காலில் விழுந்தும் கருணையில்லை! ஓடுகாலி மகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! வேலூர் அருகே பரபரப்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலை கோட்டை நத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவி. இவரின் மகளான திவிதாவும் மேல்பாடி காலனியை சேர்ந்த இம்மானுவேல் மகன் சியாம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் திவிதாவின் பெற்றோருக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை.
கடந்த ஜனவரி இரண்டாம் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் பெங்களூரில் திருமணம் செய்துவிட்டு மீண்டும் வேலூருக்கு திரும்பினர். மகளை
காணவில்லையென்று ரவி மேல்பாடி காவல் நிலைத்தில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து திவிதா காதலனுடன் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று மனு கொடுத்தார்.
கலெக்டர் சண்முக சுந்தரத்தின் உத்தரவின் பேரில், திவிதாவின் பெற்றோரை
விசாரணைக்கு மேல்பாடி காவல்நிலையம் அழைத்து வரப்பட்டனர். மணக்கோலத்தில் வந்த திவிதாவை கண்டதும் விவசாயி ரவி கண்கலங்கி அழுக ஆரம்பித்தார்.
விசாரணையில், தன்னுடன் வந்துவிடுமாறு திவிதாவின் காலில் விழுந்து ரவி கெஞ்சியும் கேட்கவில்லை. அந்த பெண் நகர்ந்த போது ரவியின் முகத்தில் கால் எட்டி உதைத்தது போல் மேலே பட்டது. “அப்பாவையே எட்டி உதைக்கிறீயா” என்று கேட்டுவிட்டு ரவி வேகமாக வெளியே கிளம்பினார்.
விரக்தியுடன் வீட்டிற்கு சென்ற விவசாயி ரவி, ஓடுகாலி மகளால் ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து மயக்கத்தில் விழுந்தார். மயங்கிய ரவியை குடும்பத்தினர் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடல்கூறு ஆய்விற்காக ரவியில் உடல் வேலூர் அடுகம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் வள்ளிமலை பகுதியில் இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்படும் என்கிற காரணத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயி ரவியின் இறப்பு அவர்களின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.