தடையை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்கள்!! பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0
200
#image_title

தடையை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்கள்!! பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

நாட்டில் 2020 மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பிஎஸ்4 வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றின் பதிவை ரத்து செய்யும் நடைமுறையை தமிழக போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வீட்டில் நிறுத்தபட்டிருந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், அந்த காரை விடுவிக்க உத்தரவிடக்கோரியும், யுவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஆனந்த் வெங்கடெஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2020 நவம்பர் 1ம் தேதி முதல் 2022 செப்டம்பர் 22 வரை மோசடியாக, 290 பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவு செய்யபட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஆவணங்களை திருத்தி பிஎஸ் 4 ரக வாகனங்களை மோசடியாக பதிவு செய்ததன் மூலம் பெரிய முறைகேடு நடந்துள்ளதகவும், போக்குவரத்து துறை அதிகாரிகளின் துணை இல்லாமல் இந்த மோசடி நடந்திருக்காது என்பதால், இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்களின் விவரங்களை காவல்துறையினருக்கு வழங்கும்படி போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் வாகனங்களை பறிமுதல் செய்யமுடியும் எனவும், இந்த மோசடியில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகங்கள் மாநிலத்தில் இயக்கபடவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வாகனங்களை பறிமுதல் செய்து சம்மந்தபட்ட வட்டபோக்குவரத்து அலுவலகங்களில் ஒப்படைக்கும்படி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

மனுதாரர் வாகனத்தை பொறுத்தவரை அதை இயக்கபோவதில்லை என வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உத்தரவாதத்தை அளித்து வாகனத்தை பெற்றுக் கொள்ளவும் உத்தரவிட்டார்.

 

 

 

 

Previous articleநாமக்கல்லில் அமையும் சிப்காட்!!  ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்து கிராம மக்கள் எதிர்ப்பு!!
Next articleஎன் காதல் வெற்றி பெற இந்த மாவட்டம் தான் காரணம்-சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்!!