இறந்தவர்களை ஏற்றிச்செல்லும் அமரர் ஊர்தியில் நூதன முறையில் மது விற்பனை!!
விற்பனைகள் ஈடுபட்ட நபர்கள் போலீசாரைக் கண்டு அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அவர்களை தேடி வருகின்றனர்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது மாவட்டத்தில் எங்கும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் மதுக்கூடங்களும் மூடி வைக்க திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில்திருச்சி பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை ரயில்வே கேட் பகுதியில் இன்று காலை முதலே இறந்தவர்களை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர்.
குடிநீர் பராமரிப்புக்காக சாலையோரம் போடப்பட்டுள்ள குழாய்கள் அருகே சாக்கு பையில் பதுக்கி நூதன விற்பனை செய்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பொன்மலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் தனியார் அமரர் ஊதியில் மறைத்து வைத்து விற்கப்பட்ட மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
போலீஸ் வருவதை அறிந்து மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் மது பாட்டில்களை அங்கேயே விட்டுச் சென்று தப்பி ஓடினர் தப்பி ஓடிய நபர்கள் போலீசார் தேடி வருகின்றனர்.