Friday, July 4, 2025
Home Blog Page 6

ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களுக்கு தனியான நம்பர் பிளேட் சிஸ்டம் – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில், ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களுக்கு தனி வகையான பதிவு எண்  (நம்பர் பிளேட்) வடிவமைப்பு ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

இந்த முன்மொழிவு மூன்று வகை வாகனங்களுக்கும் பொருந்தும்:

  • வணிக வாகனங்கள்

  • தனிப்பட்ட (பிரைவேட்) வாகனங்கள்

  • வாடகை வாகனங்கள் (ரென்டல் காப்கள்)

வணிக ஹைட்ரஜன் வாகனங்களுக்கு:

  • நம்பர் பிளேட்டின் மேல் பகுதி பச்சை, கீழ் பகுதி நீலம் உள்ளிட்ட நிறங்கள் கொண்டதாக இருக்கும்.

  • மேலும் இதில் இடம்பெறும் எழுத்துக்கள் மற்றும் எண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

தனியார் ஹைட்ரஜன் வாகனங்களுக்கு:

  • மேல் பகுதி பச்சை, கீழ் பகுதி நீலம் உள்ளிட்ட நிறங்களிலும் – எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் உள்ளதாகவும் இருக்கும்.

வாடகை ஹைட்ரஜன் வாகனங்களுக்கு:

  • மேல் பகுதி கருப்பு, கீழ் பகுதி நீலம் உள்ளிட்ட நிறங்களை கொண்டதாக இருக்கும்.

  • மேலும் இதில் இடம்பெறும் எண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இந்த வகைப்படுத்தல்கள் மூலமாக பசுமை எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களை மற்ற வாகனங்களிலிருந்து வேறுபடுத்தவும், எளிதில் அடையாளம் காணவும் முடியும்.

பசுமை சக்திக்காக தொடரும் முயற்சி:

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஹைட்ரஜன் எரிபொருளை இந்தியாவின் எதிர்கால எரிசக்தியாக புகழ்ந்து பேசினார். முனிசிபல் கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் தயாரிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும், இதுவே குறைந்த செலவில் சிறந்த மாற்று எரிசக்திக்கான தீர்வாக இருக்கும் எனவும் கூறினார். அவர் சொந்தமாக ஹைட்ரஜன் வாகனமே ஓட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனங்களுக்கு புதிய பாதுகாப்பு விதிகள்:

2026 ஜனவரி 1 முதல், எந்த எஞ்சின் அளவையும் பொருட்படுத்தாமல், அனைத்து புதிய இருசக்கர வாகனங்களிலும் (பைக்/ஸ்கூட்டர்) ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கட்டாயமாக்கப்படுகிறது. இது வாகனம் திடீரென நிறுத்தும் போது சறுக்காமல் பாதுகாப்பாக நிற்க உதவும்.

மேலும், புதிய இருசக்கர வாகனம் வாங்கும் போது, பாதுகாப்பு தரநிலையை பூர்த்தி செய்யும் இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்க தயாரிப்பாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

இந்த நவீன கட்டுப்பாடுகள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் அமையப்பட்டுள்ளது.

பாமக பிளவுக்கு இவங்க தான் முக்கிய காரணம்.. அப்பாவுக்கு சொல்லி தராங்கா!! பாஜகவுடன் கூட்டணிக்கு நான் காரணமில்லை- அன்புமணி!!

PMK: பாமக கட்சியில் தலைமைக்காக அப்பா மகனுக்கிடையே போட்டி நிலவில் வரும் வேலையில் ஒருவருக்கொருவர் எதிர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சி நிர்வாகிகளை ஒருவர் பணி அமர்த்துவதும் மற்றொருவர் அவரை நீக்குவதென்று செய்து வருவதால் நிர்வாகிகள் அனைவரும் குழம்பி தவிக்கின்றனர். இதற்கு ஒரு முடிவில்லாமல் உள்ளது. அதிலும் ராமதாஸ், அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க தனது மனைவியுடன் வந்து மிகவும் வற்புறுத்தி கேட்டதாக செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

தற்போது அதற்கு அன்புமணி மறுப்பு தெரிவித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், எனது அப்பா கூறியது போல் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து எதுவும் நான் பேசவில்லை. அவரே தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க சொன்னார். அதேபோல தற்போது விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எனது அப்பா மீது திடீரென்று பாசம் பொங்கி உள்ளது. இவை அனைத்தும் திமுகவின் சூழ்ச்சியால் தான் நடக்கிறது. தற்போது நடைபெற்று வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கியமான மூன்று பேர் தான் காரணம்.

அவர்களின் சுய லாபத்திற்காக ராமதாசை பயன்படுத்துகின்றனர். தற்போது அவருக்கு வயது முதிர்வு ஆகிவிட்டது அதனால் குழந்தையாகவே அவர் மாறிவிட்டார்.அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே. அதிலும் தைலாபுரத்திற்கு சி வி சண்முகம் வந்த போது எதற்காக இங்கு வந்துள்ளார் என்று கேட்டேன். சிவி இங்கு பத்திரிக்கை வைப்பதற்காக தான் வந்தார் என்று ராமதாஸ் கூறினார். ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்ததாக அதன் பின்னர் தெரிவித்தனர்.

வயது முதிர்ந்த காலத்தில் மருத்துவர் ராமதாசை 3 பேர் அவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உதயநிதி காலில் விழுந்த சேகர்பாபு!! தீயாக பரவும் வைரல் வீடியோ!!

DMK: திமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் உதயநிதிகிடையே அவ்வபோது தேவையற்ற வாக்குவாதங்கள் நிலவுவதுண்டு. அதிலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் உதயநிதிக்கும் இடையே பெரும் மோதல் போக்கு இருந்தது. இந்த மோதல் போக்கானது உட்க்கட்சிக்குள் முடிந்து விட்டாலும் தற்போது வரை அது ரீதியான பேச்சு இருந்து தான் வருகிறது.

அதிலும் சேகர் பாபு ஸ்டாலின் குடும்பத்துடன் மிகவும் நெருக்கம். குறிப்பாக அவரது மனைவிதான் இவருக்கு பெரிய தலைவர் என்றே கூறலாம். இவர்களுக்குள் உருவான மோதல் ஸ்டாலினிடம் செல்வதற்கு முன் அவரது தாயின் ஆதரவு முழுவதுமே சேகர்பாபு பக்கம்தான் இருந்ததாம். சமீபத்தில் கூட துர்கா ஸ்டாலினை வழிய அனுப்பி வைத்த சேகர் பாபு கார் கதவை மூடும் பாணியில் அவர்களது காலை தொட்டு வணங்கினார்.

அந்த வீடியோ இணையத்தில் பரவியது. அதேபோல தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் சேகர்பாபு யாரும் பார்க்கவில்லை என நினைத்து உதயநிதியின் காலை தொட்டு வணங்கியுள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன் நடந்த விவாதத்திற்கு பொதுவெளியில் இப்படி சேகர்பாபு மன்னிப்பு கேட்பது போல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

அமித்ஷா சொன்ன வார்த்தை.. கூட்டணியை முறிக்க எடப்பாடி ஆலோசனை!! கதிகலங்கும் கமலாலயம்!!

ADMK BJP: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிரிந்தது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை தனித்தனியே களம் காண நேரிட்டது. இதில் ஒரு சில இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்தது. மேற்கொண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்ப்பதற்காக மீண்டும் இவர்களது கூட்டணியானது ஒன்றிணைந்துள்ளது. அதிலும் பல குழப்பங்கள் நிலவி வருகிறது.

விஜய் புதிய கட்சி தொடங்கி, எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு கட்டாயம் ஆட்சியில் பங்கு எனக் கூறினார். இவர்களுடன் ஆரம்ப கட்டத்தில் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தி சரி வராததால் தான் பாஜகவுடன் கைகோர்க்க நேரிட்டது. மற்றொருபுறம் விஜய்யின் இந்த அறிவிப்பை அடுத்து இதர கூட்டணி கட்சியினர் அவர்களது தலைமைக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதன் தாக்கமானது தற்போது வரை இருந்து வருகிறது.

அந்த வகையில் பாஜகவும் இலை மீதுதான் தாமரை மலரும், கட்டாயம் வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் நடக்கும் எனக் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். மேற்கொண்டு தமிழகம் வந்த அமித்ஷாவும் இதையே தான் கூறியுள்ளார். இதனால் எடப்பாடி மிகவும் அதிருப்தியில் உள்ளாராம். இது பாஜக தானே எடுத்த விருப்பம் என்னிடம் இது ரீதியாக இதுவும் ஆலோசிக்கவில்லை என நிர்வாகிகளிடம் கூறியுள்ளாராம். இதனால் சட்டமன்ற தேர்தலுக்குள் இவர்களது கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் 2026; ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் இபிஎஸ்!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தங்களது கட்சிகளை பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதல் தேர்தல் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

மேலும் அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். முதல் கட்டமாக வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை விழுப்புரம், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இது குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமி  மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு ஜூலை 7ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை முதல் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.

ஜூலை 7ஆம் தேதி கோவை புறநகர் சட்டமன்ற தொகுதியான மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். ஜூலை எட்டாம் தேதி கோவை மாநகர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.

ஜூலை பத்தாம் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், ஜூலை 11ஆம் தேதி வானூர், மயிலம், செஞ்சி, ஜூலை 12ஆம் தேதி கடலூர் ,பண்ருட்டி, ஜூலை 14ஆம் தேதி குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை,நன்னிலம், திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, உள்ளிட்ட பகுதிகள் வரை 21 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்

இனி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்; தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

ஒவ்வொரு நபருக்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது. எந்த ஒரு அரசு திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மகளிர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது

ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முடியும். இந்நிலையில் தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது, செயல்படுத்த இருக்கின்றன சென்னை உட்பட பத்து மாவட்டங்களில் இத்திட்டம் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் சோதனை அடிப்படையில் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

முதல் கட்டமாக மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் ரேஷன் கடையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு, உள்ளிட்ட பொருட்கள் வாயிலாக இந்த பொருட்கள் அனைத்தும் வழங்கப்படுகின்றது.

தமிழகத்தில் இரண்டு கோடி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் ரேஷன் கார்டின் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக் முறையில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்றுச் செல்லலாம்.

இதில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களின் சார்பில் வேறு ஒருவரை வைத்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறது.

முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை சோதனை அடிப்படையில் இந்த  திட்டம் செயல்படுத்தப்படும். 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை, கடலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, ஈரோடு, நாகை, நீலகிரி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் திட்டம் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மாதந்தோறும் முதல் வாரத்தில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் சென்றுவிடும் அதனால் அவர்கள் அலைய வேண்டிய தேவை இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டமானது முன்கூட்டியே ஆந்திராவில் செயல்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் சில நடைமுறைகள் சிக்கல்கள் இருந்தன. அதனால் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை தமிழக அரசு தொடங்கி செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்

ராமதாஸுக்கு மறைமுக ஆதரவு.. திமுக கூட்டணிக்குள் உண்டாகும் விரிசல்!! இடத்தை காலி செய்யும் திருமா!!

DMK VSK: திமுகவில் கூட்டணி கட்சியிலிருந்து ஒன்று விக்கெட்டாக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்ப கட்டத்திலிருந்து எங்களின் தோழமைக் கட்சி விடுதலை சிறுத்தைகள் தான் என திமுக கூறி வந்தாலும் ஒரு அடி அவர்களை தள்ளி வைத்து தான் பார்க்கின்றனர். இதனை பல பொது நிகழ்ச்சிகளில் காண முடிந்தது. அவ்வளவு ஏன் திருமாவே பொதுக் கூட்டம் ஒன்றில் எங்கள் சமூகத்தில் இருந்து ஒருவர் கூட முதல்வர் பதவிக்கு வர முடியாது என நேரடியாகவே கூறியிருந்தார்.

அப்படி கூறும் அவரே, உடனடியாக திமுக உடனான எங்கள் கூட்டணி பலமாக தான் உள்ளது எனவும் தெரிவிப்பார். கூட்டணியில் இருந்துக் கொண்டே மறைமுகமாக திமுகவை சாடி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கும் திருமாவா வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்குள் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற போவதாக கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பாமக ராமதாஸ் திமுகவுடன் இணைய மும்முரம் காட்டி வருவதுதான். அதுமட்டுமின்றி திமுக-வும் மறைமுக ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

திமுக வுடன் பாமக இணைந்தால் கட்டாயம் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று திருமா கூறியுள்ளார். இந்நிலையில் ராமதாஸ் திமுகவுடன் இணைய விருப்பப்படுவது தற்போது அளித்து வரும் பேட்டிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அப்படி திருமா கட்சியை விட்டு வெளியேறும் பட்சத்தில் கட்டாயம் புதிய கட்சி உடன் கைகோர்க்கலாம் என கூறுகின்றனர். இது நடக்கும் வகையில் நேற்று மார்க் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்துள்ளார்.

அதில், திருமா மாற்றி மாற்றி பேசுகிறார் ஒரு முறை குறைந்த தொகுதி மற்றொரு முறை அதிக தொகுதி என நிலையற்று இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேபோல குறைந்த தொகுதி கொடுத்தால் எந்த கூட்டணி கட்சியும் ஒத்துக் கொள்ளாது என்பதையும் தெரிவித்துள்ளார். இதை வைத்துப் பார்க்கையில் திமுகவும் கூட்டணி கட்சிகள் அனைவரும் இம்முறை அதிகப்படியான தொகுதிகளை கேட்க உள்ளதாக தெரிகிறது. அதே சமயம் பாமக உள்நுழைந்தால் திருமா வெளியேறுவது உறுதி.

பெண் குழந்தைக்கு சனாதன அறிவு வேண்டும்.. திருமா போல இருக்க கூடாது!! அண்ணாமலை சர்ச்சை பேச்சு!!

BJP: கன்னியாகுமரியில் இருநூறு ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த ராமர் கோவிலானது மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழாவில் தற்போதைய பாஜக மாநில தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அண்ணாமலை மாணவர்கள் சனாதனத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறி அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர் பேசியதாவது, குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது பொட்டை அழித்துக் கொண்டும், வெளியே வரும்போது பொட்டு வைத்துக் கொண்டும் இருந்தால் திருமா செய்வது போல் தான் நாமும் செய்கிறோம், அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். நாம் அனைவரும் சமம் தான். மத சார்பின்மையை கற்பிப்பதாக கூறி குழந்தைகளை ருத்ராட்சம் மற்றும் திருநீர் வைக்க கூடாது என கூறுகிறோம். ஆனால் அது மிகவும் தவறு.

நம்முடைய மத அடையாளத்தை குழந்தைகளிடம் சொல்லித் தர வேண்டும். அதேபோல மற்ற மதமும் இதேபோல் ஒன்றுதான் என்பதையும் கற்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி தமிழக அரசு உணர வேண்டும் என்றும் கூறினார். அதிலும் ஒரு பெண் குழந்தை பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லவில்லை என்றால் இந்த குழந்தை எப்படி சனாதன தர்மத்தை காப்பாற்றும் என்று கேள்வி கேட்டுள்ளார்.

மேற்கொண்டு இந்து மத தர்மத்தில் நம் வாழ்கிறோம் அதனால் குழந்தைகள் திருநீறு ருத்ராட்சம் அணிந்து செல்லட்டும் எனக் கூறியுள்ளார். திருமாவளவனை ஒப்பிட்டு குழந்தைகளை வைத்து சனாதனம் குறித்து தற்போது பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் சமூக வலைத்தள பக்கங்களை முடக்கிய அன்புமணி ராமதாஸ்! கொந்தளிக்கும் தொண்டர்கள் 

கடந்த சில மாதங்களாக பாமகவில் உட்கட்சி பிரச்சனை பூதாகரமாக போய்க் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அப்பா மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது என்று கூறிய நிலையில் இளைஞர் அணி தலைவராக தனது மகள் வழி பேரனான முகுந்தனை மருத்துவர் ராமதாஸ் அறிவித்த போது மேடையிலேயே அதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் மூலமாக அப்பா மகனுக்கிடையேயான அதிகார போட்டி வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. அந்த மேடையிலேயே இனிமேல் தானே தலைவராக செயல்படுவதாகவும், அன்புமணி ராமதாஸ் செயல்தலைவராக செயல்படுவார் எனவும் அறிவித்தார். அதற்கு அன்புமணி ராமதாஸ் தான் பனையூரில் தனி அலுவலகம் திறந்துள்ளதாகவும், தன்னை சந்திப்பவர்கள் அங்கு சந்திக்கலாம் என்றும் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சென்னைக்கு அருகே பனையூரில் தனி அலுவலகம் திறந்து தனக்கான ஆதரவாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலோனோர் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தனர். இந்த புறக்கணிப்புக்கு காரணமாக அன்புமணி ராமதாஸ் உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இரு தரப்பிலும் தங்களுக்கான ஆதரவாளர்களை திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக ஒரு சிலரை நீக்கியும் வேறு சில தங்களுக்கு ஆதரவானவர்களை அந்த பொறுப்பில் நியமித்தும் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் கட்சியின் பொருளாளர் திலகபாமா, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் உள்ளிட்டோரை நீக்கி அவர்களுக்கு பதிலாக பொருளாளராக சையத் மன்சூர் உசேன் மற்றும் பொதுச்செயலாளராக முரளி சங்கர் உள்ளிட்டோரை நியமித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவர் ராமதாஸ் அவர்களின் சமூக வலைத்தள பக்கங்களை செயல்படாமல் முடக்கி அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் முடக்கி வைத்துள்ளனர். தமிழக அரசியலில் மக்கள் பிரச்சனைகளுக்காக முதல் நபராக குரல் கொடுப்பதும், அது சார்ந்த அறிக்கைகளை உடனுக்குடன் வெளியிடுவதும் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே.

இந்நிலையில் அவரின் அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை மக்கள் தெரிந்து கொள்வதை தடுக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் அவரது சமூக வலைத்தள கணக்குளை முடக்கி செயல்படவிடாமல் செய்துள்ளனர். இதனை கண்டித்து பாமக தொண்டர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

பொதுசெயலாளர் பதவி.. என் மகனுக்கு தர வேண்டும்!! ஸ்டாலினிடம் பேரம் பேசும் துரைமுருகன்!!

DMK: திமுகவில் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஸ்டாலினுக்கிடையே வெளியே தெரியாத அளவிற்கு உட்கட்சிக்குள்ளேயே அதிருப்தி நிலவி வருகிறது. அதிலும் துரைமுருகனுக்கு உதயநிதியின் அசுர வளர்ச்சியானது சிறிதும் பிடிக்கவில்லை. இதனை பல மேடைகளில் அவர் சூசகமாக பேசியதை வைத்து தெரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு எதிராக துரைமுருகனை டம்மி ஆக்க வேண்டும் என உதயநிதியும் பல செயல்பாடுகளை முன்னிறுத்தினார்.

சமீபத்தில் துரைமுருகன் நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டவர் என்று சுட்டிக்காட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு கட்சி சம்பந்தமான தகவல்களை வேறு ஒருவரிடம் பகிர்ந்ததாக ஸ்டாலின் காதிற்கு சென்றதாக கோட்டை வட்டாரங்கள் பேசினர். இப்படி இருக்கையில் தற்போது ஐந்து பொதுச் செயலாளர்கள் இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு உதயநிதி பொதுச்செயலாளராக நியமிக்கப் போகிறார்கள் என்ற பேச்சு அடிபட்டு வந்தது.

ஆனால் ஸ்டாலின் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். தற்போது துரைமுருகன் நான் பொதுச்செயலாளர் பதவியில் நீண்ட காலம் நீடிக்க முடியாது வயது மூப்பாகிவிட்டது, அதிலும் தேர்தல் வரும் சமயத்தில் துடிப்புடன் செயல்படும் வேறொருவரை நியமிக்கலாம் என்ற ஒரு யோசனையில் உள்ளாராம். அந்தப் பதவியையும் தனக்கே தர வேண்டுமென்று உதயநிதி கேட்டுக் கொண்டுள்ளதால் துரைமுருகனிடம் சுமுகமான முறையை அணுகியுள்ளனர்.

அவராகவே பதவியை விட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் துரைமுருகன் ஸ்டாலினுக்கு பல டிமாண்டுகளை வைத்துள்ளாராம். தற்போது எம்பி ஆக இருக்கும் எனது மகன் கதிர் ஆனந்துக்கு அமைச்சரவையில் முக்கிய ஒரு பொறுப்பை வழங்க வேண்டும். எனக்கு அடுத்து எனது வாரிசு அரசியல் பயணமானது தெளிவாக இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம்.

இது செய்தால் மட்டுமே எந்த ஒரு சர்ச்சையுமின்றி கட்சியை விட்டு விலகுவேன் என்று கூறியுள்ளார். இது ரீதியாக ஸ்டாலின் மற்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.