டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு!
டுவிட்டர் செயலியில் இருக்கும் குறுச்செய்திகளை அனுப்பும் வசதியை இனிமேல் இன்ஸ்டாகிராமிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.
தற்பொழுது இன்ஸ்டாகிராம் செயலியில் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி பகிர்ந்து கொள்ளலாம். இதையடுத்து விரைவில் இன்ஸ்டாகிராமில் செய்திகளை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக சொய்திகளை பகிரும் புதிய தளத்தை உருவாக்க இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், எலான் மஸ்க் அவர்களுடைய டுவிட்டர் ஆகிய செயலிகளில் இந்த குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதி உள்ளது. இதையடுத்து மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இண்ஸ்டாகிராம் செயலியிலும் குறுஞ்செய்திகளை பகிரும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த குறுஞ்செய்திகளை அனுப்பும் இன்ஸ்டாகிராம் செயலியின் பயன்பாடுகளின் ஆரம்பகால முயற்சிகளில் நிபுணர்கள் இறங்கியுள்ளனர். இந்த குறுஞ்செய்தி வசதியில் பயனர்கள் 1500 எழுத்துக்கள் வரை தட்டச்சு செய்ய முடியும். பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மாதிரிமே இந்த குறுஞ்செய்தி பயன்பாட்டில் உரையை மட்டுமில்லாமல் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேர்த்து இதை பகிரலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.