5 நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயு தொல்லை நீங்க வேண்டுமா?
பொதுவாக நமக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் அதிகமான எடை தூக்குவது, அடுத்து வயதானவர்களுக்கு ஏற்படும். ஆனால் தற்போது சிறுவயதினருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த பிரச்சினையை சரி செய்யக்கூடிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. புதினா – ஒரு கைப்பிடி
2. கொத்தமல்லி தழை – சிறிது ( கொத்தமல்லி விதைகளை கூட பயன்படுத்தலாம்)
3. சுக்கு – ஒரு துண்டு
4. பூண்டு – 3 பற்கள்
5. சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்
6. பெருங்காய கட்டி – கால் டீஸ்பூன்
ஒரு இடிக்கிற கல்லில் பெருங்காயத்தை தவிர மற்ற எல்லா பொருட்களையும் போட்டு நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பின்னர் அதில் எடுத்து வைத்துள்ள புதினா, கொத்தமல்லி கலவையை சேர்க்கவும். பின்னர் பெருங்காயம் சேர்க்கவும். இதை நன்றாக கொதிய விட வேண்டும்.
இரண்டு டம்ளர் தண்ணீர் ஆனது ஒரு டம்ளராக சுண்டும் வரையில் நன்கு கொதிக்க வைத்து சிறிது ஆறவிடவும்.
நன்கு வெதுவெதுப்பான சூடு இருக்கும் பொழுது இதை ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் இதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அல்சர் தொந்தரவு உள்ளவர்கள் எலுமிச்சை சாறு தவிர்ப்பது நல்லது.
அடுத்து அப்படியே குடிக்க இயலாதவர்கள் இதில் சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
இதை மூச்சுப்பிடிப்பு மற்றும் வாய்வு தொந்தரவு உள்ளவர்கள் குடித்தால் ஐந்து நிமிடத்தில் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.