்க்கரை வியாதிக்கு எளிய மருத்துவம்

சர்க்கரை நோயின் நிரந்தர தீர்வு,சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்

சர்க்கரை நோய் நாட்டு வைத்தியம்

கருஞ்சீரகம் சர்க்கரை நோய்,சர்க்கரை நோய் வர காரணம்

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இனியும் நடவடிக்கை எடுக்க தவறினால் அது மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டும் ராமதாஸ்

0

இனியும் நடவடிக்கை எடுக்க தவறினால் அது மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டும் ராமதாஸ்

பாமகவின் நெடுநாள் கோரிக்கையான மது விலக்கின் அவசியம் குறித்தும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மது என்பது எவ்வளவு மோசமான அழிவு சக்தி என்பதற்கு ஏற்கனவே ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உண்மைகளை அறிந்த பிறகும் மதுவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகவே அமையும்.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் ஓர் அங்கமான தேசிய போதை மீட்பு சிகிச்சை மையத்தின் சார்பில், ‘‘இந்தியாவில் மது அருந்துவதால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள்’’ என்ற தலைப்பில் தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. மது அருந்துவதால் மனிதர்களுக்கு தோன்றும் புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும் சாலை விபத்துகள் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இந்த வகையில் மட்டும் 2011 முதல் 2050 வரையிலான 40 ஆண்டுகளில் 25.80 கோடி ஆண்டுகள் மனித வாழ்நாள் பறிக்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவில் ஒருவரின் சராசரி வாழ்நாள் 60 ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டால், 64.50 லட்சம் பேர் 20 வயதுக்குள் உயிரிழக்கின்றனர். அதேபோல், மது அருந்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளின் பொருளாதார மதிப்பு மட்டும் ரூ.97.89 லட்சம் கோடி என்று எய்ம்ஸ் நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

மது ஒழிக்கப்பட வேண்டும்; மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மதுவுக்கு எதிராக 38 ஆண்டுகளாக நான் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். மதுவிலக்கை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும், அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கு காரணம், அதன் மூலம் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் மட்டும் தான். உண்மையில் மதுவால் கிடைக்கும் வருமானத்தை விட, மது பாதிப்புகள் அதிக இழப்பை ஏற்படுத்துகின்றன என்பது எய்ம்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மது விற்பனையால் அரசுக்கு வரி வருமானம் கிடைப்பது ஒருபுறமிருக்க அதையும் தாண்டி, ஆண்டுக்கு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.45% பொருளாதார இழப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. தேசிய அளவில் மதுவால் கிடைக்கும் வருமானத்தைத் தாண்டி ஆண்டுக்கு ரூ.2.64 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.31,500 கோடி மது விற்பனை மூலம் வருமானம் கிடைத்தாலும், அதையும் தாண்டி ஆண்டுக்கு ரூ.24.94 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு மதிப்புகள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சியால் ஏற்கனவே கூறப்பட்டவை தான். இப்போது எய்ம்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த தகவல்கள் மறுஉறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் கூற விரும்புவது ஒரு விஷயத்தை தான். மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் மகிழ்ச்சியடையக்கூடிய ஒன்றல்ல; அது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு இணையான செயல் என்பது தான் அது. ஒரு மாநிலத்தின் உண்மையான சொத்து என்பது வலிமையான, திறமையான மனிதவளம் தான். ஆனால், விலைமதிப்பற்ற மனித வளத்தை மது சீரழிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டிய இளைஞர் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறது. இதனால் வளர்ச்சிக்குத் தேவையான மனித வளம் கிடைக்காமல் அனைத்து துறைகளும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்க்காமல் மதுவிற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிப்பதை மட்டும் கண்டு மகிழ்வது சரியல்ல.

அதேநேரத்தில் மதுவை ஒழிப்பதன் மூலம் மனித வாழ்நாள் 55.20 கோடி ஆண்டுகள் அதிகரிக்கக்கூடும். அதுமட்டுமின்றி, மனித உழைப்பு அதிகரிக்கும் என்பதால் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு பெருமளவில் அதிகரிக்கும். இதனால், இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். நாட்டில் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும் இது உதவும். மதுவால் மோசமான தீமைகள் ஏற்படும்; மதுவிலக்கால் நன்மைகள் ஏற்படும் எனும் நிலையில், இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுப்பது தான் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாக அமையும். எனவே, தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும். இது குறித்து விவாதித்து. நல்ல முடிவை எடுத்து இந்தியாவை உலகின் மது இல்லாத முதல் நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.