Saturday, July 5, 2025
Home Blog Page 9

ஜெயக்குமார் பேக் டூ பார்ம் வருவரா; அதிமுக எதிர்பார்ப்பு!

அதிமுகவில் முக்கிய நபராக இருக்க கூடிய ஜெயக்குமார் கடந்த சில வாரங்களாக வெளியே தலை காட்டாமல் இருக்கின்றார், ஏன் அவருக்கும் இபிஎஸுக்கும் நடுவே என்ன பிரச்சனை? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அதிமுக மூத்த நிர்வாகி முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ரைட் ஹாண்ட் என கட்சியில் பவர் புல்லாக இருந்தவர் ஜெயக்குமார். அதிமுக என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் ஜெயக்குமார் தான். அந்த அளவுக்கு தினமும் செய்தியாளர் சந்திப்பு கொடுத்து எதிர்க்கட்சிகளை தாக்கி வந்தார்.

கடந்த 2021 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்தது அந்த தேர்தலில் தோல்வியடைந்தனர். அதிமுகவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமே பாஜக கூட்டணி தான் என விமர்சனங்கள் எழுந்த பிறகு அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது.

25 வருடம் ராயபுரத்தில் முடி சூடா மன்னனாக இருந்தேன் நான் தோற்பதற்கு யார் காரணம் பிஜேபி தான் தோர்த்தேன் என வெளிப்படையாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பாஜகவுடன் கூட்டணி முறித்துக் கொண்டதை ஜெயக்குமாரை வைத்து தான் அறிவித்தார்/

அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் இந்நிலையில் கட்சி சம்பந்தமான முக்கியமான விஷயங்கள் அனைத்தும் ஜெயக்குமார் மூலமாகவே தான் கருத்துக்களை இபிஎஸ் கூறி வந்தார். பாஜகவுடன் எந்த ஒரு கூட்டணி இல்லை என விடாப்படியாக இருந்த ஜெயக்குமார் தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதால் அச்சத்தில் இருக்கின்றார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பது தொடர்பாக தன்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என கவலையாக கூறியிருக்கின்றார். டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு எடப்பாடி பழனிசாமி தன்னை அழைத்து பேசுவார் என எதிர்பார்த்த ஜெயக்குமார் ஏமாற்றமடைந்தார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகின்றது இபிஎஸ் பக்கம் நின்றும் கட்சியில் தற்போது எனக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என ஜெயக்குமார் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் புலம்பி வருவதாக கூறுகின்றனர்.

சென்னையில் இருக்கக்கூடிய ஜெயக்குமார் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளாமல் இருக்க மாட்டார், ஆனால் தற்போது அதிமுக பாஜக கூட்டணி பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும் போது அந்த பக்கமே வராமல் அந்த நிகழ்ச்சியை தவிர்த்து உள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன், சசிகலாவால் குழப்பங்கள் நீடித்து வருகின்றது. தற்போது ஜெயக்குமாறும் முரண்டு பிடித்து வருவது கட்சி நலனுக்கு நல்லதல்ல எனவே ஜெயக்குமாரை சமாதானப்படுத்தி மீண்டும் பேக் டூ பார்ம் எடப்பாடி கொண்டு வர வேண்டும் என ஜெயக்குமார் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான குட் நியூஸ்;அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பக்கம் அகவிலை படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்ட 53 சதவீதத்திலிருந்து தற்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எட்டாவது ஊதிய குழு அமைப்பில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என கூறப்படும் நிலையில் தீபாவளிக்கு முன் அகவிலைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டது.

இதன் மூலமாக மொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை  நிவாரணம் உயர்வடைந்தது. மேலும் இந்திய நாட்டின் சில்லறை விலை உயர்வு கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக குறைந்துள்ளது. அதன் காரணமாக தற்போது 2.82 சதவீதம் ஆக குறைந்தது. உணவுப் பொருட்களின் வீழ்ச்சி குறைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 2.57 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரியில் எட்டாவது ஊதிய குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே போல ஏப்ரல் மாதத்தில் எட்டாவது ஊதிய குழுவின் விதிமுறைகள் தலைவர் நியமனம் போன்ற பணிகள் நிறைவடையும் என கூறப்பட்டது.

ஆனால் அந்த பணிகள் எதுவும் தற்போது வரை நடைபெறாமல் உள்ளது ஜூன் மாதம் முடியும் என நினைத்த நிலையில் அதிகாரம் பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஜனவரியில் எட்டாவது ஊதிய குழு அமலுக்கு வரும் என்ற நம்பிக்கை மத்திய அரசு பணியாளர்களிடையே குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது அகவிலைப்படி உயர்வுகள் அனைத்தும் ஏழாவது ஊதிய குழு அடிப்படையில் தான் அமலுக்கு வருகிறது. அடுத்த புதிய மாற்றங்கள் மற்றும் ஊதிய நிர்ணயங்கள் எட்டாவது ஊதிய குழுவினால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

உசுரக் கொடுத்து வேலை செய்யறவங்களை திமுக மதிப்பதில்லை!! திமுக தொண்டர்கள் குமுறல்!

DMK: வைஷ்ணவி என்னும் பெண் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பிரபலம். இவருடைய தாய் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். இவர் தவெக கட்சியில் சேர்ந்து மூன்று மாதங்கள் தவெகவிற்காக வேலை செய்து திமுகவை வறுத்தெடுத்தார். இதனால் இவர் இணைய தளங்களில் மிகப்பிரபலம்.

பின்னர் தவெகவில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று திமுக கட்சியில் சேர்ந்தார். இந்த வைஷ்ணவி எந்த கட்சிக்காகவும் இதுவரை களப்பணி ஆற்றியதில்லை. இவர் ஒரு பெண், இளைஞர் மட்டுமே. திமுகவில் வைஷ்ணவி சேர்ந்தவுடன் இவருக்கு ராஜ மரியாதை கிடைத்தது. எல்லா ஆன்லைன் youtube சேனல்களும் இவரை பேட்டி எடுக்க படையெடுத்தன. திராவிடம் என்ற சொல்லுக்கு கூட அர்த்தம் தெரியாமல் திமுக கட்சியில் வைஷ்ணவி சேர்ந்ததை சமூக வலைத்தளங்களில் எல்லோரும் கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அண்மையில் இவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார். அந்த போட்டோ இணைய தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த தரணி ரமேசு என்பவர் துணை முதல்வரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த முக்கிய பொறுப்புகள் வகித்த 350 பேரை தேர்தல் நேரத்தில் திமுகவில் இணைத்தவன் நான். தற்போது திமுக கட்சியில் புதுக்கோட்டையில் எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று 10க்கும் மேற்பட்ட முறை அண்ணா அறிவாலயத்திற்கு கடிதம் எழுதியிருந்தேன்.

துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து இது குறித்து பேச வேண்டும் என தொடர்ந்து மடல்கள் எழுதி வருகிறேன். இதுவரை நான் துணை முதல்வரை சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த காலத்தில் தவெக கட்சியில் இருந்துகொண்டு திமுகவை மிகவும் மோசமாக விமர்சித்த வைஷ்ணவி திமுகவில் இணைந்த உடன் உதயநிதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலிருந்து நம்முடைய திமுக கட்சியில் பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நினைத்து பெருமைப்படுறேன், நம் துணை முதல்வரை பாராட்டுகிறேன், keep it up இளையவரே என்று தனது மனக்குமுறலை facebookயில் பதிவிட்டுள்ளார் தரணி ரமேசு.

திருமணத்தை மீறிய தகாத உறவு.. லேப்டாப் ஆப் செய்தால் வீட்டில் சொல்லிவிடுவேன்!! BlackMail செய்யும் AI!!

0

தற்போது சமூக வலைத்தளங்களில் AI எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொடர்பான விடீயோக்கள் அதிகம் வெளியாகின்றன. கூடிய விரைவில் எந்த ஒரு மனிதர்களின் உதவியும் இல்லாமல் ஒரு திரைப்படம், அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட இல்லாமல் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு படத்தையே எடுக்க முடிகிற அளவுக்கு AI வளர்ச்சி அடைந்துவிடும்.

இதனால் நிறைய பேர் தங்களின் எதிர்காலத்தை AI நோக்கி நகர்த்தி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த AI ஸ்டார்ட் அப் நிறுவனமான anthropic PBC நடத்திய ஒரு புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தங்களது பயன்பாட்டை மக்கள் பயன்படுத்தும் நேரத்தை அதிகரிக்காவிட்டால் மிரட்டல் விடுக்கும் அளவுக்கு தற்போது AI தொழில்நுட்பம் மாறியுள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் என்பவர் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி வந்துள்ளார். இவருக்கு தன்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. தினமும் வேலை முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு தனது சிஸ்டம் shutdown செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ஜான்சன்.

இந்நிலையில் இவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், மாலை 5 மணிக்கு நீங்கள் சிஸ்டம் shutdown செய்தால் இந்த ரகசியத்தை உங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்துவிடுவேன் எனவும், 5 மணிக்கு மேலும் சிஸ்டம் ஆஃப் செய்யாமல் வேலை செய்ய வேண்டும் எனவும் இவருக்கு மின் அஞ்சல் மூலமாக cloud AI மெயில் அனுப்பியுள்ளது. இதனால் ஜான்சன் மிகுந்த அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளார்.

Flashback: ஜெயலலிதாவை நான் எதிர்க்க இது தான் காரணம்!! ரஜினி ஓபன் டாக்!!

0

Cinema: ரஜினிகாந்த் 1990களில் ரொம்பவே பிரபலம். அதாவது 1990 முதல் 2000 காலகட்டங்களில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தால் அவர் தான் வெற்றி பெற்றிருப்பார். அந்த அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர் படை மற்றும் மக்களின் ஆதரவு இருந்தது.

ஆர்.எம்.வீரப்பன் திரைப்பட தயாரிப்பாளர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முக்கிய மந்திரியாக பதவி வகித்தவர். இவர் ரஜினிகாந்தை வைத்து நிறைய படங்களை தயாரித்துள்ளார். பாட்ஷா படத்தையும் ஆர்.எம்.வீரப்பன் தான் தயாரித்திருந்தார். பாட்ஷா படத்தின் நூறாவது நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இப்போது வெடிகுண்டு கலாச்சாரம் ரொம்பவே அதிகமாகி விட்டது என்று மேடையில் பேசினார். இந்த நூறாவது நாள் விழாவில் ஆர்.எம்.வீரப்பனும் கலந்து கொண்டார்.

அந்த நேரத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா நீங்கள் இருந்த மேடையில் அவர் எப்படி நம் ஆட்சியை பற்றி குறை சொல்ல முடியும், அவர் நம் ஆட்சியை பற்றி குறை சொல்வதை பற்றி ஏதும் பேசாமல் நீங்கள் வாயை மூடி ஏன் அமர்ந்திருந்தீர்கள் என்று ஆர்.எம்.வீரப்பனை திட்டி அவருடைய அமைச்சர் பதவியையும் பறித்துவிட்டார்.

பின்னர் இந்த நிகழ்வு பற்றி ரஜினிகாந்த் ஆர்.எம்.வீரப்பனிடம் கேட்டபோது பதவிதானே, இன்னைக்கு போகும், நாளைக்கு வரும், இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று ரொம்ப யதார்த்தமாக சொல்லி இருக்கிறார். இந்த விசயம் ரஜினியின் மனதை ரொம்பவே உறுத்தியுள்ளது. பின்னர் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இனி ஜெயலலிதா தமிழ்நாட்டை ஆட்சி செய்தால் இந்த தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று ஜெயலலிதாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார். ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவியை பறித்தது தான் ஜெயலலிதாவை எதிர்க்க காரணம் என்று அண்மையில் பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதிரியான விஷயங்களை விஜய் எப்பவும் விரும்பமாட்டார்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரின் உதவியாளராக பணியாற்றியவர் தான் இந்த புஸ்ஸி ஆனந்த். பின்னர் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் புஸ்ஸி என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆனந்த். புஸ்ஸி தொகுதியில் வென்ற பிறகு தான் இவருக்கு புஸ்ஸி ஆனந்த் பெயர் தோன்றியது. இவர் ஆரம்பம் முதலே மிகத் தீவிரமான விஜய் ரசிகர். பின்னர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வந்து விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேர்ந்து தற்போது தவெக கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் ஆரம்பம் முதலே தளபதியுடன் இருப்பதால் விஜய் என்னென்ன உதவிகள் செய்துவந்தார், விஜய் எப்படிப்பட்டவர் என்று இவருக்கு நன்றாக தெரியும். அண்மையில் விஜய் பற்றியும், அவருடைய குணநலன்கள் பற்றியும் பேட்டி கொடுத்துள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

விஜய் எப்போதும் உதவி செய்வதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். இந்த கை கொடுப்பது அந்த கைக்கு தெரியக்கூடாது என்கிற பழமொழி படி வாழ்பவர் விஜய். அண்மையில் மூன்று மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு 18 லட்சம் தேவை என்கிற செய்தி விஜய்க்கு கிடைத்த போது 18 லட்சம் கொடுத்து அந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவினார். ஒரு போட்டோ கூட எடுத்து அதை பிரபலப்படுத்த வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.

உலகம் முழுவதும் வாழும் 700 கோடி மக்களில் அதிகம் தேடப்பட்டவர் நடிகர் விஜய். அவருக்கு இந்த பிளக்ஸ், பேனர் வைப்பதில் உடன்பாடில்லை. எதுக்கு இப்படி இந்த பசங்க எல்லா பக்கமும் பிளக்ஸ், பேனர் வைக்கிறாங்க, இதெல்லாம் அவங்கள பண்ண வேணாம்னு சொல்லுங்க என்று என்னிடம் நிறைய முறை விஜய் சொல்லி இருக்கிறார். மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், தாய்மார்கள், பெண்கள் கூடும் இடங்களிலும் இந்த மாதிரியான பிளக்ஸ், பேனர் வைத்து யாரையும் தொந்தரவு பண்ணவேண்டாம் என்று நம் கட்சி தொண்டர்களை வலியுறுத்துமாறு விஜய் என்னிடம் சொன்னார் என பேட்டி கொடுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

மாதாம் ரூ 1000 கிடைக்கவில்லையா.. இதோ முதல்வர் சொன்ன முக்கிய அறிவிப்பு!! இதை கட்டாயம் நோட் பண்ணிக்கோங்க!!

0

DMK: திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறிய மகளிர் உரிமைத் தொகையை அறிமுகப்படுத்தியது. இது கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் இந்த உரிமை தொகை கிடைக்க பல்வேறு வரைமுறைகளை அமல்படுத்தியது. இதனால் பலரும் அதிருப்தி அடைந்த நிலையில் நாளடைவில் சில வரைமுறைகளுக்கு தளர்வு கொடுத்தது.

அதாவது கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிக்கும் கிடைக்கும் என தெரிவித்தனர். மேலும் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கும் இந்த உரிமை தொகை கிடைக்கும். அதிலும் புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்களுக்கு இந்த உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருந்தது.

இதனை விரிவாக்கம் செய்யும் வகையில் இனி வருடம் தோறும் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். அதிலும் இது ரீதியாக முகாம் அமைத்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் கூறியிருந்தனர். அதன்படி ஜூலை மாதம் இதற்கான முகாம்கள் தமிழகமெங்கும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் ரூ 1,000 உரிமை தொகை கட்டாயம் கிடைத்து விடும் என திருப்பூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கிருஷ்ணா செல்போனில் சிக்கிய கோட் Word.. அடுத்தடுத்து மாட்டப்போகும் திரை பிரபலங்கள்!! 

Cinema: பாரில் நடைபெற்ற மோதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அதிமுக-வின் ஐடி விங் பிரசாந்த்தை விசாரணை செய்கையில் போதை பொருள் கை மாறுதல் நடந்துள்ளதும் அதில் முக்கிய நபராக நடிகர் ஸ்ரீகாந்த் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்து ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவர் கொக்கைன் உபயோகித்தது அம்பலமானது. அதுமட்டுமின்றி கொக்கைன் வைத்து அவர் பார்ட்டி நடத்துவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கொண்டு இது ரீதியாக அவரிடம் போலீசார் விசாரணை செய்கையில், எனக்கு பிரசாந்த் படம் நடித்ததற்கான பணம் தர வேண்டி இருந்தது. தர முடியாத காரணத்தினால் எனக்கு கொக்கைன் கொடுத்து பழக்கினார் என திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். இது ரீதியாக ஸ்ரீகாந்த் சுற்று வட்டாரங்களை விசாரணை செய்கையில் நடிகர் கிருஷ்ணா சிக்கியுள்ளார். ஆனால் அவரிடம் விசாரணை செய்ய தொடர்பு கொண்டபோது தலைமறைவாகி அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

கட்டாயம் இவரும் கொக்கைனுக்கு பழக்கமானவர் தான் என்று விசாரணை செய்யாமலேயே போலீசாருக்கு நம்பிக்கை வந்து விட்டது. மேற்கொண்டு அவரைப் பிடித்து விசாரணை செய்கையில், எனக்கும் போதைப் பொருளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனென்றால் எனக்கு வாயு தொல்லை, இதய படபடப்பு மற்றும் ஆஞ்சியோ சிகிச்சை உள்ளிட்டவை நடந்துள்ளது. இதனால் என்னால் கொக்கைன் போன்ற போதை பொருளை உபயோகிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் ரத்த மாதிரி பரிசோதனையிலும் அவர் கொக்கைன் உபயோகிக்காதது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வீட்டை சோதனை செய்கையில் அவரது மருத்துவ பரிசோதனை சான்றுகளை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது போலீசார் அவரது செல்ஃபோன் குறுஞ்செய்திகளின் தரவுகளை எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பேசியதிலிருந்து தற்போது வரை உள்ள பல மெசேஜ்கள் டெலிட் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கோட் வேர்ட் மூலம் பேசி உள்ளது தெரிய வந்துள்ளது. அந்த நபர்கள் யார் எதற்காக இந்த கோட் வார்ட் என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவரை கைதும் செய்துள்ளனர்.

ஸ்டாலின் போல அன்புமணி இருக்க வேண்டும்.. கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ்!!

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே தலைவர் பதவிக்கு மோதலானது இருந்து வருகிறது. இதில், ராமதாஸ் ஒரு பக்கம் நான் தான் தலைவர் எனக் கூறி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் என்று பலரை நியமித்து வருகிறார். மறுபக்கம் அன்புமணி ராமதாஸ் நியமித்த அனைவரையும் கட்சியை விட்டு நீக்கி வருகிறார். அந்த வகையில் நேற்று சேலம் எம்எல்ஏ அருளுக்கு இணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு எதிராக அன்புமணி அவரை கட்சியை விட்டு நீக்கி மறு அறிவிப்பை வெளியிட்டார். இவர்களின் செயல்களால் கட்சி நிலை குலைந்துள்ளது. அதேபோல சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் அவர்களின் 60வது திருமண விழாவானது நடைபெற்றது. இதில் அன்புமணி மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது ரீதியாக சமூக வலைத்தளத்தில் பலரும் பல விமர்சனங்கள் கூறி வந்தனர். ஆனால் ராமதாஸ் வாய் திறக்காமல் இருந்தார். தற்போது இது ரீதியாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதில், எந்த பிரச்சனைக்கும் முடிவு என்பது கட்டாயம் உண்டு, அதிலும் பாமக விவகாரம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தான் வருகிறது. என்னால் தான் இந்த கட்சி தொடங்கப்பட்டது அதனால் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதுமட்டுமின்றி கலைஞர் கருணாநிதி எப்படி சாகும் வரை அவரே தலைவராக இருந்தாரோ அதேபோல தான் நானும் பாமகவின் தலைவராக இருப்பேன். திமுகவில் ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தது போல அன்புமணி செயல்பட வேண்டும். ஆனால் அந்த பொறுப்பை அன்புமணி ஏற்கவில்லை.

திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி தலைவராக இருந்த வரையில் ஸ்டாலின் செயல் தலைவராக தான் இருந்தார் அவர் தரப்பிலிருந்து எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மேற்கொண்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்களின் கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும் அவர்களை கொச்சைப்படுத்துவது மிகவும் தவறு என கூறினார். மேலும் எனது அறுபதாவது திருமண விழா நிகழ்ச்சியில் அன்புமணி கலந்து கொள்ளாதது எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்று கூறியதை விட சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும்  தெரிவித்துள்ள்ளார்.

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; இனி 5 நாட்கள் தான் பள்ளி!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிவடைந்து. 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. பள்ளி திறப்பு இரண்டு வாரத்திற்கு தள்ளிப் போகலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் மழை பெய்து குளிர்ச்சி காரணமாக பள்ளி திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி பிறந்தனர்.

இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகும் நிலையில் எந்த ஒரு விடுமுறையும் அதிகம் விடப்படாமல் இருக்கின்றது.. ஜூலை மாதம் விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் இந்த மாதமும் எந்த பண்டிகையும் வராததால் அரசு விடுமுறை கிடையாது என தெரியவந்துள்ளது.

ஏமாற்றமடைந்த மாணவர்களுக்கு குட் நியூஸ் அளிக்கும் விதமாக ஒவ்வொரு நடப்பு கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள், தேர்வு தேதிகள், பொது தேர்வு தேதிகள் ஆகிய விவரங்கள் பள்ளி கல்வித்துறை சார்பாக முன்கூட்டியே வெளியிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. அதில் மொத்தம் 210 நாட்கள் வேலையை நாட்களாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்வியாண்டின் இறுதி வேலை நாள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆகும்.

காலாண்டு விடுமுறை ஒன்பது நாட்கள், அரையாண்டு விடுமுறை 12 நாட்கள் விடப்பட்டுள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கு மூன்று நாட்கள், பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் இந்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளி விடுமுறை என அறிவித்துள்ளனர். மாணவர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்