தமிழ்நாட்டின் பழம்பெரும் நாடக, மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர். இவர் 80 மற்றும் 90களில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரை ஒரு நடிகராக மட்டுமே நாம் அறிந்திருந்த நிலையில், வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் இவர் இருக்கும் தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டையில் பள்ளியில் பயிலும்போதே பள்ளி நாடகங்களில் மேடை ஏறினார். இவரது அண்ணனான பூர்ணம் சந்திரன் (எழுத்தாளர் உமாசந்திரன்) அனைத்திந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் பணியில் இணைந்தார்.
தனது 18வது வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தன் அண்ணனைப் பின் தொடர்ந்து 1945 இல் அகில இந்திய வானொலியின் தில்லி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணிக்கு சேர்ந்தார். 1947இல் அகில இந்திய வானொலியில் முதன் முறை இந்தியா விடுதலைச் செய்தியைக் கூறிய பெருமை இவரையே சாரும்.
சுஜாதா அவர்களுடைய நாடகத்தைப் படித்து வியந்த பூர்ணம் விசுவநாதன் அந்த ஆண்டே தில்லியிலிருந்து பணிமாறுதல் பெற்று 1965 இல் சென்னையில் குடியேறினார். அதன்பிறகு எழுத்தாளர் சுஜாதா வின் 10 நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதன் மேடை ஏற்றினார். 1979ம் ஆண்டு துவங்கி 1997ம் ஆண்டு வரை அவர் நாடகங்களை நடத்தி வந்தார். ஒரு கொலை.. ஒரு பிரயாணம், அடிமைகள், கடவுள் வந்திருக்கிறார், அன்புள்ள அப்பா, வாசல், ஊஞ்சல், சிங்கம் அய்யங்காரின் பேரன், பாரதி இருந்த வீடு உள்ளிட்ட 10 நாடகங்களை சுஜாதா எழுதி, பூர்ணம் விஸ்நாதன் மேடை ஏற்றினார்.
நாடகங்களைத் தொடர்ந்து சினிமா துறையிலும் தடம் பதித்தவர், இதுவரையில் 86 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர், சங்கீத நாடக அகடமி விருதினையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.