துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்பும் ஆற்றலும் உண்டாகும் நாள்!
துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்பும் ஆற்றலும் உண்டாகும் நாள். சந்திர பகவான் காலையில் பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் பொறுப்புடன் இருப்பீர்கள். மதியத்திற்குப் பிறகு சந்திர பகவான் ஆறாம் இடமாகிய பகை உணர் யோகஸ்தானத்திற்கு வருவதால் ஆற்றல் அதிகரிக்கும். நிதி சிறப்பாக இருக்கும்.
கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் சில நேரங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். சக வியாபாரிகள் ஓடி ஒளிவார்கள். கொடுக்கல் வாங்கல் அருமையான பாதையில் செல்லும்.
உபயோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் சில நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள் கலை துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.