நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது?

0
330

நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது?

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மூங்கில் குத்து முனியப்பன் கோவில் ஒன்றுள்ளது. அங்கு நாளை வெகு விமர்சையாக திருவிழா நடைபெறயுள்ளது. ஆடி மாதம் வந்துவிட்டால் மிக சிறப்பாக எருதாட்ட விழா தான் அங்கு  நடைபெறும். இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக எருதாட்ட விழா கலவரத்தில் ஏற்பட்ட பிரச்சனை வெடித்ததால் தள்ளிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களினால் எருதாட்ட விழா நடைபெறாமல் போனது. தற்போது நெய்க்காரப்பட்டியில் எருதாட்டம் நடக்கலாம் என அரசு அனுமதி அளித்தது.

இதனடிப்படையில் இன்று எருதாட்ட விழா நடைபெறுவதற்காக பல ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். எருதாட்டம் விடுவதற்காக திருப்பத்தூர், தர்மபுர, கிருஷ்ணகிரி, பென்னாகரம் ,சேலம், மேட்டூர் ,போச்சம்பள்ளி மற்றும் நெய்க்காரப்பட்டி என 19 ஊர்களிலிருந்து 95 காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் கலந்து கொள்கின்றார்கள். இதில் இனங்கணசாலை மற்றும் காடையாம்பட்டி தேர் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தயார் நிலையில் காத்திருக்கின்றனர். இந்தக் காளைகள் அனைத்தும் கொம்பில் வண்ணங்கள் பூசியும் கலர் பொடியில் அலங்கரித்தும் மற்றும் மாலைகள் அணிவித்தும் கம்பீரமாக காத்திருக்கின்றனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கலவரம் நடைபெறாத வகையில் மேலும் சில போலீசர்கள் வருவார்கள் என தகவல் வெளியாகின்றது.

Previous articleதனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ!
Next article21-7-2022- இன்றைய ராசி பலன்கள்!