ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை! அதிரடியாக அறிவிப்பு விடுத்த முதல்வர்!

0
104

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை! அதிரடியாக அறிவிப்பு விடுத்த முதல்வர்!

ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கும் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும்  சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த காலத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் பெருகி வரும் நிலையில் அனைவரும் ஆன்லைன் சூதாட்ட மோகத்தில் மூழ்கி லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். அதே போல் பணத்தை பறிகொடுத்து விட்டு மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை தடுப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும், சூதாட்டத்தில் ஈடுபட்டால் 6 மாதம் சிறை தண்டனை எனவும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு விடுத்தது அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மக்கள் மிகுந்த வரவேற்ப்பை கொடுத்துள்ளனர். மக்களுக்கான நலத்திட்டங்களை மிக விரைவில் கொண்டு வந்து மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தோடு ஆந்திர முதல்வர் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறார்.

இதேபோல் இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.