அவர்கள் இருவரும் இல்லாததை பாகிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்… மூத்த வீரர் அறிவுரை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியகோப்பை போட்டி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகள் ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதையடுத்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் மோத உள்ளன.
இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அடுத்த சுற்றுக்கு இரு அணிகளுமே தகுதி பெற்றால் மேலும் இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம் இந்த தொடரில் இரு அணிகளும் மூன்று முறை மோத வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே முடிந்துள்ளது.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னார் வீரர் சர்பராஸ் நவாஸ் பாகிஸ்தான் அணிக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அதில் “இந்தியா அணியில் பூம்ரா மற்றும் ஷமி இல்லாதது பாக் அணிக்கு சாதகமான ஒன்று.
அதை பாகிஸ்தான் அணி சரியாக பயன்படுத்திக் கொண்டால் கடந்த உலகக்கோப்பை போட்டியில் வென்றது போல ஆசியக் கோப்பையிலும் வெற்றி பெறலாம். ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்களே முடிவைத் தீர்மானிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.