பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!!
புது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைந்தது. தொடர்ந்து வருகின்ற 18ஆம் தேதியில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கயிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் ஆறு பேர்களுடைய தூக்கு தண்டனைகளை கருணை மனுக்களாக நிராகரித்தார்.பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகத்ராய் .
இவர் ராம்ப்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திர மனோத்தா மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் வீட்டுக்குள் தீ வைத்து அவர்களை உயிரோடு எடுத்துக் கொண்டார்.கடந்த 2006 ஆம் ஆண்டு சம்பவம் நடந்தது தொடர்பாக ஜகத்ராய் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். இந்த கருணை மனுவை தான் முதன் முதலில் ராம்நாத் கோவில் பதவிக்கு வந்ததும் இதனை தடை செய்தார். 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நிற்பாயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து மிகக் கொடுமையாக கொலை செய்யப்பட்டார்.
ஓடும் பேருந்தில் இச்சம்பவம் நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக முகேஷ்சிங், வினை சர்மா, அக்ஷய்குமார் சிங், பவன் குப்தா உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் குற்றவாளியாக கருதப்பட்ட ராம் சீன் விரைவுக்கோட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது திடீரென்று ஜெயிலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் காவல் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மீதமுள்ள அஞ்சு பேருக்கும் தூக்கு தண்டனை அமல்படுத்தப்பட்டது. இவர்கள் ஐந்து பேரும் தனி அடிப்படையில் ஜனாதிபதிக்கு மனுக்களை அனுப்பியுள்ளார்கள். இந்த மனுக்களை எல்லாம் 2020 ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2017 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்த பிரணாப் முகர்ஜி முப்பது கருணை மனுக்களை நிராகரித்தார்.
1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்த வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தபடியாக பிரக்னாப் முகர்ஜி தான் அதிக மனுக்களை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஜனாதிபதியாக பணியாற்றிய அப்துல் கலாம் ரெண்டு மனுக்களையும் மற்றும் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஐந்து கருணை மனுக்களையும் நிராகரித்தார்.