கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்!
முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு சென்றிருந்தார்.அப்போது அவர் தென்காசி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் கேரள மாநிலங்களின் கழிவுகள் கொட்டப்படுவதினால் சுற்றுச்சு சூழல் சீர்கேடு ஏற்படுகின்றது என தெரிவித்தார்.
மேலும் அவர் இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.அந்த உத்தரவின் அடிப்படையில் கேரளா எல்லாயாக இருக்கும் கன்னியாகுமாரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கேரளாவில் இருந்து கோழி இறைச்சிகள் மற்றும் நெகிழி போன்ற கழிவுகளை சட்ட விரோதமான முறையில் கொட்டப்படுவதனை தடுக்க தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அனைத்து எல்லையோர மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
குறிப்பாக முன்னதாகவே தென்காசி மாவட்டம் காவல் நிலையத்தில் இவ்வாறு சட்ட விரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதை குறித்து இரண்டு வழக்குகள் இருக்கின்றது.அதனால் தமிழக கேரளா எல்லையோரம் இருக்கும் சோதனை சாவடிகளில் தீவிர வாகன பரிசோதனை நடைபெற்று வருகின்றது.தென்காசி மாவட்டத்தில் புளியரை சோதனை சாவடி வழியாக நுழைய முயற்சி செய்த 45 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.அதனை அடுத்து அந்த வாகனங்கள் கேராளாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டது.
கடந்த 13 ஆம் தேதி அன்று நெகிழி மற்றும் டயர் போன்ற கழிவுகளை தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் கேரளாவில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவந்தனர். அவர்களை கண்காணிப்பு போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அவர்கள் கழிவுகளை ஏற்றி வந்த கனரக வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டப்படும் கழிவு பொருட்களை தடுக்கும் நோக்கில் சிறப்பு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இதில் சம்மந்தப்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல காவல் துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.