ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் உயிரிழந்த விவகாரம்! டிடிவி போட்ட ட்வீட்!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோய் தொற்று இருந்தவர்கள் பதினோரு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தகவல் அறிந்த உடனேயே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்து விட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு எதுவும் இல்லை தவறுதலாக இந்த மரணங்கள் நிகழ்ந்து இருக்கிறது என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட தன்னுடைய வலைதளப் பதிவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 11பேர் ஆக்சிஜன் குறைபாடு இருந்தால் பலியானதாக வெளிவரும் தகவல் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் உண்டாக்குகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலியானவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கும் அவர், தமிழகத்தைப் பொருத்தவரையில் இனி இதுபோன்ற ஒரு சம்பவம் எங்கும் நடக்காத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதிலும் நோய் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான தேவையை தமிழக அரசு நிர்வாகம் இதன் பின்னராவது உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் பதிவிட்டு இருக்கிறார்.