அதிர்ச்சி! கோழி பண்ணையை பசுமை தொழில் பிரிவில் இருந்து நீக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
152

அதிர்ச்சி! கோழி பண்ணையை பசுமை தொழில் பிரிவில் இருந்து நீக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் கோழி வளர்ப்பு மிகப் பெரிய தொழிலாக இருக்கின்றது.பெரிய முதலீட்டாளர்கள் உட்பட சிறு குறு தொழிலாளர்கள் வரை கோழிப் பண்ணையின் மூலம் பெரும் முதலீட்டினை அடைந்து வருகின்றன.கோழி பண்ணைகளால் சுற்றுச்சூழலுக்கும்,
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்ற முந்திய முடிவுகளால் இந்த கோழி பண்ணை தொழிலானது பசுமை தொழில் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால் விற்பனைக்காக நாம் கோழி பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு ரசாயன உணவுகளை கொடுத்தும் மருந்துகளைக் கொடுத்தும் வழங்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் திடக்கழிவுகள் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிப்படையச் செய்வதாகவும்,எவ்வாறு பிராய்லர் கோழி சாப்பிடுவதனால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றனவோ அதேபோன்றுதான் இதிலிருந்து வெளிவரும் கழிவுகளால்,நீர் நிலம் காற்று ஆகியவை பெரிதும் மாறுபடுகின்றன என கூறி,இந்த தொழிலை பசுமை தொழில் பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று விலங்குகள் நல் ஆர்வலர் கௌரி மவுலேகி பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய தலைமை நீதிபதி ஏகே கோயல்,
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, கோழி பண்ணையை பசுமை தொழில் பிரிவிலிருந்து ரத்து செய்வது பற்றி ஆராய்ந்து மூன்று மாதங்களில் தனது உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.மேலும் தீர்ப்பு வரும் வரை காற்று நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள்,கோழி பண்ணையால் மாசு ஏற்படுவதை தவிர்க்க விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி, சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அதிகாரிகளுக்கும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கோழி பண்ணையில் இருந்து வெளியேறும் திடக்கழிவு மற்றும் இறந்த கோழிகளை அப்படியே தூக்கி எறிவதுதானால் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இதுமட்டுமின்றி இறந்த கோழிகள் அழுகும் பொழுது ஈக்கள்,நாய்கள் மற்றும் பிற பூச்சி வகைகளை ஈர்க்கின்றது.இதனால் கோழிப் பண்ணை அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதி மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதுமட்டுமின்றி இவை நச்சு வாயுக்களையும்,
அமிலங்களையும் உற்பத்தி செய்கின்றது.இதனால் கோழிப்பண்ணைகள் தீவிர நீர் மற்றும் காற்று ,சுற்றுச்சூழல் மாசுபாட்டை உற்பத்தி செய்ய காரணமாக இருக்கின்றது என்று நீதிபதி கோயில் விளக்கம் அளித்துள்ளார்.