கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மருத்துவர் ராமதாஸ் கூறும் தீர்வு

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

கொரோனா பாதிப்பு காரணமாக வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் விதமாக ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்றைய சூழலில் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், கிராமப்புறங்களில் பணப் புழக்கத்தை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது மட்டுமே தீர்வு எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் வித்தியாசமான பிரச்சினையை … Read more

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவு!

AIADMK meeting

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் ஓ.பி.எஸ் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனையடுத்து தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,659 பேருக்கு கொரோனா பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,659 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,97,602 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 67 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,610 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

என்னது  ராமருக்கு கொரோனாவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த 2008 ஆம் ஆண்டு ராமாயணம் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. ராமாயணம் சீரியலில் ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் குர்மீத் சவுத்ரி மற்றும் டெபினா பானர்ஜி. இந்த நாடகத்தின் மூலம் இந்தியா முழுவதும் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தனர். பின்னர் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர். இந்திய அளவில் அவர்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் தற்போது  கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது அவர்களுடைய ரசிகர்கள் … Read more

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன் (வயது 94). இவருக்கு கடந்த மாதம் 27ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமகோபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் … Read more

அமமுக துணை பொதுச் செயலாளருக்கு கொரோனா பாதிப்பு!

அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அமமுக துணை பொதுச் செயலாளருமான பழனியப்பனுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். … Read more

முதுகலைப் மாணவர்களுக்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

2020 – 2021.ஆம் கல்வி ஆண்டில் முதுகலை மாணவர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முதுகலைப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகை பெற கேட் தேர்வில் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் அவசியம். மேலும், மாணவர்கள் முழுநேர முதுகலைப் படிப்பை … Read more

அரியர் தேர்ச்சி விவகாரம்! தமிழக அரசின் அரசாணை யுஜிசி விதிகளுக்கு புறம்பானது..! ஏஐசிடிஇ பதில்!

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு (யுஜிசி) புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ), சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கலை அறிவியல் பொறியியல் எம்சிஏ படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். … Read more

இன்று தான் கடைசி நாள்..! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று மாலையுடன் முடிவடைகிறது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான (2020 – 2021) மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 80,472 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 80,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,25,764 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,179 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 97,497 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு … Read more