Friday, July 4, 2025
Home Blog Page 7

பாமகவால் துரைமுருகனுக்கு வந்த சோதனை! சமயம் பார்த்து காய் நகர்த்திய ஸ்டாலின்

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த பாமகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி பிரச்சனை நிலவி வருகிறது. தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனையாக ஆரம்பித்து தற்போது இரு அணிகளாக பிரிந்து செயல்படும் சூழல் நிலவி வருகிறது. பாமகவில் தொடரும் இந்த பிரச்சனை தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி விவகாரமானது கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் தற்போது கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையே நிலவும் கருத்துப் வேறுபாடுகளால், அக்கட்சியின் பலமான வன்னியர் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர் சமூக வாக்கு வங்கி என்பது தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறது. இந்த வாக்குகள் பாமக, அதிமுக மற்றும் திமுக போன்ற முக்கிய கட்சிகளுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன. பாமகவில் உள்ள உட்கட்சி குழப்பம், வன்னியர் வாக்கு வங்கியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளதோடு, இந்த தாக்கமானது அதனைச் சுற்றியுள்ள மற்ற கட்சிகளிலும் எதிரொலிக்கிறது.

பாமக வலுவிழந்ததால், திமுகவிலும் அதிமுகவிலும் உள்ள வன்னியர் சமுதாயத் தலைவர்களின் செல்வாக்கு மற்றும் முக்கியத்துவம் குறைந்துவிடும் நிலை உருவாகிறது. மறைந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி காலத்திலிருந்தே தங்கள் கட்சி பொறுப்புகளில் வன்னியர்களுக்காக உரிய பிரதிநிதித்துவம் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் பாமக அல்லது அக்கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி வேட்பாளரை சமாளிக்கும் வகையில் எதிர் தரப்பில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருவது வழக்கம். அதே போல பாமகவின் வியூகங்களை தகர்க்க அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளிலும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருவது வழக்கம்.

அந்த வகையில் குறிப்பாக திமுக சார்பாக பல ஆண்டுகளாக வன்னியர் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் திமுக பொருளாளர் பதவியை துரைமுருகன் வகித்து வருகிறார். இந்நிலையில் வன்னியர் சமூக வாக்குகளை ஆதாரமாக கொண்ட பாமகவில் உட்கட்சி பிரச்சனை தொடருவதால் திமுகவில் துரைமுருகனின் நிலையும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீப காலமாக துரைமுருகனின் செயல்பாடுகள் குறைந்து காணப்படுவதும், திமுகவில் இளைஞர்களுக்கு உயர்பதவிகள் வழங்கப்படுவது உள்ளிட்ட காரணங்களை கூறி இவருடைய பொறுப்பு பறிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சமயம் பார்த்து, எதிர்காலத்தில் துரைமுருகனை பொருளாளர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் திமுக தலைமையிலிருந்து வரலாம் என்கிறார்கள் அரசியல் வட்டாரங்கள். இது, வன்னியர் சமூகத்திற்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தினாலும் அந்த இடத்திற்கு வேறு ஒரு வன்னியரை நியமித்தால் அதையும் சரி செய்து விடலாம் என திமுக தலைமை திட்டமிட்டு வருகிறதாம்.

ஏற்கனவே திமுகவில் அதிகாரமிக்க தலைவராக இருந்த சேலத்தை சேர்ந்த மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தை திமுகவிலிருந்து முற்றிலும் ஓரம் கட்டியதை போல துரைமுருகனையும் ஓரம்கட்ட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. செல்வாக்கு மிக்க தலைவரான வீரபாண்டியாரை ஓரம் கட்டிய போதே பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லாததை புரிந்து கொண்ட திமுக தலைமை பாமக உட்கட்சி விவகாரம் தீவிரமாக போய்க் கொண்டிருக்கும் சூழலில் துரைமுருகன் பதவிக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

ரேஷன் அட்டையில் இந்த எழுத்து இருக்கா; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!

ஒவ்வொரு நபருக்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக உள்ளது. ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே அரசு தரக்கூடிய நலத்திட்ட உதவிகளை பெற முடியும், மேலும் அரசு சார்பாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.

மலிவு விலையில் பொருட்கள் பெற முடியும். அதனால் ஒவ்வொரு நபரும் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மகளிர்களுக்கு ரேஷன் அட்டையின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அரசு மக்களுக்கு அதிர்ச்சி தரும் அளவிற்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ஏபிஎல் ரேஷன் கார்டு அதாவது வறுமைக் கோட்டுக்கு மேல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் கோதுமை வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது

இந்த குடும்பங்களுக்கு அதிக அளவு ரேஷன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அளவை அரசு குறைத்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு 15 கிலோ கோதுமை மற்றும் 20 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும். ரேஷன் ஒரு கிலோ கோதுமைக்கு இரண்டு ரூபாய் மற்றும் ஒரு கிலோ அரிசிக்கு மூன்று ரூபாய் என்ற விகிதத்தில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராது.

அதனால் இந்த சட்டத்தின் கீழ் மற்றும் பிஹெச். அட்டைதாரர்கள் மட்டுமே மானிய விலையில் ரேஷன் பெறுகின்றனர். குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக வருவதில்லை அதனால் அவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் மாநில அரசின் பொறுப்பாக உள்ளது.

இந்த புதிய முறை மாநிலங்களின் நிதி செலவுகளை அதிகரித்து வருகின்றது. அண்மையில் தெலுங்கானா அரசு ரேஷன் கார்டுகளில் 17 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளது இது ஒவ்வொரு மாதமும் சுமார் 6000 டன்னுக்கு மேல் அரிசியின் சுமையை மாநிலத்தின் மீது சுமத்தியுள்ளது

ஏபில் உறுப்பினர்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராததால் இந்த ரேஷன் தொகையை மாநில அரசு இந்த முடிவிலிருந்து ஏபிஎல் குடும்பங்களுக்கு ரேஷன் வழங்கும் பொறுப்பு முழுமையாக மாநில அரசின் மீது விழுந்து இருக்கின்றது.

ஏபிஎல் அட்டை வைத்திருப்பவர்கள் அரசு திட்டங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்கள். தற்போது ரேஷன் வழங்கப்படும் அளவிலும் குறைத்து இருப்பதால் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்

பள்ளி மாணவர்களுக்கு பறந்த உத்தரவு; இனி இப்படி பண்ணா சிறுவர் சீர்திருத்த பள்ளி தான் கதி!

அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அரசு பேருந்தில் தான் பயணம் செய்கின்றனர்.அவ்வாறு அரசு பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பள்ளிகளுக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவது வழக்கமாகி வருகின்றது.

இதனால் விபத்துக்கள் ஏற்படுவதால் இதனை உடனடியாக தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது. அந்த வகையில் திருச்செந்தூரை சேர்ந்த நபர் ஒருவர் மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரத்தின் பொழுது கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதை தடுப்பதற்காக பள்ளி நேரமான காலை மற்றும் மாலை நேரத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதாடினார்கள்.

அதனை கேட்ட நீதிபதிகள் மனுதாரர்கள் சொல்லுவது நடைமுறைக்கு மாறாக இருக்கிறது. பேருந்துகளில் இருக்கைகள் இருந்தாலும் தொங்கிக்கொண்டு பயணிப்பதை தான் மாணவர்கள் அதிக அளவில் விரும்புகின்றனர் மற்றும் ஓட்டுநர்கள் எச்சரித்து மாணவர்கள் கேட்காமல் இருப்பதினால் சென்னை போன்ற நகரங்களில் மாணவர்கள் பேருந்து மேற்கூரையில் ஏறி மோதலில் ஈடுபடுகின்றனர்.

படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்பாக அதிக அளவு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் மாணவர்கள் இனி படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் மாணவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரிடும் மாணவர்கள்

பேருந்துக்குள் இருக்கை இருப்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் இருக்கையில் இருந்தாலும் படிக்கட்டில் தான் அதிக அளவு பயணம் செய்கின்றனர், இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமின்றி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது .

இதனை தவிர்ப்பதற்காக தற்போது நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இனி பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யாமல் நடத்துனர் மற்றும் பேருந்து ஓட்டுனர் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையா; இந்த சான்றிதழ் உடனே உங்க கையில் கிடைக்கும்!

அரசு மருத்துவமனையில் தற்போது அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் பெரும்பாலான பெண்கள் அங்கேயே சிகிச்சை பெற்று பிரசவம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ரிஜிஸ்டர் ஜெனரல் அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு பிரசவத்திற்கு பின்பு மருத்துவமனையில் இருந்து அவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறுவதற்கு முன்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழை பெற்றோர்களிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறப்பதினால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் திருமண பதிவு போன்றவற்றுக்கு ஒரே ஆவணமாக இருப்பது பிறப்புச் சான்றிதழ் தான்.

அதனால் இந்த சட்டம் கடந்த 2023 முதல் அமலில் உள்ளது. ஆர். ஜி.ஐ அலுவலகம் வெளியிட்டு அறிவிப்பில் குழந்தை பிறப்பு பதிவு செய்யப்பட்ட உடன் 7 நாட்களுக்குப் பிறகு சான்றிதழ் தாய்மார்களுக்கு வழங்க வேண்டும்

இந்த சான்றிதழ் எலக்ட்ரானிக் அல்லது பிற வடிவங்களில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏதேனும் ஒரு வகையால் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் .இந்தியாவில் தற்போது பிறப்புச் சான்றிதழின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்து வருவதினால் அரசு மருத்துவமனைகளில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகள், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் முதன்மை சுகாதார மையங்களில் பிறப்பதினால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசு மற்றும் தனியார் சேவைகளை எளிதாக பெற முடியும். இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விசிக கூட்டணி; காரசாரமான பதிலை அளித்த திருமாவளவன்!

விசிக தலைவர் திருமாவளவன் அரியலூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலமாக திருச்சி வந்தடைந்தார். விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

அதில் அரசியல் சூழல் குறித்து செய்தி அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு தொல் திருமாவளவன் பதில் அளித்தார். திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது போன்ற யூகமான கேள்வி தற்போது கேட்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் பாஜக, பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என ஒரு நிலையான நிலைப்பாடு, எடுத்திருக்கின்றோம் குறைந்த தொகுதி கொடுத்தாலும் திமுக கூட்டணியில் இருப்போம் என கூறுவதால் எங்கள் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள் அதனால் அவர்களை கொள்கை அடிப்படையில் செழுமைப்படுத்தி வைத்திருக்கிறோம்

தொகுதி எண்ணிக்கை குறித்து எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது, இனியும் வராது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தெரிய வரும்.

இந்த முறை பேச்சுவார்த்தையின் போது நல்ல பலன் இருக்கும் என எதிர்பார்க்கின்றோம். திமுக கூட்டணியை மட்டுமே குறிவைத்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். இது தேவையா என பதிலளித்துள்ளார், திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் புல்லட்டில் லாரன்ஸ் கனியமுதன், சக்தி ஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, விசிக, உள்ளிட்ட கட்சிகளிடம் கூட்டணி குறித்து அதிகளவு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் விசிக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு காரசாரமான பதிலை தொல் திருமாவளவன் வழங்கியுள்ளார்.

ரோஹித் சர்மாவுடன் அறையை பகிர்ந்த ஷிகர் தவான் – காதலியை ரகசியமாக அறைக்குள் அழைத்த கதை!

இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் ஷிகர் தவான், கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியா A  அணி ஆஸ்திரேலியா சென்ற சுற்றுப்பயணத்தில் நடந்த ஒரு காதல் சம்பவத்தை தனது சுயசரிதையில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த பயணத்தின்போது, தவான் ஒரு அழகிய பெண்ணிடம் காதலில் விழுந்தார். பின்னர், அவர் இருந்த ஹோட்டல் அறையில் ரோஹித் சர்மாவுடன் தங்கியிருந்த போது, அந்த காதலியை ரகசியமாக அறைக்குள் அழைத்து வந்ததாக அவர் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஒரு நேர்மையான மற்றும் தைரியமான நபராக பல்வேறு நிகழ்வுகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பவராகவும், மைதானத்தில் இருந்தாலும் வெளியிலும் எப்போதும் கவர்ச்சிகரமான தன்மையை பேணுபவராகவும் இருக்கிறார். இந்நிலையில் 2006-ஆம் ஆண்டு நடந்த தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை அவர் சமீபத்தில் தன்னுடைய சுயசரிதையில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா A சுற்றுப்பயணத்தை நினைவுகூரும் அவர், அந்தப் பயணத்தின் போது ஒரு பெண்ணுடன் காதலாகி, பின்னர் ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்த ஹோட்டல் அறைக்குள் அந்த காதலியை ரகசியமாக அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்த ரோஹித்தின் ரியாக்சனையும் தவான் பகிர்ந்துள்ளார். அவர்களின் காதல் பற்றிய தகவலானது அணியில் வைரலாக  பரவியது என்றும் அவர் தெரிவித்தார்.

“அவள் மிகவும் அழகாக இருந்தாள். திடீரென எனக்கு மீண்டும் காதலாகிவிட்டது! ‘அவள்தான் என் வாழ்க்கைத் துணை, நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன்’ என்ற எண்ணமே என் உள்ளத்தில் இருந்தது,” என அவர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

“ஒரு பயிற்சி ஆட்டத்தில் நான் அரைசதம் அடித்து தொடங்கினேன், பயணம் நன்றாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும், எலெனை (அவளது உண்மையான பெயர் அல்ல) சந்திக்கப் போவேன். பின்னர், நான் ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்த ஹோட்டல் அறைக்குள் அவளை ரகசியமாக அழைத்துச் செல்லத் தொடங்கினேன். சில நேரங்களில் ரோஹித் ஹிந்தியில் கமெண்ட் பண்றார்: ‘தூங்க விடறயா?’”

“ஒரு நாள், நான் எலெனுடன் இரவு உணவுக்கு செல்லும் போது, அவளின் வருகை அணி முழுவதும் தீபவானைப் போல பரவியது. ஒரு மூத்த தேசிய தேர்வாளர், நாங்கள் லாபியில் கைகளை பிடித்துக் கொண்டு நடப்பதை பார்த்தார்.”

“அவளது கையை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணமே எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று நம்பினேன். அந்த ஆஸ்திரேலியா பயணத்தில் நான் நன்றாக ஆடியிருந்தால், இந்தியா மூத்த அணிக்குள் சேர வாய்ப்பு இருந்தது. ஆனால் என் ஆட்டத்தின் தரம் குறைந்துகொண்டே வந்தது.”


🏏 ஷிகர் தவானின் கிரிக்கெட் சாதனைகள்:

  • ODI: 167 போட்டிகள் – 6793 ரன்கள் – சராசரி: 44.11 – 17 சதங்கள், 39 அரைசதங்கள்

  • Test: 34 போட்டிகள் – 2315 ரன்கள் – சராசரி: 40.61 – 7 சதங்கள், 5 அரைசதங்கள்

  • T20I: 68 போட்டிகள்

ஏர் இந்தியா விமான விபத்து: ஆய்வு செய்ய ஐ.நா. வானூர்தி நிபுணருக்கு அனுமதி மறுப்பு – இந்தியா தீர்மானம்

இந்தியாவிலுள்ள அஹமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி ஏற்பட்ட பயங்கர ஏர் இந்தியா விமான விபத்துக்கான விசாரணையில், ஐக்கிய நாடுகள் வானூர்தி அமைப்பின் (ICAO) நிபுணர் ஒருவரை இணைக்க முடியாது என இந்தியா மறுத்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

260 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த Boeing 787-8 Dreamliner விமான விபத்தில், பிளாக் பாக்ஸ் தரவுகள் பற்றிய விசாரணை மந்தமாக இருப்பதை விமானப் பாதுகாப்பு நிபுணர்கள் ஏற்கனவே விமர்சித்திருந்தனர். இதையடுத்து ICAO அமைப்பு, இந்தியாவுக்கு தனது ஒரு நிபுணரை உதவிக்கு அனுப்ப முன்வந்தது. ஆனால் இந்திய அதிகாரிகள் அந்த உதவியை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஐ.நா. வானூர்தி அமைப்பு விண்ணப்பம் செய்தது:

  • ICAO அமைப்பு, இந்தியாவில் இருக்கும் தனது நிபுணருக்கு “விசாரணை பார்வையாளர்” (Observer) அந்தஸ்து வழங்குமாறு கேட்டிருந்தது.

  • ஆனால், இந்திய அதிகாரிகள் அதனை உறுதியாக மறுத்துள்ளனர்.

  • இதுதொடர்பான தகவலை Times Now தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது.

முன்னதாக, 2014 இல் மலேசிய விமானம் மற்றும் 2020 இல் உக்ரேனிய ஜெட்லைனர் வீழ்த்தப்பட்டது போன்ற சில ஆய்வுகளுக்கு உதவ சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு புலனாய்வாளர்களை அனுப்பியுள்ளது, ஆனால் அந்த நேரத்தில் ஏஜென்சியிடம் உதவி கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

AAIB (Aircraft Accident Investigation Bureau) எனப்படும் இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு, உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த இந்த மிகப்பெரிய விபத்துக்கான விசாரணையைத் தலைமை வகிக்கிறது. அவர்கள் இதுகுறித்த எந்தவொரு கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. மேலும் ICAO அமைப்பும் இதுகுறித்து உடனடி பதிலை வழங்கவில்லை என்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பிளாக் பாக்ஸ் தரவுகள்:

  • விமான விபத்திற்கு 2 வாரங்களுக்குப் பிறகு பிளாக் பாக்ஸ் (Flight Recorder) தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக இந்திய சிவில் விமான பயண அமைச்சகம் கூறியுள்ளது.

  • ஜூன் 13ம் தேதி முதல் பிளாக் பாக்ஸ் ஒன்று, பின்னர் ஜூன் 16ம் தேதி இரண்டாவது பாகம் மீட்கப்பட்டிருந்தது.

  • இது இந்தியாவிலேயே படிக்கப்படுமா அல்லது அமெரிக்காவில் உள்ள National Transportation Safety Board (NTSB) மூலம் நடத்தப்படுமா என்பதிலும் தெளிவுகள் இல்லாமல் இருந்தன.

முடிவுகள் எதற்காக முக்கியம்?

  • Annex 13 எனப்படும் சர்வதேச விமானவழி சட்டத்தின் கீழ், பிளாக் பாக்ஸ் தரவுகள் எங்கு, எப்போது, எப்படிப் படிக்கப்படும் என்பது விபத்து தடுப்பு நோக்கில் உடனடியாக முடிவு செய்யப்பட வேண்டும்.

மெதுவாக வரும் தகவல்கள்:

  • இந்திய அரசு இதுவரை ஒரே ஒரு செய்தியாளர் மாநாட்டை மட்டும் நடத்தியுள்ளது. அதிலும் ஏற்கனவே தயாரித்த அறிக்கையை வாசித்துவிட்டு எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

முன் அறிக்கை எப்போது?

  • பெரும்பாலான விமான விபத்துகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன. எனவே, முதல் கட்ட அறிக்கை விபத்துக்குப் பின் 30 நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு, இந்தியாவின் விமான விபத்து விசாரணையில் வெளிப்படைத்தன்மை குறைபாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மறுக்கும் போக்கு குறித்து கவலைக்குரியதாக்கி உள்ளது.

ஹிமாசல் பிரதேசத்தில் கன மழை, மேக வெடிப்பு, நிலச்சரிவுகள் – 5 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்

கடந்த 24 மணி நேரத்தில் ஹிமாசல் பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் மழையால் மூன்று மேக வெடிப்புகள், ஒன்பது இடங்களில் திடீர் வெள்ளங்கள், மற்றும் மூன்று இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஒருவர் காயமடைந்துள்ளார் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, குல்லு மாவட்டத்தில் மூவர், காங்கிரா மாவட்டத்தில் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களை கண்டறிய SDRF (மாநில பேரிடர் மீட்பு படை), NDRF (தேசிய பேரிடர் மீட்பு படை) மற்றும் ஹோம் கார்ட்ஸ் உள்ளிட்ட குழுக்கள் தீவிரமாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 21 பேர் வெற்றிகரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தரம்சாலாவில் மேக வெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் NDRF வீரர்கள் இடைநீக்கம் மற்றும் மீட்பு பணிகளை போர்க்கால நடவடிக்கையாக மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ஷிம்லா நகரிலிருந்து உயரதிகாரிகளுடன் ஆன்லைன் மூலம் நிலைமையை ஆய்வு செய்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 24 மணி நேரமும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், ஆறுகள் மற்றும் ஆற்றங்கரைகளில் வசித்து வரும் மக்கள், குறிப்பாக வேலை தேடி வந்து தங்கிய பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு கடுமையான உத்தரவு வழங்கியுள்ளார்.

மழை காரணமாக ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஹிமாசல் பிரதேசத்தில், மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்; அதிமுகவின் முதல் வாக்குறுதியை அளித்த இபிஎஸ்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை அளித்துள்ளார்.

அண்ணாவை எப்போது விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் பதிலடி கொடுத்திருக்கின்றார். அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்து விட்டதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகின்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தால் இந்த மண் தந்தை பெரியார், பயன்படுத்திய மண் அண்ணாவால் மேன்மைப்படுத்தப்பட்ட மண் இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் இழிவுபடுத்தி பேசும் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம் அண்ணா பெயரையே அவர்கள் அடமானம் வைத்து விட்டார்கள் எனவும் பேசி இருக்கின்றார். தன்மானம் உள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளில் நோக்கத்தை புரிந்து அவர்கள் பாடம் புகட்ட தயாராக இருக்கின்றனர்.

அதற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருக்கின்றார். எங்கள் கொடியிலும் எங்கள் பெயரிலும் இருக்கும் அண்ணாவை ஒருபொழுதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

அண்ணாவின் கொள்கைக்கு மாறாக குடும்ப ஆட்சி நடத்திக்கொண்டு கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார் அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

கச்சத்தீவு முதல் காவேரி வரை தமிழ்நாட்டை அதன் உரிமைகளை அடகு வைத்ததும் வைக்க துணிவதும் திமுக தான் என குறிப்பிட்டு பேசியிருக்கின்றார்.

மேலும் தமிழ்நாட்டின் அமைதி வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டு தருவேன். இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி என குறிப்பிட்டு இருக்கின்றார்

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் இருந்தால் போதும்!

தமிழக கூட்டுறவுத்துறையானது பயிர் கடன்களை மிகக் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இடுப்பொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பயிர் கடன் வழங்கப்படுகின்றது.

பயிர் கடனில் 30% புதிய உறுப்பினர்களும் 20% பட்டியலில் வகுப்பு விவசாயிகளும் சேர்க்கப்பட்டு பயிர் கடன் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் பயிர் கடன் பெறுவதில் எளிய வசதிகளை கூட்டுறவு துறை தற்போது கொண்டு வந்துள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது முக்கியமாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணைய வழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதி கூட்டுறவு செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அதனால் ஒரு சில புகார்கள் அவ்வப்போது ஏற்படுகின்றது.

அண்மையில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மட்டுமே பயிர் கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்புக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தனர்.மேலும் கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழக அரசு உடனடியாக விளக்கம் தந்துள்ளது.

கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். பயிர் கடனை பெறுவதற்கு கூட்டுறவு வங்கிகளில் ஒரிஜினல் சிட்டா, அடங்கல், கணினி சிட்டா, ஆதார் நகல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி சேமிப்பு புத்தகம் முதல் பக்கம், வங்கி கடன் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டா, போன்றவற்றை ஆவணங்களாக கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ஜாமீன் போடும் நபர்களின் போட்டோவும் அதனுடன் இணைக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் நேரில் வரவேண்டும் என்றும் தற்போது கூறியிருக்கின்றனர். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்க செல்லும் விவசாயிகளிடம் இவ்வாறு ஜாமின்தாரர் உத்தரவாதம் கேட்டு நெருக்கடி தரப்படுகிறது என புகார் அளிந்துள்ளது. இந்த புகாரை அதிகாரிகள் மறுத்து இருக்கின்றனர் பெறப்பட்டு கடன் வழங்குவதாக விளக்கம் கூறப்பட்டுள்ளது