இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்:! இதன் முக்கியத்துவம் என்ன?

0
232

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்:! இதன் முக்கியத்துவம் என்ன?

உலகெங்கிலும் இருக்கும் பெண் குழந்தையின் சமத்துவமின்மையை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தை தினமாக அறிவிக்கப்பட்டது.

இந்த தினத்தின் முக்கியத்துவம்:!

பாலின சமத்துவமின்மையை குறைக்கவும்,பெண் குழந்தைகளுக்கான சமத்துவம் மற்றும் உரிமையை நிலைநாட்டவும்,பெண் சிசுக்கொலையை தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வை தடுக்கவும்,கல்வி சார்ந்த பிரச்சினைகளை சரி செய்யவும், ஐக்கிய நாடு சபைகளால் இத்தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இத்தினத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கான பாலியல் வன்புணர்வு குறித்தும்,பெண் குழந்தைகளுக்கான சமத்துவத்தை குறித்தும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.