பெண் குழந்தைகளுக்கான மிகச்சிறந்த பரிசு இதுதான்! பெற்றோர்களே உடனே முந்துங்கள்!

0
62

பெண் குழந்தைகளை இன்று நாடு முழுவதும் கொண்டாடுவர். அவர்களுடைய எதிர்கால நலனுக்கு இந்த ஒரே ஒரு பரிசு மட்டும் போதும். அதுதான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இதன் முழு விவரம் தொடர்பாக இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இந்தியாவில் பெண்களுக்கான சமத்துவமின்மை, பெண் கல்வி, பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், சமுதாயத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

இந்நாளில் பெண் குழந்தைகளின் எதிர்கால நலன் மீது அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த முடிவை மேற்கொள்ளலாம். அதாவது, தங்களுடைய பெண் குழந்தையின் எதிர்காலத்துக்கான இந்த சேமிப்பு திட்டத்தை ஆரம்பிக்கலாம்.

பெண் குழந்தைகளின் வருங்கால நலனுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய தபால் துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் தபால் அலுவலகங்களில் இந்த திட்டத்துக்கான கணக்கை ஆரம்பிக்கலாம். இதில் செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோரோ அல்லது அந்த குழந்தையின் பாதுகாவலரோ இந்த சிறு சேமிப்பு திட்டத்தை அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே ஆரம்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு தம்பதியர் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தை ஆரம்பிக்க முடியும்.

ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1.50 லட்சம் வரையில் முதலீடு செய்ய இயலும். குழந்தையின் ஆதார் அல்லது பிறப்புச் சான்றிதழ் தேவைப்படும். அதோடு பெற்றோரின் ஆதார் அட்டையும் தேவை.

இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. சிறுசேமிப்பு திட்டத்திலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தான் அதிக வட்டி கிடைக்கிறது என்று சொல்லப்படுகிறது.

21 வயதில் கணக்கை முடிக்கும் போது 3 மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பெண்ணுக்கு 24 வயதாகும் போதோ அல்லது திருமணத்தின் போதோ இந்த கணக்கில் உள்ள ஒட்டுமொத்த தொகையும் எடுத்துக்கொண்டு கணக்கை முடித்து விடலாம்.

இந்த செல்வமகள் சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கும் போது முதல் கட்டமாக 250 ரூபாய் செலுத்தினால் போதுமானது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் செலுத்த வேண்டும்.

கணக்கு ஆரம்பித்ததில் இருந்து 15 வருடங்கள் வரையில்தான் சேமிப்பு தொகையை செலுத்த முடியும். காசோலை, வரைவோலை மூலமாக பணத்தை டெபாசிட் செய்யலாம். இணையதளம் மூலமாக பரிவர்த்தனை செய்யும் வசதியும் இதில் இருக்கிறது. டெபாசிட் செய்ய தவறினால் கணக்கு கைவிடப்படும். அதன் பிறகு 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி தான் கணக்கை புதுப்பிக்க முடியும்.