ரூட்டை மாற்றும் ஸ்டாலின்.. இதற்கெல்லாம் காரணம் “அமுதா” ஐஏஎஸ் தான்!! மாறப்போகும் பதவி!!
கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரமானது தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் ஸ்டாலினுக்கு இது பெரும் அடியாகத்தான் உள்ளது.இதில் ஆளும் கட்சி சம்பந்தமில்லாமல் எதுவும் நடந்திருக்காது என்று எதிர்க்கட்சி முதல் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் வரும் பட்சத்தில் இந்த நிகழ்வு திமுகவிற்கு சற்று பின்னடைவையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய இரண்டு ஐஏஎஸ் மற்றும் எஸ் பி மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் அதன் வெளிப்பாடாக இவர்கள் பதவி மாற்றம் செய்யக்கூடும் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்பொழுது வரை 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.இதற்கு பெரிய அதிகாரிகள் உடந்தை தான் என்று கூறினால் அவர்கள் முழுமையாக அதனை ஒப்புக்கொள்ள வில்லை.கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது கூட தெரியாமலிருந்த ஐஏஎஸ் அதிகாரியை பதவி மாற்றம் செய்துள்ளனர்.
மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த எஸ் பி ஐ சஸ்பெண்ட் செய்துள்ளனர்.ஆனால் மாவட்ட ஆட்சியருக்கு எப்படி இது பற்றி தெரியாமல் இருக்கும் அவரை மற்றும் ஏன் பதவி மாற்றம் செய்தனர் என்று பலரின் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.அது மட்டுமின்றி அந்த வட்டத்தின் தாசில்தார் வி இ ஓ என அனைவருக்கும் இது பற்றி தெரிந்தும் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் வாய் திறக்காமல் இருந்துள்ளனர்.
இவர்கள் மீதும் ஏன் அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஐஏஎஸ் அதிகாரியான அமுதா மீது மீண்டும் முதல்வர் கோபத்தில் உள்ளாராம்.முன்னதாகவே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளதுரை அவர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட விவகாரம் முதல்வர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
அச்சமயத்தில் முதல்வர், என் கவனம் கொண்டு வராமல் இவ்வாறான உத்தரவிட்டது தவறு என்று எச்சரிக்கை ஒன்றையும் அமுதாவிற்கு கொடுத்ததாக தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு அமல் குறித்த நிர்வாக பொறுப்பானது உள்துறை செயலாளர் அமுதா கையாண்டு வரும் நிலையில் இது குறித்து சோதனை செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்காது என அதிருப்தியில் உள்ளாராம்.மேலும் இதனை காரணம் காட்டி அவரை பதவி மாற்றம் செய்யலாம் என்றும் கூறுகின்றனர்.