மாற்று இடம் தாருங்கள்:! வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பழங்குடியினர் போராட்டம்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் ஆதிவாசி பழங்குடி மக்கள் சுமார் 2,500 பேர் வாழ்ந்து வருகின்றனர்.இதில் கள்ளார் என்னும் குறிப்பிட்ட வனப்பகுதியில் 23 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கள்ளார் என்னும் பகுதி முழுவதுமாக சேதமடைந்து மண்சரிவு ஏற்பட்டதனால் அங்கிருந்த மக்கள் தங்களின் உயிரை காத்துக் கொள்ள அந்த இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் குடிசை அமைத்தனர்.

ஆனால் அந்த இடத்தில் குடிசை அமைக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அப்பகுதி மக்கள் வட்டாட்சியரிடம் தங்கள் நிலைமையை எடுத்துக்கூறி தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு வட்டாட்சியர் சார்பில் விரைவில் உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறி அவர்களை,
தாய்முடி தேயிலை தோட்ட குடியிருப்பில் தங்க வைத்துள்ளனர்.ஆனால் அந்த ஒரு வருடத்திற்குள் இவர்களுக்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் மாறி போகவே இவர்களின் கோரிக்கை கிடப்பில் கிடந்தது.

இதனால் வேதனை அடைந்த பழங்குடியினர் புதிதாக வந்த வட்டாட்சியரிடம் மாற்று இடம் வழங்க கோரி மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.இருந்தபோதிலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பழங்குடியினர் மாற்று இடம் வழங்க கோரி சுதந்திர தினமான நேற்று நடைபயணம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.இதனை அறிந்த வட்டாட்சியர் சமாதானபடுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.இருந்தாலும் அவர்கள் வனப்பகுள்ளே பாதகைகளை ஏந்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர்கள் மற்றும் பல அதிகாரிகள் விரைவில் மாற்று இடம் வழங்கப்படுமென்று உத்தரவு அளித்ததன் பிறகு அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.