சுத்தமான காற்றை சுவாசிக்கும் நகரம் இது மட்டும் தானாம்.. இதில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?

Photo of author

By Rupa

நாம் 2024 வருடத்தின் கடைசி காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் தான், அதிக அளவில் “பண்டிகைகள்” கொண்டாடப்படுகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் நிறைய பண்டிகைகள் மற்றும் விழாக்கள் நடக்கும் காலமாகவும், குளிர்களமாகவும் இருக்கும். இதனால் காற்று மாசுபடுகிறது. வாகனங்களின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வாகன போக்குவரத்தால், தொழிற்சாலைகள் பெருக்கத்தினாலும் காற்று மாசுபாடு வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் முக்கியமாக நமது இந்தியாவின் தலைநகரம் டெல்லி காற்று மாசுபாடு கொண்ட நகரங்களில் பட்டியலில். முதலிடத்தை பிடித்துள்ளது.

இதை குறைக்க பல முயற்சிகள் இந்திய அரசாங்கத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த நகரம் ஒன்று சுத்தமான சுவாசிக்க ஏற்ற காற்றை கொண்ட நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

காற்றின் மதிப்பை கணக்கிடும் தரக்குறியீடு பற்றி சொல்லப்பட்டிருக்கிறது:

0 – 50 வரை – இருக்கும் நகரங்கள் சிறப்பான நகரமாக கருதப்படுகிறது.

51-100 வரை -இருக்கும் நகரங்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும்,

100 – 200 வரை இருக்கும் நகரங்கள் நடு நிலையானதாகவும்,

200 – 300 வரை இருக்கும் நகரங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும்,

300 – 400 வரை இருக்கும் நகரங்கள் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் கணக்கிடப்படுகிறது.

தலைநகர் டெல்லியை பொறுத்தவரை காற்றின் நிலை மிக மோசமான நிலையை குறிக்கும் “350 க்கு மேல்” உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தூய்மையான நகரங்களின் பட்டியல்:

1. ஐஸ்வால் – மிசோரம் – (குறியீடு) 50,

2. பாகல்கோட் – கர்நாடகா – (குறியிடு) 46,

3. சாம்ராஜ்நகர். கர்நாடகா – (குறியீடு) 44,

4. கவுகாத்தி – அசாம்- (குறியீடு) 82,

5. கொல்லம் – கேரளா – (குறியீடு) 61,

6. நாகோன் – அசாம் – (குறியீடு) 56,

7. ராமநாதபுரம் – தமிழகம் – (குறியீடு) 68,

8.ரிஷிகேஷ் உத்தரகாண்ட் – (குறியீடு) 73,

9. ஸ்ரீநகர். ஜம்மு காஷ்மீர் – (குறியீடு) 80,

10. திருச்சூர் கேரளா – (குறியீடு) 50.

என்ற இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு “7 வது இடத்தில்” உள்ளது குறிப்பிடத்தக்கது.