பழனி குடமுழுக்கு: தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அரசிற்கு அறிவுரை கூற தேவையில்லை – உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதிலடி!
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமான பழனியில் 16 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு விழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கான முன்பதிவானது ஆன்லைனிலேயே தொடங்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட சில பக்தர்களை குழுக்கள் முறையில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்டு பக்தர்கள் வருவதையொட்டி பழனியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கரூரை சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர் பழனியில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில் மந்திரம் ஆனது தமிழில் ஓத வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.
உயர் நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்த நிலையில் தமிழக அரசு இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதில் தமிழ் கடவுள் முருகர் என்பதால் தமிழில் தான் மந்திரம் ஓதுவோம். எனவே எந்த ஒரு தனி நபரும் அரசிற்கு இது குறித்து கருத்து கூற வேண்டும் என்பது அவசியம் இல்லை.
மேற்கொண்டு தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் தமிழில் குடைமுழுக்கு விழாவின் போது மந்திரம் ஓதப்படுகிறதா என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.