கொரோனாவுக்கு பிறகு உலகை உலுக்க வரும் அடுத்த பாதிப்பு! வெளியான அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் துணை மாறுபாட்டுகளான BA.2 ,BA.2.75 ஆகியவை பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த வாரத்தில் தொற்று பரவல் விகிதம் குறித்து இந்தியன் SARS-COV-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஓமிக்ரான் பரவல்
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுபாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அனைத்து அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் கொரோனாவின் மறுபாடுகளான ஓமிக்ரானின் துணை மாறுபாடுகள் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது என்ற தகவல் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓமிக்ரானின் துணை மாறுபாடுகளான BA.2 மற்றும் BA.2.75 வைரஸ்கள் இந்தியாவில் கால் தடம் பதித்துள்ளது.
INSACOG என்பது SARS-CoV-2 இல் மரபணு மாறுபாடுகளைக் கண்காணிக்க 54 ஆய்வகங்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பானது சுகாதார அமைச்சகம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறையின் கண்காணிப்பின் கீழ் செயல்படுகிறது.
இந்த அமைப்பானது உலகம் முழுவதும் ஓமிக்ரான் தொற்று ஏற்படும் விகிதம் குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. இதில் கடந்த வாரத்தை விட புதியதாக ஓமிக்ரானின் துணை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 12% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓமிக்ரானின் துணை மாறுபாட்டான BA.5 வைரஸ் தொற்றானது உலகம் முழுவதும் அதிக அளவில் பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த வாரத்தை விட 84.8% இலிருந்து 86.8% ஆக தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் இந்த ஓமிக்ரான் திரிபு கடும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.