அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் கூறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை…!!

0
234
#image_title

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் கூறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை…!!

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தற்போதுவரை மாணவர்கள் மற்றும் அலுவலகம் சார்ந்த பல்வேறு பணிகளை பேப்பர் ஒர்க்கில் தான் செய்து வருகிறார்கள். இதனை வீடுகளுக்கு எடுத்து செல்வது கஷ்டம். ஒருவேளை பள்ளி நேரத்திற்குள் இந்த பணியை முடிக்க முடியாமல் போனால் கூடுதலாக அமர்ந்து பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி பேப்பர் ஒர்க் என்பதால், முக்கியமான ஆவணங்களை தவறவிடுவது, ஆவணங்கள் சேதமடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை தடுக்கும் வகையிலும், ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

அதன்படி, இனி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வரும் கல்வியாண்டு முதல் மாணவர்களின் அனைத்து விதமான செயல்பாடுகளையும் ஆன்லைனில் மேற்கொள்ளலாமாம். அதற்காக அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் டேப்லெட் வழங்கப்படவுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், இவை முடிந்ததும் ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்கப்பட்ட உள்ளதாம். முதல்கட்டமாக 79,723 டேப்லெட்கள் வழங்க திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் முறையான பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்படுமாம். இந்த டேப்லெட்கள் பல்வேறு வகைகளில் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஅரசு ஊழியர்கள் எடுத்த ரிவெஞ்.. ஆடிப்போன ஸ்டாலின்!! கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!
Next articleஆளுமையற்றதலைமை.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையை விமர்சித்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி..!