திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்த பகுதியில் இருந்து தெரியுமா!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி அன்று மகா தீபம் நடைபெறவுள்ளது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணமலையில் கார்த்திகை தீபம் அன்று நடைபெறும் மாடவீதிகளில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மடாவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது.
மேலும் நாளை காலை ஆறு மணி முதல் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்படும்.முதன்முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மலை மீது ஏற புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை கடற்கரை ,வேலூர் ,சென்னை கடற்கரை இடையே வண்டி எண் 06033/ 06033 இயக்கப்பட்ட ரயில் திருவண்ணாமலை வரையிலும் இயக்கப்படும் . சென்னை கடற்கரை திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இன்று முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இயக்கப்படும்.
மே மேலும் மறுமார்க்கமாக திருவண்ணாமலை சென்னை கடற்கரை சிறப்பு ரயில் நாளை முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை இயக்கப்படும். சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை ஆறு மணிக்கு திருவண்ணாமலை நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் காலை 9.05 மணிக்கு புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை சென்றடையும். மேலும் திருவண்ணாமலை தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் நாளை மற்றும் 7 ஆம் தேதி இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.